Followers

Tuesday, January 19, 2021

 

மனநலத்தை மேம்படுத்தும் மந்திரப் பரிகாரம்! -வி. விஜயராகவன்.........

 

 

மாறிவரும் சமூகப் பொருளாதாரச் சூழலில், மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகும் சூழல் அதிகரித்துவருகிறது. ஆண்- பெண் உறவுகள், குடும்ப உறவுகள், அலுவலகம், தொழில் என்று எத்தனையோ தளங்களில் மனிதர்கள் இயங்கவேண்டியுள்ளது. இவற்றில் ஏற்படும் பிரச்சினைகளால் மன உளைச்சல், மன அழுத்தம் போன்ற பலவகையான பாதிப்புகளுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. "டிப்ரஷன்' என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் மனச்சோர்வு, இன்று ஏதுமறியா குழந்தைகள்முதல் எல்லாவற்றையும் அனுபவித்து முடித்த பெரியவர்வரை காணப்படுகிறது. ஒருவரையொருவர் சார்ந்துவாழும் இன்றைய சூழலில் இது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இதன் தாக்கம் அதிகரிக்கும்போது சிலர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். சிலர் வன்முறை போன்ற குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இன்னும் சிலர் தற்கொலை போன்ற தவறான முடிவுகளுக்குச் செல்கின்றனர்.

 

இதுதவிர, தனக்குத்தானே பேசிக் கொள்வது; இருவேறு நபர்கள்போல தன்னை உணர்வது (bipolar disorder); எப்போதும் காமம் அல்லது வன்முறை பற்றியே சிந்திப்பது; இயற்கைக்கு மாறான உறவுகளில் நாட்டம்; தன்னைவிட வயதில் மூத்த அல்லது இளைய ஆண் அல்லது பெண்மீது காதல்கொண்டு, அதை நிறைவேற்றும் வழிதெரியாமல் மனதிற்குள் அழுத்திக்கொண்டு, அதனால் புறவுலகைப் பற்றிய எண்ணமே இல்லாமல் எங்கோ வெறித்தபடி இருப்பது போன்றவற்றையும் காண முடிகிறது.

காதல் சார்ந்த மன அழுத்தம் ஏற்பட்டு, அதனால் ஒரு ஆணும் பெண்ணும் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்றால், அவர்களது ஜாதகத்தில் புதனும் கேதுவும் இணைந்திருப்பார்கள். இந்த அமைப்புடைய வர்கள் காதல் வலையில் வீழ்வார்கள் என்று ஜோதிடம் கூறுகிறது. மேலும் குரு, சூரியன், சனி ஆகிய கிரகங்கள் ஆறாமிடத்து அதிபதியுடன் கூடியிருந்தாலும், மனதளவில் சில பாதிப்புகள் இருக்கும். சிலருக்கு எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக இருக்கும். சிலருக்கு வாழ்க்கையில் எல்லா வசதிகளும் இருந்தாலும் எதையோ இழந்தது போன்று அல்லது ஏதோவொன்று தன்னிடம் இல்லாதது போன்று தோன்றும். அதீத கோபம் அல்லது வெறுப்பும் சிலர்மீது ஏற்படும். தெளிவான சிந்தனையும் கட்டுக்கோப்பான நடைமுறைகளும் இல்லாமல், சற்று வித்தியாசமாக எதற்கெடுத்தாலும் எரிந்துவிழுவார்கள். யாருடனும் ஒட்டாமல் இருப்பார்கள். தன்னை உயர்வாகக் கருதிக்கொண்டு மற்றவர்களைக் கேவலமாக மதிப்பார்கள். இதே போல தன்னைத் தாழ்வாகக் கருதிக்கொள்ளும் தாழ்வுமனப்பான்மையும் ஆழ்மனதில் ஏற்பட்டுள்ள அழுத்தமான பிம்பங்களின் பிரதிபலிப்புகளே.

