Followers

Wednesday, September 16, 2020

 


நான்காம் பாவகம்..............


நாலாம் வீட்டை வைத்து என்னவெல்லாம் கூறலாம்?
ஒருவர் நிரந்தரமாகக் குடியிருக்கும் வீட்டைக் குறிக்கிறது.
ஒருவருக்கு சொந்த வீடு இருக்குமா? அல்லது இருக்காதா? என்பதும் இந்த வீட்டை வைத்துக் கூறிவிடலாம்.
வீடுமட்டுமல்ல; ஸ்திர சொத்துக்களான நில, புலன்கள் ஒருவருக்குக் கிட்டுமா? அல்லது கிட்டாதா? என்பதையும் இந்த வீட்டை வைத்துக் கூறி விடலாம்.
சரி! எப்படி கூறுவது? செவ்வாயானவர் ஸ்த்ர சொத்துக்களுக்கு அதிபதி அல்லவா?
அவர் 4-ம் வீட்டில் இருந்தாலோ அல்லது 4-ம் வீட்டைப் பார்த்தாலோ அல்லது 4-ம் வீட்டின் அதிபதியுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது பார்த்தாலோ ஒருவருக்கு ஸ்திர சொத்துக்கள் வாங்க யோகம் உண்டு என்று கூறலாம்.
4-ம் வீட்டுடன் சுக்கிரன் சம்மந்தப் பட்டால் என்ன கிடைக்கும்? சுக்கிரன் வாகனகாரகன் அல்லவா? அவர்களுக்கு வாகனம் கிட்டும்..
வாகனம் என்றால் அது நான்கு சக்கரங்களுள்ளகாராக இருக்கலாம்; அல்லது மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற இரண்டு சக்கர வாகனங்களாகவும் இருக்கலாம், எப்படி இருப்பினும் அவர்களுக்கு வாகன யோகம் உண்டு.
படிப்பை பற்றிக் கூற வேண்டுமானால் 4-ம் வீட்டுடன் புதன் சம்மந்தப்பட்டுள்ளாரா? எனப்பார்ப்பது அவசியம். புதன் சம்மந்தப்பட்டு இருப்பாரேயாகில் அவர் ஒரு பட்டப்படிப்பு முடியப் படிப்பார் எனக் கொள்ளலாம்.
4-ம் வீடென்பது பட்டப் படிப்பு வரையிலான படிப்பைக் குறிக்கிறது.
அதற்கு மேலுள்ள படிப்பை 9-ம் வீடு குறிக்கிறது. சூரியனும், புதனும் ஒரு வீட்டில் சேர்ந்து இருப்பார்களேயாகில் அவர் படிப்பில் கெட்டிக்காரராக இருப்பார் எனக்கொள்ளலாம்.

சூரியனுடன் எந்த கிரகம் சேர்ந்து இருந்தாலும் அந்த கிரகத்தின் காரகத்துவம் மிகச்சிறந்து விளங்கும். உதாரணமாக புதன் கல்விக்குக் காரகம் வகிப்பவர். அவர் சூரியனுடன் சேர்ந்து இருந்தால் அவர் கல்வியில் சிறந்து விளங்குவார்.
சுக்கிரன் கலைகளுக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? சுக்கிரனும், சூரியனும் சேர்ந்து இருந்தால் அவர் கலைகளில் திறமை உள்ளவராக இருப்பார்.
சிலர் சூரியனுடன் ஏதாவது கிரகம் சேர்ந்து இருந்தால் அந்த கிரகம் சூரியனால் எரிக்கப் பட்டுவிடும் எனக் கூறுவர். அது தவறான கருத்து. அந்தக் கிரகத்தின் காரகத்துவம் சூரியனால் அதிகரிக்கப்படும் என்பதுதான் உண்மை.
4-ம் வீடு மறைத்து வைக்கப் பட்டு இருக்கும் சொத்துக்களைக் குறிக்கிறது.
ஒருவருக்குப் புதையல் கிடக்குமா? அல்லது கிடைக்காதா? என்பதை இந்த வீட்டை வைத்துக் கூறலாம்.
சனியானவர் எதையும் ஒளித்து வைக்கும், மறைத்து வைக்கும் குணம் கொண்டவர். அவர் தனஸ்தானத்தையோ அல்லது ஜீவனஸ்தானத்தையோ குறிப்பவராகி 4-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் அந்த ஜாதகர் கறுப்புப் பணம் வைத்து இருப்பர் எனக் கொள்ளலாம்.
உதாரணமாக மேஷ லக்கினக் காரரான ஒருவருக்கு சனியானவர் 10-ம் வீட்டிற்கும், 11-ம் வீட்டிற்கும் அதிபதி. அவர் கடகத்தில் இருப்பாரேயாகில் அந்த ஜாதகர் கறுப்புப் பணம் வைத்திருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம்.
4-ம் வீட்டில் இல்லாமல் பார்த்தாலும் அதே பலன்தான்.
காளிதாசன் "உத்திர காலாம்ருதத்தில்" கால்நடை கல், நிலங்களிலிருந்து கிடைக்கும் அரிசி, கோதுமை போன்ற தானியங்கள், எண்ணை வித்துக்கள் ஆகியவற்றையும் 4-ம் வீட்டை வைத்துத்தான் கூறவேண்டுமெனக் கூறுகிறார்.
4-ம் வீடு தாயாரையும் குறிக்கிறது. சந்திரனும் தாயாருக்குக் காரகம் வகிப்பவர்தான். 4-ம் வீடு தாயாரையும் குறிக்கிறது. சந்திரனும் தாயாருக்குக் காரகம் வகிப்பவாதான.
4-ம் வீட்டில் சுபக்கிரகங்கள் இருந்து, சந்திரனும் சுபர்களின் சம்மந்தம் பெற்றால் அந்த ஜாதகருக்கு நீண்ட ஆயுளுடன் கூடிய தாயார் அமைவார் எனக் கூறலாம்.
4-ம் வீட்டில் இருக்கும் கிரகங்களுக்கு என்ன பலன் என்று பார்ப்போம்.
சூரியன் : பிதுராஜித சொத்துக்கள் கிடைக்க வழியுண்டு. வேதாந்தத்திலும், மற்றும் புதிய விஷயங்களிலும் ஆர்வம் உண்டு.
சந்திரன்: சுற்றத்தாரால் மகிழ்ச்சியுண்டு. சிற்றின்பங்களில் பிரியம் அதிகம். சந்திரன் ஓர் நீர்க் கிரகமாதலால் வீட்டிலே நீர் வசதியுண்டு.
செவ்வாய் : வீடு கட்டும் யோகமுண்டு. தாயார் மூலமாக அனுகூலமில்லை. அரசியலில் முன்னேற்றமுண்டு. தாயாருடன் சண்டை போடக் கூடிய நிலை இருக்கும். ராகுவோ அல்லது கேதுவோ கூட இருக்குமேயாகில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இருக்கும்.
புதன் : படிப்பில் தேர்ச்சி இருக்கும். பாட்டு மற்றும் கலைகளில் ஆர்வம் இருக்கும்.
குரு : படிப்பில் தேர்ச்சி, வேதாந்தத்தில் ஆர்வம், அரசாங்கத்தின் உதவி, நல்ல சுமுகமான குடும்பச் சூழ்நிலை, தன் சொந்த மதத்தில் தீவீர நம்பிக்கை.

சுக்கிரன் : வாகன யோகம், தாயின் மீது தீவீரபக்தி, அமைதியான குடும்ப வாழ்க்கை, நினைத்த காரியம், ஆசைகள் நிறைவேறுதல்

சனி : சிறிய வயதில் தாயாரிடமிருந்து பிரிவு, வாயு உபத்திரவம், வீட்டாலும் வாகனத்தாலும் தொந்தரவு, சோம்பேரித்தனமான குணம், சொந்தக் காரர்கள் நடுவில் மரியாதை குறைவு, தனிமையை விரும்பும் குணம், பிதுரார்ஜித சொத்துக்கள் கிடைக்காமை ஆகியவை.
ராகு : முட்டாள்தனமான காரியங்கள் செய்வர், நம்பகத்தன்மை இல்லாது நடந்து கொள்வர்.
கேது: தாயாரால் அனுகூலமில்லை, வெளி நாட்டில் வாழக் கூடிய சூழ்நிலை; வாழ்க்கையில் பலதரப் பட்ட அனுபவங்கள்

நாலாம் பாவம் சுகத்தை குறிக்கும்
நாலாம் பாவம் என்பது முதல் கேந்திரம் ஜோதிடத்தில் உள்ள 4 கேந்திரங்களில் முதல் கேந்திரம் இந்த நாலாம் பாவமாகும்.
தன்னை சார்ந்த மேலும் தான் சார்ந்த அனைத்து பாவங்களையும் கிரகங்களையும் அனைத்துமே வசதியாக வைத்துக் கொள்ளும் பாவமே முதல் கேந்திரம்.
அனைவரையும் கட்டி அணைத்தல் பாசம் காட்டுதல் அதீத உணர்வுகளின் வெளிப்பாடு அதாவது நிற்பது, நடப்பது, நுகர்வது, உண்பது, கழிக்கபடுவது என எதனை எடுத்துக் கொண்டாலும் அனைத்தும் சுகமே ஆக சுகத்தை சம்மதிக்கப்படும் பாவமே இந்த நாலாம் பாவம்.
4 7 10 கேந்திரிய அஞ்சு 7 ஒன்பது திரிகோணம் கேந்திராதிபதிகள் திரிகோணத்தில் இருந்தாலும் அல்லது திரிகோணாதிபதிகள் கேந்திரத்தில் இருந்தாலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் பரிவர்த்தனை பெற்று கொண்டாலும் நன்மையே செய்வார்.
பாவரும்சுபரே சூரியன் சுக்கிரன் குரு புதன் சுபர்கள் சனி செவ்வாய் ராகு கேது பாவர்கள் சூரியன் பாபி சாரம் பெற்றால் பாவியாகிறார் பாவிகள் சுய சாரம் பெற்று சார பரிவர்த்தனை பெற்றாலும் கூட நற் பலன்களை தருவதில்லை.
முதல் கேந்திரம் சுகஸ்தானம் உயிர் காரகத்துவத்தில் தாயைக் குறிக்கும்.
அன்பு பாசம் கருணை இரக்கம் பாலூட்டிகளை குறிக்கும்.
தாயின் அனைத்து குண நலன்களை உள்ளடக்கிய பாவம்.
கறவை மாடுகளை குறிக்கும் பேச்சுவழக்கில் எப்படி என்றால் நாலு பேர் நம்மை மதிக்க வேண்டும், எதுக்கும் நாலு பேராவது வேண்டாமா? அந்த நாலு பேருக்கு நன்றி, நாலு பேருக்கு தெரிய கூடாது நாலு பக்கம் சுவர் நாலு பக்கம் பார்த்துப் போ நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க நாளையும் பார்த்து செய்யணும்.
இந்த மாதிரியான பேச்சு தான் இருக்கும்
நான்காம் இடத்தில் இரண்டாம் அதிபதி இருந்தால் இந்த மாதிரியான பேச்சுக்கள் வரும்.
நாலாம் அதிபதி எட்டாம் வீட்டில் அல்லது பன்னிரெண்டாம் பாவத்தில் இருந்தால் ஜாதகருக்கு சுகம் கிடையாது.
நாலு பன்னிரண்டாம் பாவத்தின் சுகத்தை சொல்வது நாலாம் பாவம்.
லக்னத்தில் நாலாம் அதிபதி இருந்தால் தாயுடைய அன்பும் கருணையும் நிறைந்த சுகமும் இருக்கும்
நான்காம் அதிபதி 3ல் இருந்தால் ஜாதகரின் சகோதரருக்கு தாயின் அன்பும் நிறைந்த சுகமும் கிடைக்கும்.
அழகு சுத்தம் பிராணிகள் மலை பாலூட்டிகள் நாலாம் இடம் குறிக்கும்.
குரு, சுக்கிரன், சந்திரன், நீர் கிரகங்கள் நாலாம் அதிபதி லக்னத்தில் இருந்தாலோ நாலாம் அதிபதி நாலில் இருந்தாலும் குரு, சுக்கிரன், சந்திரன் அதிபதிகள் பார்க்கப்பட்டாலும் சேர்ந்தாலும் ஜாதகர் அடை மழை பெய்யும் போது பிறந்தவர்.
லக்கினத்தில் நீர் கிரகங்கள் இருந்து நாலாம் அதிபதி பார்த்தாலும் மழை பெய்யும் போது பிறந்தவர்.
இந்த கிரக சேர்க்கை அமைப்புடன் சூரியன், செவ்வாய் சுய சாரம் பெற்று அல்லது சார பரிவர்த்தனை பெற்று பார்த்தாலும் இடி மின்னல் மழையில் பிறந்திருப்பார்.
நாலாம் அதிபதி ஆறு எட்டு பனிரெண்டில் இருந்து எந்த கிரகத்தைப் பார்க்கிறாரோ அல்லது எந்த கிரகத்தை கூடுகிறதோ அந்த கிரக காரக ஆதி பத்தியத்தின் உயிருக்கு நீரில் கண்டம் ஏற்படும்.
அஷ்டமாதிபதியும் சனி அல்லது பத்தாம் அதிபதி இணையும்போது ஆயுளைமட்டுமே சொல்கிறார். நாலாம் இடம் குறிக்கும் இடங்கள் குளம், கண்மாய், ஏரி, ஆறு, வாய்க்கால், வீடு, வண்டி, அழகு.
நாலாம் அதிபதி 3 ல் இருந்தால்
மனைவி அழகு. வாகனம், மரங்கள், தோப்பு, ஆலமரம், புளியமரம், இரட்டைப் பிள்ளையார், கோழிப்பண்ணை, கல்லறை, மார்பு, பிறப்பிடம், பிறந்த ஊர், பிறந்த வீடு, வீதி முதலியன குறிக்கும். இவர்கள் பிறந்த ஊர் பெயர் எப்படி அமையும் என்றால் ஊர் என்று அமையும் ஆத்தூர் குளத்தூர் இதுபோல. கல்வி, கற்பு, கற்பகம் என்ற பெயர் வரும்.
நாளில் கேது இருந்தால் கற்பக விநாயகர் என்ற பெயரும், தெப்பம், தெப்பக்குளம், தெப்பக்குளம், விநாயகர் என்றும் சமுதாயத்தில் மதிப்பு மரியாதை இருக்கும்.
பந்துக்கள், உறவினர்கள், ஒழுக்கம் என்றும் நாலாம் இடம். தெரு ஐந்தாமிடம் பிள்ளையார் ஜாதகர் பிள்ளையார் தெருவில் இருப்பார்.
பஜனை கோவில் தெரு, மாடவீதி, முஸ்லிம் தெரு, இந்த மாதிரி வரும் மற்றும் பதவி அமர்தல், இருக்கை, பள்ளி கல்லூரி, மனசு, ஆடைகள், எழுதுபொருட்கள் நாடாளுமன்றம், உள்ளாட்சித் தேர்தல், ஏதம் புற்று உள்ள இடங்கள்.
கிணறு இவையெல்லாம் நாலாம் இடத்தை குறிக்கும்
நாலாம் இடம் நாலாம் அதிபதி கெட்டு விட்டால் ஜாதகர் தலைமறைவாக வாழ்க்கை வாழ்வார்.
உறவினர்களை விட்டுவிலகி பிறந்த இடம் விட்டு வெளியில் சென்று முன்னேறுவார்கள்.
இவர்களுக்கு அன்னையர் உதவி கிடைக்கும்.
ஒளிந்து மறைந்து வாழ்க்கை வாழ்வார்கள்.
சூரியன் புதன், சூரியன் நாலாமிடம் சம்பந்தப்பட்டால் ஜாதகர் வீட்டில் கிணறு இருக்கும்.
நான்காம் இடம் திதி சூனியத்தால் அல்லது பாதகாதிபதி யால் கெட்டுப்போனால் ஜாதகர் மாற்றான் தாய் பால் குடித்தவர். பெயர் என்று பார்த்தால் நதிகள் கங்கா யமுனா, காவேரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து, நதியா இது போல வரும்.
மழை என்றால் மாரி மற்றும் செல்வம் ஊர் ஆத்தூர் மணலூர் குளத்தூர் அன்பு என்றால் அன்பரசு மேகலா கார்மேகம் anbalagan நீலமேகம் மேகநாதன் இன்பசேகரன் அழகுராஜ் இருதயராஜ் சோமு.
பசு என்பது கோமதி கோபாலன் கோபி என்றும் இந்தியில் சார் என்றால் நாலு என்று அர்த்தம்
இதன்படி பெயர்கள் சாரு சாருலதா மற்றும் பாணி என்றால் நீர் பெயர் தண்டபாணி சக்கரபாணி.
பாவ கிரகங்கள் சந்திரன் செவ்வாய் சனி ராகு கேது இப்படி தொடர்ந்து வரிசையாக பாவ கிரகங்கள் ஜாதகத்தில் அமரக்கூடாது சாரம் பெற்று அமரக்கூடாது தொடக்கூடாது சந்திரன் சனி சாரம் பெற்றோ அல்லது சந்திரன் சனி இணைவு இருந்தாலோ சந்திரன் கேது சாரம் பெற்றாலோ சந்திரன் கேது இணைவு இருந்தாலும் ஜாதகரின் தாயாரின் மண வாழ்கை சரி இல்லை என்று சொல்ல வேண்டும்.
சந்திரன், செவ்வாய், கேது அல்லது சனி செவ்வாய் கேது இந்த இணைவு அல்லது தாய் வர்க்கத்தில் இரண்டாம் தாரமாக வாழ்க்கை பட்டவர்கள் இருப்பார்கள்.
நான்காம் பாவத்தில் கிரகங்கள் இல்லாமல் இருந்து அதற்கு அடுத்தும் கிரகம் இல்லாமல் இருப்பது தாயாரின் மணவாழ்க்கை சரியில்லை
நான்காம் பாவம் நான்காம் அதிபதி சந்திரன் இவை மூன்றும் தாயைப் பற்றி சொல்லும்.
அதே போல் பண்ணை விவசாயம் பற்றி சொல்லும்.
மேலும் நாலாம் பாவம் நாலாம் அதிபதி செவ்வாய் சொத்து பற்றி சொல்லும்.
மேலும் நாலாம் பாவம் நாலாம் அதிபதி சுக்கிரன் அழகு பற்றி சொல்லும்.
நாலாம் பாவம் நாலாம் அதிபதி குரு சூரியன் செவ்வாய் பதவி பற்றி சொல்லும்.
நாலாம் பாவம் நாலாம் அதிபதி குரு தோப்புகளை பற்றி சொல்லும்.
நாலாம் பாவம் நாலாம் அதிபதி ராகு அல்லது சுக்கிரன் பிராணிகளைப் பற்றி சொல்லும்.
நாலாம் பாவம் நாலாம் அதிபதி சுக்கிரன் பட்டு ஜவுளி பற்றி சொல்லும்.
நாலாம் பாவம் நாலாம் அதிபதி புதன் எழுது பொருட்கள் மனசு பற்றி சொல்லும்.
நாலாம் பாவம் நாலாம் அதிபதி புதன் கல்வியைப் பற்றி சொல்லும்.
மேலும் செவ்வாய் என்றால் சொத்து குரு சுக்கிரன் சூரியன் புதன் சொத்துக்கான வளர்ச்சி கிரகங்கள் மற்றும் செவ்வாய் சனி சொத்து வாங்குவதற்கு சொத்து உருவாக்குவதற்கு தடை.
செவ்வாய் கேது அனுபவிக்க தடை செவ்வாய் சந்திரன் முதல் சொத்து விற்றுவிட்டு இரண்டாவது சொத்து அமையும் நிலைக்கும் இதற்கு பரிகாரம் இளநீர் தென்னை மரம் வைப்பது
டிப்ஸ்
நாலாம் அதிபதி மேஷத்தில் இருந்தால் வாகனத்தை கொடுக்கவோ வாங்கவோ கூடாது.
செவ்வாய் + குரு செவ்வாய் + சூரியன் இந்த கிரக சேர்க்கை வீட்டின் அருகே மரம், அருகே கோவில் இருக்கும்.
செவ்வாய், குரு, கேது மரத்தினால் கோவில்.
மேலும் செவ்வாய், சூரியன், கேது கல் வைத்து சாமி கும்பிடுவது.
மேலும் குரு சூரியன் மரத்தை சாமி கும்பிடுவது.
நாலாம் அதிபதி ஒன்பதில் இருந்தாலோ நாலாம் அதிபதி 5 ல் இருந்தாலோ வீட்டிற்கு நேராக கோவில் இருக்கும்.
செவ்வாய் சனி கேது செங்கல்லில் விபூதி பட்டை போட்டு சாமியாக வணங்குவார்கள்.

