Followers

Wednesday, March 30, 2022

இந்த கருட மந்திரம் 108 முறை தொடர்ந்து

சொன்னால் இது நடக்கும்

===========================================



==========================================

கொரோனா பிரச்சனைக்கு முக்கிய காரணமே ராகு, கேது தான் பக்ஷி ராஜனான கருடாழ்வாரின் வழிபாடு மட்டுமே நம்மை இந்த பேராபத்தில் இருந்து காக்கும்.முதலில் ஒரு அடிப்படை உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.


கழுகு வேறு, கருடன் வேறு.விலங்கியலின் படி புலியும், பூனையும் கூட ஒரே குடும்பம் தான். கருடன், கழுகு இரண்டுமே தோற்றத்தில் ஒரே மாதிரி இருந்தாலும் கழுகு என்பது மாமிச பக்ஷிணி ஆனால் கருடன் என்பது வேத பக்ஷிணி.நம் நாட்டில் கழுகின் எண்ணிக்கையே ரொம்ப கம்மி கழுகை விட கருடனின் எண்ணிக்கை இன்னும் ரொம்ப கம்மி. ஆனாலும் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் என்றாலும், சிவன் கோவில் கும்பாபிஷேகம் என்றாலும் கருடாழ்வார் கோபுரத்தை வந்து வட்டமடிப்பதை நாம் பார்க்கிறோம்.



மேலும் திருப்பதி பிரமோற்சவம், திருவண்ணாமலை கார்த்திகை தீபம், திருச்செந்தூர் சூர சம்ஹாரம், சபரிமலை மகர ஜோதி போன்ற முக்கிய ஆலய நிகழ்வுகளில் பக்ஷி ராஜன் கரெக்ட்டா வந்து ஆஜர் ஆகிடுவார்.

கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் கருடாழ்வார் இன்றுவரை பல அற்புதங்களை செய்து கொண்டிருக்கிறார்.சர்ப்ப தோஷம் முதல் சர்வ தோஷங்களும் தீர கருட பிரயோக மந்திரம் ஒன்றே தீர்வு.

இந்த கருட பிரயோக மந்திரம் இதுவரை பல அற்புதங்களை செய்துள்ளது.


தமிழ்நாட்டில் ஒரு கிராம தேவதைக்கு சில மாந்த்ரீகர்கள் போட்ட மந்திர கட்டை இந்த கருட மந்திரம் அவிழ்த்தது. பலரின் தீய கர்ம வினைகளை இந்த கருட மந்திரம் போக்கி உள்ளது.3 ஆண்டுகளுக்கும் மேலாக கோமாவில் ஒரு சிறுவன் இருந்தான். அவனின் பெற்றோர் இந்த கருட மந்திரத்தை அவன் அருகே அமர்ந்து தொடர்ந்து உச்சிரித்து கொண்டிருந்தார்கள் அதன் பலனாக வெறும் 2 வாரங்களில் அந்த சிறுவன் கோமாவில் இருந்து மீண்டான். இதுபோல் பல உதாரணங்களை சொல்லலாம்.இருந்தாலும் இந்த கருட பிரயோக மந்திரம் பல லக்ஷம், பலகோடி மக்களிடம் பரவ வேண்டும் பல லக்ஷம் மக்கள் இந்த மந்திரத்தை சொன்னால் தான் கொரோனாவின் தாக்கம் குறையும்.


இந்த கருட பிரயோக மந்திரத்தை ஒருநாளைக்கு 108 முறை எனும் விதத்தில் தொடர்ந்து 11 நாட்கள் சொன்னாலே இந்த மந்திரம் நம்மை ஒரு கவசமாக காக்கும். இந்த கருட மந்திரத்தை 108 முறை தொடர்ந்து சொன்னால் உங்கள் நெற்றியில் லேசாக வியர்க்கும். AC போட்டு சொன்னாலும் வியர்க்கும். அதே சமயம் நீங்கள் நல்ல வெய்யிலில் இந்த மந்திரத்தை 108 முறை சொன்னாலும் வியர்ப்பது மட்டுமல்லாமல் உங்கள் நெற்றியின் இடது பக்கம் ஒருவித லேசான குளிர்ச்சியை நீங்கள் உணர்வீர்கள்.

கருடாழ்வார் மந்திரம்: 

அம்ருத கலச ஹஸ்தம், காந்தி ஸம்பூர்ண தேஹம்! 

ஸகல விபுதவந்த்யம் வேத சாஸ்த்ரைரசிந்த்யம்! 

விவித ஸுலப பக்ஷை: தூய மானாண்ட கோநம்! 

ஸகல விஷவிநாஸனம் சிந்தயேத் பக்ஷிராஜம்: க்ஷிப ஓம் ஸ்வாஹா!

=====================

தத்புருஷாய வித்மஹே

ஸீபர்ண பக்ஷாய தீமஹீ

தன்னோ கருட ப்ரசோதயாத்.

========================

ஓம் ஸ்ரீ காருண்யாய, கருடாய,  வேத ரூபாய,வினத 

புத்ராய,  விஷ்ணு பக்தி பிரியாய, அம்ருத கலச ஹஸ்தாய,

பஹு பராக்ரமாய, பக்ஷி ராஜாய, சர்வ வக்கிர நாசநாய, 

சர்வ தோஷ, சர்ப்ப தோஷ,  விஷ சர்ப்ப விநாசநாய ஸ்வாஹா.