மன அழுத்தம் இரண்டு வகையாக ஏற்படுமென்று மருத்துவ அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். சிலருக்கு மூளையின் செயல்பாடுகளில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்போது மன அழுத்தம் ஏற்படலாம். ஆண்- பெண் உறவு களில் ஏற்படும் பிரச்சினைகள், அலுவலகம் மற்றும் வெளியிடம் சார்ந்த அழுத்தங்களால் மன அழுத்தம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. மன அழுத்தமென்பது எப்போதும் காலத்தோடு தொடர்புடையது. கடந்தகால நிகழ்வுகள், நிகழ்காலத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாத நிலை, "எதிர்காலம் என்னாகுமோ' என்ற அச்சத்தின் காரணமாக பொதுவாக மனஅழுத்தம் ஏற்படுகிறது.

மனம் எண்ணங்களால் ஆனது.

எண்ணம்போல்தான் வாழ்க்கை. தான் விரும்பியது நடக்காதபோதும், விரும்பாதது நடக்கும்போதும் மனம் குழம்பி, "இனி எதிர்காலமே இல் லையோ' என்ற குழப்பத்துக்கு ஆளாகி விடுகிறது.

 



ஜோதிட சாஸ்திரம் மனம் சார்ந்த பிரச்சினைகளுக்குக் காரணமாக பல்வேறு கிரக அமைப்புகளைக் கூறியிருக்கிறது. பொதுவாக ஒருவருக்கு மனம் நல்ல நிலையிலும், எண்ணியதை எண்ணியபடி நடத்தும் துணிவும், அதற்குண்டான ஆற்றலும் இருக்க வேண்டுமானால் லக்னம், மூன்றாமிடம், மனோகாரகன் சந்திரன், சூரியன் ஆகியவை நல்ல நிலையில் இருக்க வேண்டும். அவ்வாறு பிறந்த ஜாதகர் இயல்பிலேயே நினைத்ததை சாதிக்கும் திறமையுள்ளவராகவும், குழப்பமில் லாமல் தீர்க்கமாக முடிவெடுக்கும் மனமுள்ளவராகவும் இருப்பார். அவர் விரும்பியது கிடைக்கும்வரை ஓய மாட்டார்.

சிலர் தன்னால் முடிகிறதோ இல்லையோ- எந்த திட்டமிடலும் இல்லாமல் துணிந்து செயலில் இறங்கி வெற்றிபெறுவதும் உண்டு. இதற்கு பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய் மூன்றாமிடத்தில் இருப்பதும் காரணம். மாறாக மூன்றாமிடத்தில் சுப கிரகங்கள் இருக்கப் பிறந்தவர்கள், சிறிய விஷயத்தைக்கூட தேவைக்குமீறி யோசித்து, சிலசமயம் தள்ளிவைத்து, தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பிவிடுவார்கள். இன்னும் சிலர் மனக்குழப்பத்தோடும் எந்தவொரு செயலையும் செய்யமுடியாத தைரியக்குறைவோ டும் இருப்பார்கள். இதற்கு அவர்களுடைய ஜாதகத்தில் 3-க்குடையவர் நீசமடைவதோடு மறைந் தும், 5-க்குடையவரோடு சேர்ந்திருப்பதும் காரணம் என்று ஜோதிடப் பெரியோர்கள் கூறுகின்றனர்.

சிலர் எப்போதும் விரக்தியுடனும், எதிலும் ஈடுபாடில்லாமலும், வாயைத் திறந்தாலே எதிர்மறைப் பேச்சுகளோடும் இருப்பார்கள். எப்போதோ ஒருமுறை இவர்கள் விரும்பியபடி நடக்காமல் இருந்திருக்கலாம். இவர்களுக்கு ஜோதிடம் கூறுவது என்னவென்றால், இவர்களது ஜனன ஜாதகத்தில் ஆழ்மனதைக் குறிக்கும் ஆன்மகாரகன் சூரியன், கரும்பாம்பென்னும் ராகு அல்லது செம்பாம்பென்னும் கேது மற்றும் காரியாம் சனியுடன் சேர்ந்து காணப்படுவதே என்கிறது.

