Followers

Wednesday, December 9, 2020

அம்பலத்தரசே! அருமருந்தே! - திருவருட்பா (வள்ளலார்)


சிவசிவ கஜமுக கணநா தா
சிவகண வந்தித குணநீ தா

சிவசிவ சிவசிவ தத்துவ போதா
சிவகுரு பரசிவ சண்முக நாதா

அம்பலத் தரசே அருமருந் தே
ஆனந்தத் தேனே அருள்விருந் தே

பொதுநடத் தரசே புண்ணிய னே
புலவரெ லாம்புகழ் கண்ணிய னே

மலைதரு மகளே மடமயி லே
மதிமுக அமுதே இளங்குயி லே

ஆனந்தக் கொடியே இளம்பிடி யே
அற்புதத் தேனே மலைமா னே

சிவசிவ சிவசிவ சின்மய தேஜா
சிவசுந் தரகுஞ் சிதநட ராஜா

படன விவேக பரம்பர வேதா
நடன சபேச சிதம்பர நாதா

அரிபிர மாதியர் தேடிய நாதா
அரகர சிவசிவ ஆடிய பாதா

அந்தண அங்கண அம்பர போகா
அம்பல நம்பர அம்பிகை பாகா

அம்பர விம்ப சிதம்பர நாதா
அஞ்சித ரஞ்சித குஞ்சித பாதா

தந்திர மந்திர யந்திரபாதா
சங்கர சங்கர சங்கர நாதா

கனக சிதம்பர கங்கர புரஹர
அனக பரம்பர சங்கர ஹரஹர

சகல கலாண்ட சராசர காரண
சகுண சிவாண்ட பராபர பூரண

இக்கரை கடந்திடில் அக்கரை யே
இருப்பது சிதம்பர சர்க்கரை யே

என்னுயிர் உடம்பொடு சித்தம தே
இனிப்பது நடராஜ புத்தமு தே
==============================

1 comment:

  1. பாடல் பொருள்விளக்கம் செய்ய இயலுமா? அய்யா!

    ReplyDelete

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...