Followers

Wednesday, August 19, 2020

 திருமண வாழ்க்கை கசப்பு ஏற்பட காரணம்

செவ்வாய் சுக்கிரன் சேர்ந்து இருந்தால் சந்தோஷமான திருமணவாழ்க்கை . குரு சுக்கிரன் சேர்ந்து இருந்தால் சந்தோஷமான திருமணவாழ்க்கை .
3
ம் அதிபதி 7 ல் இருந்தால் காதல் திருமணத்திற்காக வீட்டை விட்டு வெளியேறும் நிலையைத்தருகிறது.
7
ம் அதிபதி 3ல் இருந்தால் காதல் திருமணத்திற்காக வீட்டை விட்டு வெளியேறும் நிலையைத்தருகிறது. .
குரு சுக்கிரன் சேர்ந்து இருந்தால் - காதல் திருமணம்
சந்திரன் இராகு சேர்ந்து இருந்தால் - காதல் திருமணம்
ஆண் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் அமர்ந்óத இடத்தில் பெண் ஜாதகத்தில் சுக்கிரன் இருந்தால் நல்ல பொருத்தம்.
பெண் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் அமர்ந்த இடத்தில் ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் இருந்தால் நல்ல பொருத்தம்.
ஆண் ஜாதகத்தில் உள்ள சுக்கிரன் அமர்ந்த இடத்தில் பெண் ஜாதகத்தில் செவ்வாய் இருந்தால் நல்ல பொருத்தம்.
பெண் ஜாதகத்தில் உள்ள சுக்கிரன் அமர்ந்த இடத்தில் ஆண் ஜாதகத்தில் செவ்வாய் இருந்தால் நல்ல பொருத்தம்.
5
ல் சனி இருந்தால் கடுமையான திருமணத்தோஷம்
2
ம் அதிபதி அஸ்தமனமாக இருந்தால் குடும்பம் சுடுகாடுபோல இருக்கும் பொருளாதார நிலை பாதிப்பை தரும். .
2
ல் அஸ்தமன கிரகம் இருந்தால் குடும்பம் சுடுகாடுபோல இருக்கும் பொருளாதார நிலை பாதிப்பை தரும். .
12
ல் செவ்வாய் சனி சேர்ந்து இருந்தால் இது துரஷ்ட நிலையை காட்டுகிறது.
சனி மிதுனம் - மீனம் இராசியை பார்தால் திருமண வாழ்க்கை இயந்திர வாழக்கை போன்றது.
களத்திர தோஷம் ஆண் பெண் ஜாதகத்தில் எந்த வகையான பலனைத்தருகிறது என்பது பற்றி இப்பக்கத்தில் விரிவாக காணலாம்.
களத்திரம் என்ற சொல்லானது பெண்ணுக்குக் கணவனையும்,
ஆணுக்கு மனைவியையும் குறிக்கும் சொல்லாகும்.
களத்திர ஸ்தானம் என்பது லக்கினத்திற்கு 7வது இடத்தைக் குறிக்கும்..இந்த 7வது வீடு பாபக் கிரகங்களால் பாதிப்படைந்து இருக்கக்கூடாது.
ஆண், பெண் ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது 2,7,8 ஆகிய வீடுகளைக் கவனமாக ஆராய வேண்டும். காரணம் 7வது வீடு களத்திரத்தைக் குறிக்கும் வீடாகும். 2வது வீடு குடும்ப ஸ்தானத்தைக் குறிப்பிடும் வீடாகும். 8வது வீடு பெண்ணுக்கு மாங்கல்ய ஸ்தானத்தைக் குறிப்பிடும் வீடாகவும், ஆணுக்கு ஆயுள் ஸ்தானத்தைக் குறிப்பிடும் வீடாகவும் அமைந்துள்ளது.
ஆண் பெண் ஜாதகங்களில் இந்த வீடுகளில் எந்த ஒரு கிரகமும் இல்லாமல் இருப்பது மிகவும் நலம். அப்படி இருந்தால் திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது ஆண் பெண் ஜாதகங்கள் இரண்டிலும் 2,7,8 ஆகிய வீடுகளில் கிரகம் இருக்குமாறு பார்த்துக் கொண்டால்; வாழ்க்கை சந்தோஷமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
ஒரு ஆணின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 2வது இடத்திலும் 7வது இடத்திலும் சூரியன் இருந்தால் அந்த ஜாதகருக்கு களத்திர தோஷம் உண்டு எனக் கூறலாம்
ஒரு பெண்ணின் ஜாதகத்தில்
7
வது வீடு 8 வது வீடு இவற்றில் ஒன்றில் சூரியன் இருந்தால் அந்த ஜாதகிக்கு சூரியன் களத்திர தோஷத்தைத் தருகிறது.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சூரியனுடன் சுக்கிரன் எந்த வீட்டில் சேர்ந்திருந்தாலும் அந்த அமைப்பு களத்திர தோஷத்தைத் தருகிறது என்பது ஜோதிட விதி.
7
ம் வீட்டுஅதிபருடன் சூரியன் இணைந்திருந்தாலும் களத்திரதோஷம் உண்டு என்று கூற வேண்டும். ஏனென்றால் சூரியனுடன் இணைந்த அந்தக் கிரகம் அஸ்தங்கம் ஆகிவிடும். விதிவிலக்கு தனுர் லக்கினகாரர்களுக்கு மட்டும்.
ஒரு ஜாதகத்தில் களத்திர தோஷம் இல்லை (அல்லது) இளமையில் திருமணம் காலதாமதம் இல்லாமல் நடைபெறும் என்பதற்கான ஜோதிட விதிகள் பின்வருமாறு:
(1) 2,7,8
ம் வீடுகள் சுபர் பார்வை பெற்றிருக்க வேண்டும்.
(2) 2,7,8
ம் வீடுகளில்
பாபக்கிரகங்கள் இடம் பெற்றிருக்கவோ,
பாவிகள் சேர்க்கையோ இருக்கக் கூடாது.
(3) 7
ம் இடத்துக்குரிய அதிபர் நீசம், மறைவு ஸ்தானங்கள்
பெறக்கூடாது. பகை வீடு சேராமலும் இருக்கவேண்டும்.
(4)
லக்னத்தை சுபகிரகம் பார்க்க வேண்டும் அல்லது லக்னத்தில்
சுபக் கிரகம் இருக்க வேண்டும்.
(5) 7
வது இடத்ததிபதியோ அல்லது சுக்ரனோ, சுக்ரன் நின்ற
ஸ்தானாதிபதியோ ஆட்சி,
உச்சம், பெற்று சுப கிரகங்களின்
பார்வை பெற்றிருந்தாலோ திருமணம் மனதுக்குப் பிடித்தவாறு
கால தாமதமின்றி நடந்து இல்வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக
அமையும்.
அதாவது 7ம் வீட்டதிபரும் கெட்டிருக்கக்கூடாது, களத்திர
காரகன் சுக்கிரனும் கெட்டிருக்கக்கூடாது.