நான்காம் அதிபதி 6, 8 ,12 ல் இருந்து செவ்வாய், சூரியன் பார்த்தால் நாலாம் அதிபதி கூடினாலும் மெயின் ரோட்டில் இடம் வாங்க கூடாது.
அப்படி வாங்கினால் அரசு அபகரிக்கும். மற்றும் சூரியன், செவ்வாய் சேர்ந்தோ பார்த்தோ ஆறு, எட்டு, பன்னிரெண்டில் விருந்து அல்லது நான்காம் பாவத்தையோ அல்லது நான்காம் அதிபதியை தொடர்பு கொண்டால், அரசு வழக்கு ,அல்லது அதன்மூலம் அரசால் நிலம் அபகரிக்கப்படும்.
நாலாம் இட அதிபதியோ நாலாம் இடத்தையோ குரு செவ்வாயோ பார்த்தால் ஜாதகனுக்கு சொத்து உண்டு.
நாலாம் அதிபதி செவ்வாய், புதன் இவர்கள் எட்டு கட்டங்களுக்கு மேல் போய் உட்கார்ந்துவிட்டாள் 50 வயதுக்கு மேல் தான் சொத்து.

நாலாம் இடத்தில் மாந்தி இருந்தாலோ
எட்டு, 12 க்கு உடையவர்களுடன் மாந்தி இருந்தாலும் சனி, மாந்தி நாலில் இருந்தாலும் மனை நிலத்தில் வீட்டின் அருகே பிணம் புதைக்கப்பட்டிருக்கும்.
செய்வினை பயம் அதிகமாக இருக்கும்.
நாலாம் பாவத்தின் விதிகள் நாலாம் இடம் பாதிக்கப்பட்டால் உறவுகளை வெறுப்பார்கள்.
பிறந்த இடத்தைவிட்டு வெளியே போய் முன்னேறுவார்கள். என்று நினைப்பார்கள்.
இவர்களின் நாலாம் பாவகம் என்ற உறவு சுகம் கெட்டுவிட்டபடியால் உறவுகளின் முகம் பார்க்காத, வராத வெளியூரில் வாழ வேண்டி வரும்.
அக்காலம் இவர் நல்ல முன்னேற்றம் காண்பார். வளர்ச்சி உண்டாகும்.
எதிரிகளை இவர்கள் நேசிக்க வேண்டும் பகைத்துக் கொள்ளக்கூடாது.
நட்பை உறவாக சம்பாதிக்கவேண்டும்.
நான்காம் இடத்தில் மாந்தி இருந்தால் வீட்டில் கொலுசு சத்தம் கேட்கும்.
வீட்டில் மல்லிகை பூ வாசம் வீசும்.
இதற்கு பரிகாரம் யானையின் கோமியத்தை வீட்டில் தெளிக்க வேண்டும்

நாலாம் பாவத்தில் சூரியன் இருந்தால் என்ன பலன்
தாயார் பெரிய கூட்டு குடும்பத்தில் பிறந்திருப்பார்.
இதை ஐந்தாம் அதிபதி பார்த்து உறுதிசெய்ய வேண்டும்.
தாயார் நல்ல நிர்வாகி.
குரு பார்த்தாலும் சேர்ந்தாலும் தாயார் ஒரு பதவியில் இருப்பார்.
ஜாதகர் வீடு கோவில் அருகே இருக்கும்.
தாயாருக்கு கண் நோய் உண்டு.
தாயாருக்கு அரசியல் அரசாங்க ஈடுபாடு இருக்கும்.
தாயாருக்கு மருத்துவ குணம் இருக்கும்.
ஞானம் இருக்கும்.
தாயார் கவுன்சிலருக்கு நிற்கலாம்.
வள்ளல் குணம் அதிகமாக இருக்கும்.
தாயாருக்கு பசுமை திட்டம் மோடி திட்டம் இந்தத் திட்டத்தில் வீடு கட்டுதல்,
அரசு குடியிருப்பில் குடியிருப்பது அரசு சலுகைகள் இருக்கும்.
வீட்டு மாடியில் நின்று பார்த்தால் கோவில் கோபுரம் தெரியும்.
மாடி வீடு மலை சார்ந்த பகுதிகளில் சொத்து வாங்குவது, அரசியல்வாதி அல்லது கவுன்சிலர் வீட்டு அருகே குடியிருப்பார்.
தேர்தல் லேமினேஷன் திதி சூன்ய காலத்தில் வைக்கக்கூடாது.
அடுத்தவர்களுக்கு வேலை செய்யும்போது 4ல் சனி இருப்பவர்கள் வீடு கட்டுவதற்கு பாலக்கால் போடக்கூடாது.
இவர்கள் வீட்டில் கண்ணாடி பொருட்கள் அதிகமாக இருக்கும்.
சூரிய ஒளி வீட்டிற்குள் வரும்.
வெளிச்சமான வீட்டில் குடி இருப்பார்.
சோலார் மின் தொடர்பு வீட்டில் இருக்கும்.
வள்ளலார் படம் வீட்டில் வைப்பது நல்லது.
இவர்கள் வீட்டில் தீபம் எரிந்து கொண்டிருக்கும்.
மாடி வீட்டில் இருப்பார்கள்.
கிழக்கு வாசலில் இருப்பார்கள்.
வீட்டிற்கு உள்ளேயோ வீட்டிற்கு அருகிலோ கிணறு இருக்கும்.
நாலு வயதுக்கு மேல் குடும்பம் வளர்ச்சியாக இருக்கும்.
40 வயதுக்கு மேல் ஜாதகர் நல்ல வளர்ச்சி அடைவார்.
தந்தை பெயரில் வீடு இருக்கும்.
வீடு உள்ள வீதி கோவில் பெயரிலோ தலைவர் பெயரிலோ இருக்கும்.
வீடு மரத்தடியில் இருக்கும்.
பெரிய நகரம் பிரசித்தி பெற்ற கோவில் தெருவில் இவர் வீடு இருக்கும்.
வீட்டின் மீது கூரை செட் போட்டிருப்பார்கள்.
தாயாரிடம் ஜாதகர் ஆசிபெற வேண்டும்.
அதிக கற்பனை இருக்கக்கூடாது.
நாலாமிடம் மனசு அங்கு கடவுள் இருப்பதால் சுய கற்பனை, அதீத கற்பனை இருக்கக் கூடாது.
கொம்புள்ள மிருகங்கள் இவர்களுக்கு நல்லது.
சொத்து சேர்ந்த பின் தான் இவர்களுக்கு நல்ல வளர்ச்சி இருக்கும்.
நாலாம் பாவம் வாகனம் அதனால் வாகனம் உண்டு.
நல்ல வாகனமாக வைத்திருப்பார்.
நாலாம் இடம் சுத்தம், சுகம் மனதில் இவர்கள் திருப்தி அடைய வேண்டும் திருப்தியான மனநிலை இவர்களுக்கு சுகத்தை கொடுக்கும்.
நாலில் ஒரு கிரகம் இருப்பது நல்லது.
சித்திக்கு நல்ல பலன் தரும், அவருக்கு உத்தியோக பிரச்சனை தரும்.
இரண்யா இருக்கும்.
ஆறாம் அதிபதி அஸ்தங்கம் பெற்றால் இது கண்டிப்பாக இருக்கும்.
லக்னாதிபதி அமர்ந்த வீட்டிற்கு ஆறாம் வீடு கண்டிப்பாக ஒரு பாதிப்பை கொடுக்காமல் போகாது.
டிப்ஸ்
நாலுக்கு ஆறாமிடத்தில் அல்லது நாலாம் அதிபதி ஆறில், இவர்களுக்கு நான்கு, எட்டு தொடர்பு நாலு 11 தொடர்பு, நாலு 12 தொடர்பு, உள்ள ஜாதகங்களில் தந்தை அல்லது தாத்தா இரண்டு திருமணம்.
ஐந்தில் புதன் அல்லது கேது இருந்தால் தந்தைக்கு இரண்டு திருமணம்.
ஒன்பதில் கேது அல்லது புதன் இருந்தால் தாத்தாவுக்கு இரண்டு திருமணம்.
நாலுக்கு 6:8:12 ல் தொடர்பு மூடப்பட்டுள்ள கிணறு இருக்கும்.
பராமரிக்க முடியாத கிணறு உண்டு.
பழைய பயனற்ற போர்வெல் இருக்கும்.
மரத்தை வெட்டி விடுவார்கள்.
4 ல் சூரியன் இருந்தால் இடிதாங்கி வைக்க வேண்டும்.
வீடு கட்டிய பின் ஆண் வாரிசு உண்டு.

நான்காம் பாவத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன்
திக்பலம்.
முதல் சொத்து கைமாறும்.
அழகுசுத்தத்தை விரும்புவார்கள்.
வீடு வாகனம், அழகாக வைத்திருப்பார்கள்.
சுத்தமாக வைத்திருப்பார்கள்.
பிறந்த இடத்தைவிட்டு இடமாற்றம் செய்திருப்பார்கள்.
அன்பு பாசம் அதிகமாக இருக்கும்.
பயணத்தை விரும்புவார்.
நல்ல குணம் இருக்கும்.
மற்றவர்களுக்கு உபதேசம் செய்வார்.
மழைக்காலத்தில் பிறந்திருப்பார்.
ஒரு ஏமாற்றம் இருக்கும்.
கண் நோய் இருக்கும்.
தாய் அல்லது தாய்வழி உறவினர்களுக்கு தண்ணீரில் கண்டம் இருக்கும்.
நல்ல நீர் நிலைகள், விவசாய நிலங்கள் உள்ள இடத்தில் இருப்பார்கள்.
தாய் அழகாக இருப்பார்.
வீட்டில் அரிசி மாவு எப்போதும் வைத்திருப்பார்கள்.
மழைநீர் வீட்டிற்குள் வரும். வீடு கட்டும்போது மழை வரும்.
போர் நன்றாக நீர் வளத்துடன் அமையும்.
வீடு வடமேற்கு திசையாக இருக்கும்.
வீட்டில் சுவாமி படங்கள் அதிகமாக இருக்கும்.
வாகன செலவு இருக்கும்.
அம்மாவின் அன்பு பாசம் ஜாதகருக்கு உண்டு
நாலாம் பாவத்தில் சந்திரன் இருந்தால்
விருந்தினர் வருகை அடிக்கடி உண்டு.
யாரையும் சாப்பிடாமல் அனுப்ப மாட்டார்.
இவர்களுக்கு சொத்து உண்டு.
சொத்து பெண்களிடம் வாங்கி இருப்பார் அல்லது விற்று இருப்பார்.
வாடகை பணம் பெண்களிடம் தருவார்கள்.
வீட்டின் அருகே அரிசி கடை, எண்ணெய் கடை, ரேஷன் கடை இருக்கும்.
டாஸ்மார்க் கடை இருக்கும்.
ஆடு மாடு வளர்த்த குடும்பம்.
பால் தயிர் மோர் எப்போதும் இவர்கள் வீட்டில் இருக்கும்.
பழங்களும் இருக்கும்.
வீட்டில் பழம் சார்ந்த செடிகள் இருக்கும்.
வீட்டின் மீது கடன் இருக்கும்.
இவர்கள் தான் முதலில் வீடு வாங்குவார்கள்.
ஐந்தாம் பாவம் அல்லது ஆறாம் பாவத்தில் கிரகம் இருந்தால் உடனே வீடு வரும்.
எத்தனை கட்டங்களில் கிரகங்கள் இல்லையோ அத்தனை வருடங்கள் கழித்துத்தான் வீடு வரும்.
40 வயதில் ஒரு ஏமாற்றம் தரும்.
நாலு 16, 28, 40 வயதுகளில் ஒரு ஏமாற்றம் வரும்.
ஒரு அவச்சொல் ஒரு அவமானத்திற்கு இடம் கொடுக்கும்.
அந்த வயதுகளில் சொத்தும் வாங்குவார்கள்.
இந்த மாதிரி கிரக அமைப்புகள் புத்திர தோஷத்தை கொடுக்கிறது

நாலாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்
இது செவ்வாய் தோஷம்.
ஜாதகனுக்கு சொத்து உண்டு, வழக்கும்உண்டு.
சகோதரன் மழைக்காலத்தில் பிறந்தவராக இருப்பார்.
நாலு வயதில் சொத்து இருக்கும், சொத்து சேரும்.
சொத்து சம்பந்தமான டென்ஷன் இருக்கும், இருந்து கொண்டே இருக்கும்.
வாகனம் இருக்கும் சிறு, சிறு விபத்து இருக்கும். மார்பில் தழும்பு இருக்கும்.
செங்கல், செம்மண், சிவப்பு பெயிண்ட், கத்திரி செடி இவையெல்லாம் வீட்டில் இருப்பது நல்லது.
அருகே மின் கம்பம் இபி இருக்கும்.
சமையல்காரர் இருப்பார். ஜாதகரே சமைப்பார்.
ஒர்க் ஷாப், மெக்கானிக் ஷெட் இருக்கும்.
மருத்துவர் வீட்டின் அருகே இருப்பார்.
குடும்பத்திலும் மருத்துவர் இருப்பார்.
இவர் வீட்டு முன்பு வேறு நபர்கள் தங்களின் வாகனத்தை நிறுத்திவிட்டு தொல்லை கொடுப்பார்கள்.
தன் இடத்தை டூவிலர் நிறுத்துவதற்கு வாடகைக்கு விடுவார்கள்.
தெற்கு வாசல் வீடு அமையும்.
வீட்டின் அருகே காவல் நிலையம் இருக்கும்.
இடம் சம்பந்தமான போலீஸ் விசாரணை, காவல் நிலையம் செல்வது, ஒரு நாளாவது இவர்களுக்கு வரும்.
செவ்வாய் பார்வை சம்பந்தப்பட்ட காரக பதவியில் இருப்பார்.
தாய்வழியில் பதவியில் இருப்பார்கள், தாயே பதவியில் இருப்பார்.
தாயாருக்கு சர்ஜரி உண்டு.
தாயார் வாகனம் ஓட்டுவார்.
வீட்டில் நாய் இருக்கும், நாய் கடையும் இருக்கும்.
தாயாருக்கு வெட்டுக்காயம் இருக்கும்.
திடகாத்திரமாக இருப்பார்.
வாக்குவாதம் செய்வார்.
வீட்டின் அருகே சிலிண்டர் கம்பெனி இருக்க வாய்ப்பு உள்ளது.

