அன்றாட வாழ்வில் அளப்பரிய வெற்றி தரும் தாராபல சூட்சுமம்! - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி.....
மனிதர்களின் அன்றாட வாழ்வில் தினமும்
பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கும். குறிப்பிட்ட சில முக்கிய
நிகழ்வுகளுக்கு நல்ல நேரம், காலம்
பார்த்துச் செய்யும்போது சுபப் பலன் மிகுதியாக இருக்கும். டிவி, பத்திரிகைகள் என அனைத்து தகவல் தொடர்பு
சாதனங்களிலும் சுப நல்ல நேரம் கிடைத்தாலும், நமது ஜாதகரீதியான சாதகமான நாட்களை நாமே தேர்வுசெய்வது
சாலச்சிறந்தது.
ஒரு மாதத்தின் அனைத்து சாதகமான
நாட்களையும் பட்டியலிட்டு வைத்துக்கொண்டால் எல்லா நாளும் இனிய நாளாகவும், காரியசித்தி நாட்களாகவும் இருக்கும்.
சுபப் பலன்களைத் தரும் நாட்களைத் தேர்வு செய்வதில் சாஸ்திரத்தில் பல்வேறு முறைகள்
கூறப்பட்டிருந்தாலும், தாரா பலம்
பார்த்துச்செய்யும் செயல்கள் நிச்சயமாக சுபவிளைவுகளை மட்டுமே தருகின்றன.
விவாகப் பொருத்தங்களுள் முதலாவது
பொருத்தமான தினப் பொருத்தமே இந்த தாரா பலமாகும். பெண் நட்சத்திரம்முதல் ஆண்
நட்சத்திரம்வரை எண்ணி அதை 9-ஆல் வகுக்க
மீதி 2,
4, 6, 8, 9 வந்தால்
பொருந்தும். மீதி 1, 3, 5, 7 என வந்தால்
பொருந்தாது. இத்தகைய பொருத்தத்தை விவாகத்திற்கும், நண்பர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகளைத்
தேர்வுசெய்யவும் பயன்படுத்தலாம்.
தாரா பலம்
சுப காரியங்கள் மற்றும் வாழ்வின்
அனைத்து முக்கிய நிகழ்வுகளுக்கும் தாரா பலம் பார்ப்பது மிக அவசியம். தாரா என்றால்
நட்சத்திரம் என பொருள். தாரா பலம் என்றால் சுப மற்றும் முக்கிய நிகழ்வுகளுக்குத்
தேர்வு செய்யும் நாள் ஜாதகரின் ஜென்ம நட்சத்திரத்திற்கு நன்மை தரக்கூடியதாக
இருக்கிறதா என்பதை நிர்ணயம் செய்வதாகும். அதவாது, அன்றாட முக்கிய நிகழ்வுகளுக்குப்
பொருத்தமான நட்சத்திரத்தை ஜாதகரின் ஜென்ம அடிப்படையில் கணக்கிடுவதாகும்.
ஜென்ம நட்சத்திரம்முதல் ஒரு
காரியம் செயல்படுத்த எடுத்துக்கொள்ள இருக்கும் நாள்வரை (நட்சத்திரம்) எண்ணி, அதன் கூட்டுத்தொகையை ஒன்பதால் வகுக்க
மீதி 0,
2, 4, 6, 8, 9 வந்தால்
மிகச்சிறப்பு. (அனுகூல தாரை). மீதி 1, 3, 5, 7 (அனுகூலமற்ற)
வந்தால் சிறப்பல்ல. அதாவது, தாராபலம்
அனுகூலமாக உள்ள நாட்களில் சுபகாரியங்கள் செய்யலாம். அனுகூலமற்ற நாட்களில் சுபகாரியங்கள்
செய்யக்கூடாது. தாரா பலம் பார்க்கும்போது எந்தெந்த எண் மீதியாக வந்தால் என்ன தாரை, அதனால் ஏற்படும் சுப, அசுபங்களைப் பார்க்கலாம்.
மீதி 1. ஜென்ம தாரை
ஜென்ம தாரையின் அதிபதி சூரியன்.
