Followers

Sunday, July 10, 2022

 திருவாசகம்-திருப்படையாட்சி

கண்க ளிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே
    காரிகை யார்கள்தம் வாழ்வில்என் வாழ்வு கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திடு மாறு மறந்திடும் ஆகாதே
    மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே
பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடு மாகாதே
    பாண்டிநன் னாடுடை யான்படை யாட்சிகள் பாடுது மாகாதே
விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படு மாகாதே
    மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படு மாயிடிலே
.
 மீனைப் பிடிக்கும் பொருட்டு வலை வீசிய வேடனாகிய இறைவன், எழுந்தருளித் தோன்றுவனாயின், இரண்டு கண்களும், அவன் திருவடியைக் கண்டு களிப்பன ஆகாது போகுமோ? எனது வாழ்க்கை மகளிரொடு கூடிவாழ்வதில் முடிவு பெற்றுவிடுதல் ஆகாது போகுமோ? மண்ணுலகத்தில் வந்து பிறந்திடும் விதத்தை மறத்தல் ஆகாது போகுமோ? திருமால் அறியாத தாமரை மலர் போன்ற திருவடிகள் இரண்டையும் வழிபடுவதும் ஆகாது போகுமோ? இசையினால் மிக்க மகிழ்ச்சியைத் தருகின்ற பாட்டுடன், ஆட்டம் பழகுதல் ஆகாது போகுமோ? நல்ல பாண்டி நாட்டையுடைய இறைவன் தனது படையாகிய அடியார்களை ஆளும் தன்மைகளைப் பாடுதல் ஆகாது போகுமோ? விண்ணவரும் மகிழ்ச்சி மிகத் தக்க ஒரு மாற்றம் தோன்றுதல் ஆகாது போகுமோ?

நல்லூரான் திருவடியை    நான்நினைத்த மாத்திரத்தில்

எல்லாம் மறப்பேனெடி - கிளியே!   இரவுபகல் காணேனெடி.  

ஆன்மா அழியாதென்று    அன்றெனக்குச் சொன்னமொழி

நான்மறந்து போவேனோடி - கிளியே!   நல்லூரான் தஞ்சமெடி.

தேவர் சிறைமீட்ட  செல்வன் திருவடிகள்

காவல் எனக்காமெடி - கிளியே!   கவலையெல்லாம் போகுமெடி.

எத்தொழிலைச் செய்தாலென்    ஏதவத்தைப் பட்டலென்

கர்த்தன் திருவடிகள் - கிளியே!   காவல் அறிந்திடெடி.

பஞ்சம்படை வந்தாலும்   பாரெல்லாம் வெந்தாலும்

அஞ்சுவமோ நாங்களெடி - கிளியே!  ஆறுமுகன் தஞ்சமெடி.

சுவாமி யோகநாதன்   சொன்னதிருப் பாட்டைந்தும்

பூமியிற் சொன்னாடி - கிளியே!   பொல்லாங்கு தீருமெடி.

நல்லூரான் திருவடியை நான்நினைத்த மாத்திரத்தில்  

எல்லாம் மறப்பேனெடி - கிளியே!   இரவுபகல் காணேனெடி.  

 ஜய ஜய சங்கர, ஹர ஹர சங்கர.     ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க .

 புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா

அஜாட்யம் வாக்படுத்வா ஹனூமத் ஸ்மரணாத் பவேத்!

 https://www.youtube.com/watch?v=4PZzUru94JY&ab_channel=H-Spiritual

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...