நாலாம் பாவத்தில் புதன் இருந்தால் என்ன பலன்
2 இடங்கள் ஜாதகருக்கு இருக்கும்.
காலி மனை வாங்கி வீடு கட்டுவார்.
காலி மனை இருக்கும் 2 இடங்கள் இருக்கும்.
இரண்டு பத்திரம் இருக்கும்.
பூங்கா, பள்ளி அருகே வீடு இருக்கும்.
வீட்டுப் பத்திரம் இருக்கும் உரையுடன் வாங்கியபின் வீடு வாங்குவார்கள்.
தவணை முறையில் சீட்டு போட்டு இடம் வாங்குவார்கள்.
தையல் மெஷின், தையல் கடை, ஜெராக்ஸ் கடை வைக்கலாம்.
குடும்பத்தில் ஆசிரியர், ஜோதிடர், வக்கீல் யாராவது இருப்பார்கள்.
ஜாதகர் ஜோதிடம் தெரிந்தவர் அல்லது ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவராக இருப்பார் அல்லது ஜோதிட ஆசிரியராக இருப்பார்.
இவர்கள் வீட்டில் கிணறு இருக்கும்.
பேஸ்மன்ட் என்னும் நிலவறை இருக்கும்.
படிக்கட்டுக்கு கீழ்பகுதியில் அறை அல்லது கடை இருக்கும்.
நிலத்தடி தண்ணீர் தொட்டி இருக்கும்.
விஷ்ணு ஆலயம், சீட்டு நடத்துபவர், கொரியர் ஆபீஸ், வக்கீல் இருப்பார்..
இவர் வீட்டின் தெரு இரண்டு பெயர் கொண்டதாக இருக்கும்.
வீட்டில் இரண்டு வாசல் இருக்கும்.
நாலு வயதில் குடும்பத்தில் சொத்து இருக்கும்.
40 வயதில் ஜாதகர் சொத்து வாங்குவர்.
தாய்வழியில் ஆசிரியர், வங்கியில் பணிபுரியும் நபர்கள் இருப்பார்கள்.
தாய் மாமன் உள்ளூர் அருகில் இருப்பார்.
பிறந்த வீட்டு சொத்து, தாய்மாமன் கைளில் இருக்கும்.
இரண்டு இடம் வாங்குவார்கள்.
இரண்டு இடங்களில் தொழில் செய்வார்கள்.
40 வயதுக்கு மேல் படிப்பதற்கு தூண்டும்.
40 வயதுக்கு மேல் காதல் வரும்.
ஜன்னலுக்கு ஸ்கிரீன் போடுவார்கள்.
இவரது குடும்பம் பாகப்பிரிவினை 40 வயதில் முடியும்.
நாலாம் பாவத்தில் குரு இருந்தால் என்ன பலன்
தாயார் கௌரவமானவர்.
கௌரவமான குடும்பத்தில் பிறந்தவர்.
தாய்வழியில் ஆசிரியர் உண்டு.
இவர் வீட்டின் அருகே பெரியமரம், கோவில் இருக்கும்.
தாய் வழியில் ஜோதிடர். வங்கியில் பணி புரிந்தவர் இருப்பார்கள்.
டிப்ஸ்
ஐந்தாம் பாவகம் புத்திரம் காரகர் குரு.
இவர் ஆறு, எட்டு, பன்னிரெண்டில் இருந்தால் ஆண் குழந்தையை பற்றிய கவலை இருந்து கொண்டே இருக்கும்.
4, 5க்கு 12 ம் இடம் தொடர்பு இருந்தால் தாயாருக்கு ஆண் குழந்தையை பற்றிய எண்ணம் அதிகமாக இருக்கும், அவர்களைப் பற்றி கவலை ஆர்வம் இருக்கும்.
நாலாம் பாவத்தில் குரு பெரிய அளவில் தொழில் செய்பவர்கள்.
இவர்களுக்குக ஜீவன குறைவு கிடையாது.
பணம் புத்தகத்தில் மறைத்து வைப்பார்கள்.
நீர் ராசி சம்பந்தப்பட்டால் சட்டைப் பையில் பணம் வைத்து அதை அப்படியே துவைத்து காய போட்டு விடுவார்கள்.
ஆற்றில் பணத்தை போடுவார்கள். ரைடு வரும்போது இப்படி செய்வார்கள்.
செல்போன். செக்புக் தண்ணீரில் நனைய விட்டு விடுவார்கள்.
நாலில் செவ்வாய் சம்பந்தப்பட்டு குரு இருந்தால் பணம் மறைத்தல், மறைத்து மறந்து போவார்கள். அது புதையலாக மாறிவிடும்.
நான்காம் இடத்தில் குரு இருந்து நீர் ராசியை பார்த்தால் நீரில் கண்டம். நாலு வயது வரை இவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஒரு குழந்தை இரண்டு முறை தண்ணீர் தொட்டியில் விழுந்து காப்பாற்றப்பட்ட நிகழ்வில் குழந்தையின் ஜாதகத்தில் நீர் ராசியான நான்கில் குரு இருந்தது. நாலு 16, 28, 30 இந்த வயதுகளில் நீரில் கண்டம் என்று குழந்தை ஜாதகத்தில் எச்சரிக்கை செய்ய வேண்டும்.

4 ல் குரு குழந்தை பிறந்தபோது மழை வந்து இருக்கும்.
மழைக்காலத்தில் கருத்தரிப்பு நடந்திருக்கும்.
விவசாயம் நன்று, பருத்தி செடி நல்லது.
வீட்டை சுற்றி சுவர் உட்பட அரச மரம் முளைக்கும்.
ஆற்றங்கரை குளக்கரை, அம்மன் கோவில் அருகில் இவர்கள் வீடு இருக்கும்.
மஞ்சள் வர்ணத்தில் வீடு இருக்கும்.
தொழில் சங்க தலைவர், நல்ல அறிவு உண்டு.
4 வயதுக்குமேல் குடும்பத்தில் நல்ல வளர்ச்சி உண்டு.
நாலு வயதில் குடும்பத்தில் யாருக்கேனும் குழந்தை பிறக்கும்.
வட கிழக்கு வாசல்.
அரசு வருமானம்.
சூரியன், குரு, செவ்வாய் வீட்டில் மர சாமான்கள் அதிகமாக இருக்கும்.
மர சாமான்கள் இவர்களுக்கு நல்லது.
சூரியன் இருந்தால் கண்ணாடி சாமான்கள் அதிகமாக இருக்கும்.
சனி இருந்தால் ஸ்டீல் சாமான்கள் அதிகமாக இருக்கும்.
செவ்வாய் ராகு இருந்தால் பிளாஸ்டிக் சாமான்கள் அதிகமாக இருக்கும்.
இவர்களுக்கு வாடகை வரும்.
40 வயதுக்கு மேல் வளர்ச்சி உண்டு.
இவர்களின் வளர்ச்சி காலம் 40 ,52, 64 இந்த வயதுகளில் வளர்ச்சி வரும் காலம், வீட்டில் தேன் கூடு கட்டும்.
தலைவர்கள் பெயரில் வீதி அமையும்.
சொத்து சேர்த்த பின் வளர்ச்சி உண்டு.
வீடு கட்டும் போது குழந்தை பிறக்கும் அல்லது குழந்தை பிறக்கும்போது வீடு கட்டுவார்கள்.

நான்காம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்
திக் பலம். ஸ்தான பலம்.
அத்தை உள்ளூரில் இருப்பார்.
மனைவியும் உள்ளூரில் இருப்பார்.
நாலு வயதில் உறவில் ஒரு திருமணம் இருக்கும்.
நாலு வயதில் பொருளாதார வளர்ச்சி இருக்கும்.
பெண் பெயர் உள்ள பள்ளியில் படிப்பார்கள். படிக்கும்போதே திருமணம் நல்லது.
திருமணப் பேச்சு நடக்கும்.
ஸ்ரீ என்ற பெயரில் வீதி இருக்கும்.
அழகான ஆபரணம், ஆடை, வாகனம் சொத்து உண்டு.
ஆர்ச் தெருமுனையில் அல்லது வீட்டின் முன்பு இருக்கும்.
தாயார் சுகவாசி நன்கு சமைப்பார்.
தாயாரின் உடன்பிறப்புகள் இருப்பார்கள்.
தாய்க்கு கண் நோய் உண்டு.
வீட்டில் வாஷிங் மெஷின், பிரிட்ஜ் இருக்கும்.
சாஸ்திர ஞானம் அதிகமாக இருக்கும்.
தாய்வழியில் பெண்கள் அதிகமாக இருப்பார்கள்.
தாய் அறிவாளி 40 வயதுக்கு மேல் படிப்பார்கள்.
வீடு கட்டும்போது திருமணம் நடக்கும்.
40 வயதுக்கு மேல் குடும்பம் வளர்ச்சி அடையும்.
நான்கு வயதில் உறவில் ஒரு திருமணம் நடக்கும்.
நாலில் செவ்வாய் வயரிங், மோட்டார் வேலை வரும் அதனைச் சரிபார்த்து முடிக்க திருமணம் நடக்கும்.
நல்ல நீர் வளம் இருக்கும்.
பழங்கள், பூச்செடிகள் வீட்டில் இருக்கும்.
தக்காளிச் செடி உண்டு.
தெருப் பெயர் ஸ்ரீ லக்ஷ்மி என்று வரும்.
மெயின் ரோடு அருகில்.
பெண் நண்பர்கள் அதிகம் உண்டு.
திருமணத்திற்கு சென்று வந்த பின்பு கரு உருவாகி இருக்கும்.
குரு, செவ்வாய், சுக்கிரன் ஐந்தில் இருந்து ஏழாம் அதிபதியுடனோ அல்லது தொடர்பில் இருந்தாலோ குழந்தை பிறந்த ஜாதகத்தில் குரு, செவ்வாய், சுக்கிரன் லக்னத்தில் அமைந்திருக்கும்.
பத்தாம் அதிபதி இருந்தால் ஒரு கர்மத்திற்கு போய் வந்த பின் கரு உருவாகும்.
பிறக்கும் குழந்தைக்கு ஜாதகத்தில் லக்னத்தில் இந்த பத்தாம் அதிபதி இருப்பார் அல்லது குழந்தையும் லக்னம் தந்தை அல்லது தாய் பத்தாம் அதிபதியும் சாரம் பெற்று இருக்கும்.
ஐந்தாம் இடத்திற்கும் ஐந்தாம் அதிபதிக்கும் தொடர்புடைய கிரகங்கள் அவரது குழந்தை ஜாதகம் லக்னத்திற்கும் தொடர்பில் இருக்கும்.
சுக்கிரன் சுக்கிலத்தை சொல்வார் நாலு என்றால் தண்ணீர் எனவே நீர்த்த விந்து.
40 வயதுக்கு மேல் காதல் இருக்கும்.
தாயாருக்கு நல்ல பலன், ஆடைகள் நிறைய உண்டு.
பெண்கள் மறந்து பணத்தை தண்ணீரில் நினைத்து விடுவார்கள்.
கலைத்துறையில் நாட்டம் இருக்கும்.
ஜாதகருக்கு ஒளிக்கிரகங்கள் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஒளி கிரகங்கள் கேந்திரத்தில் இருந்தால் நல்லது.
4, 9 உடையவர்கள் லக்னத்தில் இருந்து லக்னம் திதி சூன்யம் ஆனாலும் பாதகாதிபதியால் பார்க்கப்பட்டாலும் சேர்ந்திருந்தாலும் இந்த ஜாதகர் தந்தை முகம் காணாத குழந்தை.
டிப்ஸ்
வக்ர கிரகங்கள் நாலில், சனி வக்ரம் அல்லது வக்கிர கிரகங்களுடன் சனி இருந்தாலும், பார்த்தாலும் நடைபாதை படிக்கட்டு கட்டுவதற்கு இடம் போதாமல் பக்கத்தில் இடம் வாங்குவார்கள் அல்லது பற்றாக்குறைக்காக இடம் தருவார்கள்.
செவ்வாய் வக்கிரமாக இருந்து பார்த்தால் வாகனம் நிறுத்துவதற்கு இடம் கேட்பார்கள் அல்லது இடம் கொடுப்பார்கள்.
வக்ரம் என்பது பிய்த்து,பிய்த்து கொடுப்பது, வாங்குவது.
ஒப்பந்தங்களுக்கு வக்கிர கிரகங்களே காரணம்.
இந்த நிகழ்வுகள் கோச்சாரத்தில் வக்ர கிரகம் இல்லை என்றால் வக்ரமாகும் போது நடத்தப்பட வேண்டும் அல்லது நடக்கும்.