================================

karpūra gauraṁ karuṇāvatāraṁ samsāra sāram bhujagendra hāram | sadā vasantaṁ hṛdayāra vinde bhavaṁ bhavānī sahitaṁ namāmi ||

https://www.youtube.com/watch?v=-Y65_WaQEm0&ab_channel=BHAKTIBHAJAN

=================================

சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
    சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி
    புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி
அங்கமலத் தயனோடு மாலுங் காணா
    அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
    திருமூலட் டானனே போற்றி போற்றி
.

==================================

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்

கூன்கையர் அல்லா தவர்க்கு.

கயவர் தம் கன்னத்தை இடித்து உடைக்கும் படி வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட எச்சில் கையையும் உதற மாட்டார். - மு. வரதராசன்

 

தாடையை உடைக்கும் முறுக்கிய கை இல்லாதவர்க்குக் கயவர், தாம் உண்டு கழுவிய ஈரக் கையைக்கூட உதறமாட்டார். - பேராசிரியர் சாலமன் பாப்பையா

 

கையை மடக்கிக் கன்னத்தில் ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக் கொடுப்பார்களேயல்லாமல், ஈகைக் குணமில்லாத கயவர்கள் ஏழை எளியோருக்காகத் தமது எச்சில் கைகைக்கூட உதற மாட்டார்கள் - கலைஞர் மு. கருணாநிதி

Kural in English: The mean will not (even) shake off (what sticks to) their hands (soon after a meal) to any but those who would break their jaws with their clenched fists

English Meaning:          From off their moistened hands no clinging grain they shake,Unless to those with clenched fist their jaws who break

=============================

எனும் இந்த மந்திரம் கொஞ்சம் பெரிசு இதை 108 முறை தொடர்ந்து சொல்ல 40 முதல் 45 நிமிடங்கள் வரை ஆகும். அதனால் காலையில் 36, மாலையில் 36, இரவு 36, என மூன்று வேளை இந்த மந்திரத்தை சொல்லலாம் இல்லை என்றால் குறைந்த பக்ஷம் காலை 11, மாலை 11, இரவு 11 என ஒரு நாளைக்கு 33 முறை இந்த மந்திரத்தை சொல்லலாம். இதை சொல்ல, சொல்ல கற்பனையே பண்ணி பார்க்க முடியாத ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷனை நீங்கள் உணர்வீர்கள் .


எம்பெருமான் திருவடிகளே சரணம், கருடாழ்வார் திருவடிகளே சரணம்.


Dailyhunt

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Tamil Express 


=============================

கொடூர விஷத்தையும் முறியடிக்கும், கொடிய நோயையும் விரட்டி அடிக்க கூடிய சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்தால் உங்களுக்கு ஆயுசு கெட்டி தான்!

garudan-mantra

எல்லோருக்குமே இறைவன் திருவடியை சரணடைய வேண்டும் என்பது தான் விருப்பம். அத்தகைய திருவடியை சரண் அடைந்து இருக்கும் கருடாழ்வார் பெரிய திருவடி என்ற பெயரால் போற்றப்பட்டு வருகின்றார். எப்பொழுதுமே இந்து சமயத்தைப் பொறுத்தவரை நாகமும், கருடனும் தனித்துவமான மற்றும் மகத்துவமான இடங்களைப் பிடித்திருக்கின்றன. இதில் மகாவிஷ்ணுவின் வாகனமாக இருக்கும் கருடன் அதீத சக்தி பெற்று இருக்கிறார். இவரிடம் அமிர்த கலசம் இருந்தும் அதனை அவர் சுயநலமாக பயன்படுத்தியதில்லை என்கிறது புராணம்.

மனித உயிர்களை காக்க நாகத்தின் கொடிய விஷயங்களை அடக்கி ஆள்பவராக இருக்கின்றார். அதனால் கொடூர விஷத்தையும் முறியடிக்கும் சக்தி கருடாழ்வாருக்கு உண்டு. விஷத்தினால் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவரின் சார்பாக இந்த மந்திரத்தை 1008 முறை உச்சரித்தால் நல்ல பலன் கிடைக்கும். கொடிய விஷயத்தையே முறியடிக்கும் இவருக்கு கொடிய நோயையும் விரட்டியடிக்க கூடிய ஆற்றல் உண்டு. எத்தகைய நோயையும் ஒன்றுமில்லாமல் செய்யக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரம் தான் கருடாழ்வார் மந்திரம். இம்மந்திரத்தை தினந்தோறும் உச்சரிப்பவர்களுக்கு எத்தகைய நோயும் அணுகுவதில்லை. அது என்ன மந்திரம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

கருடாழ்வார் மந்திரம்:
அம்ருத கலச ஹஸ்தம், காந்தி ஸம்பூர்ண தேஹம்!
ஸகல விபுதவந்த்யம் வேத சாஸ்த்ரைரசிந்த்யம்!
விவித ஸுலப பக்ஷை: தூய மானாண்ட கோநம்!
ஸகல விஷவிநாஸனம் சிந்தயேத் பக்ஷிராஜம்: க்ஷிப ஓம் ஸ்வாஹா!

garuda-bagavan1

கருடாழ்வார் மந்திரத்தின் பொருள்:
அமிர்த கலசத்தை கையில் ஏந்தி இருப்பவரே!
எல்லா தேவ தேவியர்களால் துதிக்கப்படுபரே!
தம் பெருமையை எவராலும் விவரிக்க முடியாதவரே!

பரந்து விரிந்த இவரின் இறக்கை வாயு, அண்டமெல்லாம் நடுநடுங்க செய்யும்!
இவரை துதிப்பவர்களுக்கு நாகத்தின் விஷம் அகலும்,
விஷத்தால் ஏற்பட்ட நோய்களும் நீங்கும்!
பட்சிகளுக்கு ராஜனாக விளங்கும் பட்சிராஜன் கருடாழ்வாரை என் சிந்தையில் நிறுத்தி வணங்குகிறேன் என்பது பொருளாகும்.