ஜென்ம தாரை என்பது ஒருவரின் பிறந்த நட்சத்திரமாகும். உதாரணமாக, ஒருவர் அசுவினி நட்சத்திரத்தில்
பிறந்திருந்தால் அதன் அனுஜென்ம நட்சத்திரமான மக நட்சத்திரத்திலும், திரி ஜென்ம நட்சத்திரமான மூல
நட்சத்திரத்திலும் முக்கிய நிகழ்வுகளைத் தவிர்க்கவேண்டும்.
ஜென்ம நட்சத்திர நாட் களில்
மனசஞ்சலம் மிகுதியாக இருப் பதுடன் உடல் ஆரோக் கியம் சீராக இருக்காது. சிலருக்கு
மிகுதியான பொருள் விரயம் இருக்கும். காரியத் தடை இருக்கும். மிகச்சுருக்க மாக
மத்திம பலன் கிட்டும்.
எனவே, இயன்றவரை திருமணம், வளைகாப்பு, தீட்சைபெறுதல், யுத்தம் , புதிய தொழில் ஒப்பந்தம், நோய்க்கு புதிய சிகிச்சை, பயணம் ஆகியவற்றைத் தவிர்க்கவேண்டும்.
தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தானதர்மம் செய்தல், புதிய ஆடையணிதல், விருந்து சாப்பிடுதல், விதை விதைத்தல் ஆகியவற்றைச் செய்யலாம் .
பரிகாரம்
ஜென்ம தாரை நாட்களில் தோஷத்தைக்
குறைக்க வாழைக்காய் தானம்தர தடை, தாமதங்கள்
நீங்கும்.
மீதி 2. சம்பத்து
தாரை
இதன் அதிபதி புதன். ஜென்ம
நட்சத்திரத்திற்கு அடுத்த (இரண்டாவது) நட்சத்திரம் சம்பத்து தாரை. ஒருவர் அசுவினி
நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அவருக்கு பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திர நாட்கள் சுபப்
பலன்களைப் பெற்றுத்தரும் சம்பத்து தாரையாகும். சம்பத்து தாரையில் செய்யப்படும்
செயல்களால் மேன்மையும், லாபமும், பணவரவும் மிகுதியாக இருக்கும். இந்த
நாட்களில் பண உதவி கேட்கலாம். புதிய வங்கிக் கணக்கு தொடங்கலாம். முக்கியமான
பேச்சுவார்த்தை, தொழில்
ஒப்பந்தத்தில் கையெழுத்திடுதல், தொழில்
தொடங்குதல், விருந்துக்குச்
செல்லுதல், வீடு, வாகனம், நிலம் வாங்குவது, சட்ட நடவடிக்கைள் எடுப்பது, பிரிந்த தம்பதிகளை சேர்த்துவைப்பது, குழந்தையின்மைக்கு சிகிச்சை ஆகியவற்றைச்
செய்யலாம். நீண்டநாட்களாக இழுபறியாக இருக்கும் செயல்கள்கூட சுலபமாகமுடியும்.
பரிகாரம்
சுபப் பலனை மேலும் அதிகரிக்க
அன்னதானம் செய்ய வேண்டும்.
மீதி 3. விபத்து
தாரை
இதன் அதிபதி ராகு. ஜென்ம
நட்சத்திரத்திற்கு மூன்றாவது நட்சத்திரம் விபத்து தாரை. ஒருவர் அசுவினி
நட்சத்திரத்தில் பிறந்தால் அவருக்கு கிருத்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திர நாட்கள் விபத்து
தாரையாகும். காரியத்தடை மிகுதியாக இருக்கும். வாகன விபத்து, பொருள் திருட்டு, உண்டாகும் என்பதால் விபத்து தாரையில்
சுபகாரியங்களைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
பரிகாரம்
தவிர்க்கமுடியாத காரணத்திற்கு
வெளியூர்ப் பயணம்செய்ய நேர்ந்தால் பழங்களைத் தானம் செய்யவேண்டும்.