பொதுவாக சூரிய சந்திரர்கள் நன்கு வலிமையுடன் இருந்தாலே ஜாதகர் வாழ்க்கையில் பிரகாசிக்கமுடியும். குறிப்பாக சூரியன் கெடாமல்- அதாவது லக்னத்திற்கு பாவியாகவோ, ஆதிபத்திய ரீதியாக பாதகம் செய்பவராக இல்லாமலோ, மறைவு ஸ்தானங்களான 6, 8, 12 ஆகிய இடங் களில் மறையாமலோ இருக்கவேண்டும். துரதிர்ஷ்ட வசமாக மேற்கூறிய அமைப்புகளில் ஏதாவது ஒன்றில் சூரியன் இருந்தால் ஜாதகர் மனவிரக்தி உடையவராக இருப்பார்.

அடுத்தபடியாக சந்திரனின் நிலையும் ஆராயப் பட வேண்டும். காரணம்- சந்திரன்தான் மனதிற்கு அதிபதி. ஜாதகத்தில் சந்திரன் வலுவில்லாமல் இருப்பது- உதாரணமாக சந்திரனுடன் சனி, ராகு, கேது சேர்ந்திருப்பது அல்லது ஜென்ம லக்னத்திற்கு பாதகாதிபதியாக அமைந்த கிரகத்துடன் சேர்ந்திருப்பது, எட்டாமிடம் என்னும் துர்ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது போன்ற நிலையில் காணப்பட்டால் ஜாதகர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாவார்.

பொதுவாக கர்மகாரகன் சனியுடன் சேர்ந்திருப்பது, ஒருவருக்கொருவர் சமசப்தம நிலையில் சஞ்சரிப்பது ஆகிய நிலைகளில் சந்திரன் ஒருவரது ஜாதகத்தில் காணப்பட்டால், அந்த ஜாதகருக்கு எதிலும் பிடிப்பிருக்காது. எப்போதும் எதையாவது விபரீதமாக கற்பனை செய்துகொண்டு கடும் மனக்குழப்பத்திற்கு ஆளாவார். யாருடனும் பேசப் பழகப் பிடிக்காமல் கடுமையாகவும் நடந்து கொள்வார். இதேபோல கோட்சாரரீதியாக ராகு, கேது, சனி இருக்கும் ராசிகளில் சஞ்சரிக்கும் அந்த இரண்டரை நாட்களும் ஜாதகருக்கு டென்ஷன், மன அழுத்தம் போன்றவை ஏற்படும்.


ஒருவரது ஜாதகத்தில் அதிக கிரகங்கள் வக்ரம் பெற்றால், ஜாதகருக்கு எதிலும் எதிர்மறை சிந்தனைகள், மன அழுத்தம் போன்ற பாதிப்புகளும் இருக்கும். மேலும் நான்காமிட அதிபதி, நான்காமிடத்தில் அமர்ந்த மற்றும் பார்த்த கிரகங்களின் நிலையும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

ஜோதிட சாஸ்திரம், "கர்மவினைகளை அடிப்படையாகக் கொண்டே ஒருவரது வாழ்க்கை அமைகிறது' என்று கூறுகிறது. முற்பிறவிகளில் செய்த வினைப்பயனையே இப்போது அனுபவிக்கிறோம். பொதுவாக ஒருவரது வாழ்க்கையில் கடுமையான மன பாதிப்புகள் ஏற்படுவதற்கு ஸ்த்ரீ சாபம், பித்ரு சாபம், பிரம்ம சாபம், மித்ர சாபம் என்று பல காரணங்கள் உண்டு. இவற்றை சரியாகக் கண்டறிந்து, உரிய நிவர்த்தி ஹோமம், பரிகாரங்களைச் செய்வது; மந்திர உபதேசம் பெற்று முறையாக ரட்சாதாரணம் ஏற்று ஜெபித்து வருவது; உரிய மந்திரத்தைப் பெற்றுப் பூஜிப்பது போன்றவற்றால் அவரவர் மன பாதிப்புகளால் ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.

