Followers

Monday, May 17, 2021

 

வாழ்க்கைத் துணையால் அதிர்ஷ்டம் பெறும் யோகம்! 












ணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒவ்வொரு மனிதருக்கும் திருமணம் முக்கியமான நிகழ்வு. வாழ்க்கையில் திருமணத்தை இன்னொரு பிறவி என்றுகூட சொல்லலாம். கால்யாணத்துக்கு முன்புவரை நன்றாக இருந்த சிலர் திருமணம் முடிந்தபின் படாதபாடு படுவார்கள். பலருக்கு திருமணம் நடந்தபின் குணத்திலும், பொருளாதாரத்திலும் திடீர் முன்னேற்றம், பெயர், புகழ், வாழ்க்கைத் தரம் எண்ணிப் பார்க்கமுடியாத யோகத்தைத் தந்துவிடும். ஆதலால் சரியான வரனைத் தேர்ந்தெடுத்து அமைத்துக்கொள்ள வேண்டும்.


நாம் விரும்புகிறவர்களைவிட நம்மை விரும்புகிறவர்களைத் திருமணம் செய்யவேண்டுமென சொல்வதற்குக் காரணம், இல்லறத்தில் ஒருவராவது அன்போடு இருக்கவேண்டும். அன்பில்லாத இல்லறம் இந்தப் பிறவியைக் கெடுத்துவிடும். தாலி-கட்டும் மணநாள்வரை அதற்கான அவகாசமுண்டு. பிடிக்காத ஏதாவது சின்ன சந்தேகம் இருந்தால்கூட உடனடியாகத் திருமணத்தைத் தவிர்த்தல் நலம். இதில் நம் வாழ்க்கை மட்டுமல்ல; இன்னொருவர் வாழ்க்கையும் சேர்ந்துள்ளது. "இன்னார்க்கு இன்னார் என்னும் விதியின் அடிப்படையில்தான் வரன் அமையுமென்றால் திருமணத்திற் கான எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. ஜாதகமோ, பொருத்தமோ பார்க்கவேண்டிய தில்லை. தானாகத் தேடிவருமென இருக்கலாமே' என்னும் அசட்டுத் தனமான கேள்வியைக் கேட்பதால் யாருக்கென்ன லாபம். அவரவர் வாழ்க்கையை, வாழ்க்கைத் துணையை அவரவர்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

 



சுயமாகத் தேர்ந்தெடுக்க முடிந்தவர்களைவிட இயலாதவர்கள்தான் ஜாதகப் பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்து தற்காத்துக் கொள்கிறார்கள். ஏழாமிடத்தைக் கொண்டு தான் ஒருவரின் வாழ்க்கைத் துணை எப்படி அமையுமென்பதைக் கணிக்கமுடியும்.

களத்திர ஸ்தானம்

திருமணமென்றாலே ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான ஏழாமிடத்தைப் பார்க்கவேண்டும். ஏழாமிடத்தில் இருக்கும் கிரகம், ஏழாமிடத்தைப் பார்த்த கிரகம், ஏழாமதிபதி நின்ற- அதனுடன் இணைந்த- பார்த்த கிரக அடிப்படையில் பார்க்க வேண்டும். பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு- கேது மட்டுமல்லாமல், சுப கிரகங்களான சந்திரன், சுக்கிரன், புதன், குருவும்கூட சிலருக்குத் திருமணத்தைத் தடுக்கும். முதலி-ல் ஏழாமிடத்தில் நின்ற கிரகங்களைப் பற்றி அறியவேண்டும்.

ஏழாமிடத்தில் நின்ற கிரகப் பலன்கள்

சூரியன்

ஏழாமிடத்தில் சூரியன் நின்றால் பிதுர் தோஷமாகிவிடும். தந்தை இல்லாமல் திருமணம்- தந்தை அனுமதியில்லாமல் திருமணம்- காதல் அல்லது கலப்புத் திருமணம்- தந்தையால் திருமணத் தடை ஏற்படும். அதாவது வரும் வரனையெல்லாம் தந்தை ஏதாவது காரணம் சொல்லி-த் தடுத்து காலதாமதத் திருமணமாக்கிவிடுவார். வருகிற கணவன் அல்லது மனைவி முன்கோபம், எரிச்சல், தன்னி டம் துணைவர் அடங்கிப் போகவேண்டுமென்கிற எண்ணம் கொண்டவராகவே கிடைப்பார். சூரியன் ஆட்சி பெற்றால் களத்திர தோஷம். சூரியன் உச்சம் பெற்றால் களத்திரத்தால் தொல்லை உண்டாகும். பாவகிரகங்கள் பார்வை பெற்றால் தாரதோஷம். அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் ஏற்பட்டுவிடும். சூரியன், சந்திரன் சேர்க்கையா னது திருமண வாழ்க்கையை அமாவாசையாக்கிவிடும். சூரியன், செவ்வாய் சேர்க்கை, பாவகிரகச் சேர்க்கை, பார்வை விதவை யோகத்தையும், சூரியன், புதன் தாரதோஷத்தையும், புதாதித்ய யோகத்தால் இரண்டாவது தாரத்தையோ, இரண்டாம் தர வாழ்க்கையையோ தரும்.