நான்காம் இடத்தில் சனி இருந்தால் என்ன பலன்
நாலு வயதில் கஷ்டம் அல்லது ஒரு கர்மம் இருக்கும்.
சூரியன், சனி, ராகு இணைவு தந்தை முகம் காணாத குழந்தை.
ஜாதகருக்கு உடல் நிலை குறைவு ஏற்படும்.
தந்தையை விட தாயாருக்கு வயதுஅதிகமாக இருக்கும்.
வீடு, வாகனம் அமைய தடை, தாமதம் இருக்கும்.
வீடு வாகனத்தை இவர்கள் அழகுபடுத்த முடியாது.
வீட்டருகே குப்பை drainage பிரச்சனை இருக்கும்.
வீடு கட்டுவதில் தாமதம் இருக்கும்.
பொது சேவையில் ஈடுபாடு அதிகமாக இருக்கும்.
வீடு கட்டியவுடன் ஒருகருமம் இருக்கும்.
சனி இருந்தாலும் பார்த்தாலும் கருமம் உண்டு.
வீடு கட்டும்போது மரணம் இருக்கும்.
வீட்டில் இரும்பு பொருட்கள் அதிகமாக இருக்கும்.
வண்டி, வீடு வாங்குவதில் ஒரு கசப்பு இருக்கும்.
மன உளைச்சல் கொடுக்காமல் போகாது.
40 வயதுக்கு மேல் சொத்து அமைவது நல்லது. இல்லையென்றால் வெறுப்பு உண்டாகும்.
நிலம் விற்பனையாகிவிடும்.
கல்வித் தடை, தாமதம் ஏற்படும்.
தொழிற்கல்வி, விவசாய கல்வி இவர்களுக்கு நல்லது.
படிக்கும்போதே வேலைக்கு போவார்கள்.
சனி 3ஆம் பார்வையாக ஆறாம் இடத்தை பார்ப்பதால் வேலை, மெடிக்கல் ஷாப், கணக்கு எழுதுவது, மாலை நேரம் மட்டும் பகுதி நேர வேலை செய்யலாம்.
பொது சேவை செய்வார்கள்.
வீட்டில் படிக்கட்டு பிரச்சனை, நடைபாதை பிரச்சனை இருக்கும்.
ஆரோக்கியக் குறைவு.
தாய்ப்பால் இருக்காது.
தாய்வழியில் ஆயுள் குறைபாடு உள்ளவர்கள் இருப்பார்கள்.
வீட்டில் வெளிச்சம் குறைவாக இருக்கும்.
இருதயம் சம்பந்தமான பயம் இருக்கும்.
பயன்படாத கிணறு, போர்வெல் இருக்கும் மண் குப்பை வீட்டு அருகே இருக்கும்.
பள்ளிக்கு நடந்தே போய் படித்திருப்பார்கள்.
இறந்தவர் பெயரில் சொத்து இருக்கும்.
தலைவர் பேரில் வீடு இருக்கும்.
ரோடு குண்டும் குழியுமாக இருக்கும்.
வாகனம் நிறுத்த இடம் இருக்காது.
வாகனம் பராமரிக்க முடியாது.
ஆடைகளை நன்றாக வைத்திருக்க முடியாது
மேல்கூரை இல்லாத கோவிலில் வழிபாடு செய்வது நல்லது.
ஊனமான தெய்வத்தை வணங்குவது நல்லது.
தரையில் படுத்திருக்கும் தெய்வத்தையும் வணங்கலாம்.
நான்காம் இடத்தில் ராகு இருந்தால் என்ன பலன்
நாலு வயதில் ஒரு கண்டம் இருக்கும்.
ராகு என்றாலே கண்டத்தை ஏற்படுத்துவார்.
நான்கில் சனி, ராகு நின்று லக்னாதிபதி பலம் இழந்தால் ஜாதகருக்கு பாலாரிஷ்ட தோஷம் உண்டாகும்.
8, 10 ,12 ஆம் அதிபதிகள் எந்த கிரகத்தில் உள்ளார் அந்த ஆண்டு வரை ஜாதகர் உயிருடன் இருப்பார்.
12 வயது வரை ஜாதகர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும்.
செவ்வாய், சுக்கிரன், சனி யோகியாக வந்தால் எப்படியும் வாழ்க்கையில் பிழைத்துக் கொள்வார்கள்.
ஜாதகருக்கு நான்கு வயதில் ஒரு இடமாற்றம் இருக்கும். தாயாருக்கு சர்ஜரி இருக்கும்.
ஜாதகரின் நான்கு வயதில் தாயாருக்கு கண்டம் இருக்கும்.
குழந்தையின் நான்கு வயதில் தாயாருக்கு கண்டம் இருக்கும்.
ஜாதகர் பிறந்த இடத்தைவிட்டு விட்டு
வெளிமாநிலம், வெளிநாடு போவார்கள்.
மது அருந்தும் பழக்கம் ஜாதகருக்கு இருக்கும்.
ஜாதகரின் வீட்டிற்கு பாம்பு வரும்.
வீட்டின் முன்னால் கருங்கல் கொட்டி இருப்பார்கள்.
மலை சார்ந்த பகுதியில் சொத்து அமையும்.
மூங்கில் தட்டி, மூங்கில் மரம் வீட்டில் முன்னால் இருக்கும்.
மேம்பாலம் அருகே சொத்து இருக்கும்.
இவர் இடத்தின் மீது பாலம் இருக்கும்.
தாய்வழியில் சாமி ஆடுபவர்கள் இருப்பார்கள்.
ஆடு, மாடு பிராணிகள் வீட்டில் இருக்கும்.
பெரும்பாலும் வாஸ்து குறைபாடு உள்ள வீடு அமையும்.
தாய் வேற்று மொழி, கலாச்சாரம் உடையவராக இருப்பார்.
ஜாதகருக்கு மார்பில் மச்சம் இருக்கும்.
ராகு கருப்பு மச்சம், சுக்கிரன் அழகான மச்சம்.
பாம்பு புற்று உள்ள கோவிலில் வழிபாடு செய்வது நல்லது.
தாயார் சாமி ஆடுவார் அல்லது செய்வினை செய்துவைப்பவராக இருப்பார்.
இவர்கள் வீடு கட்டி வாடகைக்கு விடக்கூடாது. அப்படி வாடகைக்கு விட்டால் வாடகை வராது.
இவர்கள் வாடகைக்கு குடி போனால் அந்த வீட்டில் ஒரு மரணம் சம்பவிக்கும்.
ஆண் குழந்தை உண்டு.
சுக்கிரன் வந்தால் திருமணம் நடக்கும்.
நான்கில் கேது இருந்தால் என்ன பலன்
இவர்கள் வீடு ஒரு சந்துக்குள் இருக்கும்.
வீட்டிற்கு போகும் வழி இடைஞ்சலான பகுதியாக இருக்கும்.
சின்ன வீதியாக இருக்கும்.
ஜாதகனுக்கு சொத்து உண்டு, வழக்கும் உண்டு.
வீட்டில் வாஸ்து குறைபாடு இருக்கும்.
தையல் மெஷின் வீட்டில் இருக்கும்.
பிறமத கோவில்கள் மற்றும் கோவில் வீட்டருகே இருக்கும்.
பொம்மைகள் நிறைய இருக்கும்.
இவர்கள் கொலு வைத்து கும்பிடுவார்கள்.
ஆன்மீகம், தத்துவம் பேசுபவர்களாக இருப்பார்கள்.
ஒரு ஆன்மீக இயக்கத்தில் பதவியில் இருப்பார். போர்வெல் கிணற்றில் compressor போட்டு வைப்பது நல்லது.
மோட்டார் சரியாக இயங்காது.
இவர்கள் பிராய்லர் கோழி வளர்க்கலாம், ஆனால் லாபம் பெரிதாக இருக்காது.
மெத்தை தலையணை தயாரிக்கலாம்.
பருத்திச் செடி துளசி செடி வளர்க்கலாம்.
கொத்துமல்லி கொத்தவரங்காய் வளர்க்கலாம்.
இவையெல்லாம் பரிகாரம் சொல்வதற்கு இந்த மாதிரி செடிகள் சொல்வது உபயோகமாக இருக்கும்
சொட்டு நீர் பாசனம் நல்லது. வீடு, வாகனம் வாங்குவதற்கு ஜாதகருக்கு தடையாக இருக்கும்.
கோவில் கடைகளை இவர்கள் ஏற்று, அடுத்தவர்களுக்கு வாடகைக்கு விட்டு இருப்பார்.
குழந்தை பிறந்தால் வளர்ச்சி கிடையாது. மன அமைதி குறைவு,
ஜாதகருக்கு சுகபோக தடை இருக்கும். ஜாதகருக்கு ஆன்மீக நாட்டம் அதிகமாக இருக்கும். இவர்கள் வீட்டில் வாழாத வாழாவெட்டி பெண்கள் இருப்பார்கள். காம்பவுண்டு சுவர் சிறியதாக இருக்கும். நான்கில் கேது மாடி கட்ட தடை இருக்கும் மீறி கட்டினால் வளர்ச்சி குறைவு ஏற்படும். நான்கில் சனி அல்லது கேது இருந்தால் அந்த வீட்டு அதிபதி விடக்கூடாது. நான்கில் சனி கேது இருந்தால் இறந்தவர்கள் பெயரில் சொத்து இருக்கும். திருத்த பத்திரம் போட செய்யும். நான்கில் ராகு, கேது இருந்தால் தாயார் கொடி சுற்றி பிறந்தவர். நான்கில் புதன், கேது இருந்தால் புதன் கை, கேது வளையல் லக்னத்தில் புதன் கேது இருந்தால் வளைகாப்பில் பிரச்சனைகள் வரும். பேச்சுவார்த்தை நடக்கும் வளையல் போடும் போது பிரச்சனை வரும். திருமண தாமதம்.
பெண்ணிற்கு திருமண தாமதம் என்றால் இதற்கு பரிகாரம் வேறு கல்யாணத்தில், திருமணத்தன்று மணப்பெண்ணிற்கு மணமேடையில் மாங்கல்யம் கட்டுவதை பார்த்து வாழ்த்தி பூ அட்சதை போட்டு வர சொன்னால் அந்த திருமணமாகாத பெண்ணிற்கு சீக்கிரம் திருமணம் நடக்கும்.
எந்த ஒரு கேள்விக்கும் கேள்விக்குரிய பாவத்தின் அடுத்த பாவத்தில்ஒருகிரகம் இருக்க வேண்டும்

நான்காம் பாவ அதிபதி லக்னத்தில் இருந்தால் என்ன பலன்
லக்னத்துல உள்ள கிரகங்கள் குழந்தை பிறக்கும்போது, கரு உருவாகும் போது உள்ள சூழ்நிலைகளையும், சம்பவங்களையும், கிரக காரகத்துவம் மூலமாகவும் ஆதிபத்தியம் மூலமாகவும் உணர்த்துகின்றன.
நாலாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் ஜாதகர் வீடு கட்டும்போது பிறந்திருப்பார் அல்லது வீடு கட்டும்போது கருத்தரித்து இருப்பார். பிறந்தவுடன் சொத்து உண்டு.
நீர் கிரகங்கள் இதைப் பார்த்தால் சேர்ந்தாலும் ஜாதகர் அடைமழையில் பிறந்திருப்பார்.
குரு, சந்திரன், சுக்கிரன் பார்த்தாலும் கூடினாலும் மழை பெய்யும் போது பிறந்தவர்.
நாலு வயதில் தண்ணீரில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவர் பிறந்த ஊரில் ஆறு இருக்கும், ஆற்றின் பெயரில் ஊர் இருக்கும், கரவை மாடுகள் உள்ள வீடு. பதவி பெயரில் ஊர் இருக்கும் பெருந்துறை இது போல. பதவி பெயரில் மனைவி பிறந்த ஊரில் ஆறு இருக்கும். ஆடு மாடு மேய்த்த குடும்பம். பால் தயிர் வீட்டில் எப்போதும் இருக்கும். அலி நட்சத்திரங்களான மிருகசீரிடம், மூலம், சதயம் இவர்கள் தண்ணீரில் விழுந்தால் விழுந்ததை கவனிக்க முடியாது, கண்டுபிடிக்கவே முடியாது. ஐந்தில் சூரியன் இருந்தால் மேல்கூரை போடுவார்கள். லக்னத்தில் சூரியன் அல்லது நாலாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் நல்லபடியாக குழந்தை பிறக்கும். ஐந்தாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் மழைக்காலத்தில் கருத்தரிப்பு.

நான்காம் அதிபதி இரண்டாம் பாவத்தில் இருந்தால் என்ன பலன்
இரண்டாம் இடம் வருமானம். இவருடைய வருமானம் நாலாம் பாவ காரகத்துவம் மூலம் இருக்கும்.
ஜாதகருக்கு தாய் பற்றிய பேசிக் கொண்டிருப்பார் அல்லது உள்ளுரை பற்றிய பேசிக்கொண்டு இருப்பார்..
பிறந்த ஊரை பற்றி தாய் உடன் இருப்பார். மாத்ரு மூலதன யோகம் நாலு ரெண்டு 2 4 இந்த யோகம். கல்லாப்பெட்டி சாவி, பணம், செக், மஞ்சப்பை எல்லாம் அம்மாவிடம் கொடுப்பார்கள். அம்மாவிடம் தான் பணம் வாங்குவார்கள். வாகனம் மூலம் வருமானம் இருக்கும். விவசாயம், கால்நடை மூலம் ஆதாயம் அதிகமாக இருக்கும். டிரான்ஸ்போர்ட் தொழில் நடத்தலாம். வீடு கட்டி வாடகைக்கு விடுவார்கள். உறவுகள் அதிகமாக இருக்கும். அம்மாவிடம் பணம் எப்போதும் இருக்கும். நாலாம் அதிபதி 2ல் இருந்தால் இவர்களின் பேச்சு அழகான பேச்சு மற்றவர்களை கவரும் விதம் இருக்கும். இவர்கள் பேசியே மற்றவர்களை அசத்தி விடுவார்கள். நான்கு 2 திதி சூன்யம் ஆக இருந்தால் ஜாதகர் திக்கி திக்கி பேசுவார் பேச்சு சரியாக வராது. ஜாதகருக்கு இரண்டு வயதில் சொத்து வரும். இந்த நிலையில் பெரியம்மாவும் சொத்து வாங்குவார். வீட்டில் ஜோதிடர், ஆசிரியர் யாராவது இருப்பார்கள். அம்மாவும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார். அம்மா தொழில் செய்பவராக இருப்பார். அம்மாவுக்கு கண் நோய் உண்டு. இவர்களுக்கு கண்ணில் நீர் வடியும் பஸ் பயணத்தின் போது கண்ணில் நீர் வடியும் ஏதாவது படித்தாலும் கண்ணில் நீர் வரும்தாய் வழியில் விவசாயம் இருக்கும். இவர்களுக்கு பழைய சோறு சாப்பிட ஆர்வம் இருக்கும். சாப்பாடு நீர் நாலாம் பாவம். தண்ணீர் கேன் வியாபாரம் செய்யலாம். வீட்டின் அருகே பள்ளி, தண்ணீர் தொட்டி இருக்கும். தாயார் ஜாதகர் உடன் தான் இருப்பார். நாலு தாய் இரண்டாம் இடம் குடும்பம். ஜாதகருக்கு மதுப்பழக்கம் ஏற்படலாம். கூல் ட்ரிங்க்ஸ் நீர் உணவு எப்போதும் இவர்கள் வீட்டில் இருக்கும். பெரியம்மாவுக்கு சொத்து இருக்கும், ஒரு பதவி இருக்கும். பதவி வகித்தவர்கள் பெரியம்மா வழியில் இருப்பார்கள். பெரியம்மா வீட்டில் கிணறு இருக்கும் அல்லது கல்லறை ஜீவசமாதி இருக்கலாம். நாலாம் அதிபதிக்கு கேது தொடர்பு வந்தால் ஒன்றுவிட்ட பெரியம்மா என்று எடுக்க வேண்டும். ராகு தொடர்பு வந்தால் தாயாரின் உயிர்த்தோழி.
ஜாதகருடைய பேச்சு எப்படி இருக்கும் என்றால் அடேய் அம்மா, அம்மாடியோ, யாரை பார்த்தாலும் ஏம்மா, எப்படி அம்மா, இருக்கிறீங்க? இப்படித்தான் ஜாதகருக்கு பேச்சு இருக்கும். உணவு பெயரை சேர்த்து வரும் இவர்கள் பெயர். பக்கோடா காதர், போண்டா மணி, லட்டு முருகன், வட்டி கடை முருகன் இப்படி பெயரை வைத்துக் கொள்வார்கள். பாதகாதிபதி, திதி சூன்யம் தொடர்பாக இருந்தால் டாக் ரவி. நாய் சேகர் என்று வைத்துக் கொள்வார்கள்.
டிப்ஸ்
பதினொன்றாம் அதிபதி நாலாம் பாவத்திற்கு தொடர்பு கொண்டால், வாடகைக்கு போன வீட்டை ஜாதகர் விலை கொடுத்து வாங்கிவிடுவார்.
இதற்கு நாலு 2 11 சம்பந்தம் இருக்க வேண்டும் 12, 2, 11 இது நாலுக்கு சம்பந்தப்பட்டால் இவர் கால் வைத்த இடம் இவர்களுக்கு சொந்தமாகிவிடும்.
நான்கு எட்டு பன்னிரண்டு 2 இந்த சம்பந்தமாக இருந்தால் ஏலம் ஆகும் சொத்தை இவர்கள் ஏலத்திற்கு எடுப்பார்கள்.
நான்கு 2 தொடர்பு இருந்தால் கிரகப்பிரவேசத்தின் போது கோ பூஜை செய்வது மிக முக்கியம்.

