Followers

Thursday, January 16, 2020


'பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே.   என்று பாரதியார் பாடியிருக்கிறார்.

வானுலக இன்பஞ் சிறந்தது. அவ்வின்பத்தைத் தவஞ் செய்து பெறவேண்டும். அத்தவத்தாற் பெற்ற வானுலக இன்பத்தை விடச் சிறந்தவள் தன்னை ன்றெடுத்த தாய். அத்தாய்க்கு நிகராக மற்றொன் றுண்டா?

உண்டு; அது தான், தான் பிறந்த நாடு. அதனாற் றான் தான் பிறந்த நாடு, தாய் நாடு எனவும் தாயகம் எனவும் மொழியப்படுகிறது. அதனால் ஒருவன், தன் தாயை எவ்வாறு மதித்துப் போற்றி வணங்கிக் காக்கின்றானோ அதைப் போலவே, தன் தாயகத்தையும் மதிக்க வேண்டும்; போற்ற வேண்டும்; வணங்க வேண்டும்.

தாயகத்தை வணங்குவதற்கும், மதித்துப் போற்றுவதற்கும் காரண மென்ன? என்ற வினாவிற்குக் மகாகவி பாரதியார் தரும் விடையை உங்களுக்குக் தருகிறேன்.
அப்பாடலை நன்கு நெஞ்சில் நிறுத்திப் போற்ற வேண்டும் என்ற எண்ணத்தால் தருகிறேன்.

"எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே - அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே - இதை வந்தனை கூறி மனத்தில் இருத்தியென் வாயுற வாழ்த்தேனோ ?”
என்ன, ஏற்றுக் கொள்கிறீர்களா அன்புறவுகளே?

==================================================
படித்தேன், ரசித்தேன், பகிர்ந்தேன். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது வேயல்லாமால் வேறொன்று அறியேன் பராபரமே!

அன்புடன்
விக்னசாயி.


====================================================




No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...