மன பாதிப்புகள் மட்டுமல்ல; எவ்வளவு முயன்றும் திருமணம் கைகூடாமல் தள்ளிப் போவது; எல்லா தகுதிகள் இருந்தும் குழந்தை பிறக்காமல் போவது; நியாயமாகக் கிடைக்கவேண்டிய சொத்து கைக்கு வராமல்போவது; ஆண்- பெண் உறவுகளில் சிக்கல்- அதனால் நீதிமன்ற வழக்கு என்று அவமானங்களை சந்திப்பது; கணவன்- மனைவியுடன் பிரச்சினை போன்ற அன்றாட வாழ்வில் ஏற்படும் சிக்கலான பிரச்சினைகளுக்கும் மந்திர சாஸ்திரரீதியான பரிகாரங்களைச் செய்து நிம்மதியாக வாழலாம் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.
courtesy; Nakkiran/balajothidam.
செல்: 95660 27065

 

Monday, January 18, 2021

 இறந்தவர்க்கும் நட்சத்திரம் பார்க்க வேண்டும் !தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் 13 ஆகும்..........

இறந்தவர்களுக்கும் நட்சத்திரம் பார்க்க வேண்டியது மிக அவசியமானது என சித்தர்கள் கூறியுள்ளார்கள்.
தனிஷ்டா பஞ்சமி என்றால் என்ன? தனிஷ்டா பஞ்சமியில் என்ன செய்ய வேண்டும்?
தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் 13 ஆகும்.
• அவிட்டம், சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி,ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு.
• ரோஹிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் அடைப்பு.
• கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு.
• மிருகசீருஷம், சித்திரை, புணர்பூசம்,விசாகம், உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
பிறக்கும் போது நட்சத்திரத்தையும், இறப்புக்குத் திதியையும் நாம் நினைவில் கொள்வோம். ஆனால் இறக்கும் போது நட்சத்திரம் பார்க்க வேண்டியது அவசியம் என்று சித்தர்கள் சொல்லி வைத்துள்ளனர். சில நட்சத்திரங்கள் அடைப்பு என்று வழங்கப்படுகின்றன.
அது என்ன அடைப்பு? – அதாவது கர்மவினை, வினைப்பயன் காரணமாக மேலுலகம் செல்வதற்கு ஏற்படும் தடையையே அடைப்பு என்று சொல்கிறார்கள். சித்தர்கள் தனிஷ்டா பஞ்சமி என்றழைப்பதுவும் இந்த நட்சத்திரங்களில் ஏற்படும் மரணங்களைத்தான்.
தனிஷ்டா பஞ்சமி என்பது ஒரு துர்தேவதையாகச் சொல்லப்பட்டுள்ளது. தீய அல்லது அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் முறையான பரிகாரங்களைக் கைகொள்ளாவிட்டால் இந்த துர்தேவதை புகுந்து அந்த வீட்டில் உள்ளவர்களை ஆவிரூபமாகவோ, கனவு மூலமாகவோ, பிரம்ம ராக்ஸத ரூபமாகவோ தோன்றி பயமுறுத்தி, 6 மாதத்திற்குள் மரணப்படுக்கையில் தள்ளிவிடும் என்பார்கள்.
முக்தி பெற்ற உயிர்கள் கபாலம் திறந்து சூரியன் வழியாக ஒளிவடிவான இறைவனை அடைகின்றன. ஆனால் முக்திநிலையை எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன.
கடந்த காலங்களில் இந்த அடைப்பு காலங்கள் முடியும் வரை வீட்டை பூட்டியே வைத்திருப்பார்கள். சில இடங்களில் இறந்தவருடைய சடலத்தை வாசல் வழியாக கொண்டு செல்லாமல் சுவரை இடித்து அதன்வழியாக எடுத்துக் கொண்டுபோவது, போன்ற கடுமையான விதிமுறைகளை எல்லாம் தனிஷ்டா பஞ்சமிக்காக கடைபிடித்திருக்கிறார்கள். கூரையைப் பிரித்து அதன்வழியாகக் கூட சடலத்தை அப்புறப்படுத்தி உள்ளதைக் கேள்விப் படுகிறோம்.
ஒரு மனிதனானவன் எந்த நட்சத்திரத்தில் இறக்கிறானோ அந்த நட்சத்திரத்தின் வழியாகவே எமலோகத்திற்கு செல்வதாகச் சொல்லப்படுகிறது. 27 நட்சத்திரங்களில் இந்த தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களான 13 நட்சத்திரங்கள் போக மீதமுள்ள 14 நட்சத்திரங்களில் இறப்பவர்கள் விரைவில் தடையேதுமின்றி எமலோகம் அடைகிறார்கள். தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களில் இறந்தவர்கள் எமலோகம் சென்றடைய அந்த அடைப்பு என்று சொல்லப்பட்டுள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது. இதையே கருடபுராணமும் உறுதிப் படுத்துகின்றது.
இதற்கு பரிகாரமாக வீட்டையெல்லாம் இடிக்கத் தேவையில்லை. அந்த குறிப்பிட்ட காலம்வரை இறந்த இடத்தில் ஒரு திண்ணை அமைத்து, மாலைநேரத்தில் தீபம் ஏற்றி,தண்ணீர், நைவேத்தியம் வைத்து, கற்பூர ஆரத்தி செய்து ”இறந்த இந்த உயிருக்கு உணவும், நீரும் சென்றடைய இறைவா நீ உதவவேண்டும் ” என்று வேண்டிக் கொண்டு,கற்பூர ஆராதனைக்குப் பிறகு தீபம் அனையாதவாறு ஒரு கூடையைப் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கான காலம்வரை இதைச் செய்து முடிக்க வேண்டும். அதன் பிறகு அதற்கான கிரியைகளை தகுந்த வேதப் பயிற்சி பெற்ற அந்தணர்களைக் கொண்டு செய்து கொள்ளவேண்டும்.
=====================================