நாலாம் அதிபதி மூன்றில் இருந்தால் என்ன பலன்
நாலாம் பாவத்திற்கு மூணு 12 ஆம் இடம் தன் பெயரில் உள்ள சொத்தை இடம் மாற்றி எழுதிக் கொடுப்பார். தான செட்டில்மெண்ட் செய்வது, திருத்த பத்திரம் போடுவது, செய்வார. தாய் இளையவர் அல்லது மூன்றாவது நபராக இருப்பார். ஒன்பதாம் அதிபதி தொடர்பு மூன்றாவது பிறப்பை உறுதி செய்யும். ஐந்தாம் பாவம் முதல் குழந்தை, ஏழாம் பாவம் இரண்டாவது குழந்தை, ஒன்பதாம் பாவம் மூன்றாவது குழந்தை, பதினொன்றாம் பாவம் நாலாவது குழந்தை. தாயாருக்கு கட்டுமஸ்தான உடல் இருக்கும். தாயாருக்கு சகோதரம் இருக்கும். நடைப்பயிற்சி அதிகமாக செய்வார், நடைபயணமும் போவார். வாகனம் ஓட்டுவார். வீட்டின் அருகில் சைக்கிள் கடை, டூவீலர் கடை இருக்கும். தாயார் பணத்தை விரும்புவார். ஜாதகம் பெரும்பாலும் பயணம் செய்துகொண்டே படிப்பார். இடமாற்றம் இருக்கும். தொலைதூர கல்வி கோர்ஸ் படிப்பார். சகோதரனுக்கு மது பழக்கம் இருக்கும். சகோதரனுக்கு நீரில் கண்டம் இருக்கும். ஜாதகர் சுயமுயற்சியால் முன்னேறுவார். கமிஷன் தொழில் செய்வார். காவல் ராணுவம் தொடர்பு இருக்கும். தாயாரே காவல்துறையில் பணியில் இருப்பார். குரல் இசை நாட்டம் இருக்கும். தாயாருக்கும் இருக்கும். ENT பிரச்சனை இருக்கும். தற்கொலை எண்ணம் இருக்கும். தாயார் நன்கு குலவை போடுவார். ஜாதகருக்கு முதல் சொத்து விரையம். சகோதரன் வீட்டில் தாயார் இருப்பார். சகோதரன் மூன்றாம் இடம் நாலாம் இடம் தாய். சொத்து பிறந்த இடம் சொத்து சகோதரன் அனுபவிப்பார். ஜாதகர் விட்டுக் கொடுப்பார். சகோதரன் மழைக்காலத்தில் பிறந்திருப்பார். இவர் மீது ஒரு வழக்கு இருக்கும். ஜாதகன் வெளியூர் அடிக்கடி போவார். சகோதரன் மூன்றாமிடம், வாகன சொத்து நாலாம் இடம், சகோதரனுக்கு வாகனம், சொத்து இருக்கும். சகோதரனுக்கு மூக்கில் சதை வளரும். மூன்றில் குரு இருந்தால் மூக்கில் சதை வளரும்.
தைராய்டு இருக்கும். படிக்கும் பள்ளியில் நினைவுச் சின்னம் இருக்கும். ஜாதகர் இடத்தில் டவர், போஸ்ட் ஆபீஸ், கொரியர் ஆபீஸ், சைக்கிள் கடை இவற்றிற்கு வாடகைக்கு விடுவார்.
நான்காம் அதிபதி மூன்றில் இருந்தால் வாடகைக்கு போகாமல் போகியத்திற்கு போனால் விரைவில் சொந்த வீடு அமையும்.
மகர ராசி லக்னமாக இருப்பவர்கள் வாடகைக்கு போக மாட்டார்கள். போகியத்திற்குதான் போவார்கள் அதுதான் நல்லது.
நாலு மூணு தொடர்பு அடிக்கடி வீடு மாற்றுவார்கள். வீட்டில் வாட்டர் பில்டர் இருக்கும். சொட்டுநீர் பாசனம் செய்வார். வீட்டில் வாகனம் காணாமல் போகும். வீட்டை பூட்டி சாவியை தொலைப்பார்கள், வீட்டின் பூட்டை உடைப்பார். வீட்டை சுற்றி வலை அடித்து வைத்திருப்பார், வாகனம் மாற்றுவது, ஒரு வண்டியில் சென்று வேறு வண்டியில் பயணம் செய்வது, தன் வண்டி நிற்கும் அருகிலுள்ள வேறு வண்டியில் சாவியைப் போட்டு திறப்பார்கள், தான் உட்கார்ந்த சீட்டை மாற்றி மாற்றி உட்காருவார்கள், சட்டையை மாற்றி போடுவார்கள். சந்திரன் தொடர்பு இருந்தால் கையெழுத்து வேறு நபரால் போடப்பட்டு இவர்கள் சொத்து கைமாறும்.படிக்கும்போது பதிவு திருமணம் நடக்கும். ஹாஸ்டலில் தங்கி படிப்பார்கள். வக்ர கிரகம் தொடர்பு கொண்டால் தாயாருக்கு இடதுகை பழக்கம் வரும். படிக்கும்போது போலீஸ் ராணுவ தேர்வு எழுதி இருப்பார். வீட்டில் கேபிள் connections இருக்காது, டிஸ் ஆன்டனா தான் இருக்கும். வீட்டு அருகே டூவீலர் ஸ்டாண்ட், மெக்கானிக்கல் கடை, இருக்கும். இவர்கள் இடத்தை போலீஸ்காரர் வாடகைக்கு எடுப்பார் அல்லது போலீஸ் வீட்டை ஜாதகர் வாங்குவார். சூரியன், குரு இருந்தால் மாடு முட்டும்.இவர்கள் முரட்டுக்காளை அடக்க போகக்கூடாது. blank cheque கையெழுத்து ஆகாது. இவர்களுக்கு பெயர் மாற்றம் எச்சரிக்கையுடன் பதிவு செய்ய வேண்டும் இல்லையென்றால் திருத்த பத்திரம் தேவையுள்ளது என்று மறுபடியும் பதிவு செய்ய வரும்.பள்ளி மாறுவது, புத்தகம் மாற்றுவது வழக்கமாக இருக்கும்.

டிப்ஸ்
ஏழாம் அதிபதியோ, செவ்வாயோ, நாலாம் பாவத்திற்கு தொடர்பு கொண்டால் படிக்கும்போதே பதிவுத் திருமணம் நடக்கும்.
எட்டாம் பாவம் மூன்றாம் இடத்திற்கு தொடர்பு கொண்டால் ஒரு ரகசியத்தை சொல்லும். தன் சொத்து யாருக்கேனும் பவர் கொடுப்பது பின்னால் அது வராமல் போகும். எச்சரிக்கை தேவை. நான்கில் மூன்றாம் அதிபதி நின்று 5, 9 அதிபதிகள் தொடர்பு கொண்டால் வீட்டில் கோவில் ஆபரணம் இருக்கும். மூன்றாம் இடம் திதி சூன்யம் தொடர்பு கொண்டால் கம்மல் மூக்குத்தி தொலைந்து போகும். புதன் கம்மல் இரண்டு முறை காது குத்துவார்கள். இசைக்கருவிகள், ஜிம் உடற்பயிற்சி கருவிகள் இருக்கும். சகோதரனுக்கு 6, 8, 12 தொடர்பு இருந்தால் ஆரோக்கிய குறைபாடு இருக்கும். 6 நோய் 8 பெரிய மருத்துவம் 12 சுகபோக தடை மரணம்.

நான்காம் அதிபதி நான்கில் இருந்தாள் என்ன பலன்
இது பஞ்சமகா புருஷ யோகத்திற்கு சமம். புதன், குரு, செவ்வாய், சனி, சுக்கிரன் இந்த 5 பேருக்கும் கேந்திரங்களில் ஆட்சி, உச்சம் பலம் பெறும் போது யோகங்களை தருகிறார்கள். சுக யோகம் வண்டி, வீடு, வாகனம் யோகம். தாயார் அழகு, நீண்ட ஆயுள் உள்ளவர். சுகபோகம் மிக்கவர். பதவி உண்டு. உறவினர்களால் ஆதாயம் உண்டு. இறந்த இடத்திலேயே இருக்கும் இருக்கும் ஜாதகருக்கு நாலு வயது 40 வயதில் சொத்து சேரும்.சமுதாயத்தில் மதிப்பு மரியாதை இருக்கும். பெரிய பதவி உண்டு. இவர்கள் உரிய காலத்தில் திருமணம் செய்தால் நல்ல பலன்கள் உருவாகும். செவ்வாய் நான்காம் அதிபதி ஆகி நான்கில் இருந்தால் ருஷ யோகம். சுக்கிரன் நான்காம் அதிபதியாகி நான்கில் இருந்தால் மாளவிகா யோகம். புதன் நான்காம் அதிபதி ஆகி நான்கில் இருந்தால் பத்திர யோகம். குரு நான்காம் அதிபதியாகி நான்கில் இருந்தால் ஹம்ச யோகம். இவை கேந்திரங்களில் பலம் பெறும் போது யோகங்கள் வலுப்பெறுகின்றன. ருஷ யோகம் என்றால் ஜாதகருக்கு வாகனம், சொத்து பெரும் பதவி, அதிகாரம் இவையெல்லாம் கிடைக்கும். ஹம்ச யோகம் என்றால் பதவி, செல்வம், கௌரவம் கிடைக்கும். பத்திரயோகம் என்றால் ஜாதகன் தீர்க்கதரிசி, அறிவாளி. மாளவிகா யோகம் என்றால் அறிவாளி, சுய முயற்சியில் சொத்து சேர்ப்பது, சச யோகம் என்றால் பெரிய தொழிலதிபர், தொழிலாளர்களை அரவணைப்பது, அவர்களுக்கு லாபம் சேர்ப்பது. புதன் சமாதானம் எதையும் உள்வாங்குவது. சுக்கிரன் எதையும் சுத்தமாக வைத்திருப்பது, சரியாக எதையும் செய்வது, ஆர்வத்துடன் துவங்கி அழகாக முடிப்பது. குரு வழிகாட்டி, ஞானம் கொடுப்பது, சூரிய ஒளியுடன் கூடிய வளர்ச்சி. நாம் நமது எண்ணங்களை செயல்பாடுகளை இயற்கையோடு இணைந்து செயல்பட்டால், வெளிப்படுத்தியும், நடந்து கொண்டால் நமது ஜாதகப்படி உள்ள நற்பலன்கள் வேலை செய்யும் நல்லதே நடக்கும். இந்தத் தன்மை வந்தால் ஜோதிடம் வந்து வாக்குபலிதம் இயலும். ஜோதிடரின் ஆற்றல் மேம்பட்டு ஜோதிடமும் வளரும். குரு, சுக்கிரன், புதன் கேந்திராதிபத்திய தோஷம் நற்பலனை தருவதில்லை, ஆயினும் ஒரு வீட்டின் பலனை தவிர்த்து மறு வீட்டின் பலனை தரும். திரிகோணத்தில் எவரும் சுபரே கேந்திரத்தில் பாபர் சுபரே ராகு-கேது திருப்பிப் போடும் கிரகம் ஆகும். இவற்றின் லாப பார்வை திருப்பி போட்டு நல்ல பலன்கள் தரும். லாபத்தில் எவரும் சுபரே. நாலாம் அதிபதி கடகத்தில் அமர்வது காரக பாவ நாஸ்தி ஆகும் இது நல்ல இடம் கிடையாது

நான்காம் அதிபதி ஐந்தில் இருந்தால் என்ன பலன்
குழந்தை என்றால் ஐந்து, மழை என்றால் நான்கு குழந்தை மழைகாலத்தில் உருவாகும். சொத்து, வாகனம், வீடு அமையும்போது கரு உருவாகும். குழந்தை 5 அல்லது 4 குழந்தை அழகாக இருக்கும். பூர்வ புண்ணிய சொத்து இருக்கும், தாத்தா வழி சொத்து இருக்கும். தாய்மாமனுக்கு சொத்து உண்டு, ஒரு பதவி உண்டு. இதை சூரியன், குரு பார்த்தால் தாய் மாமன் உள்ளூரில் ஒரு பதவியில் இருப்பார். தாத்தா என்றால் ஐந்து, ஆடு மாடு என்றால் 4, தாத்தா ஆடு மாடு வளர்த்த குடும்பம். தாயார் அறிவாளி. தாயாருக்கு ஜோதிட ஆர்வம் அதிகமாக இருக்கும். குழந்தைக்கு நீரில் ஐந்து வயது வரை கண்டம் இருக்கும், ஜலதோஷம் சளி ஐந்து வயது வரை இருக்கும். தாயார் மூத்தவர் சூரியன் தொடர்பு இருந்தால் தாயார் மூத்தவர். தாயார் வழியில் ஆசிரியர் உண்டு. நாலு தாயார் 5 ஆசிரியர். சொத்து தேடி வரும் ஐந்தாம் பாவம் தேடிவரும் பாவம். ஐந்தாம் அதிபதியும், சூரியனும் முதல் குழந்தையை பற்றி சொல்லும். தாயாருக்கு குழந்தையைப் பற்றிய ஆர்வம் அதிகமாக இருக்கும். குலதெய்வம் கோவிலில் மரங்கள் இருக்கும். ஆற்றின் ஓரத்தில் குலதெய்வக் கோயில் இருக்கும். நாலு என்றால் ஆறு அஞ்சு என்றால் குலதெய்வம், தெப்பக்குளம், கண்மாய், இதற்கு அருகில் பிள்ளையார் கோவில் இருக்கும். குதிரை நாய் உண்டு. குழந்தை பிறந்த ஐந்து வருடத்தில் சொத்து சேரும். 50 வயது ஆனபின்பும் படிப்பார்கள். தாயாருக்கு ஆன்மீக நாட்டம் அதிகம்.
மனிதநேயம் உண்டு. இடம் வாங்கி ஐந்து வருடம் கழித்து தான் வீடு கட்டுவார். விவசாய நிலத்தில் குல தெய்வம் இருக்கும். குலதெய்வம் கோயிலுக்கு போய் வந்து வீடு கட்டுவார். வாடகை வருமானம் உண்டு. ஜாதகர் உள்ளூரில் படிப்பார். மேற்கல்வி உண்டு. குலதெய்வ ஊரில் கல்லூரி இருக்கும். தாய்மாமனுக்கு குடிப்பழக்கம் உண்டு. வீடு தாத்தா பெயரில் இருக்கும். தாத்தா கோவிலுக்கு இடத்தை தானம் செய்தவராக இருப்பார். இவர்கள் தேர் இழுப்பது நல்லது. தேரடி வீதி, மாட வீதி, சமுதாய கூடம், பள்ளி அருகே இருப்பார், வீடு இருக்கும். படிக்கும்போது காதல் வரும். ஷேர் மார்க்கெட் பற்றி தெரிந்து வைத்திருப்பார். நாலு என்றால் பசு அஞ்சு என்றால் தானம், கோபூஜை இவர்களுக்கு மிக நல்லது. தாய்வழியில் கோமதி சோமு சிந்து இந்த மாதிரி யாராவது இருப்பார்கள். குடும்பத்தில் தாத்தா மற்றும் குலதெய்வ பெயர்களை வைத்திருப்பார்கள். ஜாதகர் தலைகீழாக கரணம் போட்டு குதித்து ஆற்றில் தண்ணீரில் குளிப்பது ஆகாது. இதனால் புத்தி மறதி ஏற்பட வாய்ப்புள்ளது. துலாத்தில் நாலு அஞ்சு க்குடையவர் சனி உச்சம் துலா ராசி மண்டையோடு ராசி அதனால் இவர்கள் தலைகீழாக குதித்து குளிக்கக்கூடாது கேந்திராதிபதிகள் திரிகோணத்தில் இருந்தால் நன்மையான பலன்கள் நடக்கும். இதில் திதி சூன்யம் பாதகாதிபதி தொடர்பு இந்த பலனை அனுபவிக்க விடாது. ஆற்றில் அடித்து வந்த தெய்வ வழிபாடு. குலதெய்வ வழிபாடு ரொம்ப நல்லது. மரத்தில் தெய்வ வழிபாடு செய்வார்கள். 4 க்கு உடையவனும் அஞ்சுக்கு உடையவனும் செய்ய தவறியதை ஒன்பதுக்குடையவன் பத்தாம் அதிபதியும் 100% செய்வார்கள். ஸ்திர ராசிக்கு கோணாதிபதியே பாதகாதிபதி இவர் ஆறு ஏழு எட்டு மற்றும் திதி சூன்யம் ஏறாத வகையில் இவர் சுபரே. இவர்கள் வீட்டில் பஜனை வைத்து வழிபடுவார்கள்
நான்காம் அதிபதி லக்கினத்திற்கு ஆறில் இருந்தால், ஜாதகனுக்கு எந்த சுகமும் இருக்காது. மாறாக அவஸ்தை நிரம்பி இருக்கும். தாயுடன் நல்ல பரிவு இருக்காது. தாய்வழி உறவுகளுடன் சண்டை, சச்சரவுகள் விரோதங்கள் இருக்கும். தாய் வழிச் சொத்துக்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும். அவ்வப்போது நோய், நொடிகள் வேறு வந்து நின்று வாட்டியெடுக்கும்.
நான்காம் அதிபதி வந்து நிற்கும் ஆறாம் வீட்டை சுபக்கிரகங்கள் பார்த்தால் மேற்சொன்ன பலன்கள் நீங்கும் அல்லது குறையும்

நான்காம் அதிபதி ஆறாம் இடத்தில் இருந்தால் என்ன பலன்
ஜாதகருக்கு நீரில் கண்டம் நாலு என்றால் நீர் 6 வயது வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆறு வயதில் ஜாதகருக்கு உடல்நிலை குறைபாடு இருக்கும். சிறு விபத்து இருக்கும். தந்தை மற்றும் தாத்தாவுக்கு இரண்டு திருமணம், ஐந்தாம் இடத்தில் புதன், கேது சம்பந்தம் இருந்தால் தாத்தாவுக்கு இரண்டு திருமணம்.ஒன்பதாம் இடத்தில் புதன், கேது சம்பந்தம் இருந்தால் தந்தைக்கு இரண்டு திருமணம். இவற்றுடன் பெண் கிரகங்கள் இணைந்தால் இது உறுதி. இந்த அமைப்பு பதினொன்றாம் பாவத்திற்கு சம்பந்தம் வந்தால் சித்தப்பா மற்றும் மூத்த சகோதரனுக்கு இரண்டு திருமணம். நாலு வீடு, ஆறு தாமதம், வீடு கட்ட தடை, தாமதம் ஆகும். வீட்டின் மீது கடன் இருக்கும். குறிப்பிட்ட காலத்தில் வீடு கட்ட முடியாது. வீட்டில் திருட்டுப் போகும் நாலு ஆறு 3-ஆம் இடம் தொடர்பு இருந்தால் ஆபரணம் திருட்டுப் போகும். பன்னிரெண்டாம் அதிபதி தொடர்பு இருந்தால் வாகனம் திருட்டுப்போகும்.நாலு, ஆறு தொடர்பு இருந்தால் பிராணிகள் வளர்ச்சி இருக்காது. வளராது. வாகனம் பழுதாகி நிற்கும். ஆரோக்கிய குறைவு. வீட்டு வருமானம், வாடகை வருவது தடையாக இருக்கும். கல்வியில் ஒரு தடை உண்டு. படிக்கும்போது அரியர்ஸ் வைத்துக் கொள்வார்.படித்துக்கொண்டே உத்தியோகம் பார்த்து கொண்டு படிப்பார்கள். படிக்கும்போது விபத்து உண்டு. கல்விக்காக கடன் வாங்குவார். இவர் தாயார் கடின உழைப்பாளி, வேலைக்கு செல்பவராக இருப்பார். தாயாருக்கு சுகம் கிடையாது. ஜாதகருக்கு தாய்பால் இல்லை.மழை வெள்ளத்தில் வீடு, வாகனம் சேதமாகும். தண்ணீரில் கண்டம் உண்டு. வாயுத் தொல்லை உண்டு. தாயார் கோபக்காரராக இருப்பார், அதிகம் வாக்குவாதம் செய்யக்கூடியவராக இருப்பார். வீட்டின் அருகே உணவு கடை, இருக்கும் வீட்டில்மெஸ் வைத்து நடத்தலாம். லோன் மூலம் வாகனம் வாங்கலாம். மழை நீர், ஓடை நீரில் வாகனம் பழுதாகி இருக்கும். தாயாருக்கும் வாயுத் தொல்லை உண்டு. மார்புவலி உண்டு. ஆரோக்கியம் குறைவு உண்டு. சுகபோக தடை இருக்கும்.சாப்பிட்டவுடன் தூங்குவார்கள். நாய் கடிக்கும். பக்கத்து வீட்டாருடன் பிரச்சனை இருக்கும். தாயார் உறுதியாக இருப்பார்.
தாயார் பிரிந்து வாழ்வார் அல்லது பிறந்த இடத்தை விட்டு வெளியூரில் வசிப்பார்.தாயாருக்கு இருதய பயம் இருக்கும். வீட்டருகே மளிகைக் கடை இருக்கும். பயன்படாத போர்வெல், மூடப்பட்ட கிணறு இருக்கும். மழைநீர் தேங்கும், வீட்டுக்குள் மழை நீர் வரும். மழைக்காலத்தில் வாகனத்தில் செல்வது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாகனத்தின் பின்னாடி நாய் துரத்தும், எட்டில் சனி இருந்தால் இது உறுதி. நாலு + ஆறு, நாலு + எட்டு, 4 + 12 சுபபோகத்தடை.