நோய்கள் நீங்கவும், விஷ முறிவு ஏற்படவும், மாங்கல்ய பலம் நீடிக்கவும் கருடாழ்வாரை சனிக் கிழமைகளில் அல்லது பஞ்சமி திதியில் வழிபடலாம். அவருக்கு புளியோதரை நைவேத்தியம் வைத்து, துளசி தீர்த்தம் அருகில் வைத்து, பசு நெய் விளக்கேற்றி, தூப தீப ஆராதனைகள் காண்பிக்க வேண்டும். பின்னர் வீட்டிற்கு வெளியில் சென்று வானை நோக்கி கருடன் பறப்பதாக நினைத்து மூன்று முறை கைக்கூப்பி நமஸ்கரிக்க வேண்டும். இவரை வணங்குபவர்களுக்கு தடைபட்ட சுபகாரியங்கள் தடையில்லாமல் நிறைவேறும், கடன் என்னும் தரித்திர நிலையிலிருந்து மீட்டு எடுக்க கூடியவர் இவர், வாகன ரீதியான விபத்துகளில் இருந்து பாதுகாக்க கூடியவர், யம பயத்தைப் போக்குபவர், பாவங்களை நீக்கி புண்ணியங்களை சேர்க்கக் கூடியவர், எத்தகைய கவலையும் தீர கருடனை வணங்கினால் சுபிட்சம் பெறுவார்கள். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கருடன் வழிபாடு ஒவ்வொருவரும் செய்து நற்பலன் பெறலாமே!

=====================

ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் , சடாட்சரி மந்திரம் , நவாட்சரி மந்திரம் . இதில் சௌம் என்பதை "சௌஹூம்" என்று சொல்லுவது சிறந்தது.

ஓம் ஐம் க்லீம் சௌம்

 

ஓம் ஐம் க்லீம் சௌம்

 சௌம் க்லீம் ஐம்

 

ஓம் ஐம் க்லீம் சௌம்

 சௌம் க்லீம் ஐம்|

|ஐம் க்லீம் சௌம்

=========================


வானைக்காவில் வெண்மதி  மல்குபுல்கு வார்சடைத்

தேனைக்காவில் இன்மொழித்  தேவிபாக மாயினான்

ஆனைக்காவில் அண்ணலை  அபயமாக வாழ்பவர்

ஏனைக்காவல் வேண்டுவார்க்  கேதும்ஏதம் இல்லையே.   1

 

ஊழியூழி வையகத்  துயிர்கள்தோற்று வானொடும்

ஆழியானுங் காண்கிலா  ஆனைக்காவில் அண்ணலைக்

காழிஞான சம்பந்தன்  கருதிச்சொன்ன பத்திவை

வாழியாகக் கற்பவர்  வல்வினைகள் மாயுமே.

 

சுவாமி : நீர்த்தீரள்நாதர்; அம்பாள் : அகிலாண்டநாயகி.

Read more at: https://shaivam.org/thirumurai/third-thirumrai/thirugnanasambandar-thevaram-thiruvaanaika-vaanaikavil/#gsc.tab=0

============================


Wednesday, February 9, 2022

Thirumurugatruppadai ~ திருமுருகாற்றுப்படை ~ by Bombay Sisters | Lord Mu...

Thirumurugatruppadai,

திருமுருகாற்றுப்படை......




=======================


நக்கீரதேவநாயனார் அருளிச்செய்த

திருமுருகாற்றுப்படை

Tirumurukārruppatai, "A Guide to Lord Murugan"
by Nakkīrar (2nd century AD)
See also English translation by Layne Little.

1. திருப்பரங்குன்றம்

உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்
கோவற இமைக்குஞ் சேண்விளங் கவிரொள
உ றுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாட்
செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை (5)

மறுவில் கற்பின் வாணுதல் கணவன்
கார்கோண் முகந்த கமஞ்சூன் மாமழை
வாள்போழ் விசும்பின் வள்ளுறை சிதறித்
தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்
திருள்படப் பொதுளிய பராஅரை மராஅத் (10)

துருள்பூந் தண்டார் புரளும் மார்பினன்
மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற்
கிண்கிணி கவை அய ஒண்செஞ் சீறடிக்
கணைக்கால் வாங்கிய நுசுப்பிற் பணைதோட்
கோபத் தன்ன தோயாப் பூந்துகிற் (15)

பல்காசு நிரைத்த சில்காழ் அல்குற்
கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழைச்
சேணிகந்து விளங்குஞ் செயிர்தீர் மேனித்
துணையோர் ஆய்ந்த இணையீ ரோதிச் (20)

செங்fகால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு
பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித்
தெய்வ உ த்தியொடு வலம்புரி வயின்வைத்துத்
திலகந் தைஇய தேங்கமழ் திருநுதன்
மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத் (25)

துவர முடித்த துகளறு முச்சிப்
பெருந்தண் சண்பகஞ் சொIஇக் கருந்தகட்
டுளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டிக்
கிளைக்கவின் றெழுதரு கீழ்நீர்ச் செல்வரும்
பிணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக (30)

வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர்
நுண்பூண் அகந் திளைப்பத் திண்காழ்
நடுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
தேங்கமழ் மருதிணர் கடுப்புக் கோங்கின்
குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர் (35)

