Followers

Sunday, September 6, 2020

யோக வாழ்வு தரும் யோக பைரவர்! ............

 ===================================

யோக வாழ்வு தரும் யோக பைரவர்!   


பாலமுருகன். தெ

யோக வாழ்வு தரும் யோக பைரவர்!
யோக வாழ்வு தரும் யோக பைரவர்!

தெ.பாலமுருகன் - படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்


சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள சிவத்தலம் திருப்பத்தூர். இங்குள்ள அருள்மிகு திருத்தளிநாதர் ஆலயத்தில் அபூர்வத் திருக்கோலத்தில் - யோகநிலையில் அருள்பாலிக்கிறார் பைரவ மூர்த்தி. லட்சுமிதேவி கடும் தவம் இயற்றி, சிவ பெருமானின் ‘கௌரிதாண்டவ’த்தைத் தரிசித்து பேறு பெற்ற மிக அற்புதமான தலம் இது.    


யோக வாழ்வு தரும் யோக பைரவர்!


இந்தத் தலத்தின் திருத்தளிநாதரைத் தரிசிக்கவந்த காசி பைரவரே, இங்கு யோக பைரவராக அருள்கிறார் என்பது ஐதீகம். ஆக, இவரை ஆதி பைரவர் என்றும் போற்றுகிறார்கள். நம் நாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் அருளும் பைரவ மூர்த்திகளும் இவரிடமிருந்தே தோன்றியதாக திருத்தளிநாதர் திருக்கோயில் தல வரலாறு சொல்கிறது. அதேபோல், இந்த யோக பைரவரிடம் இருந்தே அஷ்ட பைரவர்கள் தோன்றியதாகவும், அவர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் எட்டு பேர் என்ற கணக்கில் 64 பைரவ மூர்த்திகள் தோன்றியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தப் பைரவ மூர்த்தியின் மேலும் பல மகிமைகள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார், திருத்தளிநாதர் கோயிலின் தலைமை குருக்களான பாஸ்கர்.

‘‘இந்த யோக பைரவர் ஆதியில் உக்கிர நிலையில் கால்களில் சங்கிலி கட்டப்பட்ட நிலையில் இருந்ததாகவும் பிற்காலத்தில் பைரவரின் கால்களில் இருந்த சங்கிலியை அகற்றி, அவரை சாந்தப்படுத்தியதாகவும் சொல்கிறார்கள். சாந்நித்தியம் நிறைந்த சுவாமி இவர். எப்போதும் வெற்றியையே அருள்பவர். இவரை, குலதெய்வமாகக் கொண்ட மருது சகோதரர்கள், எப்போது போருக்குச் சென்றாலும் இந்த யோக பைரவரை வழிபட்ட பிறகுதான் செல்வார்களாம்.  


யோக வாழ்வு தரும் யோக பைரவர்!

மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல், திருமணத்தடை போன்ற பிரச்னைகளை நீக்கும் வரப் பிரசாதியாகவும் திகழ்கிறார் இந்த யோக பைரவர். வெண் பூசணி, தேங்காய் போன்றவற்றில் நெய் தீபம் ஏற்றிவைத்து இவரை வழிபட்டால், எதிரிகள் பணிந்து போவார்கள். பங்காளிச் சண்டை முடிவுக்கு வரும். அதேபோல், ஒரு துணியில் மிளகு சுற்றி முடிந்து வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் பிரச்னைகள் முடிவுக்கு வரும். கண் திருஷ்டிகளும் விலகும்.’’

இந்தக் கோயிலில், கார்த்திகை மாதம் அமாவாசை முடிந்த ஆறாவது நாள் அஷ்ட பைரவ யாகமும் அன்னதானமும் சிறப்பாக நடைபெறுகின்றன. இந்திரன் செய்த பாவங்கள் நீங்கவேண்டி இந்திரனின் மகன் ஜயந்தன், யோக பைரவரை பூஜித்ததை நினைவுகூரும் வகையில் சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று ஜயந்தன்  பூஜை செய்யும் வைபவம் நடைபெறும். இந்த விழாவின்போது ஸ்ரீயோக பைரவர் வீதி உலா காண்பார்.  இதுபோன்ற விழாக்காலங்களிலும், அஷ்டமி தினங்களிலும் ஸ்ரீயோக பைரவரைத் தரிசித்து வழிபட்டால், நமது வறுமைகள், துயரங்கள் அனைத்தும் நீங்கும் யோக வாழ்க்கை கைகூடும் என்பது ஐதீகம்.   


===================================



=====================


பைரவர் கவசம் ஒலிக்கும் இடத்தில் எதிர்வினை சக்திகள் எதிரிகள் தொல்லை நீங்கும்.................






                    

===============================


வாராக் கடனை வசூலித்து தரும் மந்திரம்! பைரவரின் சக்தி வாய்ந்த இந்த வரிகளைப் பற்றி அறிந்துள்ளீர்களா?


பல பேருக்கு நல்லது செய்யப் போய், பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும், சில நல்ல உள்ளங்கள் இந்த பூமியில் இன்னும் வாழ்ந்துதான் வருகின்றது. தெரிந்தவர்கள் என்று நம்பி, சில பேர் கடன் தொகையை ஜாமீன் கையெழுத்து போட்டு வாங்கி கொடுப்பார்கள். அல்லது நமக்கு தெரிந்தவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதை, பொறுக்கமுடியாமல், அவர்களே,  சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த தொகையை கடனாக கொடுத்து விடுவார்கள். கடைசியில் கடன் கொடுத்தவர், வீதியில் நிற்க வேண்டிய நிலைமை வந்திருக்கும். இப்படிப்பட்ட நிலைமை உங்களுக்கு இருந்தால், உங்களுக்காகத்தான் இந்த பதிவு.


