தை மாத கிரகக் கூட்டணி!
- ஆர். மகாலட்சுமி
2021 தை மாதம், ஜனவரி 14-ஆம் தேதிமுதல்
பிப்ரவரி 12-ஆம் தேதி வரையிலான கோட்சாரம் கவனிக்கத்தக்கதாக உள்ளது. ஜனவரி 14-ஆம் தேதிக்குப்
பிறகு மகர ராசியில் சூரியன், குரு, சனி, புதன் ஆகியோர்
உள்ளனர்.
ஜனவரி 28-ஆம் தேதி சுக்கிரனும் இவர்களுடன் சேர்ந்துவிடுவார். செவ்வாய் மேஷத்திலும், ராகு ரிஷபத்திலும், கேது
விருச்சிகத்திலும் உள்ளனர்.
இதில் ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் சந்திரன் மகரத்தில் சஞ்சாரம் செய்வார். அதுபோல் பிப்ரவரி 10, 11, 12 ஆகிய தேதிகளிலும்
சந்திரன் மகர ராசியில் சஞ்சரிப்பார்.
இப்போது சூரியன், சனி, குரு, புதன், சந்திரன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள்
(ஜனவரி 28-க்குப்பிறகு சுக்கிரன் மகரத்தில் சேர்வதால்) இந்த ஆறு கிரகங்களும் கடக
ராசியைப் பார்க்கிறார்கள். மேலும் செவ்வாய் தனது நான்காம் பார்வையால்
பார்க்கிறார். ராகு மூன்றாம் பார்வையால் கடக ராசியைப் பார்க்கிறார்.
ராகு ரோகிணி என்னும் சந்திர சாரசஞ்சாரம். மேலும் அம்சத்திலும் ராகு கடகாம்சம்
பெறுகிறார். மகரம் எனும் நில ராசியிலுள்ள கிரகங்கள் கடகம் எனும் நீர் ராசியைப்
பார்க்கிறார்கள். கை மாத முதல் வாரத்தில் செவ்வாய் நீசாம்சம் பெறுகிறார்.
இதன்மூலம் கடக ராசி மிகவும் பாதிப்படைவது தெளிவாகத் தெரிகிறது. கடக ராசி
கடற்கரை, நதிக்கரை, புண்ணியத் தலங்கள், பள்ளமான பகுதிகள், வயல்சார்ந்த பகுதி, பவளம், சங்கு உள்ள இடங்கள்
ஆகிய பகுதிகளைக் குறிக்கும்.
திரவம், உணவு, கடல் வியாபாரம், மருத்துவம், ஜோதிடம், போக்குவரத்து, கலை, கல்வி சார்ந்த
தொழில்களைக் கடக ராசி குறிக்கும்.
கடக ராசியின் அதிபதி சந்திரன்- நீர், உணவு, விவசாயம், அரிசி, மீன், பூ, பழம், பயணம், குளியலறை, கழிவறை, கடல், மேகம் ஆகியவற்றைக்
குறிக்கும்.
இத்தகைய காரகமுடைய கடக ராசியை தேவகுருவான வியாழனும், அசுர குருவான
சுக்கிரனும், காலபுருஷனின் ஐந்தாம் அதிபதியான சூரியன் பகை கிரகமான சனியுடனும், காலபுருஷனின் ஆறாம்
அதிபதி புதனும், காலபுருஷனின் விரயாதிபதி குருவும் சேர்ந்து ஒரே நேரத்தில் நோக்குகிறார்கள்.
இவ்வளவு கிரகங்களும் காலபுருஷனின் கர்மவீட்டில் அமர்ந்துள்ளனர். ஒரே ராசியில்
அதிக கிரகங்கள் ஒன்றாக அமைவது பொதுவாக உலகிற்கு நல்லதல்ல. எனினும் இதில் ஒரு
ஆறுதல், பாதுகாக்கும்
கிரகம் குருபகவான் இந்தக் கூட்டத்தில் இருக்கிறார் என்பதே. ஏதேனும் இன்னல்
விளையுமா அல்லது குரு காப்பாற்றிவிடுவாரா என்னும் கேள்விக்கு காலமும் கடவுளுமே
பதில் சொல்ல இயலும்.
தெய்வச்சித்தர் காஞ்சிப் பெரியவரின் கூற்றுப்படி கோளறு பதிகம் படிப்பது
சாலச்சிறந்தது. மேலும் அம்பாளை வணங்குவது, சந்திரமௌலீஸ்வரர் பூஜை, திங்களூர், திருப்பதி திருத்தலங்களில் சிறப்பு வழிபாடுகள், காலபைரவர் வழிபாடு மற்றும் அனைத்து சிவன் கோவில்களிலும் சிவ வழிபாடு அவசியம்
செய்வது நல்லது.
அனைத்து கிரகங்களும் ராகு- கேதுவுக்குள் அடைபட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
ராகு பகவான் காலபுருஷனின் 2-ஆம் வீட்டிலும், கேது எட்டாம் வீட்டிலும் அமர்ந்து குளிகை காலசர்ப்ப தோஷத்தைக் கொடுக்கிறார்
கள். இதன் பலனாக இழப்பு, விபத்து, பொருளாதாரப் பாதுகாப்பற்ற நிலை, உடல்நலக்கேடு ஏற்படக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
கிரகக் கூட்டணியிலுள்ள குரு அனைத்து தீமைகளையும் தடுத்துக் காக்கும் வல்லமை
உடையவர். அம்பாள் சந்நிதிக்குள் ஏதேனும் குறை இருப்பின் உடனடியாக நிவர்த்திசெய்வது
நல்லது.
ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் சந்திரன் மகர ராசியில் சஞ்சரிக்கிறார். அப்போது மகரத்தில் ஆறு
கிரகக் கூட்டணி அமையும்.
மகரத்திலுள்ள கிரகங்களுக்குரிய வழிபாட்டுத் தலங்கள்:
சூரியன்- பேரூர்.
சந்திரன், குரு- திருவானைக்கா.
புதன்- திருநறையூர்.
சுக்கிரன்- திருக்கவித்தலம்.
சனி- திருச்செங்கோடு.
மேற்கண்ட திருத்தலங்களில் சிறப்புப் பூஜை நடத்துதல் நலம். வீட்டிலுள்ளவர்கள்
நவதானியங்களை ஊறவைத்துப் பறவைகளுக்குக் கொடுக்கவும்.
செல்: 94449 61845
courtesy;Nakkiran/balajothidam.tq
==============================================
No comments:
Post a Comment