வேங்கை நுண்டா தப்பிப் காண்வர
வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக்
கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி
வாழிய பெரிதென் றேத்திப் பலருடன்
சீர்திகழ் சிலம்பகஞ் சிலம்பப் பாடிச் (40)

சூரர மகளிர் ஆடுஞ் சோலை
மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச்
சுரும்பு முசாச் சுடர்ப்பூங் காந்தட்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்
பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச் (45)

சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்
உ லறிய கதுப்பிற் பிறழ்பற் பேழ்வாய்ச்
சுழல்விழிப் பசுங்கட் சூர்த்த நோக்கிற்
கழல்கட் கூகையோடு கடும்பாம்பு தூங்கப்
பெருமுலை அலைக்குங் காதிற் பிணர்மோட் (50)

டுருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதி ஆடிய கூருகிர்க் கொடுவிரற்
கண்தொட் டுண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண்டொடித் தடக்கையின் ஏந்தி வெருவர
வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா (55)

நிணந்தின் வாயள் துணங்கை தூங்க
இருபே குருவின் ஒருபே ரியாக்கை
அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம் அடங்கக் கவிழிணர்
மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத் (60)

தெய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்
சேவடி படருஞ் செம்மல் உ ள்ளமொடு
நலம்புரி கொள்கைப் புலம்புரிந் துறையும்
செலவுநீ நயந்தனை யாயிற் பலவுடன்
நன்னர் நெஞ்சத் தின்னசை வாய்ப்ப (65)

இன்னே பெறுதிநீ முன்னிய வினையே
செறுப்புகன் றெடுத்த சேணுயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த போரரு வாயில்
திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து (70)

மாடமலி மறுகிற் கூடற் குடவயின்
இருஞ்சேற் றகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த
முட்டாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கட்கமழ் நெய்தல் ஊதி எற்படக்
கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர் (75)

அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்றமர்ந் துறைதலும் உ ரியன் அதா அன்று.

2. திருச்சீரலைவாய்

வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வரப்
படுமணி இரட்டு மருங்கிற் கடுநடைக் (80)

கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பிற்
கால்கிளர்ந் தன்ன வேழம் மேல்கொண்
டைவே றுருவிற் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி
மின்னுறழ் இமைப்பிற் சென்னிப் பொற்ப (85)

நகைதாழ்பு துயல்வரு உ ம் வகையமை பொலங்குழை
சேண்விளங் கியற்கை வான்மதி கவைஇ
அகலா மீனின் அவிர்வன இழைப்பத்
தாவில் கொள்கைத் தந்தொழில் முடிமார்
மன்னோர் பெழுதரு வாணிற முகனே (90)

மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன் றொருமுகம் ஒருமுகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்
காதலின் உ வந்து வரங்கொடுத் தன்றே ஒருமுகம்
மந்திர விதியின் மரபுளி வழா அ (95)

அந்தணர் வேள்வியோர்க் கும்மே ஒருமுகம்
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்
திங்கள் போலத் திசைவிளக் கும்மே ஒருமுகம்
செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்
கருவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே ஒருமுகம் (100)

குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே ஆங்கம்
மூவிரு முகனும் முறைநவின் றொழுகலின்
ஆரந் தாழ்ந்த அம்பகட்டு மார்பிற்
செம்பொறி வாங்கிய மொய்ம்பிற் சுடர்விடுபு (105)

வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள
விண்செலன் மரபின் ஐயர்க் கேந்திய தொருகை
உ க்கஞ் சேர்த்திய தொருகை
நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇய தொருகை
அங்குசங் கடவா ஒருகை இருகை (110)

ஐயிரு வட்டமொ டெஃகுவலந் திரிப்ப ஒருகை
மார்பொடு விளங்க ஒருகை
தாரொடு பொலிய ஒருகை
கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப ஒருகை
பாடின் படுமணி இரட்ட ஒருகை (115)

நீனிற விசும்பின் மலிதுளி பொழிய ஒருகை
வானர மகளிர்க்கு வதுவை சூ ட்ட வாங்கப்
பன்னிரு கையும் பாற்பட இயற்றி
அந்தரப் பல்லியங் கறங்கத் திண்தாழ்
வயிரெழுந் திசைப்ப வால்வளை ஞால (120)

உ ரந்தலைக் கொண்ட உ ருமிடி முரசமொடு
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ
விசும்பா றாக விரைசெலன் முன்னி
உ லகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர்
அலைவாய்fச் சேறலும் நிலைஇய பண்பே அதா அன்று (125)

3. திருவாவினன்குடி

சீரை தைஇய உ டுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வானரை முடியினர்
மாசற இமைக்கும் உ ருவினர் மானின்
உ ரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்பெழுந் தியங்கு மியாக்கையர் நன்பகற் (130)

பலவுடன் கழிந்த உ ண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தின ரியாவதும்
கற்றோர் அறியா அறவினர் கற்றோர்க்குத்
தாம்வரம் பாகிய தலைமையர் காமமொடு
கடுஞ்சினங் கடிந்த காட்சியர் இடும்பை (135)

யாவதும் அறியா இயல்பினர் மேவரத்
துனியில் காட்சி முனிவர் முற்புகப்
புகைமுகந் தன்ன மாசில் தூவுடை
முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச்
செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின் (140)

நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேவலர் இன்னரம் புளர
நோயின் றியன்ற யாக்கையர் மாவின்
அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தோறும்
பொன்னுரை கடுக்குந் திதலையர் இன்னகைப் (145)