சூரியன், வியாழன் திருமண வாழ்க்கையைக் கெடுக்கும். சூரியன், சுக்கிரன் தாரதோஷத் தைத் தந்துவிடும். சூரியன், சனி தந்தையை பாதிக்கும். அல்லது தந்தையால் பாதிப்பு தரும். சூரியன், ராகு- கேது இணைவு கடுமையான களத்திர தோஷத் தைத் தந்துவிடும்.

சந்திரன்

ஏழாமிடத்தில் சந்திரன் இருப்பவர்களின் துணைவர் நிலவு போன்று வட்டமுகம் கொண்டவராகவும், வளர்ந்து, தேய்ந்து மனக்குழப்பம் நிறைந்தவராகவும், மன சஞ்சலத்தைத் தருபவராகவும் இருப்பார். சந்திரன், சூரியன் இணைவு தாமதத் திருமணத்தைத் தந்தால் தம்பதியர் பிரிவைத் தடுக்கும். சந்திரன், செவ்வாய் இணைவு சந்திர மங்கள யோகம் தந்தாலும், செவ்வாய் தோஷத்தால் இல்லற வாழ்க்கையைக் கெடுக்கும். சந்திரன், புதன் இணைந்தால் வாழ்க்கைத் துணை எதிர்மறை எண்ணம் கொண்டவராக இருப்பார். சந்திரன், சுக்கிரன் இணைவிருந்தால் கலையுணர்வுமிக்க சாந்தமான உறவிருக்கும். சந்திரன், குரு இணைந்தால், குருச்சந்திர யோகத்தால் பிரபலமானவரைத் திருமணம் செய்வார். திருமண வாழ்க்கைக்குப் பிறகு துணைவர் பிரபல யோகத்தை அடைவார். சந்திரனுக்கு சனி பார்வை, சேர்க்கை இருந்தால் வாழ்க்கைத் துணை நிலையற்ற பேச்சும், பைத்தியம்போல் பேசுபவராகவும், ஏதாவது அங்கஹீனம் கொண்டவராகவும் இருக்க வாய்ப்புண்டு. சந்திரனுடன் சேர்ந்த ராகு கிரகண தோஷத்தையும் நாக தோஷத்தையும் தந்து திருமண வாழ்க்கையைக் கெடுக்கும். சந்திரன், கேது இணைவு திருமண வாழ்க்கையை வெறுக்கச் செய்யும். பாவகிரகப் பார்வை, சேர்க்கையானது கடுமையான களத்திர தோஷத்தையும், சுபகிரகப் பார்வை, சேர்க்கையானது சந்தோஷமான இல்வாழ்க்கையையும் தரும்.

செவ்வாய்

ஏழில் உள்ள செவ்வாய், தோஷத்தையே தரும். திருமண வாழ்க்கையைக் கெடுக்கும்.

அவசர புத்தி, பிடிவாதத்தால் துணைவர் வெறுக்குமளவு நடந்துகொள்வார். செவ்வாயு டன் சூரியன் இணையும் பலத்தைப் பொருத்து தோஷத்தின் வீரியமிருக்கும். சிலருக்கு விதவை அமைப்பையும், களத்திரப் பிரிவையும், திருமணத் தடையையும், திருமணத்தின்மீது வெறுப்பையும் தந்துவிடும். செவ்வாய், சந்திரன் சேர்க்கை நன்மைகளைவிட தீமைகளையே தருகிறது. சந்தேக புத்தி, சபல புத்தி, நம்பிக்கையில்லா வாழ்க்கை தரும். யாரைப் பற்றியும் கவலைப்படா மல் இஷ்டப்படி வாழ்வார் கள். செவ்வாய், புதன் சேர்க்கையால் கண்ணிய மற்ற வாழ்க்கை, உள்ளூர அச்சம், முறையற்ற அன்பு, நேசம் தோன்றும்.

