========================================
கொஞ்சம் பொறுங்கோ......இவர் குணத்தார் வார வரத்தைப் பார்த்தால், ஏதோ ரெசிபி கொண்டு வாறார் போல கிடக்கு....
போனைப் பார்த்து சிரித்துக் கொண்டு வாறார்..... மற்றக் கையில் முருங்கை இலையும் கிடக்குது....
ஒரு ரெசிபியை கொண்டு வந்து சொன்னார் பார்க்க நல்லாயிருக் கும் போல கிடக்கப்பா. நல்லாயிருந்தா உம்மட முகநூல் நட்புகளுக்கும் போடுமன் செய்யட்டும் எண்டார்.
சொன்னமாதிரி நல்ல சுகமும், ருசியும் வாசமுமப்பா.
நாங்கள் ரெண்டு பேர்தானே...! 1ம் படத்தில காட்டின மாதிரி,ஒரு 4,5 நெட்டு முருங்கையிலை, ஒரு 1,2 பச்சை மிளகாய் 2 பல்லு உள்ளி 2 ஸ்பூன் சின்னச் சீரகம் எடுத்து மிக்சியில கொஞ்சம் தண்ணி போட்டு கூழா அரைச்சு, ஊத்தப் போற தோசை மவில....
2ம் படத்தில காட்டியிருக்கிறன் மாவில ஊத்தி உப்பு போட்டு நன்கு கலக்கி தோசை சுடுங்கோ.நல்ல வாசமாய் இருக்குமப்பா.
ஒரு கச்சல் கிச்சல் இருக்காது சரியோ....! கைக்குது எண்டு பொய் சொன்னியளோ எனக்கு கெட்ட கோவம் வரும் சொல்லிப் போட்டன்.
நான் ஒரு நாள் தோசையும், இன்னொருநாள் இட்லியும் ஊத்தினன். சும்மா அந்த மாதிரி இருந்ததப்பா.
வெளிநாட்டில முருங்கையிலை கிடைக்குதோ தெரியேல்ல......இலங்கை இந்தியாவில கிடைக்கும்.செய்து பாருங்கோவன்

கொஞ்சம் பொறுங்கோ......
இவர் குணத்தார் வார வரத்தைப் பார்த்தால், ஏதோ ரெசிபி கொண்டு வாறார் போல கிடக்கு....

போனைப் பார்த்து சிரித்துக் கொண்டு வாறார்..... மற்றக் கையில் முருங்கை இலையும் கிடக்குது....

ஒரு ரெசிபியை கொண்டு வந்து சொன்னார் பார்க்க நல்லாயிருக் கும் போல கிடக்கப்பா. நல்லாயிருந்தா உம்மட முகநூல் நட்புகளுக்கும் போடுமன் செய்யட்டும் எண்டார்.

சொன்னமாதிரி நல்ல சுகமும், ருசியும் வாசமுமப்பா. 

நாங்கள் ரெண்டு பேர்தானே...!
1ம் படத்தில காட்டின மாதிரி,
ஒரு 4,5 நெட்டு முருங்கையிலை, ஒரு 1,2 பச்சை மிளகாய் 2 பல்லு உள்ளி 2 ஸ்பூன் சின்னச் சீரகம் எடுத்து மிக்சியில கொஞ்சம் தண்ணி போட்டு கூழா அரைச்சு, ஊத்தப் போற தோசை மவில.... 

2ம் படத்தில காட்டியிருக்கிறன் மாவில ஊத்தி உப்பு போட்டு நன்கு கலக்கி தோசை சுடுங்கோ.
நல்ல வாசமாய் இருக்குமப்பா. 

ஒரு கச்சல் கிச்சல் இருக்காது சரியோ....! கைக்குது எண்டு பொய் சொன்னியளோ எனக்கு கெட்ட கோவம் வரும் சொல்லிப் போட்டன்.
நான் ஒரு நாள் தோசையும், இன்னொருநாள் இட்லியும் ஊத்தினன். சும்மா அந்த மாதிரி இருந்ததப்பா. 

வெளிநாட்டில முருங்கையிலை கிடைக்குதோ தெரியேல்ல......
இலங்கை இந்தியாவில கிடைக்கும்.
செய்து பாருங்கோவன்

No comments:
Post a Comment