பருமந் தாங்கிய பணிந்தேந் தல்குல்
மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்கக்
கடுவோ டொடுங்கிய தூம்புடை வாலெயிற்
றழலென உ யிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறற்
பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ் சிறைப் (150)

புள்ளணி நீள்கொடிச் செல்வனும் வெள்ளேறு
வலவயின் உ யரிய பலர்புகழ் திணிதோள்
உ மைஅமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்
நூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து நூறுபல் (155)

வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்
தீரிரண் டேந்திய மருப்பின் எழில்நடைத்
தாழ்பெருந் தடக்கை உ யர்ந்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்
நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய (160)

உ லகங் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்
பலர்புகழ் மூவருந் தலைவ ராக
ஏமரு ஞாலந் தன்னில் தோன்றித்
தாமரை பயந்த தாவில் ஊழி
நான்முக ஒருவற் சுட்டிக் காண்வரப் (165)

பகலிற் றோன்றும் இகலில் காட்சி
நால்வே றியற்கைப் பதினொரு மூவரோ
டொன்பதிற் றிரட்டி உ யர்நிலை பெறீஇயர்
மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு
வளிகிளர்ந் தன்ன செலவின் வளியிடைத் (170)

தீயெழந் தன்ன திறலினர் தீப்பட
உ ருமிடித் தன்ன குரலினர் விழுமிய
உ றுகுறை மருங்கிற்றம் பெருமுறை கொண்மார்
அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத்
தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள் (175)

ஆவினன்குடி அசைதலும் உ ரியன் அதா அன்று.

4. திருவேரகம்

இருமூன் றெய்திய இயல்பினின் வழாஅ
திருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான் கிரட்டி இளமை நல்லியாண்
டாறினிற் கழிப்பிய அறனவில் கொள்கை (180)

மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்
திருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உ டீஇ
உ ச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து (185)

ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி
நாவியன் மருங்கின் நவிலப் பாடி
விறையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுவந்
தேரகத் துறைதலும் உ ரியன் அதா அன்று

5. குன்றுதோறாடல்

பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன் (190)

அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு
வெண்கூ தாளந் தொடுத்த கண்ணியன்
நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பிற்
கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்
நீடமை விளைந்த தேக்கட் டேறற (195)

குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர
விரலுளர்ப்ப பவிழ்ந்த வேறுபடு நறுங்காற்
குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி
இணைத்த கோதை அணைத்த கூந்தல் (200)

முடித்த குல்லை இலையுடை நறும்பூச்
செங்கால் மரா அத்த வாலிணர் இடையிடுபு
சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை
திருந்துகாழ் அல்குல் திளைப்ப உ டீஇ
மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு (205)

செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்
செயலைத் தண்தளிர் துயல்வருங் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டனன் குறும்பல் லியத்தன்
தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங் (210)

கொடியன் நெடியன் தொடியணி தோளன்
நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு
குரும்பெறிக் கொண்ட நறுந்தண் சாயல்
மருங்கிற் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்
முழவுறழ் தடக்கையின் இயல ஏந்தி (215)

மென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்து
குன்றுதோ றாடலும் நின்றதன் பண்பே அதா அன்று.

6. பழமுதிர்சோலை

சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊரு ர் கொண்ட சீர்கெழு விழவினும் (220)

ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்
வேலன் தைஇய வெறியயர் களனும்
காடுங் காவுங் கவின்பெறு துருத்தியும்
யாறுங் குளனும் வேறுபல் வைப்பும்
சதுக்கமுஞ் சந்தியும் புதுப்பூங் கடம்பும் (225)

மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினும்
மாண்டலைக் கொடியொடு மண்ணி யமைவர
நெய்யோ டையவி அப்பி ஐதுரைத்துக்
குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி
முரண்கொள் உ ருவின் இரண்டுடன் உ டீஇச் (230)

செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி
மதவலி நிலை இய மாத்தாட் கொழுவிடைக்
குருதியொடு விரைஇய தூவெள் அரிசி
சில்பலிச் செய்து பல்பிரப் பிaIஇச்
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தௌiத்துப் (235)

பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துணையுற அறுத்துத் தூங்க நாற்றி
நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி
நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி
இமிழிசை அருவியோ டின்னியங் கறங்க (240)

உ ருவப் பல்பூத் தூஉ ய் வெகுவரக்
குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள்
முருகிய நிறுத்து முரணினர் உ ட்க
முருகாற்றுப் படுத்த உ ருகொழு வியனகர்
ஆடுகளஞ் சிலம்பப் பாடிப் பலவுடன் (245)

கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங் கெய்தினர் வழிபட
ஆண்டாண் டுறைதலும் அறிந்த வாறே
ஆண்டாண் டாயினும் ஆக காண்டக (250)

முந்துநீ கண்டுழி முகனமர்ந் தேத்திக்
கைதொழு உ ப் பரவிக் காலுற வணங்கி
நெடும்பெருஞ் சிமயத்து நீலப்பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறமர் செல்வ (255)

ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை
மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே
வெற்றி வேல்போர்க் கொற்றவை சிறுவ
இழையணி சிறப்பிற் பழையோள் குழவி
வானோர் வணங்குவில் தானைத் தலைவ (260)

மாலை மார்ப நூலறி புலவ
செருவில் ஒருவ பொருவிறல் மள்ள
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை
மங்கையர் கணவ மைந்தர் ஏறே
வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ (265)

குன்றங் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ
பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே
அரும்பெறன் மரபிற் பெரும்பெயர் முருக
நசையினர்க் காத்தும் இசைபே ராள (270)