செவ்வாய், வியாழன் இணைவு தாமதத் திருமணமானாலும் நல்ல வாழ்க்கை கிடைக் கும். குரு மங்கள யோகத் தால் அரசாங்க நன்மை, அரசபலம் தரும். வாழ்க்கை பிறருக்குத் தெரியுமளவு பதவி, புகழ், பணம் உண்டாக்கும். செவ்வாய், சுக்கிரன் சேர்க்கையானது காதல் திருமணத்தை ஏற்படுத்தும். பலதார அமைப்பு, திருப்தியில்லா இல்லறம், திரும்பத் திரும்ப காதலை உண்டாக்கும். குணக்கேட்டைத் தரும். செவ்வாய், சனி இணைவு தார தோஷம், முறையற்ற வாழ்க்கை, பொருந்தாத வாழ்க்கையைக் கொடுக்கும். செவ்வாய், ராகுவுடன் சேர்ந்தால் துணிந்து, தெரிந்து துணைவருக்கு துரோகம் செய்வார். ஒழுக்கம் கெட்டு பலதார தோஷம் பெறுவார். செவ்வாய், கேது இணைவிருந்தால் இல்லற வாழ்க்கையில் பட்டு நொந்து பற்றற்ற நிலைக்குச் சென்றுவிடுவார். பாவகிரக வலுப்பெற்றால் இல்லற வாழ்க்கை பல இன்னல்கள் தரும்.

புதன்

ஏழில் புதன் உள்ளவர் சகலகலா வல்லவராக இருந்தாலும் களத்திரத்தோடு ஒத்துப்போகாதவர். எதற்கெடுத்தாலும் குற்றம் குறை கண்டுகொண்டே இருக்கும் துணைவரே கிடைப்பார். எதிர்மறையான எண்ணங்களும் முறையற்ற உறவுகள்மீது நாட்டமும் கொண்ட வர். சுபகிரகப் பார்வை நன்மை தரும். ஏழில் புதன், சூரியன் இணைந்தால், புதாதித்ய யோகத்தால் பெயர், புகழ், அந்தஸ்து வரும் வரனால் ஏற்படும். அதேநேரம் பிதுர் தோஷத்தால் திருமணம் தாமதமாகும்.

இல்லறசுகம் கெடும். புதன், சந்திரன் சேர்க்கை இரட்டை வாழ்க்கை தரும். நிலையற்ற வாழ்க்கை, பிடிப்பில்லாத களத்திரம் கிடைக்கும். புதன், செவ்வாய் இணைவு செவ்வாய் தோஷத்தையும், வெறுப்பு விரக்தியையும் தந்துவிடும். புதன், குரு சேர்ந்தால் தன்னைவிட அறிவாளியான வரனே அமையும்.

களத்திரத்தின் ஆலோசனை, பேச்சைக் கேட்டு வாழ்ந்தால் வாழ்வே இன்பமயம். புதன், சுக்கிரன் சேர்ந்தால் கலாரசிகர். தன் சந்தோஷத்தை மட்டுமே பிரதானமாக எண்ணி வாழக்கூடியவர். புதன், சனி சேர்க்கை களத்திர தோஷத்தையும் தாமதத் திருமணத்தை உண்டாக் கும். வயது குறைந்த அல்லது அதிகமான வரன் அமையும். புதன், ராகு சேர்க்கை திருமண வாழ்க்கையில் அடிக்கடி மாற்றத்தையும்; புதன், கேது சேர்க்கை நாகதோஷத்தையும் தந்து இல்லறத்தை இல்லா அறமாக்கிவிடும். பாவ கிரகப் பார்வையைவிட சுபகிரகப் பார்வை தான் நல்ல களத்திரத்தைத் தரும் குரு ஏழில் உள்ள குரு நல்ல வரனைத் தரும்.

தவறுசெய்ய நினைத்தாலும், தப்பான உறவிருந்தாலும், தானாக விலகி நல்ல வரன் தேடிவரும். ஜாதகருக்கு எது நன்மையோ அதையே குரு பகவான் செய்வார். வழிநடத்தக் கூடிய அறிவாற்றல் கொண்ட வாழ்க்கைத் துணை அமையும். குரு, சூரியன் இணைந்தால் அரசாங்க ஆதரவு, அரசாங்கப் பணி, அரசால் யோகம் பெறும் களத்திரத்தை மணப்பார். ஜாதகரை அடக்கியாளும், முன்கோபம் கொண்ட களத்திரம் அமையும்.

