திருமணத் தடையையும் நீக்கும் அரிய மந்திரத் திருப்புகழ்...........விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
Posted by
viRalmAran aindhu malarvALi sindha
migavAnil indhu ...... veyilkAyaதனதான தந்த தனதான தந்த
தனதான தந்த
...... தனதான
.........
பாடல் .........
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து
...... வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர்
தந்தம் ...... வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப
...... மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து
...... குறுகாயோ
மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
வழிபாடு தந்த
...... மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவேலெ றிந்த
...... அதிதீரா
அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
மடியாரி
டைஞ்சல் ...... களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
அலைவாயு கந்த
...... பெருமாளே.
.........
சொல் விளக்கம் .........
விறல்மாரன் ... வீரனாம் மன்மதன்
ஐந்து மலர்வாளி சிந்த ... ஐந்து மலர்ப் பாணங்களையும்
செலுத்த,*
வானி லிந்து மிக வெயில் காய ... ஆகாயத்தில் நிலவு அதிகமாக
வெயில் போலக் காய,
மிதவாடை வந்து ... நிதானமான தென்றல் காற்று வந்து
தழல்போல வொன்ற ... தீப்போல வீசிப் பொருந்த,
வினைமாதர் தந்தம் வசைகூற ... வீண்வம்பு பேசும் பெண்கள்
தத்தம்
வசை மொழிகளைக் கூற,
குறவாணர் குன்றி லுறை ... குறவர்கள் வாழும் குன்றில்
இருக்கும்
பேதை கொண்ட ... (வள்ளி போன்ற) பேதைப்பெண்ணாகிய
நான் அடைந்த
கொடிதான துன்ப மயல்தீர ... கொடிய துன்ப விரக மயக்கம் தீர,
குளிர்மாலை யின்க ண் ... குளிர்ந்த மாலைப் பொழுதினிலே
அணிமாலை தந்து ... நீ அணிந்த கடப்ப மாலையைத் தந்து
குறைதீர வந்து குறுகாயோ ... என் குறையைத் தீர்க்க வந்து
அணுகமாட்டாயா?
மறிமா னுகந்த இறையோன் ... இள மானை உகந்து ஏந்தும்
இறைவன் சிவபிரான்
மகிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா ... (உன் உபதேசம் பெற்று)
மகிழ்ந்து உனக்கு வழிபாடு செய்யப் பெற்ற அறிஞனே,
மலைமாவு சிந்த ... கிரெளஞ்சமலையும், மாமரமும்
(சூரனும்)
வீழ்ந்து படவும்,
அலைவேலை யஞ்ச ... அலைகடல் கொந்தளித்து அஞ்சவும்,
வடிவே லெறிந்த அதிதீரா ... கூரிய வேலை வீசிய அதி தீரனே,
அறிவால் அறிந்து ... அறிவு கொண்டு உன்னை அறிந்து,
உன்னிருதாள் இறைஞ்சும் ... உனது இரு தாள்களையும் வணங்கும்
அடியார் இடைஞ்சல் களைவோனே ... அடியார்களின் துயரைக் களைபவனே,
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து ... அழகிய செம்பொன்
மயில்மீது அமர்ந்து
அலைவா யுகந்த பெருமாளே. ... திருச்செந்தூரில் மகிழ்ந்தமரும்
பெருமாளே.
==============================
=============================
neelang koL mEgaththin mayilmeedhE: Mounting the peacock of the hue of blue cloud,
=====================
தானந்த தானத்தம் ...... தனதான
.........
பாடல் .........
நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே
நீவந்த
வாழ்வைக்கண் ...... டதனாலே
மால்கொண்ட
பேதைக்குன் ...... மணநாறும்
மார்தங்கு
தாரைத்தந் ...... தருள்வாயே
வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே
வீரங்கொள்
சூரர்க்குங் ...... குலகாலா
நாலந்த வேதத்தின்
...... பொருளோனே
நானென்று
மார்தட்டும் ...... பெருமாளே.
.........
சொல் விளக்கம் .........
நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே ... நீல நிறத்தைக் கொண்ட
மேகத்தைப் போன்ற மயில் மேலே
நீவந்த வாழ்வைக்கண்டதனாலே ... நீ எழுந்தருளிவந்த
புறப்பாட்டுத் தரிசனத்தைக் கண்ட காரணத்தால்
மால்கொண்ட பேதைக்கு உன் மணநாறும் ... உன்மீது ஆசை
கொண்ட இந்தப் பெண்ணுக்கு, உனது நறுமணம்
மிக்க
மார்தங்கு தாரைத் தந்தருள்வாயே ... மார்பில் தங்கி
விளங்கும்
மாலையைத் தந்து அருள்புரிவாயாக.
வேல்கொண்டு வேலைப்பண்டெறிவோனே ... உன்
வேலாயுதத்தைக் கொண்டு கடலினை முன்பு வற்றும்படி
செலுத்தியவனே,
வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா ... வீரம் மிக்க சூரர்களின்
குலத்துக்கே யமனாக விளங்கியவனே,
நாலந்த வேதத்தின் பொருளோனே ... ரிக், யஜூர், சாம,
அதர்வண என்ற நான்கு அழகிய வேதங்களின் பொருளாக
விளங்கியவனே,
நானென்று மார்தட்டும் பெருமாளே. ... எல்லா உயிர்களுக்கு
உள்ளும் இருப்பவன் நான்தான் என்று பெருமை பாராட்டி மார்பினைத் தட்டிக் கொள்ளும் பெருமாளே.
==================================
http://www.kaumaram.com/thiru/nnt1296_u.html
===============================
முருகன் அருள் முன்நிற்க.......
பால் காவடி கொண்டு
பழனி மலை வரும் நேரமே...
அரோகரா அரோகரா
ஆரவாரமே......
ஆவலுடன்
ஆவினங்குடி
வரும் நேரமே...
அங்கு அரோகரா அரோகரா
ஆரவாரமே......
கந்தசாமி
கதிர்காம்ம்
வரும் நேரமே....
அங்கு அரோகரா அரோகரா
ஆரவாரமே......
தணிகாசலம்
திருத்தணிகை
வரும் நேரமே.....
அங்கு அரோகரா அரோகரா
ஆரவாரமே......
ஸ்வாமிநாதன்
சுவாமிமலை
வரும் நேரமே....
அங்கு அரோகரா அரோகரா
ஆரவாரமே......
செந்தில்நாதன்
திருச்செந்தூர்
வரும் நேரமே....
அங்கு அரோகரா அரோகரா
ஆரவாரமே......
======================
courtesy; Santhanam T Ramanathan
=====================================
நினைத்தது அத்தனையும் கைகூடும் வேல்மாறல் மகிமை |
நினைத்தது அத்தனையும் கைகூடும் வேல்மாறல் மகிமை | | வாசுகி மனோகரன் | VEL MAARAL MAGIMAI | MURUGAN |
==============================
No comments:
Post a Comment