மீதி 4. க்ஷேமத்
தாரை
இதன் அதிபதி குரு. ஜென்ம நட்சத்திரத்திற்கு நான்காவது
நட்சத்திரம். ஒருவர் அசுவினி நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அவருக்கு ரோகிணி, அஸ்தம், திருவோண நட்சத்திர நாட்கள் க்ஷேமத்
தாரையாகும். அன்று எல்லாவிதமான சுபகாரியங்களும் செய்யலாம். திருமணம் மற்றும் பெண்
பார்க்க ஏற்ற தாரை. வராக்கடனை வசூல்செய்யலாம். வியாபாரம் தொடங்கினால் தனம்
விருத்தியடையும். நிலம், வீடு, வாகனம், கால்நடைகள் மற்றும் வளர்ப்புப்
பிராணிகள், பறவைகள்
வாங்கலாம். கல்வி கற்க ஆரம்பிக்கவும், செயற்கை
முறை கருத்தரிப்பிற்கும் ஏற்ற தாரை. கிணறு தோண்டலாம்.உடல் ஆரோக்கியம் சீரடையும்.
தடைப்பட்ட அனைத்துக் காரியங்களையும் செய்யலாம். பெரியோர்களை சந்தித்து நல்லாசி
பெறலாம். உயரதிகாரிகளை சந்தித்து அவர்களின் ஆதரவு பெறலாம். தர்மகாரியங்கள், பொதுக்காரியங்களில் ஈடுபடலாம். தீராத
நோய்க்கு மருத்துவரை சந்திக்கலாம். அனைவருடைய அன்பையும் ஆதரவையும்பெற ஏற்ற தாரை.
பரிகாரம்
சுபப் பலனை மேலும் அதிகரிக்க
மஞ்சள் நிற லட்டை சிறு குழந்தைகளுக்கு தானம் தரலாம்.
மீதி 5. பிரத்யகத்
தாரை
இதன் அதிபதி கேது. ஒருவரின் ஜென்ம
நட்சத்திரத்தின் ஐந்தாம் நட்சத்திரம். ஒருவர் அசுவினி நட்சத்திரத்தில்
பிறந்திருந்தால் அவருக்கு மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்
நாட்கள் பிரத்யகத் தாரை என்பதால், எந்தக்
காரியம் செய்தாலும் அதில் தடையுண்டாகும். இதில் திருமணம் செய்தால் கணவன்-
மனைவியிடம் கருத்து வேறுபாடு உண்டாகும். தொழில் தொடங்கினால் தொழில் முடக்கம்
உண்டாகும். நிலம் வாங்கினால் வில்லங்கம் உண்டாகும். பணம் கொடுத்தால் திரும்பி
வராது.
பரிகாரம்
இன்னல்களைத் தவிர்க்க அம்மன்
கோவில் பலிபீடத்தில் உப்பு இடவேண்டும்.
மீதி 6. சாதகத் தாரை
இதன் அதிபதி சந்திரன். ஒருவரின்
ஜென்ம நட்சத்திரத்தின் ஆறாவது நட்சத் திரம் சாதகத் தாரை. ஒருவர் அசுவினி
நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அவருக்கு திருவாதிரை, சுவாதி, சதயம் சாதகத் தாரையாகும். சாதகத்
தாரையில் சகல சுபகாரியங்களும் செய்யலாம். சுய விளம் பரம் செய்யவும், சிறுதூரப் பயணம் தொடர் பான
முடிவெடுக்கவும், பிறர்
உதவியை நாடவும் ஏற்ற தாரை. சாதகத் தாரை நாளில் வேண்டிய உதவிகளெல்லாம் கிடைக்கும்.
எல்லாரும் அனுகூலமாக நடந்து கொள்வார்கள்.
பரிகாரம்
சுபப் பலனை மேலும் அதிகரிக்க
சாதகத் தாரை நட்சத்திர நாட்களில் புண்ணிய நதிகளில் புனித நீராடலாம்.
மீதி 7. வத தாரை
இதன் அதிபதி சனி. ஒருவரின் ஜென்ம
நட்சத்திரத்தின் ஏழாவது நட்சத்திரம். ஒருவர் அசுவினி நட்சத்திரத்தில் பிறந்திருந்
தால் ஏழாவது நட்சத்திரமான பூனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரத்தில் கோட்சார சந்திரன்
சஞ்சாரம் செய்யும் போது வத தாரை வேலைசெய்யும். இதில் செய்யப்படும் காரியங்கள்
எல்லாம் ஏதோ ஒரு காரணத்தினால் தடைப்பட்டுத் தள்ளிப்போகும். பணக் கஷ்டம் உண்டாகும்.