'
நான் சொல்றத செய்' என உத்தரவு போடும் வரனே அமையும். குரு, சந்திரன் இணைந்து குருச்சந்திர யோகத்தையும், குரு, செவ்வாய் இணைந்து- பார்த்து குருமங்கள யோகத்தையும் தந்து வாழ்க்கையில் இரண்டாவது பாதி- அதாவது ஆயுளில் பாதிக்குமேல் சிறப்பான யோகம், அதிர்ஷ்டம் பெறுவர். பிரபல யோகத்தைத் தரும். துணைவரால் மதிப்பு, மரியாதை கூடும். இல்லற சுகம் குறைவென்பதால் தோஷமே மேலோங்கும். குரு, புதன் சேர்க்கையால் ஞானி போன்றவரைத் திருமணம் செய்து வாழநேரும். அதிகம் யோசித்து செயல்படக்கூடிய வரனே அமையும். குரு, சுக்கிரன் தோஷத்தைத் தந்து சுகத்தைக் கெடுக்கும். முரண்பட்ட கருத்து களால் எல்லாநேரமும் தொல்லையே. தாமதத் திருமணம் மட்டுமே களத்திர தோஷத்தைப் போக்கும் சிறந்த பரிகாரம். குரு, சனி இணை வால், முரண்பட்ட சிந்தனையால் பிரிவுகளை சந்திக்க நேரும். பொறுமையைக் கடைப்பிடித் தால் மிகப்பெரிய நன்மையைப் பெறலாம். குரு, ராகு இணைவு சண்டாள யோகத்தால் சோதனை தந்து பின்பே சிறப்பு தரும். குரு, கேது சேர்க்கை கோடீஸ்வர யோகத்தைத் தந்தாலும் களத்திர தோஷத்தை நிச்சயம் தரும். நல்ல தசாபுக்தியான காலங்களில் மட்டுமே இல்லறம் நல்லறமாகும். தீய தசையோ, ஏழரைச் சனியோ நடந்தால் துணைவரால் வெறுக் கப்படுவார். துணைவரால் தொல்லை அனுபவிப் பார்.

சுக்கிரன்

அழகான களத்திரம் அமையும். காதல் திருமணமோ, தாமதத் திருமணமோ- இல்ல றத்தை அணு அணுவாக ரசிக்கவைக்கும். கடன் வாங்கியாவது சொகுசாக வாழும் எண்ண கொண்டவர். நிதானம் தேவை. யாரையாவது நம்பி ஏமாறுவார். ஏழாமிடத்தில் சுக்கிரன் வலுப்பது காரக தோஷத்தையே தரும். எளிதில் ஏமாறுவர். சுக்கிரன் சுத்தமான- அழகான- சொகுசான வாழ்க்கையையே விரும்பும். பாவ கிரகப் பார்வை ஒழுக்கத்தையே கெடுக்கும். நிறைய சந்தோஷத்தை நிறைய பேரிடம் கொடுக் கும். சிற்றின்ப நாட்டத்தால் தாமதத் திருமணம் தந்து தாம்பத்திய சுகத்தைக் கெடுக்கும். இல்லறத்தைக் கெடுக்கும். சுக்கிரன், சூரியன் சேர்க்கை இருவித தோஷத்தால் இம்சைகள் பல ஏற்படும். திருமண வயதில் சோதனை பல ஏற்பட்டு தடை, தாமதம் உண்டு. சுக்கிரன், சந்திரன் சேர்க்கையால் அழகான நிலவுபோன்ற வரன் அமைந்தாலும் சந்தேகம், சபலபுத்தி கொண்ட வரனே அமையும். சுயநல மிக்க களத்திரத்தால் சோதனையுண்டு. பேசி மயக்கும் குணம்கொண்ட வரன் அமையும். சுக்கிரன், செவ்வாய் இணைவு- காதல் எண்ணங்கள், அதிக காம உணர்வு கொண்ட வராக அமைவர். துணைவரால் இவரது மனதைத் திருப்திப்படுத்தவே முடியாது. சலி-த் துக் கொள்பவராகவும், சபலமிக்கவராகவும் இருப்பார். தன்னை உயர்வாக நினைத்து துணைவரை மட்டம் தட்டுவார். அடிக்கடி உலக சுகங்களை வெறுப்பவர் போலவும், தனக்கு எதிலும் பிடிப்பில்லாதது போலவும், முற்றும் துறந்த ஞானிபோலவும் பேசுவார். சுக்கிரன், குரு இணைவு- எதிர்பார்ப்பிற்கு முரண் பட்டே நடக்கும். சுக்கிரன், சனி இணைவு- பொருந்தாத துணையை விரும்பி மணப்பர். சுக்கிரன், புதன்- கலாரசிகர். தாமதமாக, தானே நல்ல வரன் தேடிவரும். சுக்கிரன், ராகு சேர்க்கை- திருமணத்திற்கு முன்னும் பின்னும் நிறைய காதலைக் கொடுக்கும். சுக்கிரன், கேது இணைவு- விரும்பியபடி வரன் அமையாத தோல்விகளால் மனம்நொந்து சிலரை சாமியாராக்கி விடும்.

