Followers

Saturday, June 5, 2021

 


===================================

எப்பேர்ப்பட்ட கொழுப்பை காணாமலாக்கும் கொள்ளு இட்லி!

CholestrolWeight LossHealthy Food Recipes
 1 மணி நேரம் முன்
Sulokshi

Sulokshi

0SHARES
  •  
  •  
  •  
Follow us on Google News

  கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு" என நம் முன்னோர்கள் முதுமொழியை பலர் சொல்ல கேட்டிருப்போம்.

ஆம் அவர்கள்கூற்றுப்படி வெறும் கொழுப்பை கரைப்பது மட்டுமின்றி, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளதான் இந்த கொள்ளு.

எப்பேர்ப்பட்ட கொழுப்பை காணாமலாக்கும் கொள்ளு இட்லி! | Horse Gram Benefits Lose Weight

எடையைக் குறைக்க

உடல் எடை அதிகம் உள்ளவர்கள், எடையைக் குறைக்க விரும்பினால் அதற்கு முதலில் சாப்பிட வேண்டியது கொள்ளு தான். ஏனெனில், கொழுப்பை வெகு விரைவில் கரைக்கும் தன்மை கொள்ளுவில் உள்ளது.

எப்பேர்ப்பட்ட கொழுப்பை காணாமலாக்கும் கொள்ளு இட்லி! | Horse Gram Benefits Lose Weight

கொள்ளு இட்லி பல்வேறு வைட்டமின்கள், புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து என பல சத்துக்களை கொண்டுள்ள கொள்ளுவைப் பயன்படுத்தி ரசம், துவையல் மற்றும் பொடி என பல உணவுகளைத் தயாரித்து நாம் சாப்பிடலாம்.

எப்பேர்ப்பட்ட கொழுப்பை காணாமலாக்கும் கொள்ளு இட்லி! | Horse Gram Benefits Lose Weight

அடிக்கடி தேவையான அளவில் கொள்ளுவை எடுத்துக் கொண்டால், பல அளப்பரிய பலன்களை நம்மால் பெற முடியும்.

கொள்ளு இட்லி எப்படி செய்வது?

தேவையான பொருட்கள் கொள்ளு - 1 கப் அவல் - 1 கப் உளுந்து - 1 கப் இட்லி அரிசி - 1 கப் வெந்தயம் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு செய்முறை முதலில் கொள்ளு மற்றும் அரிசியை நன்றாக அலசி, கிட்டத்தட்ட 4 முதல் 5 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.

எப்பேர்ப்பட்ட கொழுப்பை காணாமலாக்கும் கொள்ளு இட்லி! | Horse Gram Benefits Lose Weight

உளுந்துவுடன் சிறிதளவு வெந்தயத்தைச் சேர்த்து, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். அவலை நன்றாக அலசிய பிறகு, 30 நிமிடங்கள் ஊற வைத்தால் போதும். இப்போது, உளுந்தை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

எப்பேர்ப்பட்ட கொழுப்பை காணாமலாக்கும் கொள்ளு இட்லி! | Horse Gram Benefits Lose Weight

15 முதல் 20 நிமிடங்கள் வரையில், சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு அரைத்தால் நன்றாக பொங்கி வரும். அரைத்த உளுந்தை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொண்ட பின்னர் கொள்ளு, அரிசி மற்றும் அவலை அரைத்துக் கொள்ள வேண்டும்.

மூன்றையும் அரைத்து முடித்ததும், ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் உளுந்து மாவுடன் சேர்த்து கலக்கி கொண்டு, சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எப்பேர்ப்பட்ட கொழுப்பை காணாமலாக்கும் கொள்ளு இட்லி! | Horse Gram Benefits Lose Weight

ஏறக்குறைய 8 மணிநேரம் வரை இதை அப்படியே வைத்தால் புளித்து விடும். 8 மணி நேரம் கழித்து, நாம் தயார் செய்த கொள்ளு மாவை, இட்லி பாத்திரத்தில் ஊற்றி அவித்து எடுத்தால், நல்ல வாசனையுடன் ஆரோக்கியமான கொள்ளு இட்லி ரெடி.   

===========================================

அமெரிக்கா வரை கொடிகட்டி பறக்கும் ஊர் பிட்டு.....................


 கடந்த பல மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் அதிகாரி ஒருவர் பிட்டு தொடர்பில் கதைத்து சர்ச்சையில் சிக்கினார்.

சர்ச்சையில் சிக்கியது என்னவோ அதிகாரிதான் ஆனால் அன்றில் இருந்து பிட்டுக்கு உலகளாவிய ரீதியில் மவுசு அதிகரித்தது.

பிட்டு பாடல், பிட்டு கதை, பிட்டு செய்முறை என இணையத்தில் ஒய்யாரமாக பிட்டு வலம் வந்தது.

இந்த நிலையில், தற்போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தக தளத்தில் தான் சுவைத்து உண்ட பிட்டு தொடர்பில் பதிவொன்றை இட்டுள்ளார்.

இதில் பிட்டு உணவை எனக்கு பரிந்துரைத்தமைக்கு நன்றி என்றும், இலங்கையில் சிறந்த உணவொன்றை நான் சுவைத்திருக்கின்றேன் எனவும், இதில் சிறிது தேங்காய்ப் பால் சேர்த்து உண்பது அதி சுவையாக இருந்தது என்றும் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவிற்கு பல இலங்கையர்கள் பிட்டின் சுவை தொடர்பில் கருத்து தெரிவித்து வருவதுடன், பிட்டினை பல்வேறு வழிகளில் எவ்வாறு சுவைக்கலாம், தேங்காய்ப்பாலுடன், சர்க்கரையுடன் என பல்வேறு கறி வகைகளுடன் சுவைத்துப் பாருங்கள் என தூதுவருக்கு பரிந்துரைத்து வருகின்றனர்.   


Gallery Gallery Gallery7
courtesy;https://tamilwin.com/article/our-best-food-1622892266

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...