அலாந்தோர்க் களிக்கும் பொலம்பூட் சேஎய்
மண்டமர் கடந்தநின் வென்றா டகலத்துப்
பரிசிலர்த் தாங்கும் உ ருகெழு நெடுவே எள்
பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்
சூர்மருங் கருத்த மொய்ம்பின் மதவலி (275)

போர்மிகு பொருந குரிசில் எனப்பல
யான்அறி அளவையின் ஏத்தி ஆனது
நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்
நின்னடி உ ள்ளி வந்தனன் நின்னோடு
புரையுநர் இல்லாப் புலமை யோய்எனக் (280)

குறித்தது மொழியா அளவையிற் குறித்துடன்
வேறுபல் உ ருவிற் குறும்பல் கூளியர்
சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி
அளியன் றானே முதுவாய் இரவலன்
வந்தோன் பெருமநின் வண்புகழ் நயந்தென (285)

இனியவும் நல்லவும் நனிபல ஏத்தித்
தெய்வஞ் சான்ற திறல்விளங் குருவின்
வான்றோய் நிவப்பிற் றான்வந் தெய்தி
அணங்குசால் உ யர்நிலை தழீஇப் பண்டைத்தன்
மணங்கமழ் தெய்வத் திளநலங் காட்டி (290)

அஞ்சல் ஓம்புமதி அறிவனின் வரவென
அன்புடை நன்மொழி அளைஇ விளிவின்
றிருள்நிற முந்நீர் வளைஇய உ லகத்
தொருநீ யாகத் தோன்ற விழுமிய
பெறலரும் பரிசில் நல்குமதி பலவுடன் (295)

வேறுபஃ றுகிலின் நுடங்கி அகில்சுமந்
தார முழுமுதல் ஊருட்டி வேரற்
பூவுடை அலங்குசினை புலம்பவேர் கீண்டு
விண்பொரு நெடுவரை பரிதியிற் றொடுத்த
தண்கமழ் அலர்இறால் சிதைய நன்பல (300)

அரசினி முதுசுளை கலாவ மீமிசை
நாக நறுமலர் உ திர யூகமொடு
மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்
இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று
முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று (305)

நன்பொன் மணிநிறங் கிளரப் பொன்கொழியா
வாழை முழுதல் துமியத் தாழை
இளநீர் விழுக்குலை உ திரத் தாக்கிக்
கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற
மடநடை மஞ்ஞை பலவுடன் வொIஇக் (310)

கோழி வயப்பெடை இரியக் கேழலோ
டிரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன
குரூ உ மயி ரியாக்கைக் குடாவடி உ ளியம்
பெருங்கல் விடரளைச் செறியக் கருங்கோட்
டாமா நல்லேறு சிலைப்பச் சேணின் (315)

றிழுமென இழிதரும் அருவிப்
பழமுதிர் சோலை மலைகிழ வோனே


.

..நேரிசைவெண்பா..

குன்றம் எறிந்தாய் குரைகடலிற் சூர்தடிந்தாய்
புன்றலைய பூதப் பொருபடையாய் - என்றும்
இளையாய் அழகியாய் ஏறு\ர்ந்தான் ஏறே
உ ளையாய்என் உ ள்ளத் துறை. (1)

குன்றம் எறிந்ததுவுங் குன்றப்போர் செய்ததுவும்
அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும் - இன்றென்னைக்
கைவிடா நின்றதுவுங் கற்பொதும்பிற் காத்ததுவும்
மெய்விடா வீரன்கை வேல். (2)

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உ ண்டே துணை. (3)

இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்கும்
கொன்னவில்வேற் சூர்தடிந்த கொற்றவா - முன்னம்
பனிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட
தனிவேலை வாங்கத் தகும். (4)

உ ன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்
கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்தில்வாழ் வே. (5)

அஞ்சு முகந்தோன்றில் ஆறு முகந்தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலுந் தோன்றும்
முருகாஎன் றோதுவார் முன். (6)

முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே - ஒருகைமுகன்
தம்பியே நின்னுடையே தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான். (7)

காக்கக் கடவியநீ காவா திருந்தக்கால்
ஆர்க்குப் பரமாம் அறுமுகவா - பூக்கும்
கடம்பா முருகா கதிர்வேலா நல்ல
இடங்காண் இரங்காய் இனி. (8)

பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான்றன் பாதம்
கரங்கூப்பிப்க் கண்குளிரக் கண்டு - சுருங்காமல
ஆசையால் நெஞ்சே அணிமுருகாற் றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல். (9)

நக்கீரர் தாம் உ ரைத்த நன்முருகாற் றுப்படையைத்
தற்கோல நாள்தோறும் சாற்றினால் - முற்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித்
தான் நினைந்த எல்லாம் தரும். (10)

திருச்சிற்றம்பலம்

===================================

1. குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லாம் நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளோடு பெருநிலமளிக்கும் வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினுமாயின செய்யும் நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்" 2. ஹரி நாராயண, துரித நிவாரண பரமானந்த, சதாசிவ சங்கர! 3. உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. 4. அஸ்மிந் பராத்மந் நநு பாத்மகல்பே! த்வமித்த முத்தாபித பத்மயோனி! அனந்த பூமா மமரோக ராசிம்! நிருந்த்தி வாதாலய வாஸ விஷ்ணோ! 5. அம் பகவஹ!