சனி

ஏழில் சனி இருந்தால் என்றுமே தொல்லை தான். தெரிந்த, அறிமுகமான நபரைத் திருமணம் செய்வார்கள். ஏழாமிடத்தில் சனி இருப்பதாலோ, ஏழாமிடத்தை சனி பார்ப்பதாலோ இது நடக்கும். திருமண நேரத்தில் அவசரப்பட்டு தெரிந்த- விரும்பிய நபரை மணப்பர். வயது வித்தியாசம், நிற வித்தியாசம், உயரம், கல்வி, பொருளாதாரம் என எந்தவிதத்திலும் பொருந்தாத வரனை எதிர்பாராத நேரத்தில், எதிர்பார்ப்பில்லாமல் திருமணம் நடந்துவிடும். ஆனால் திருமணத் திற்குப்பிறகு பலமுறை நொந்துகொள்வர். சனி, சூரியன் சேர்க்கை இருந்தால் தந்தை இழப்போ, தந்தையால் திருமணத் தடையோ ஏற்படும். திருமண நேரத்தில் தந்தையுடன் சுமுக உறவிருக்காது. விரக்தியுடனே வாழ்வர். சனி, சந்திரன் சேர்க்கையால் குழப்பவாதியை மணந்து குழப்பத்துடனே வாழ்க்கை நடக்கும். அரைவேக்காடானவரை மணந்து அப்படியே காலம் ஓடும். சனி, செவ்வாய் சேர்ந்தால் முறையற்ற வரனையே மணப்பர். சிலர் வரைமுறையின்றி சகோதர உறவுள்ளவரையே திருமணம் செய்வர்.

ஒருவருடன் ஒழுக்கமாக வாழ இயலாதவர். சுபகிரகப் பார்வையானது சிலரைக் காப்பாற்றி விடும். சனி, புதன் இணைவிருந்தால் முழுமை யான இல்லறம் கிடைக்காது. வெளிநாடு, வெளியிடங்களுக்குச் செல்வதால் அடிக்கடி குடும்பப் பிரிவு ஏற்படும். குடும்ப வாழ்க்கைக் குத் தகுதியற்றவர். சனி, குரு இணைவானது ஓரளவு நல்ல வரனை தாமதத் திருமணத்தால் தரும். பொறுமையாக இருந்தால் மட்டுமே சுகமான வாழ்க்கையுண்டு. சனி, சுக்கிரன் சேர்க்கையிருந்தால் எப்போதும் எதை யாவது எதிர்பார்த்துக்கொண்டே இருப்பர். ஒழுக்கத்தைக் கெடுத்து ஆசைக்காக வாழ்வர்.

மறைமுகத் தொடர்பு, மகிழ்ச்சி கிடைக்கும். சனி, ராகு இணைவு கொடுத்துக் கெடுக்கும்.

விரும்பிய அனைத்தும் கொடுத்துப் பறித்துக் கொள்வார். தாமதத் திருமணம் செய்யாதவர்கள் வாழ்க்கை பரிதாபத்துக்குரியதாகிவிடும். சனி, கேது சேர்க்கையுள்ளவர் திருமணத்தால் சொல்லமுடியா கஷ்டத்தை அனுபவிப்பார். திருமணம் முடிக்காமலேயே வாழ்வதுதான் சரியான பரிகாரம்.