Friday, January 15, 2021

8ஆயிரம் தேவார பாடல்களை பாடி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த உடுமல...

8ஆயிரம் தேவார பாடல்களை பாடி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த உடுமலை மாணவி செல்வி உமா நந்தினி!

Wednesday, January 13, 2021

 



வீடுகளில் சமைப்பது நின்ற அமெரிக்காவில் என்ன நடந்தது ?

1980-ல் புகழ் பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர்கள்
சமையல் அறையை தனியார் கம்பெனிகளுக்கு கொடுத்தாகிவிட்டது, வயதானவர்கள் குழந்தைகள் பராமரிப்பை அரசாங்கத்துக்கு கொடுத்துவிட்டால், குடும்பப் பொறுப்பும், பாங்கும் அழிந்துவிடும்” என்று தீர்க்கதரிசனமாகக் கூறினார்கள்.

அதாவது வீட்டில் சமைப்பது நிறுத்தி விட்டு
கடைகளில் வாங்கி கொள்ளும் பழக்கம் வந்தது இதனால் அவர்கள் எச்சரித்தபடியே பொறுப்பும் பாங்கும் அற்ற அமெரிக்க குடும்பங்கள் ஏறக்குறைய அழிந்துவிட்டன.

அன்புடன் சமைப்பது என்பது பாசத்துடன் குடும்பத்தை இணைப்பது.
சமையல் கலை மட்டும் அல்ல. குடும்ப கலாச்சாரத்தின் மையப்புள்ளி.
சமையல் அறை இல்லாது, வெறும் படுக்கை அறை மட்டும் இருந்தால் அது குடும்பம் அல்ல, தங்கும் விடுதி தான்.