நான்காம் அதிபதி ஏழாமிடத்தில் இருந்தால் என்ன பலன்
மழை பெய்யும்போது அல்லது மழைக்காலத்தில் இவருக்கு திருமணம் நடந்திருக்கும்.வீடு கட்டியபோது திருமணம் நடக்கும்.
குரு சந்திரன் சுக்கிரன் தொடர்பு திருமணத்தன்று மழை வந்திருக்கும். வேலைக்கு போவது, வண்டி ஓட்டி பழகுவது, வண்டி ஓட்டி பழகிய பின் வேலைக்கு போனால் உடனே திருமணம் நடக்கும். ஜாதகரின் நாலு வயதில் உறவில் ஒரு திருமணம் நடக்கும். தாய் உறவில் ஜாதகருக்கு திருமணம் அமையும்.படித்த மனைவி வருவார். மனைவி அழகாக இருப்பார். மனைவிக்கு சொத்து உண்டு. மனைவியுடன் வண்டி, வாகனம் வரதட்சணையாக கேட்பார். இதனால் திருமணம் தடை தாமதம் ஆகும். நண்பர்களுக்கு ஆடை தானம் வழங்குவார். மனைவிக்கு நீரில் கண்டம். 4 நீர், கண்டம் 6. மனைவி பெயரில் ஊரில் சொத்து உண்டு. மனைவிக்கு சூரியன், குரு பார்க்க பதவி இருக்கும். மாட்டுத் தொழுவம் அருகே மனைவியின் வீடு இருக்கும். அவர் பிறந்த வீடு ஆடு, மாடு மேய்த்த குடும்பமாக இருக்கும். மனைவி வழியில் சொத்து கிடைக்கும். மனைவி வீடு மருத்துவமனை, பஸ் ஸ்டாண்ட் அருகே இருக்கும். மனைவி பெயரில் ஆறு என்ற பெயர் வரும்படி இருக்கும். படிக்கும்போதே திருமணம் இருக்கும். உள்ளூரில் அறிமுகமான மனைவி கிடைக்கும்.திருமணம் முடிந்து பரிட்சை எழுதுவார்கள். தாய்வழி உறவு இருக்கும், திருமணத்தடை. பெரும்பாலும் தாய்க்கு பெண் பிடிக்கவில்லை, வண்டி வாங்கி தரவில்லை, பெண் அதிகமாக படிக்கவில்லை பெண் அழகு இல்லை, இப்படி நாலாம் பாவம் சார்ந்த காரணமாகவே இருக்கும். திருமணத்திற்குப் பின் நல்ல தாம்பத்தியம் சுகபோகம் இருக்கும்.தாயாருக்கு பொது சேவையில் ஈடுபாடு இருக்கும், உதவும் மனப்பான்மை இருக்கும். தாயார் இரண்டாவதாக பிறப்பு இருக்கும். திருமணத்திற்கு பின் மனைவிக்கு பதவி உயர்வு உண்டு. உள்ளூரில் முதலிரவு நடக்கும். நாலாம் அதிபதி நீர் ராசிகள் இருந்து, ஏழாம் அதிபதி தொடர்பு இருந்தால், திருமணம் நடக்கும்போது திருமண நிகழ்வில் மது வழங்குவது, மது அருந்துவது கூடாது. நிச்சயம் ஒரு பிரச்சனையை உண்டு பண்ணும, அது மதுவால் மது வழங்கியதால் மது வழங்காததால் ஏற்படும் பிரச்சனை வரும். மனைவி கவுன்சிலருக்கு நிற்கலாம். கணவன் மது அருந்துவார் மனைவியின் சம்மதத்துடன் மது அருந்துவார் மனைவியே ஊற்றி தருவார், சில வீடுகளில் மனைவியும் குடிப்பார், வெளியில் தெரியாத கௌரவமான குடிப்பழக்கம் இருக்கும். மனைவிக்கு அன்பு பாசம் கருணை இருக்கும். மனைவி ஊரில் ஆறு குளம் கண்மாய் உண்டு. ஜாதகர் இடம் வாங்கினால் கூட்டு முயற்சி, நண்பர்கள் பெயரில் இடம் வாங்குவார். மனைவி பெயரில் இடம் வாங்குவார். நாலாம் அதிபதி ஏழில் இருந்தால் தாய் இரண்டாவது பிறப்பு என்று பார்த்தோம், இதில் நாலாம் அதிபதி வாங்கிய சாரநாதன் பதினொன்றில் இருந்தால் தாய் நான்காவது பிறப்பு என்று எடுக்க வேண்டும்.

நான்காம் அதிபதி எட்டாம் இடத்தில் இருந்தால் என்ன பலன்
கல்விக்காக கடன் வாங்குவார்கள். வெளியூர், வெளிதேசம், வெளிநாடு சென்று இடம் மாறி படிப்பார்கள். வீட்டில் புதையல் இருக்கும், நாலு வீடு, எட்டு புதையல் வீட்டில் புதையல் இருக்கும் என்று ஆசைப்பட்டு கொண்டிருப்பார். வாடகைக்கு குடி வந்தவர். வீட்டில் திருட்டு உண்டு, வாகன திருட்டு உண்டு. சூரியன் செவ்வாய் சம்பந்தம் வாகன திருட்டு. வீட்டு அருகே சமாதி இருக்கும். இருதய பயம் இருக்கும். தடைப்பட்டு தடைப்பட்டு படிப்பார்கள். வாகன விபத்து இருக்கும் 8 ஆம்புலன்ஸ் நாலு பயணம் ஆம்புலன்ஸில் போகிற அமைப்பு இருக்கும்.
படிக்கும்போது ஒரு அவச்சொல் இருக்கும். நாலு படிப்பு, 8 அவச்சொல். வாஸ்து குறை உள்ள வீடு தான் இவர்களுக்கு கிடைக்கும். வீடு சந்துக்குள் இருக்கும், சேரியில் இருக்கும் அல்லது மறைவான பகுதியில் இருக்கும். மருத்துவமனை அருகே வீடு இருக்கும். தாயாருக்கு எல் ஐ சி போட்டு வைப்பது நல்லது. தாய்பால் இருக்காது. தாய்வழியில் ஆயுள் குறைபாடு உள்ளவர்கள் இருப்பார்கள். தாய்க்கு ஒரு சொத்து உண்டு. தாய்க்கு உயில் சொத்து உண்டு. தாய்வழியில் மார்ச்சுரி போனவர்கள் இருப்பார்கள். தாயாருக்கு கருத்து வேறுபாடு உண்டு. படிப்பு இல்லாத பதவி கிடைக்கும், ஆனால் பதவி நிலைக்காது. ஜாதகர் எல்ஐசி ஏஜென்டாக இருப்பார், அம்மாவும் எல்ஐசி ஏஜென்ட் அல்லது எல்ஐசி போடுவார். வாகன இன்சூரன்ஸ் முறையாக கட்டாமல் பைன் கட்டுவார்கள். தாயன்பு ஜாதகருக்கு குறைவு, பினாமி சொத்து வரும், பினாமி சொத்து பெட்ரோல் பங்க் அருகே இருக்கும். 8 bunk, நாலு வாகனம் வாகனத்தில் போகும்போது செயின் அடிக்கடி கட்டாகும் அல்லது இன்ஜின்சீஸ் ஆகி நிற்கும். செயின் கட்டாகி வாகனம் நிற்கும்.
இவர்களுக்கு மெயின் ரோடு அருகில் சொத்து இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பொது பணிக்காக அரசு அதை அபகரிக்கும். எரி மலை, இயற்கை சீற்றத்தால் சேதாரம் இருக்கும்.கிணற்றை மூடிவிட்டு வீடு கட்டி இருப்பார். தந்தை, தாத்தாவுக்கு இருதாரம் இருக்கும்.மழைக்காலத்தில் நீர் தேங்கும், நீர் தேங்கிய இடத்தில் வாகனத்தை இறக்கி மேலே போனால் விபத்து உண்டாகும். 4, 8, 1, சம்பந்தம் இருந்தால் வீட்டிற்கு கொள்ளைக்காரர்கள் வருவார்கள். திதி சூன்யம் பாதகம் சம்பந்தம் இருந்தால் ஜாதக ரையே கொன்றுவிட வருவார்கள். நாலு எட்டு இரண்டு சம்பந்தம் ஜாதகருக்கு பினாமி சொத்து இருக்கும். திதி சூன்யம் பாதகம் ஆனால் அந்த பினாமி சொத்தை வாங்கக்கூடாது. நாலாம் அதிபதி திதி சூன்யம் ஆனால் ஜாதகருக்கும், வீட்டு ஓனருக்கும் பிரச்சனையாக இருக்கும். வாடகை வீட்டில் நாலாம் அதிபதி, 8, 12 இந்த மூன்றும் சம்பந்தம் தொலைந்து போன பொருள் உடனே கிடைக்கும். அதேபோல் இடி, மின்னல் காலம் இவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 4, 8, 11 சம்பந்தம் வில்லங்க சொத்து trust சொத்து கிடைக்கும். நாலு 8 என்றால் ஆய்வுக் கல்வி. இவர்கள் மெடிக்கல் இன்சூரன்ஸ் போட்டால் நல்லது. தாயாருக்கு சர்ஜரி உண்டு. தாய்வழியில் ஒரு ரகசியம் உண்டு.
தாய்வழியில் சிறுவயதில் இறந்தவர்கள், மார்ச்சுரி போனவர்கள், பிணம்இருக்கும். 8, 12 சம்பந்தம் மார்ச்சுரி காரக ராசி விருச்சிகம், இவர்கள்

No photo description available.

Monday, September 7, 2020

 

கடன் பிரச்னை, வாஸ்து தோஷம், கண் திருஷ்டி, பகை விரட்டும் வலம்புரிச் சங்கு!


கடன் பிரச்னை, வாஸ்து தோஷம், கண் திருஷ்டி, பகை விரட்டும் வலம்புரிச் சங்கு!

வலம்புரிச் சங்கு இருக்கும் இடத்தில், எந்தத் தீய சக்தியும் நம்மை அணுகாது! பிரபஞ்சமே நாதத்தால் எழுந்ததுதான். ஓம்கார பிரணவ மந்திரத்தால்தான் சகல லோகங்களும் இயங்குகிறது என்பதே வேதத்தின் சாரம். பிரணவ மந்திரத்தின் அடையாளமாகப் புனிதப்பொருளாக வலம்புரிச் சங்கு கருதப்படுகிறது. பாற்கடலைக் கடைந்தபோது திருமகள் வெளியே வந்தபோது கூடவே தோன்றியது இந்தச் சங்கு. இதை எடுத்து தமது கரத்தில் தாங்கிக்கொண்டார் திருமால்.

'பாஞ்சஜன்யம்' என்னும் அந்தச் சங்கு உயிர்களின் சலனங்களை எடுத்துக்கூறும் சின்னமாக இருந்து வருகிறது. கடலில் தோன்றும் சங்கு கிளிஞ்சலின் பாதுகாப்புக் கவசமாக விளங்குகிறது. சாதாரணமாக இடப்புறமாக வளைந்திருக்கும் சங்குகளே அதிகம் விளையும். ஆயிரம் இடம்புரிச் சங்கில் ஒரே ஒரு வலம்புரிச் சங்குதான் இருக்கும். ஆயிரம் வலம்புரிச் சங்கில் ஒரே ஒரு 'சலஞ்சலம்' என்னும் விசேஷ சங்கு தோன்றும். ஆயிரமாயிரம் சலஞ்சலம் சங்குகளுக்கு இடையேதான் ஒரே ஒரு 'பாஞ்சஜன்யம் சங்கு' தோன்றும் என்பார்கள்.

கடலில் பிறக்கும் ஒரு சங்கில் சுருண்டிருக்கும் வரிகள் வாய்ப் பகுதியில் ஆரம்பித்து வலதுபுறமாக சுழன்று முடிந்தால், அது வலம்புரிச் சங்கு. காதில் வைத்துக் கேட்டால் அது 'ஓம்' என்ற சப்தத்தை எழுப்பும். இதுவே அந்தச் சங்கு வழிபாட்டுக்குரியது என்பதைத் தெரிவித்து விடும். வலம்புரிச் சங்கு, 'தட்சிணாவர்த்த சங்கம்' என்றும் இடம்புரிச் சங்கு 'வாமாவர்த்த சங்கம்' என்றும் சொல்லப்படுகிறது.

தமக்கு வில்வித்தை கற்றுத்தந்த 'சாந்தீபனி' முனிவரின் மகனை மீட்க கடலில் வாழ்ந்த 'பாஞ்சஜன்யன்' என்ற அசுரனை ஸ்ரீகிருஷ்ணர் கொன்றார். சாகும் தருவாயில் கிருஷ்ணரைப் பணிந்த அந்த அரக்கனின் வேண்டுகோளின்படி, அவனது சாம்பலைத் திரட்டி சங்காக மாற்றி அவனது பெயராலேயே ஏந்திக்கொண்டார் என்று பாகவத புராணம் கூறுகிறது.

பூஜையில் ஒலிக்கவும், போரைத் தொடங்கவும், வெற்றியைப் பறைச்சாற்றவும், நல்லனவற்றின் வருகையை அறிவிக்கவும் ஆதிகாலம் தொட்டே சங்கு முழங்கப்பட்டு வந்துள்ளது. மகாபாரதத்தில் பாண்டவர்கள் ஐவரும் ஐந்து விதமான சங்குகளைத் தாங்கி இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

யுதிஷ்டிரர் (தர்மர்) 'அனந்த விஜயம்' எனும் ஒளிபொருந்திய சங்கையும், அர்ஜுனன் 'தேவதத்தம்' எனும் தேவ சங்கையும், பலவான் பீமன் 'மகாசங்கம்' எனும் பெரிய சங்கையும், நகுலன் 'சுகோஷம்' எனும் அதிர்ஷ்ட சங்கையும் சகாதேவன் 'மணிபுஷ்பகம்' எனும் சூட்சும சங்கையும் தாங்கி இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

சங்கு எப்போதுமே புனிதப்பொருளாக இருந்து வந்துள்ளதைத் தமிழ் இலக்கியங்களும் சொல்லி வந்துள்ளன. இது மகாலக்ஷ்மியின் அம்சமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இது இருக்கும் இடத்தில் தோஷங்கள், துஷ்ட சக்திகள் இருக்கவே இருக்காது. கண்திருஷ்டி, பகைவர்களின் நீசச் செயல் எதுவுமே பலனிழந்து போகும். கடன் பிரச்சினை நீங்கும். வாஸ்து தோஷங்கள் யாவும் விலகும்.

சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 மடங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறலாம் என்பது ஐதீகம். இது இருக்கும் இடத்தில் உணவு பஞ்சமே வராது. வலம்புரிச் சங்கு பூஜை செய்பவர்களின் பிரம்மதோஷம் விலகி விடும்.

வளர்பிறை நாளில் வாங்கி வந்த வலம்புரிச் சங்கை, புனித நதி நீர் இருந்தால், அதில் நீராட்டி சுத்தம் செய்யவேண்டும். இல்லாவிட்டால், மஞ்சள் கலந்த தூய நீரில் கழுவலாம். பின்னர் மஞ்சள், சந்தனம், குங்குமம், புஷ்பங்கள் கொண்டு அலங்கரித்து ஒரு பீடத்தின் மீது வைக்க வேண்டும்.

வலம்புரிச் சங்கை ஒருபோதும் கீழே வைக்கவே கூடாது. தூப தீபம் காட்டி, நெய் தீபமேற்றி, மந்திரங்கள் கூறி வணங்க வேண்டும். சங்குக்கு வெள்ளியாலான பூண் இடுவது விசேஷமானது. வலம்புரிச் சங்கை வணங்கும் எந்த இடத்திலும் மஹாலக்ஷ்மி வாசம் செய்வாள் என்பது நிச்சயம். தொழில் செய்யும் இடத்தில், பணம் புழங்கும் இடத்தில் இந்த சங்கு இருப்பது இன்னும் விஷேசமானது. சங்கு வைத்து செய்யப்படும் எந்தப் பூஜையும் நிறைவாகிறது. கணபதி, வலம்புரிச் சங்கு, சாளக்கிராமம், ருத்ராட்சம் இந்த நான்கும் இருக்கும் இடம் தெய்வ சந்நிதிக்கு நிகரானது என்பது ஆன்றோர்கள் வாக்கு.

ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே

பவமானாய தீமஹி

தன்னஸ் சங்க ப்ரஜோதயாத்

என்பது சங்கின் காயத்ரி மந்திரம்.

ஆடி மாத பூரம், புரட்டாசி மாத பவுர்ணமி, ஆனி மாத சுக்லபட்ச அஷ்டமி, சித்திரை மாத பவுர்ணமி எல்லாம் சங்கு பூஜை செய்வதற்கு உரிய நாள்கள். திருமகளின் அம்சமாகவே இருக்கும் வலம்புரிச் சங்கு சகல சௌபாக்கியங்களையும் தரும் அற்புத சின்னமாகவே விளங்கி வருகிறது.

Sunday, September 6, 2020

யோக வாழ்வு தரும் யோக பைரவர்! ............

 ===================================

யோக வாழ்வு தரும் யோக பைரவர்!   


பாலமுருகன். தெ

யோக வாழ்வு தரும் யோக பைரவர்!
யோக வாழ்வு தரும் யோக பைரவர்!

தெ.பாலமுருகன் - படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்


சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள சிவத்தலம் திருப்பத்தூர். இங்குள்ள அருள்மிகு திருத்தளிநாதர் ஆலயத்தில் அபூர்வத் திருக்கோலத்தில் - யோகநிலையில் அருள்பாலிக்கிறார் பைரவ மூர்த்தி. லட்சுமிதேவி கடும் தவம் இயற்றி, சிவ பெருமானின் ‘கௌரிதாண்டவ’த்தைத் தரிசித்து பேறு பெற்ற மிக அற்புதமான தலம் இது.    


யோக வாழ்வு தரும் யோக பைரவர்!


இந்தத் தலத்தின் திருத்தளிநாதரைத் தரிசிக்கவந்த காசி பைரவரே, இங்கு யோக பைரவராக அருள்கிறார் என்பது ஐதீகம். ஆக, இவரை ஆதி பைரவர் என்றும் போற்றுகிறார்கள். நம் நாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் அருளும் பைரவ மூர்த்திகளும் இவரிடமிருந்தே தோன்றியதாக திருத்தளிநாதர் திருக்கோயில் தல வரலாறு சொல்கிறது. அதேபோல், இந்த யோக பைரவரிடம் இருந்தே அஷ்ட பைரவர்கள் தோன்றியதாகவும், அவர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் எட்டு பேர் என்ற கணக்கில் 64 பைரவ மூர்த்திகள் தோன்றியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தப் பைரவ மூர்த்தியின் மேலும் பல மகிமைகள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார், திருத்தளிநாதர் கோயிலின் தலைமை குருக்களான பாஸ்கர்.

‘‘இந்த யோக பைரவர் ஆதியில் உக்கிர நிலையில் கால்களில் சங்கிலி கட்டப்பட்ட நிலையில் இருந்ததாகவும் பிற்காலத்தில் பைரவரின் கால்களில் இருந்த சங்கிலியை அகற்றி, அவரை சாந்தப்படுத்தியதாகவும் சொல்கிறார்கள். சாந்நித்தியம் நிறைந்த சுவாமி இவர். எப்போதும் வெற்றியையே அருள்பவர். இவரை, குலதெய்வமாகக் கொண்ட மருது சகோதரர்கள், எப்போது போருக்குச் சென்றாலும் இந்த யோக பைரவரை வழிபட்ட பிறகுதான் செல்வார்களாம்.  


யோக வாழ்வு தரும் யோக பைரவர்!

மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல், திருமணத்தடை போன்ற பிரச்னைகளை நீக்கும் வரப் பிரசாதியாகவும் திகழ்கிறார் இந்த யோக பைரவர். வெண் பூசணி, தேங்காய் போன்றவற்றில் நெய் தீபம் ஏற்றிவைத்து இவரை வழிபட்டால், எதிரிகள் பணிந்து போவார்கள். பங்காளிச் சண்டை முடிவுக்கு வரும். அதேபோல், ஒரு துணியில் மிளகு சுற்றி முடிந்து வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் பிரச்னைகள் முடிவுக்கு வரும். கண் திருஷ்டிகளும் விலகும்.’’

இந்தக் கோயிலில், கார்த்திகை மாதம் அமாவாசை முடிந்த ஆறாவது நாள் அஷ்ட பைரவ யாகமும் அன்னதானமும் சிறப்பாக நடைபெறுகின்றன. இந்திரன் செய்த பாவங்கள் நீங்கவேண்டி இந்திரனின் மகன் ஜயந்தன், யோக பைரவரை பூஜித்ததை நினைவுகூரும் வகையில் சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று ஜயந்தன்  பூஜை செய்யும் வைபவம் நடைபெறும். இந்த விழாவின்போது ஸ்ரீயோக பைரவர் வீதி உலா காண்பார்.  இதுபோன்ற விழாக்காலங்களிலும், அஷ்டமி தினங்களிலும் ஸ்ரீயோக பைரவரைத் தரிசித்து வழிபட்டால், நமது வறுமைகள், துயரங்கள் அனைத்தும் நீங்கும் யோக வாழ்க்கை கைகூடும் என்பது ஐதீகம்.   


===================================



=====================


பைரவர் கவசம் ஒலிக்கும் இடத்தில் எதிர்வினை சக்திகள் எதிரிகள் தொல்லை நீங்கும்.................






                    

===============================


வாராக் கடனை வசூலித்து தரும் மந்திரம்! பைரவரின் சக்தி வாய்ந்த இந்த வரிகளைப் பற்றி அறிந்துள்ளீர்களா?


பல பேருக்கு நல்லது செய்யப் போய், பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும், சில நல்ல உள்ளங்கள் இந்த பூமியில் இன்னும் வாழ்ந்துதான் வருகின்றது. தெரிந்தவர்கள் என்று நம்பி, சில பேர் கடன் தொகையை ஜாமீன் கையெழுத்து போட்டு வாங்கி கொடுப்பார்கள். அல்லது நமக்கு தெரிந்தவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதை, பொறுக்கமுடியாமல், அவர்களே,  சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த தொகையை கடனாக கொடுத்து விடுவார்கள். கடைசியில் கடன் கொடுத்தவர், வீதியில் நிற்க வேண்டிய நிலைமை வந்திருக்கும். இப்படிப்பட்ட நிலைமை உங்களுக்கு இருந்தால், உங்களுக்காகத்தான் இந்த பதிவு.


எப்படிப்பட்ட வாராக் கடனாக இருந்தாலும், அந்த கடன் தொகையை வசூலித்து தரக்கூடிய சக்தி பைரவருக்கு உண்டு என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். அஷ்டமி தினத்தில் தொடர்ந்து பைரவரை வழிபட்டு வந்தோமேயானால், கடன் பிரச்சனையில் இருந்தும், எதிரி தொல்லையிலிருந்து விடுபட முடியும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. பைரவரின் இந்த மந்திரத்தை, இந்த முறையில் எழுதும் பட்சத்தில் 48 நாட்களுக்குள், கொடுத்த கடன் தானாகவே வசூலாகும் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த மந்திரம் என்ன, அதை முறைப்படி எப்படி எழுத வேண்டும் என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். முடிந்தவர்கள், காலை சூரிய உதயத்திற்கு முன்பாக அதாவது 6 மணிக்கு முன்பாகவே இந்த மந்திரத்தை எழுதலாம். முடியாதவர்கள் மாலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் இந்த மந்திரத்தை எழுதலாம். முதலில் பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து விட்டு, ஒரு வெள்ளைத்தாளில் நான்கு பக்கமும் மஞ்சள் வைத்து, நடுவே ஒரு மஞ்சள் வைத்து, அந்த காகிதத்தில் முதலில் ‘ஓம் பழனி முருகா நமஹ’ உங்களது குலதெய்வம் என்னவோ, அந்தப் பெயரை பழனி முருகன் பெயருக்கு பதிலாக போட்டுக்கொள்ள வேண்டும்.


அதன்பின்பு ‘ஓம் விக்னங்களை தீர்க்கும் விநாயக நமஹ’ மேற்கொள்ளக் கூடிய காரியம் தடையில்லாமல் நடைபெற வேண்டும் என்பதற்காக கணபதியை வேண்டிக்கொள்ள போகின்றோம். இந்த இரண்டு மந்திரங்களையும் ஒருமுறை எழுதினால் போதும். இறுதியாக ‘ஓம் ஸ்ரீம் மஹாபைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை 11 எழுத வேண்டும். தொடர்ந்து இவ்வாறு 108 நாட்கள் இந்த மந்திரத்தை எழுதி வந்தீர்கள் என்றால், உங்களுக்கான பலன் கைமேல் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. 108 நாட்களா! என்று சிரமப்பட வேண்டாம். பல வருடங்களாக வரவே வராது என்று, நீங்கள் முடிவு செய்து வைத்திருந்த கடன் தொகையாக இருந்தாலும், வட்டியோடு சேர்த்து வசூலாகும் என்பதில் சந்தேகமே இல்லை.


எழுதத் தெரியாதவர்கள், இந்த மந்திரத்தை வாயால் உச்சரிக்க சொல்லி, சொல்லலாம். மந்திரத்தை உச்சரித்து இந்த வழிபாட்டை செய்வதைவிட, எழுதுவதன் மூலம் விரைவாகவே பலன் கிடைக்கும். உங்களது மகன், மகள் இப்படி உங்கள் வீட்டில் இருக்கும் உறவுகளும், உங்களுக்காக வேண்டிக்கொண்டு, இந்த மந்திரத்தை எழுதி, பரிகாரத்தை உங்களுக்காக செய்யலாம். பல பேர் இந்த முறையை பின்பற்றி பயன் அடைந்துள்ளார்கள், என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம். 

நன்றி; https://dheivegam.com/vaara-kadan-bairavar-manthiram/

===============================================

தாங்கள் பிறருக்குக் கொடுத்த பணம் தங்களுக்கு திரும்ப வந்து சேர வேண்டும் என நினைப்பவர்கள் சிறிதளவு கல் உப்பு,சிறிதளவு வெந்தயம் மற்றும் சிறிதளவு கருப்பு எள் ஆகிய மூன்றையும் எடுத்துக் கொண்டு ஒரு மிக்ஸியில் இந்த மூன்றையும் போட்டு நன்றாக பொடி பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு சிறிய தூய்மையான வெள்ளைத்துணியில் அந்த பொடியை கொட்டி, துணியை முடிந்து உங்கள் வீட்டில் கன்னி மூலை எனப்படும் தென்மேற்கு மூலையில் வைத்து விட வேண்டும்.

வாராக் கடனை நம்மிடம் மீண்டும் வரச் செய்யும் ஆற்றல் கொண்ட தெய்வமாக பைரவ மூர்த்தி இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக சிவன் கோயிலில் இருக்கும் பைரவர் சந்நிதிக்குச் சென்று, சிறிதளவு தூய்மையான வெள்ளைத் துணியில் 27 கருப்பு மிளகுகளை போட்டு முடிந்து, ஒரு மண் அகல் விளக்கில் அந்த முடிச்சை திரியாக வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, தீபம் ஏற்றி பைரவரை வழிபாடு செய்ய வேண்டும்.

நன்றி;மாலைமலர்.

=========================================

================================================

Saturday, September 5, 2020

 


வேர்க்கடலை கொழுப்பு அல்ல.....வேர்க்கடலை… ஏழைகளின் அசைவ உணவு!....


வேர்கடலை என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்து தான். இதனால் உடல் பருமன் கூடும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதய நோய்கள் போன்ற பிரச்சனைகள் வரும் என்ற நம்பிக்கை தான் இருந்து வருகின்றது. 

 
 
ஆனால் வருகின்ற ஆராய்ச்சிகளில் இந்த நம்பிக்கைகளுக்கு எந்த ஒரு ஆதாரமுமில்லை என்றே தெரிகிறது. காரணம் வேர்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும் அதனுடன் அதிகமான புரத சத்தும் இருக்கின்ற படியால் அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஆரோக்கியமான உணவாகும். ஏனெனில் இதிலுள்ள சர்க்கரையின் அளவு இரத்தத்தில் மிக மிக குறைந்த அளவே சேருவதால் பயமில்லாமல் சாப்பிடலாம். மேலும் இதில் இருக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருள் இன்சுலினை சுரக்கச் செய்யும் ஹார்மோனை துரிதப்படுத்தி சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. ஆகவே இவர்கள் அன்றாட உணவில் தைரியமாக வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளலாம். 
 
வேர்கடலையில் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக காணப்படுவதால் வேர்க்கடலை சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்காது. மாறாக ரத்த கொதிப்பு குறையும். வேர்கடலையில் நைட்ரிக் அமிலம் என்ற வேதிப் பொருள் உள்ளது. இவை வேர்க்கடலையைச் சாப்பிடுவதன் மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகிறது. மேலும் இதில் காணப்படும் ஆன்ட்டி ஆக்ஸடென்ட்ஸ் போன்ற உயிர் வேதிப் பொருட்கள் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் உருவாக்காமல் தடுக்கிறது. வேர்க்கடலை நார்ச்சத்து மிகுந்த உணவு என்பதால் வேர்கடலை சாப்பிட்டால் மலசிக்கல் ஏற்படாது. ஆகவே கர்ப்பிணிகள் கூட வேர்க்கடலையை சாப்பிடுவது நல்லது.
 
வேர்கடலையில் இருக்கும் சில வேதிப் பொருட்கள் புற்றுநோய், உருவாக்கக் காரணமாகும் செல்களை அழித்துவிடுகின்றன. குறிப்பாக மலக்குடல் புற்றுநோய் உருவாக்காமல் தடுக்கிறது. மேலும் பார்க்கின்ஸன், அல்ஸீமர், போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்கடலை உதவுகிறது. வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப்கொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன.
 
அதனால் நரம்புகள் நன்றாகச் செயல்படுவதால் அது தொடர்புடைய நோய்கள் குறைந்து விடுகிறது. இதில் முக்கியமாக தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், சிறு நீரகக் கோளாறு மற்றும் ஒவ்வாமை பிரச்சனைகள் உள்ளவர்கள் இக்கடலையை தவிர்த்துவிடலாம் அல்லது மருத்துவரின் ஆலோசனையை கேட்பது நல்லது. உலகம் முழுவதும் எளிதில் தங்கு தடையின்றிக் கிடைக்கும். முக்கியமான ஊட்டச்சத்து உள்ள உணவுப் பொருள்களுள் நிலக்கடலையும் ஒன்றாகும், வேர்க்கடலையில் உள்ள புரதம் சரிவிகிகதமாக அமைந்திருக்கிறது. எனவே, குழந்தைகள் வளர்ச்சி தடையின்றி இருக்க நிலக்கடலை நல்லது.

சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம், வேர்க்கடலையில் தான் இருக்கிறது. முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதம் உள்ளது. மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு, பற்கள் மற்றும் எலும்புகளின் பலத்திற்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும், வேர்க்கடலையில் உள்ளன.