======================================





Index of sacred texts in Tamil, Sanskrit and English
courtesy;  http://murugan.org/texts/murukatruppadai.htm
======================================================
=========================

Tuesday, January 4, 2022

 

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா

அஜாட்யம் வாக்படுத்வா ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்!

 https://www.youtube.com/watch?v=4PZzUru94JY&ab_channel=H-Spiritual


யாக நெருப்பில் தெரிந்த ஆஞ்சநேயர் உருவம்; பக்கதர்கள் பரவசம்!


தமிழகத்தின் திருப்பூரில் அனுமன் ஜெயந்தி அன்று யாகம் வளர்த்த நெருப்பில் ஆஞ்சநேயர் உருவம் தெரிவதாக கூறி பக்தர்கள் பரவசம் அடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்ற நிலையில்  குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.     திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே வளையக்காரன் வலசில் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அங்கு அனுமன் ஜெயந்தி முன்னிட்டு இந்த கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. யாகத்தில் வாசனை திரவியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக போடப்பட்டபோது நெருப்பில் ஆஞ்சநேயர் திருஉருவம் தெரிந்தது.    இதைக் கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்து பயபக்தியுடன் ஆஞ்சநேயா, ஆஞ்சநேயா, ராம பக்தா என கரகோஷம் எழுப்பினர். அத்துடன் யாக நெருப்பில் ஆஞ்சநேயர் உருவம் தத்ரூபமாக தெரிந்தது. மேலும் அந்த பகுதியில் குரங்குகளையே காண முடியாது என கூறப்படுகின்றது.  எனினும் யாகம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென்று கோவிலுக்குள் 2 குரங்குகள் நுழைந்து கருவறையில் இருந்த பழங்களை எடுத்து சாப்பிட்டதை கண்ட பக்தர்கள் ஆஞ்சநேயரே வந்துவிட்டார் என பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் குறித்த தகவல் சமூகவலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகிவருகின்றது.

courtesy;  https://jvpnews.com/article/image-of-the-anjaneyar-known-in-the-yaga-fire-1641276061

=====================================

பாடல்களாலே கீதாஞ்சலி

பூ மலராலே புஷ்பாஞ்சலி

ஆடல்களாலே நடனாஞ்சலி

எங்கள் அய்யப்ப ஸ்வாமிக்கு சரணாஞ்சலி

 ஸ்வாமியே ஐயப்பா

ஸ்வாமியே ஐயப்பா

ஸ்வாமியே ஐயப்பா

 

அவனே பாட்டு அதனை கேட்டு

பறவைகள் எல்லாம் சிறகை விரிக்கும்

பிரபஞ்ச நாதம் அவன் சங்கீதம்

பம்பா நதி அலை மலை எதிர் ஒலிக்கும்

 

பாடல்களாலே கீதாஞ்சலி

பூ மலராலே புஷ்பாஞ்சலி

ஆடல்களாலே நடனாஞ்சலி

எங்கள் அய்யப்ப ஸ்வாமிக்கு சரணாஞ்சலி

 ஸ்வாமியே ஐயப்பா

ஸ்வாமியே ஐயப்பா

ஸ்வாமியே ஐயப்பா

 

நிலவின் ஒளியாய் ஒளிர்வதும் அவனே

மலர்களின் நடுவில் மணப்பதும் அவனே

மழலை குழந்தையின் விழிகளில் அவனே

மகர ஜோதியாய் சுடர்வதும் அவனே

 

பாடல்களாலே கீதாஞ்சலி

பூ மலராலே புஷ்பாஞ்சலி

ஆடல்களாலே நடனாஞ்சலி

எங்கள் அய்யப்ப ஸ்வாமிக்கு சரணாஞ்சலி

 ஸ்வாமியே ஐயப்பா

ஸ்வாமியே ஐயப்பா

ஸ்வாமியே ஐயப்பா

 


——————————


========================================

Sunday, January 2, 2022

 

கொழுப்பை கரைத்து எடையை குறைக்க நினைப்பவர்கன் சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிடலாமா? இனி தெரிஞ்சிக்கோங்க..!..


சர்க்கரைவள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

இதனால் உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் மற்றும் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு சர்க்கரைவள்ளிக்கிழங்கினை அச்சம் இன்றி சாப்பிடலாம்.

இனி தினமும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிட்டால் என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.

  1. சர்க்கரைவள்ளிக் கிழங்கு எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
  2.  சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கொழுப்பின் அளவானது பூஜ்ஜியம் ஆகும். எடை குறைப்பவர்களுக்கு சிறந்த உணவு.
  3.  சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கும் நார்ச்சத்துகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் மற்றும் வைட்டமின் பி, வைட்டமின் சி ஆகியவை உடலின் உட்புறத்தில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் வீக்கங்களை குணப்படுத்துகின்றன.  
  4. சர்க்கரைவள்ளிக் கிழங்கில் போலேட் எனப்படும் சத்து பெண்களுக்கு கரு உருவாக உறுதியாகின்றது.
  5.  சர்க்கரைவள்ளிக் கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வரும்பொழுது வயிற்றுப்புண் விரைவில் குணமடையும்.
  6.  சக்கரவள்ளி கிழங்கு தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. எனவே எளிதில் தொற்று நோய் ஏற்படுவதை சுலபமாக தடுக்க முடியும்.
  7.  மூலம் வராமல் பாதுகாக்கிறது. ஆகவே சர்க்கரைவள்ளிக் கிழங்கை வாரத்தில் ஒருமுறையேனும் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.
  8. இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஏனென்றால் இன்றைய உணவு பழக்க வழக்கம் தான் காரணம் என்று சொல்லவேண்டும் தொண்டையில் புற்றுநோய் வர முக்கிய காரணிகளாக திகழ்வது புகையிலை சார்ந்த பொருட்கள்.
  9. இத்தகைய புற்றுநோய் வராமல் இருக்க சர்க்கரைவள்ளிக் கிழங்கை அதிக அளவில் சாப்பிட வேண்டும் .இதில் நிறைந்துள்ள அதிகப்படியான சத்துக்கள் புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கின்றது.  
  10. courtesy; https://manithan.com/article/sweet-potato-benefits-and-side-effects-1641053040?itm_source=parsely-external
  11. tq
  12. ================================================

