Followers

Wednesday, January 29, 2020

























அன்புறவுகள்... எல்லோர்க்கும்.... என்றென்றும் அன்புடன்.! இனிய காலை மதிய மாலை பொன்மாலை இரவு வணக்கம்! ..உரித்தாகுக...சகோ(ஸ்)...அறிவின் உன்னத நிலை!

அறிவின் உன்னத நிலை!

பேச்சு, செயல், அறிவு என்று எல்லா நிலைகளிலும் புத்திசாலித் தனத்தோடு இருப்பது ஒரு உன்னதமான நிலை. அதை வெளிப்படுத்தும் முகமாக சில சம்பவங்களைக் கீழே கொடுத்துள்ளேன். படித்து மகிழுங்கள்!

கிணற்றுத் தண்ணீர் யாருக்குச் சொந்தம்? விற்றவனுக்கா அல்லது வாங்கியவனுக்கா?

ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விலைக்கு விற்றான். கிணற்றை விலைக்கு வாங்கிய விவசாயி, அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தார்.

அங்கு கிணற்றை விற்றவன் நின்று கொண்டிருந்தான். அவன் விவசாயியைத் தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தான்.

விவசாயிக்குக் கோபம் வந்தது. “எனக்குக் கிணற்றை விற்று விட்டு அதிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல் செய்கிறாயே? இது நியாயமா?” என்று கிணறு விற்றவனைப் பார்த்துக் கோபத்துடன் கேட்டான்.

கிணறு விற்றவன், “நான் உனக்குக் கிணற்றை மட்டும்தான் விற்றேன். அதிலிருக்கும் தண்ணீரை இல்லை. எனவே நீ தண்ணீரை இங்கிருந்து எடுக்கக் கூடாது” என்று வாதம் செய்யத் தொடங்கினான்.

விவசாயி குழப்பத்துடனும் கோபத்துடனும் உள்ளூர் நீதிபதியிடம் சென்று முறையிட்டான்.

நீதிபதி இருவரையும் அழைத்து இருவர் பக்கத்து நியாயத்தையும் விசாரித்தார்.

பின்னர் கிணற்றை விற்றவனிடம் “நீ கிணற்றை இந்த விவசாயிக்கு விற்றுவிட்டதால் கிணறு உன்னுடையதல்ல. அதில் உனது தண்ணீரை இன்னமும் வைத்திருப்பது தவறு. உனக்கு அதில்தான் தண்ணீரைச் சேமித்து வைக்க வேண்டுமென்று விரும்பினால், விவசாயிக்கு அதற்கான வாடகையைத் தினமும் கொடுத்து விடு. இல்லையென்றால் கிணற்றிலிருந்து உனது தண்ணீரை எடுத்துக் கொண்டு உடனே வெளியேற வேண்டும்” என்று தீர்ப்புக் கூறினார்.

கிணறு விற்றவன், தனது தவறுக்கு மன்னிப்புக் கோரியதுடன் கிணற்றின் முழுப் பயனையும் விவசாயி அனுபவிக்கலாம் என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்றான்.

எப்படி உள்ளது இந்த அதிரடித் தீர்ப்பு?
-----------------------------------------------------
p-p





No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...