இதனால்தானோ என்னவோ எளிமையாக வாழ்ந்த காந்திஜி தேவையான அளவு உடலுக்கும், மனதிற்கும் சக்திபெற வேர்கடலையும், ஆட்டுப்பாலும் சாப்பிட்டு வந்தார். எல்லாவிதமான இரத்தப் போக்குகளையும் இது தடுக்கும். பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் சாப்பிடவேண்டிய உணவு வேர்க்கடலையாகும்.
வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனெனில் அதில் தான் நிறையச் சத்துக்கள் அடங்கியுள்ளது. மேலும் வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடுவதால் சிலருக்கு ஏற்படும் அஜீரணத்தை தவிர்க்கலாம். பொதுவாக உடல எடையை குறைப்பவர்கள் நொறுக்கு தீணிக்கு பதிலாக வேர்க்கடலையை சாப்பிடலாம், ஏனெனில் இவை  சாப்பிட்ட திருப்தி விரைவிலேயே கிடைப்பதால் மேலும் மேலும் எதையாவது சாப்பிட்டு உடல் எடையை கூட்டும் நிலை வராது. ஆனாலும் இதில் உடல் எடையைக் கூட்டும் புரத சத்து அதிகமிருப்பதால் அளவோடு சாப்பிடவது தான் இவர்களுக்கு நல்லது. இதிலுள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் முதுமையில் ஏற்படும் ஆஸடியொபோராசிஸ் என்ற எலும்பு சம்பந்தமான நோயையும் தடுக்க உதவுகிறது.
பெருந்தீனிக்காரர்களும், உடல் பருமன் உள்ளவர்களும், உணவைக் குறைத்து உடல் மெலிய விரும்பினால், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி முன்பாக ஒரு கைப்பிடி அளவு, வறுத்த வேர்கடலையைச் சாப்பிடவும். இத்துடன் சீனி சேர்க்காத காபி அல்லது டீ அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது. இதன் பொருட்டு உடல் எடையும் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்.
வயிற்றுப் போக்கு உடனே கட்டுப்படவும், பற்கள் பலம் பெறவும், வேர்க்கடலை சாப்பிடுவது நல்லது. எல்லாவற்றையும்விட முக்கியமானது. உடல் அழகும், இதயப் பாதுகாப்பும், வேர்க்கடலையில் உள்ள நியாஸின், தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆறவும், இவை வராமல் முன்கூட்டியே தடுப்பதுடன், பளபளப்பான தோலையும் ஏற்படுத்தித் தருகிறது. படிக்கும் மாணவ, மாணவியர் வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிடவதால் ஞாபக மறதி ஏற்படாது என்கிறார்கள். உணவு ஆய்வாளர்கள், வேர்க்கடலையில் உள்ள உயிர்வேதிப்பொருட்கள் நரம்பு செல்களை நனகு செயல்படத் தூண்டும். இதனால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புள்ள பார்க்கிஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்கும். நரம்பு சம்பந்தமான நோய்கள் வராது. 30 விதமான ஊட்டச் சத்துக்கள் உள்ளன. இதில் புரதம் அதிகம். தினமும் 50 கிராம் வேர்க்கடலை அவித்து அல்லது வறுத்து சாப்பிடவும். எண்ணையில் பொரித்து சாப்பிட வேண்டாம்.
ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்?

வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதை விட அவித்தோ, வறுத்தோ, சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில் தான் நிறையச் சத்துக்கள் உள்ளன. ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம். வேர்க்கடலையைச் சாப்பிடும் போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக்கூடாது. கசப்பேறிய வேர்க்கடலையில் .அஃபலோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது. எனவே புத்தம் புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.
நன்றி - பசுமை இந்தியா, ஆசிரியர் - டாக்டர்.சி. இரா. தமிழ்வாணன்

நன்றி;வெவ்துனியா.
=====================================

வேர்க்கடலை… ஏழைகளின் அசைவ உணவு!....

நிராகரிப்புகளை அலட்சியப்படுத்திவிட்டு நம்மோடு இயைந்தும் சினந்தும் ஆயிரமாயிரம் வளங்களை அள்ளிக் கொடுக்கிறது இயற்கை.

வெளிநாட்டு வியாபார தந்திரத்தால் 'உப்பு இருக்கா…….கரி இருக்கா……..இதைச்சாப்பிடாதீர்கள்... அதைச் சாப்பிடாதீர்கள்!'  என மிரட்டும் விளம்பரங்களோடு, கலர் கலர் பேக்கிங்குகளாக களமிறக்கப்படுகின்றன விதவிதமான நொறுக்குத் தீனிகளும் இன்ன பிற உணவுகளும்...! 

அப்படி தவறான புரிதலோடு, நம் மண்ணில் பல்வேறு இயற்கை உணவுகள் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றன. அதில் ஒரு வகைதான் நிலக்கடலை.

வேர்க்கடலை, நிலக்கடலை என்ற பெயர்களில் அழைக்கப்படும் இவை கொட்டை வகையைச் (Nuts) சேர்ந்தது. மத்திய அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்டது. எண்ணெய் வித்துக்காக சீனா அதிக அளவில் பயிரிட்டு வருகின்றன. நிலக்கடலை நம் நாட்டில், பெருமளவு உற்பத்தி செய்யப்படுகிறது. அதற்கான காரணம் எத்தரப்பினரும் வாங்கும் நிலையில் உள்ளது என்பதும், அதில் அடங்கியிருக்கும் சத்துக்களுமே ஆகும்.

100 கிராம் நிலக்கடலையில் கார்போஹைட்ரேட்,  நார்ச்சத்து, கரையும் கொழுப்பு, புரதம், ட்ரிப்டோபென், திரியோனின், ஐசோலூசின், லூசின், லைசின், குலுட்டாமிக் ஆசிட், கிளைசின்,  விட்டமின், கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மேங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகச் சத்து, தண்ணீர்ச்சத்து ஆகியவற்றுடன் ஃபோலிக் ஆசிட் சத்தும் நிறைந்துள்ளன.

அதெல்லாம் சரி. இத்தனை சத்துக்கள் அடங்கிய 'நிலக்கடலையை உண்ணக்கூடாது... அப்படி உண்பதால் ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்து. மாரடைப்பு போன்ற இதயநோய்  வரக்கூடும்' என்று ஒரு தகவலை சிலர் மக்களிடையே பரப்பியிருக்கிறார்கள்.

இந்த கூற்று உண்மைதானா என தெரிந்துகொள்ள சென்னையைச் சேர்ந்த இதய நோய் சிறப்பு மருத்துவர் சர். இராமகிருஷ்ணனிடம் கேட்டபோது,

"நிலக்கடலை சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பு அதிகரித்து, இதயநோய் வரும் என்பது தவறான கருத்து. சொல்லப்போனால், அடிக்கடி நிலக்கடலை சாப்பிடுபவர்களுக்கு இதயநோய்கள் வருவது குறைகிறது. வாரத்திற்கு ஐந்து முறை, ஒரு கைப்பிடி அளவு நிலக்கடலை எடுத்துக் கொண்டால் இதய நோய் வராமல் தடுக்கலாம். வாரத்திற்கு இரண்டு முறை கைப்பிடி அளவு நிலக்கடலை சாப்பிட்டால், ஏற்கெனவே இதய வியாதி இருப்பவர்களின் இறப்பு விகிதம் 24% ஆக குறைக்கப்படுகிறது. நிலக்கடலையில் உள்ள காப்பர் சத்து மற்றும் அதிலிருந்து எடுக்கக்கூடிய எண்ணெய் பொருட்களில் மோனோ அன் சாச்சுரேட்டட் (MUFA) மற்றும் பாலி அன் சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் இருக்கின்றன.

இவைகள் கெட்ட கொழுப்பு (LDL) மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடிய ட்ரைகிளிசரைட்ஸ் போன்றவை களைக் குறைத்து, நன்மை தரக்கூடிய நல்ல கொழுப்பை (HDL) அதிகரிக்கச் செய்கிறது. இதனால் ரத்த அழுத்தம் சீராக இருப்பதோடு, சர்க்கரை வியாதியால் உண்டாகக் கூடிய சீரற்ற கொழுப்பு மற்றும் செரிமான மாற்றங்களை கட்டுக்குள் வைக்கின்றன. இது குறித்த பல்வேறு ஆராய்ச்சிகள் இன்றளவும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன” என்றார்.

அவென்டிஸ்ட் ஹெல்த் ஸ்டடி (Aventist Health Study), லோவா வுமன்ஸ் ஹெல்த் ஸ்டடி (Lowa Women’s Health Study), நர்சஸ் ஹெல்த் ஸ்டடி (Nursus Health Study), மற்றும் பிசிஷியன்ஸ் ஹெல்த் ஸ்டடி (physicians Health study) போன்றவைகள் நிலக்கடலை குறித்த பல்வேறு ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்திருக்கின்றன. அதில், நிலக்கடலையில் இருக்கும் ஃபோலேட் (Folate) என்கிற விட்டமின், பெண்களின் கருத்தரிப்புத் (Fertility) தன்மையை ஊக்குவிக்கின்றன எனவும், தாய்மைப்பேறு அடைவதற்கு முன்பாகவோ அல்லது ஆரம்பகாலத்திலோ 400 மைக்ரோ கிராம் நிலக்கடலை சாப்பிடும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு 70% மூளைத் தண்டுவட குறைபாடு வருவது தடுக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

தன் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும்  சூழலில், பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரையும் பாதிப்பது மனஅழுத்தம். 'நான் உற்சாகமாகத்தான் இருக்கிறேன். எனக்கு எப்படி மனச்சோர்வு?' என்று தனக்குள் என்ன நடக்கிறது என்பதை அறியாத நிலையில்தான், இன்றைய வாழ்க்கை நம்மை வைத்திருக்கிறது. நிலக்கடலையில் உள்ள அமினோ ஆசிட்டுகள், மூளையின் இயல்பு ஊக்கத்திற்கு தேவையான செரோடோனின் (Serotonin) என்ற வேதிப்பொருளை உற்பத்தி செய்கின்றன. இதனால் மன அழுத்தம் குறைக்கப்படுகிறது. 

மேலும், இதில் உள்ள வைட்டமின் பி.3 மூளையின் நினைவாற்றலை துரிதப்படுத்துகிறது. மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால், ஓர் ஆராய்ச்சியில், தினமும் ஒரு அவுன்ஸ் நிலக்கடலை எடுத்துக்கொண்டால் 25% பித்தப்பையில் கல் (GallStone) உருவாவது தடுக்கப்படுவதாகவும், உடல் பருமன் குறைக்கப்படுவதாகவும் கண்டறிந்துள்ளனர்.

ஒன்றை விட்டு ஒன்று பிரியாமல் ரத்தக் கொழுப்பும், சர்க்கரை நோயும் இரட்டைக் குழந்தைகள்போல மக்களை வாட்டி வதைக்கின்றன. இதை வியாபாரமாக்க முனையும் ஒருசிலர், 'கொழுப்பைக் குறைக்கிறோம்...  சர்க்கரையை குறைக்கிறோம்...!'  எனக் கூவிக் கூவி ஆயிரம், லட்சம் என மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் காலங்களில் பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தாமல் பயிரிடப்பட்ட இயற்கை உணவுகளில் உள்ள சத்துக்களைக் கொண்டு, உடலும் மனதும் ஆரோக்கியமாக இருந்தன. இன்றைக்கு உடலுக்கு எதிரான மருந்தாக உணவு மாறிவிட்டது. 

இதய நோயை அண்டவிடாத தன்மையைக் கொண்டுள்ள நிலக்கடலை சற்று ஆறுதலாக இருந்தபோதும், "ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் செயல்பாட்டில் நிலக்கடலையின் பங்கு என்ன?" என்று தஞ்சையைச் சேர்ந்த சர்க்கரை நோய் நிபுணர் மருத்துவர் குருமூர்த்தியை அணுகியதில், 

“வேர்க்கடலையில் புரதம் மற்றும் கொழுப்புச்சத்து அதிகமாகவும், மாவுச்சத்து குறைவாகவும் இருக்கின்றன. அதனால் இதை ஏழைகளின் அசைவ உணவு என்று கூட கூறலாம். தற்போதைய உணவு ஆராய்ச்சிகள் (FDA) நிலக்கடலையில் மருத்துவக் குணங்கள் இருப்பதாக நிரூபித்திருக்கின்றன. ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் அதில் இருக்கும் சர்க்கரையின் தன்மையை அளவாகக் கொண்டு,  இன்டெக்ஸ் (Index) (அதாவது, G - 1 – 14 ) தீர்மானிக்கிறார்கள். அதன் அடிப்படையில் நாம் பார்த்தோமேயானால், பச்சைப்பட்டாணி, வாழைப்பழம்,  புழுங்கல் அரிசி, அவித்த உருளைக் கிழங்கு போன்றவற்றில் G-1 அதிகமாக இருக்கிறது. இந்த வகை உணவுகள் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தும். 

ஆனால், வேர்க்கடலையில் G-1 குறைவாக இருப்பதால்,  ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடனடியாக உயர்த்தாமல் சீர் செய்கிறது. அத்துடன் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை 21% குறைக்கிறது. இன்சுலின் வேலை செய்வதற்கான செயல்திறனை அதிகப்படுத்துகிறது. ஏறக்குறைய GLP-1 என்ற ஹார்மோன் போன்று வேலை செய்து சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் வைக்கிறது. தினமும் ஒரு கைப்பிடி  அளவு (1 ½ oz அல்லது 50 to 75 grms ) வேர்க்கடலை சாப்பிட்டால் போதுமானது,  சர்க்கரை நோய் வராமல் கட்டுப்பாட்டிற்குள் வைக்கலாம்” என்றார்.

இப்படி நல்லெண்ணெய், கடலை எண்ணெய் எனப் பழகிவந்த நாம், அனைத்து சத்துக்களும் உறிஞ்சி எடுக்கப்பட்ட தெளிந்த எண்ணெயை உபயோகப்படுத்தி வருகிறோம். கடலை எண்ணெய் அதிக ஆற்றல் கொண்டது. அதிகப்படியான ‘லிப்பிடுகள்’ இருப்பதால் கெட்ட கொழுப்பை உடலில் சேராமல் தடுக்கிறது. ‘பீட்டா சிட்டோஸ்டிரால்’ என்னும் துணை ரசாயனப் பொருள் கெட்ட கொழுப்பை உறிஞ்சி அகற்றும் தன்மை கொண்டது. ‘ரெசவராடல்’ எனும் நோய் எதிர்ப்பு பொருள், கடலை எண்ணெயில் அதிகம் இருக்கிறது. இது புற்றுநோய்க்கு எதிராக செயலாற்றும் தன்மை கொண்டது. 

இதில் உள்ள வைட்டமின் இ சத்து, லிப்பிடுகளில் கரையும் நோய் எதிர்ப்பு பொருளாகும். இவை செல்சவ்வுகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பல்வேறு பன்னாட்டு உணவு உற்பத்தி நிறுவனங்களின் போட்டா போட்டிக்கு ஈடுகொடுக்க முடியாமல்,  சத்துக்கள் நிறைந்த உணவுப் பயிர்கள் உருத்தெரியாமல் போய்க்கொண்டிருக்கின்றன. நிலக்கடலையும் இந்த வால்மார்ட் அரசியலுக்குத் தப்பவில்லை. பிறநாடுகளைவிட இந்தியாவில் அதிகம் பயிரிட்டு வரும் நிலக்கடலையை, மக்கள் மத்தியில் உடலுக்கு ஒவ்வாத பொருளாகத் திட்டமிட்டு பெரிய பிம்பத்தை உருவாக்கி,  தங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்து கொள்வதாக இணையச் செய்திகள் முன்வைக்கின்றன.

நம் மூதாதையர் வழிகாட்டுதலில் தட்பவெட்பத்திற்கு ஏற்ப நமக்காக, நம் மண்ணில் பாவுகிற காய்கறிகள், தானியங்கள், பயறுவகைகளை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதை மீட்டெடுக்கும் விதமாக,  மீண்டும் மரபுவழி உணவு குறித்த தெளிவை நோக்கி  நாம் பயணப்பட வேண்டும். யாராவது இருவர் பேசிக்கொண்டிருந்தால் 'என்ன கடலையா'... என்கிற நக்கலான பேச்சை விடுத்து, இனியேனும் கடலையின் மகத்துவத்தை கவனியுங்கள்.

எது எப்படியோ, "நிலக்கடலை மிகுந்த ஆரோக்கியமான உணவுப்பொருள். எந்தவித பயமும் இன்றி, கடலைமிட்டாயாகவோ, வேகவைத்தோ அல்லது வறுத்தோ சாப்பிடலாம். பயப்படத் தேவையில்லை. இதனால், பல்வேறு நோய்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும்!"  என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

எல்லாவற்றிலும் எதிர்மறை விளைவுகள் இருப்பதுபோல் உணவுகளிலும் இருக்கத்தான் செய்கிறது. இதை மனதில் கொண்டு, இனியாவது கையளவுக் கடலையில் ஆரோக்கியமான வாழ்க்கையைத் துவங்கலாமே…! 

நன்றி;கல்விகுரு.



===============================================

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...