தொழில்,
வியாபாரத்தில் நஷ்டம் உண்டாகும்.
வியாதிகள் உண்டாகும். துக்க சம்பவங்கள் நடக்கும். ஆகவே, வத தாரையில் சுபகாரியங்கள் செய்வதைத்
தவிர்க்கவும்.
பரிகாரம்
இதுபோன்ற நாட்களில் அசுபப்
பலன்கள் மிகுதியாக இருந்தால், எள்
மற்றும் நல்லெண்ணெய் தானம் செய்ய வேண்டும்.
மீதி 8. மைத்ர தாரை
இதன் அதிபதி சுக்கிரன். ஒருவரின்
ஜென்ம நட்சத்திரத்தின் எட்டாவது நட்சத்திரம். ஒருவர் அசுவினி நட்சத்திரத்தில்
பிறந்திருந்தால், அவருக்கு
பூசம்,
அனுஷம், உத்திரட்டாதி மைத்ர தாரையாகும். இந்த
நட்சத்திரங்களில் சந்திரன் சஞ்சாரம் செய்யும்போது எல்லாவிதமான சுபகாரியங் களும்
செய்யலாம். தனவரவு உண்டாகும். பணம், பொருள்
சேர்க்கை உண்டாகும். சுபகாரியங்கள் கூடிவரும். ஆகவே, திருமணம் சம்பந்தமான காரியங்களில்
ஈடுபடலாம். சொத்து வாங்கலாம். ஆடை, ஆபரணங்கள், சொகுசுப் பொருட்கள் வாங்கலாம். இசை, நடனம் அரங்கேற்றம் செய்யலாம். பங்குச்
சந்தையில் ஈடுபடலாம். போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.
பரிகாரம்
சுபப் பலன்களை மேலும் அதிகரிக்க
மைத்ர தாரை நாட்களில் கல்கண்டு சாப்பிடவேண்டும்.
மீதி 9. பரம மைத்ர
தாரை
இதன் அதிபதி செவ்வாய். ஜென்ம
நட்சத்திரத்தின் ஒன்பதாம் நட்சத்திரம். மிகமிக ஏற்ற தாரை. ஒருவர் அசுவினி
நட்சத்திரத்தில் பிறந்திருந்தால், அவருக்கு
ஆயில்யம்,
கேட்டை, ரேவதி நட்சத்திரத்தில் கோட்சார சந்திரன்
பயணிக்கும் காலம் பரம மைத்ர தாரையாகும். உயில் எழுத, ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் சேர, பரிகார பூஜைகள்செய்ய, பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற, பணியில்சேர மிகவும் ஏற்ற தாரை. இதில், உற்றார்- உறவினர்கள் எல்லாரும்
அனுகூலமாக நடந்துகொள்வார்கள். பூமி வாங்கல், எந்திரங்கள் வாங்கல் சம்பந்தமான காரியங்களில் ஈடுபடலாம். அறுவை
சிகிச்சை செய்துகொள்ளலாம். வாக்குவாதங்களில் ஈடுபட்டு வெற்றிபெறலாம். போட்டிகளில்
கலந்துகொள்ளலாம்.
பரிகாரம்
மேலும் நற்பலன்களை அதிகரிக்க
துவரை தானம்செய்யலாம். தாரா பலம் பார்க்கவியலாத நாட்கள் அனுகூலமற்ற தாரையாக
அமைந்தால், பரிகாரம்
செய்துவிட்டுக் காரியம் செய்தால் தாரா பலம் இல்லாததால் ஏற்படும் தடை விலகும். ஜனன
ஜாதகத்தில் ஜென்ம நட்சத்திரம் வலுவாக, அசுபர்
தொடர்பில்லாமல் இருந்தால் சாதகமற்ற தாரைகளால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அதே போல், அனுகூல தாரை என்றாலும் அந்த கிரகம்
ஜாதகத்தில் நின்ற நிலையை கருத்தில்கொண்டே, அந்தக் குறிப்பிட்ட தாரை ஜாதகருக்கு சாதக பலன் தருமா என முடிவு
செய்யவேண்டும்.
செல்: 98652 20406
courtesy;Balajothidam.
=======================================================
No comments:
Post a Comment