சமையல் அறையை மூடிவிட்டு, படுக்கை அறை மட்டும் போதும் என்று நினைத்த அமெரிக்க குடும்பங்களின் நிலை என்ன?.
1971-ல் மொத்த குடும்பங்களில் கணவனும்-மனைவியும் குழந்தைகளுடன் இருந்த அமெரிக்க குடும்பங்கள் 71 சதவிகிதம்.
2020--ல் அது 20 சதவிகிதமாக நலிந்துவிட்டது.
அன்று வாழ்ந்த குடும்பங்களாக இருந்தது இன்று தங்கும் வீடுகளாகிவிட்டது.

அமெரிக்காவில் இப்போது பெண்கள் தனித்திருக்கும் வீடுகள் 15 சதவிகிதம்;
ஆண்கள் தனித்திருக்கும் வீடுகள் 12 சதவிகிதம்;
19 சதவிகிதம் வீடுகள் அப்பாவோ, அம்மாவோ மட்டுமே இருக்கும் வீடுகள்.
6 சதவிகிதம் வீடுகள் குடும்பங்கள் ஆண்--பெண் சேர்ந்து தங்குமிடங்கள்.
இன்று பிறக்கும் மொத்த குழந்தைகளில் 41 சதவிகிதம் திருமணமாகாத பெண்களுக்கு பிறக்கின்றன.

அதில் பாதி குழந்தைகள் பள்ளிக்கூடம் போகும் சிறுமிகளுக்கு,
இந்த அலங்கோலத்தால் அமெரிக்காவில் 50 சதவிகிதம் முதல் திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன.
67 சதவிகிதம் இரண்டாவது திருமணங்களும்,

74 சதவிகிதம் மூன்றாவது திருமணங்களும் விவகாரத்தாகின்றன
வெறும் படுக்கை அறை மட்டும் குடும்பம் அல்ல.
சமையல் அறை இல்லாது, படுக்கை அறை மட்டும் இருந்தால்
திருமணம் நிலைகுலைந்துவிடும் என்பதற்கு அமெரிக்கா உதாரணம்
அங்குபோல இங்கும் குடும்பங்கள் அழிந்தால் நமது பெண்ணுரிமைவாதிகள் கடைகளில் இனிப்பு வாங்கி வழங்கி கொண்டாடுவார்கள்

குடும்பங்கள் அழிந்தால் மனநலமும் உடல் நலமும் சீரழியும்.
வெளியில் சாப்பிடுவதால் உடல் ஊதிப்போகிறது
ஏராள தொற்று வியாதிகள் வருகின்றன
சேமிப்பும் குறைகிறது.
எனவே சமையல், சமையல் அறை என்பது குடும்ப நலனுக்கு மட்டும் ஆதாரம் அல்ல
உடல் நலம் மன நலம் பொருளாதாரத்துக்கு கூட அவசியம்.


இதிலிருந்து அனைத்து நன்மைக்கும் பெண்கள் இன்றி அமையாத கடவுள் படைப்பு என்பதை ஆண்கள் உணரலாம்.
மேலும் ஆன்மிக ரீதியாக சமைப்பவரின் குணநலன்கள், பழக்கவழக்கங்கள்
அவர் சமைக்கின்ற உணவிலும் வரும் என்பதும் உண்மை.., என்பது நம்பிக்கையும் கூட


ஆதலால்தான் நம் வீட்டில் பெரியவர்கள் ஹோட்டல்களில்
(கிளப்புகடைகளில்) சாப்பிடுவதை தவிர்த்தும், கண்டித்தும் வந்தனர்
ஆனால் இன்று நம்மிடையே குடும்பத்துடன் கடைகளில் சாப்பிடுவதும்...
Swiggy, Zomato, uber eats போன்ற ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவதும்
மெத்தப் படித்த, நடுத்தர மக்களிடமும் நாகரீகமாகிக்கொண்டிருக்கிறது.,
இது ஒரு பேராபத்து...

நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை அந்த ஆன் லைன் நிறுவனங்களே உளவியல் ரீதியாக தீர்மானிக்கிறார்கள்... இந்த நிறுவனங்களுக்கு தற்போது சீன நாட்டு முதலீடுகளும் வந்துள்ளன
முன்பெல்லாம் நம்முன்னோர்கள்
யாத்திரை மற்றும் சுற்றுலா செல்லும் போதுகூட புளியோதரை மற்றும் தயிர் சாதங்களை கட்டிக் கொண்டு செல்வார்கள்
நம் தர்மத்தில் வாழ்க்கை முறையில்
பெண்களை, குறிப்பாக மனைவியை,
போஜ்யேஷு மாதா”, அதாவது உணவூட்டுவதில் தாய், என்கிறது சம்ஸ்க்ருத சுபாஷிதம்.

ஆகையால் வீட்டிலேயே சமையல் செய்யுங்கள்.
அனைவரும் சேர்ந்து உணவருந்துங்கள்
காலையில் எறும்புக்கும்
பகலில் காக்கைக்கும்
இரவில் நாய்க்கும் உணவிடுங்கள்
குடும்பமாய் இருங்கள்
ஒற்றுமையாய் வாழுங்கள்...

P-P
==================

Tuesday, January 12, 2021

 

தை மாத கிரகக் கூட்டணி! - ஆர். மகாலட்சுமி

 

 

2021 தை மாதம், ஜனவரி 14-ஆம் தேதிமுதல் பிப்ரவரி 12-ஆம் தேதி வரையிலான கோட்சாரம் கவனிக்கத்தக்கதாக உள்ளது. ஜனவரி 14-ஆம் தேதிக்குப் பிறகு மகர ராசியில் சூரியன், குரு, சனி, புதன் ஆகியோர் உள்ளனர்.

ஜனவரி 28-ஆம் தேதி சுக்கிரனும் இவர்களுடன் சேர்ந்துவிடுவார். செவ்வாய் மேஷத்திலும், ராகு ரிஷபத்திலும், கேது விருச்சிகத்திலும் உள்ளனர்.

thimonth



இதில் ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் சந்திரன் மகரத்தில் சஞ்சாரம் செய்வார். அதுபோல் பிப்ரவரி 10, 11, 12 ஆகிய தேதிகளிலும் சந்திரன் மகர ராசியில் சஞ்சரிப்பார்.

இப்போது சூரியன், சனி, குரு, புதன், சந்திரன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள்

(
ஜனவரி 28-க்குப்பிறகு சுக்கிரன் மகரத்தில் சேர்வதால்) இந்த ஆறு கிரகங்களும் கடக ராசியைப் பார்க்கிறார்கள். மேலும் செவ்வாய் தனது நான்காம் பார்வையால் பார்க்கிறார். ராகு மூன்றாம் பார்வையால் கடக ராசியைப் பார்க்கிறார்.

ராகு ரோகிணி என்னும் சந்திர சாரசஞ்சாரம். மேலும் அம்சத்திலும் ராகு கடகாம்சம் பெறுகிறார். மகரம் எனும் நில ராசியிலுள்ள கிரகங்கள் கடகம் எனும் நீர் ராசியைப் பார்க்கிறார்கள். கை மாத முதல் வாரத்தில் செவ்வாய் நீசாம்சம் பெறுகிறார்.

இதன்மூலம் கடக ராசி மிகவும் பாதிப்படைவது தெளிவாகத் தெரிகிறது. கடக ராசி கடற்கரை, நதிக்கரை, புண்ணியத் தலங்கள், பள்ளமான பகுதிகள், வயல்சார்ந்த பகுதி, பவளம், சங்கு உள்ள இடங்கள் ஆகிய பகுதிகளைக் குறிக்கும்.

திரவம், உணவு, கடல் வியாபாரம், மருத்துவம், ஜோதிடம், போக்குவரத்து, கலை, கல்வி சார்ந்த தொழில்களைக் கடக ராசி குறிக்கும்.

கடக ராசியின் அதிபதி சந்திரன்- நீர், உணவு, விவசாயம், அரிசி, மீன், பூ, பழம், பயணம், குளியலறை, கழிவறை, கடல், மேகம் ஆகியவற்றைக் குறிக்கும்.