Sunday, December 12, 2021

========================================


கொஞ்சம் பொறுங்கோ......
இவர் குணத்தார் வார வரத்தைப் பார்த்தால், ஏதோ ரெசிபி கொண்டு வாறார் போல கிடக்கு....😁
போனைப் பார்த்து சிரித்துக் கொண்டு வாறார்..... மற்றக் கையில் முருங்கை இலையும் கிடக்குது....😄
நான் நினைச்சது சரிதான் பாருங்கோ😂
ஒரு ரெசிபியை கொண்டு வந்து சொன்னார் பார்க்க நல்லாயிருக் கும் போல கிடக்கப்பா. நல்லாயிருந்தா உம்மட முகநூல் நட்புகளுக்கும் போடுமன் செய்யட்டும் எண்டார்.😘
சொன்னமாதிரி நல்ல சுகமும், ருசியும் வாசமுமப்பா. 😋
நாங்கள் ரெண்டு பேர்தானே...!
1ம் படத்தில காட்டின மாதிரி,
ஒரு 4,5 நெட்டு முருங்கையிலை, ஒரு 1,2 பச்சை மிளகாய் 2 பல்லு உள்ளி 2 ஸ்பூன் சின்னச் சீரகம் எடுத்து மிக்சியில கொஞ்சம் தண்ணி போட்டு கூழா அரைச்சு, ஊத்தப் போற தோசை மவில.... 😊
2ம் படத்தில காட்டியிருக்கிறன் மாவில ஊத்தி உப்பு போட்டு நன்கு கலக்கி தோசை சுடுங்கோ.
நல்ல வாசமாய் இருக்குமப்பா. 😋
ஒரு கச்சல் கிச்சல் இருக்காது சரியோ....! கைக்குது எண்டு பொய் சொன்னியளோ எனக்கு கெட்ட கோவம் வரும் சொல்லிப் போட்டன். 😁 நான் ஒரு நாள் தோசையும், இன்னொருநாள் இட்லியும் ஊத்தினன். சும்மா அந்த மாதிரி இருந்ததப்பா. 👌
வெளிநாட்டில முருங்கையிலை கிடைக்குதோ தெரியேல்ல......
இலங்கை இந்தியாவில கிடைக்கும்.
செய்து பாருங்கோவன்😄😁
All reactions:
You, Arunthathy Gunaseelan, Subi Narendran and 103 others
tq Arunthathi.

==========================

காரமான மொறு மொறு மிளகு வடை செய்வது எப்படி? ஓட்டல் சுவையையும் மிஞ்சிய ருசி...................


மிளகு வடை உடலுக்கு மிகவும் நல்லது. ஓட்டல்களில் வாங்கி சாப்பிடுவதை காட்டிலும் வீடுகளில் செய்து சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கும்.

இனி எப்படி மிளகு வடை செய்வது என்று பார்க்கலாம்.

மிளகு வடை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

  1. உளுந்தம் பருப்பு – 200 கிராம்
  2. அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
  3. மிளகு – 2 டேபிள் ஸ்பூன்
  4. சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்
  5. பெருங்காயப் பொடி – சிறிதளவு
  6. நல்ல எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  7. உப்பு – தேவையான அளவு
  8. கடலை எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

மிளகு வடை செய்முறை

உளுந்தம் பருப்பை முதலில் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.     

பின்னர் வடிகட்டில் உளுந்தம் பருப்பைச் சேர்த்து தண்ணீர் முழுவதையும் வடிகட்டவும்.  

 உளுந்தம் பருப்புடன் தேவையான உப்பினைச் சேர்த்து, தண்ணீர் சேர்க்கமால் அரைத்துக் கொள்ளவும்.  மிளகு, சீரகத்தை தனித்தனியாக தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த உளுந்த மாவு, பொடித்த மிளகுப் பொடி, சீரகப் பொடி, அசிரி மாவு, பெருங்காயப் பொடி ஆகியவற்றை சேர்த்து ஒரு சேர பிசையவும்.

1 டேபிள் ஸ்பூன் நல்ல எண்ணெயை பிசைந்த உளுந்து கலவையில் சேர்த்து, நன்கு ஒருசேர பிசைந்து கொள்ளவும்.

உளுந்த மாவுக் கலவையிலிருந்து சிறிய எலுமிச்சையளவு மாவினை எடுத்து உருண்டையாக உருட்டவும். இவ்வாறு எல்லா மாவினையும் சிறுஉருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.   

வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றிக் காய விடவும். சதுர வடிவ வாழையிலை அல்லது பிளாஸ்டிக் கவரில் எண்ணெயைத் தடவிக் கொள்ளவும்.

அதில் உருட்டிய சிறிய உருண்டையை வைத்து வடையாகத் தட்டவும். வடையாக விரித்ததும் நடுவில் சிறுதுளையை இடவும்.  

 மாவினை காய்ந்த எண்ணெயில் போடவும். சுவையான மிளகுவடை தயார்.

courtesy;  https://manithan.com/article/ulunthu-vadai-milagu-vadai-food-1639268150?itm_source=parsely-api

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...