எப்படிப்பட்ட வாராக் கடனாக இருந்தாலும், அந்த கடன் தொகையை வசூலித்து தரக்கூடிய சக்தி பைரவருக்கு உண்டு என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். அஷ்டமி தினத்தில் தொடர்ந்து பைரவரை வழிபட்டு வந்தோமேயானால், கடன் பிரச்சனையில் இருந்தும், எதிரி தொல்லையிலிருந்து விடுபட முடியும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. பைரவரின் இந்த மந்திரத்தை, இந்த முறையில் எழுதும் பட்சத்தில் 48 நாட்களுக்குள், கொடுத்த கடன் தானாகவே வசூலாகும் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த மந்திரம் என்ன, அதை முறைப்படி எப்படி எழுத வேண்டும் என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். முடிந்தவர்கள், காலை சூரிய உதயத்திற்கு முன்பாக அதாவது 6 மணிக்கு முன்பாகவே இந்த மந்திரத்தை எழுதலாம். முடியாதவர்கள் மாலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் இந்த மந்திரத்தை எழுதலாம். முதலில் பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து விட்டு, ஒரு வெள்ளைத்தாளில் நான்கு பக்கமும் மஞ்சள் வைத்து, நடுவே ஒரு மஞ்சள் வைத்து, அந்த காகிதத்தில் முதலில் ‘ஓம் பழனி முருகா நமஹ’ உங்களது குலதெய்வம் என்னவோ, அந்தப் பெயரை பழனி முருகன் பெயருக்கு பதிலாக போட்டுக்கொள்ள வேண்டும்.


அதன்பின்பு ‘ஓம் விக்னங்களை தீர்க்கும் விநாயக நமஹ’ மேற்கொள்ளக் கூடிய காரியம் தடையில்லாமல் நடைபெற வேண்டும் என்பதற்காக கணபதியை வேண்டிக்கொள்ள போகின்றோம். இந்த இரண்டு மந்திரங்களையும் ஒருமுறை எழுதினால் போதும். இறுதியாக ‘ஓம் ஸ்ரீம் மஹாபைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை 11 எழுத வேண்டும். தொடர்ந்து இவ்வாறு 108 நாட்கள் இந்த மந்திரத்தை எழுதி வந்தீர்கள் என்றால், உங்களுக்கான பலன் கைமேல் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. 108 நாட்களா! என்று சிரமப்பட வேண்டாம். பல வருடங்களாக வரவே வராது என்று, நீங்கள் முடிவு செய்து வைத்திருந்த கடன் தொகையாக இருந்தாலும், வட்டியோடு சேர்த்து வசூலாகும் என்பதில் சந்தேகமே இல்லை.


எழுதத் தெரியாதவர்கள், இந்த மந்திரத்தை வாயால் உச்சரிக்க சொல்லி, சொல்லலாம். மந்திரத்தை உச்சரித்து இந்த வழிபாட்டை செய்வதைவிட, எழுதுவதன் மூலம் விரைவாகவே பலன் கிடைக்கும். உங்களது மகன், மகள் இப்படி உங்கள் வீட்டில் இருக்கும் உறவுகளும், உங்களுக்காக வேண்டிக்கொண்டு, இந்த மந்திரத்தை எழுதி, பரிகாரத்தை உங்களுக்காக செய்யலாம். பல பேர் இந்த முறையை பின்பற்றி பயன் அடைந்துள்ளார்கள், என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம். 

நன்றி; https://dheivegam.com/vaara-kadan-bairavar-manthiram/

===============================================

தாங்கள் பிறருக்குக் கொடுத்த பணம் தங்களுக்கு திரும்ப வந்து சேர வேண்டும் என நினைப்பவர்கள் சிறிதளவு கல் உப்பு,சிறிதளவு வெந்தயம் மற்றும் சிறிதளவு கருப்பு எள் ஆகிய மூன்றையும் எடுத்துக் கொண்டு ஒரு மிக்ஸியில் இந்த மூன்றையும் போட்டு நன்றாக பொடி பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு சிறிய தூய்மையான வெள்ளைத்துணியில் அந்த பொடியை கொட்டி, துணியை முடிந்து உங்கள் வீட்டில் கன்னி மூலை எனப்படும் தென்மேற்கு மூலையில் வைத்து விட வேண்டும்.

வாராக் கடனை நம்மிடம் மீண்டும் வரச் செய்யும் ஆற்றல் கொண்ட தெய்வமாக பைரவ மூர்த்தி இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக சிவன் கோயிலில் இருக்கும் பைரவர் சந்நிதிக்குச் சென்று, சிறிதளவு தூய்மையான வெள்ளைத் துணியில் 27 கருப்பு மிளகுகளை போட்டு முடிந்து, ஒரு மண் அகல் விளக்கில் அந்த முடிச்சை திரியாக வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, தீபம் ஏற்றி பைரவரை வழிபாடு செய்ய வேண்டும்.

நன்றி;மாலைமலர்.

=========================================

================================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...