இத்தகைய காரகமுடைய கடக ராசியை தேவகுருவான வியாழனும், அசுர குருவான சுக்கிரனும், காலபுருஷனின் ஐந்தாம் அதிபதியான சூரியன் பகை கிரகமான சனியுடனும், காலபுருஷனின் ஆறாம் அதிபதி புதனும், காலபுருஷனின் விரயாதிபதி குருவும் சேர்ந்து ஒரே நேரத்தில் நோக்குகிறார்கள்.

இவ்வளவு கிரகங்களும் காலபுருஷனின் கர்மவீட்டில் அமர்ந்துள்ளனர். ஒரே ராசியில் அதிக கிரகங்கள் ஒன்றாக அமைவது பொதுவாக உலகிற்கு நல்லதல்ல. எனினும் இதில் ஒரு ஆறுதல், பாதுகாக்கும் கிரகம் குருபகவான் இந்தக் கூட்டத்தில் இருக்கிறார் என்பதே. ஏதேனும் இன்னல் விளையுமா அல்லது குரு காப்பாற்றிவிடுவாரா என்னும் கேள்விக்கு காலமும் கடவுளுமே பதில் சொல்ல இயலும்.

தெய்வச்சித்தர் காஞ்சிப் பெரியவரின் கூற்றுப்படி கோளறு பதிகம் படிப்பது சாலச்சிறந்தது. மேலும் அம்பாளை வணங்குவது, சந்திரமௌலீஸ்வரர் பூஜை, திங்களூர், திருப்பதி திருத்தலங்களில் சிறப்பு வழிபாடுகள், காலபைரவர் வழிபாடு மற்றும் அனைத்து சிவன் கோவில்களிலும் சிவ வழிபாடு அவசியம் செய்வது நல்லது.

அனைத்து கிரகங்களும் ராகு- கேதுவுக்குள் அடைபட்டிருப்பது கவனிக்கத்தக்கது. ராகு பகவான் காலபுருஷனின் 2-ஆம் வீட்டிலும், கேது எட்டாம் வீட்டிலும் அமர்ந்து குளிகை காலசர்ப்ப தோஷத்தைக் கொடுக்கிறார் கள். இதன் பலனாக இழப்பு, விபத்து, பொருளாதாரப் பாதுகாப்பற்ற நிலை, உடல்நலக்கேடு ஏற்படக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

கிரகக் கூட்டணியிலுள்ள குரு அனைத்து தீமைகளையும் தடுத்துக் காக்கும் வல்லமை உடையவர். அம்பாள் சந்நிதிக்குள் ஏதேனும் குறை இருப்பின் உடனடியாக நிவர்த்திசெய்வது நல்லது.

ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் சந்திரன் மகர ராசியில் சஞ்சரிக்கிறார். அப்போது மகரத்தில் ஆறு கிரகக் கூட்டணி அமையும்.

மகரத்திலுள்ள கிரகங்களுக்குரிய வழிபாட்டுத் தலங்கள்:

சூரியன்- பேரூர்.

சந்திரன், குரு- திருவானைக்கா.

புதன்- திருநறையூர்.

சுக்கிரன்- திருக்கவித்தலம்.

சனி- திருச்செங்கோடு.

மேற்கண்ட திருத்தலங்களில் சிறப்புப் பூஜை நடத்துதல் நலம். வீட்டிலுள்ளவர்கள் நவதானியங்களை ஊறவைத்துப் பறவைகளுக்குக் கொடுக்கவும்.

செல்: 94449 61845

courtesy;Nakkiran/balajothidam.tq

==============================================

 

Asato Ma - Cantado por Sai Baba


Asatoma Sad-Gamaya
Tamaso Maa Jyotir-Gamaya
Mrytyor-Maa Amritam Gamaya


Om Shaantih Shaantih Shaantihi (x7, all four lines)
Om Shaantih Shaantih Shaantihi (x2)


Lead me from the untruth to the Truth.
Lead me from darkness to light.
Lead me from death to immortality
Om Peace Peace Peace.

===================================


  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...