ராகு

எவ்வளவு நல்லவராகவும், அழகு மிக்க வராகவும் வரன் கிடைத்துத் திருமணம் செய்தாலும் மனதிற்குத் திருப்தியிருக்காது. கிளிபோல மனைவி இருந்தாலும், காக்கை போல வைப்பாட்டி வைக்க ஆசைப்படுவர். பிறர் வாழ்வதைப்போல, பல நபருடன் வாழ வேண்டுமென்னும் சபலம் இருந்துகொண்டே இருக்கும். சுபகிரகப் பார்வை இருந்தால் நல்லவ ராகவும், பாவகிரகப் பார்வை பட்டால் கொடூர மானவராகவும் இருப்பார். கனவுகளிலேயே பலர் குடும்பம் நடத்துவர். அல்லது அடிக்கடி குடும்பப் பிரிவு ஏற்படும். தொழில் விஷயமா கவோ, நோயாலோ, கடனாலோ துணைவரைப் பிரிந்து வாழநேரும். இல்லற சுகமின்றி வருந்து வர். இருப்பதை விட்டுப் பறக்க ஆசைப்படுவர். குறிப்பிட்ட காலத்திற்குப்பிறகு, பிறருக்கு ஆலோசனைகளை அள்ளி வீசுவர். தெய்வ வழி பாடுகள் பற்றிய சிந்தனை, அறிவு, ஆலோசனைகளை வழங்குவர். ராகு எந்த கிரகத்துடன் இணைந்தாலும் எதாவது பாதிப்பை ஏற்படுத்தும். சூரியன் தந்தையையும், சந்திரன் தாயையும், செவ்வாய் சகோதரனையும், சுக்கிரன் மனைவியையும், புதன் மாமன்வழி உறவுகளையும், சனி மக்களையும், குரு புத்திர வம்சத்தையும் குறிப்பதால் அது சம்பந்த வகையில் கண்டிப்பாக எதாவதொரு பாதிப் பையே தரும். சிற்றின்பத்தால், சிலரைத் தவிர பலருக்கு அவமானம், அசிங்கம் உண்டா கும். கடுமையான களத்திர தோஷத்தைத் தருமென்பதால் குலதெய்வத்தை வழிபடுவது தான் தீமையயைக் குறைக்கும்.

கேது

ஏழில் உள்ள கேது பலவித மனப் போராட்டத்தை மட்டுமின்றி உடல்ரீதியான பிரச்சினைகளையும் தருவார். எது நடந்தா லும்- அதாவது சின்னச்சின்ன நல்ல விஷயங் கள்கூட நடக்காமல் தள்ளித்தள்ளிப் போய் வெறுக்கச்செய்யும். பலருக்கு கேது தசை கொடூரமாக பலவிதங்களில் பாடாய்ப் படுத்தும். உடல் பாதித்து, ஞான மார்க்கத்தைக் கடைப்பிடிக்கும் நல்லவராக மாறிவிடுவர். வருகிற வரன் நோயாளியாகவோ, பொருந்தாத வராகவோ, தொல்லை தருபவராகவோதான் அமைவார். ஏழாமிட கேது இப்படிதான் என இல்லாமல் இஷ்டத்திற்குப் பாடுபடுத்தும். கேது, சூரியனுடன் இணைந்தால் தந்தை, தந்தைவழி சொந்தங்களால் தொல்லை, உஷ்ணத்தால் பாதிப்பை அனுபவிப்பர். கேது, சந்திரன் இணைவானது மனப் பிரச்சினை களைத் தரும். மனதிற்குப் பிடிக்காத விஷயங் களைச் செய்யும் துணைவரே அமைவார்.

கேது, செவ்வாய் இணைந்தால் எதற்கெடுத்தா லும் பிடிவாதம், எதிர்வாதம் செய்யும் வரன் அமையும். கேது, புதன் இணைந்தால் முழுமை யான பாலினம் இல்லாத- அறிவாளியான துணைவரால் அவதிப்படுவர். கேது, குரு சேர்க்கை களத்திரதோஷத்தைக் கொடுத்தாலும் பணக்காரராக மாற்றும். கேது, சனி இணை விருந்தால் களத்திரத்தைக் கெடுக்கும். துணைவ ரால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவார். கேது, சுக்கிரன் இணைவு பெற்றவர் வாழ்க் கையே வெறுத்ததுபோல் பேசுவர். மனதிற்குள் ளும், மறைமுகமாக ஆசை, தேவையை நிறைவேற்றுவர். திருமண வாழ்க்கை திருப்தியாக இருக்காது. கேதுவுக்கு ஏழில் ராகு எப்போதும் இருப்பதால் களத்திர கிரகத்துடன் இணைவது, பார்ப்பது தொல்லையான இல்லறத்தையே தரும்.

- க. காந்தி முருகேஷ்வரர்

courtesy; balajothidam / nakkiran.

==================================

 

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...