=================================

 

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை தரும் சுக்கிரன் - பலன்கள், பரிகாரங்கள் By Mayura Akilan | Published: Friday, January 26, 2018, 7:56 [IST] சென்னை: சுக்கிரன் களத்திரகாரகன். அதாவது, வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். இவருடைய தசா காலமான 20 வருடங்களில் மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும். வெள்ளிக்கிழமையான இன்று சுக்கிரன் பற்றி அறிந்து கொள்வோம். சுக்ரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். இன்பம் என்கிற ஆனந்தத்தை அடைவதற்குரிய மனநிலையை உருவாக்குகிறவர் சுக்ரன் இல்லற வாழ்வுக்குறியவர், சுக்ரன் மனைவி யோகம் தருபவர் ஆணுக்கு மனைவியைப்பற்றியும், பெண்ணுக்கு மண வாழ்க்கையைப் பற்றியும் சொல்லுகின்றவர். சுக்கிரன் சிற்றின்பம், திருமணம் முதலான சுகத்தை ஆணுக்கு அளிப்பவர். அதே போல் பெண்களுக்கு நளினத் தன்மையையும் அழகான தோற்றம், கவர்ச்சி, வீரியசக்தி, அறிவாற்றல், மனத்துக்கிசைந்த கணவனை அடையும்  தகுதியையும், சுக போகங்களில் திளைத்து மகிழும் ஆற்றலையும் வழங்குவார்.


சுகமான வாழ்வு சுக்கிரன் ஜென்ம லக்கினத்தில் இருந்தால் அழகு, கவர்ச்சியான உடல் அமைப்பு, வசதி, வாய்ப்பு ஏற்படும். சுக்கிரன் லக்னத்திற்கு 2ல் இருந்தால் சுக வாழ்வு உண்டாகும். கவர்ச்சியான பேச்சால் மற்றவர்களைக் கவரும் நிலை உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்று பலம் இழந்தால் தவறான பெண் தொடர்பு தீய பழக்க வழக்கம் உண்டாகும்.


பெண்களுக்கு பாதிப்பு சுக்கிரன் 3ல் இருந்தால் வசதி வாய்ப்பு உண்டாகும். சந்திரன் சேர்க்கை பெற்றால் கலை, இசைத்துறையில் சாதனை செய்ய நேரிடும். சுக்கிரன் 4ல் இருந்தால் சொகுசு வாழ்வு தாராள தன வரவு உண்டாகும். பொதுவாக சுபர் பார்வையும் இருந்தால் வாழ்வில் ஏற்றம் தாய்க்கு நீண்ட ஆயுள் உண்டாகும். பெண்ணுக்கு 4ம் வீடு கற்பு ஸ்தானம் என்பதால் பாவிகள் சேர்க்கை பெற்றால் கற்பு நெறி தவறிய பெண்ணாக இருப்பாள்.


திருமணம் தாமதம் சுக்கிரன் 5ல் இருந்தால் வசதி வாய்ப்பு, பூர்வீக சொத்து, கல்வியில் மேன்மை, மகிழ்ச்சியான மண வாழ்வு, பெண் குழந்தை யோகம் உண்டாகும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றால் கலப்பு திருமணம் காதல் திருமணம் உண்டாகும். சுக்கிரன் 6ல் இருந்தால் திருமணம் காலதாமதமாக நடக்கும் நிலை ஏற்படும். பலம் இழந்து பாவிகள் சேர்க்கை பெற்றால் திருமண வாழ்வில் பிரச்சனை, ரகசிய நோய்கள் உண்டாகும்.


திருமண வாழ்வில் சிக்கல் சுக்கிரன் 7ல் இருந்தால் சுப பார்வையும் கிரக சேர்க்கை இல்லாமல் இருந்தால் மண வாழ்வில் மகிழ்ச்சி, சந்தோஷம் ஏற்படும். கிரகங்களுடன் சேர்க்கை பெற்றால் எத்தனை கிரகமோ அத்தனை தாரம். பாவிகள் சேர்க்கை பெற்றால் கலப்பு திருமணம் காதல் திருமணம், பலம் இழந்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளும் பிரிவு உண்டாகும்.


வெளிநாட்டு யோகம் சுக்கிரன் 8ல் இருந்தால் சுக வாழ்வு பாதிக்கும், தாமத திருமணம், வீடு, வாகனம் அமையத் தடை உண்டாகும். ரகசிய நோய், உடல் உறவில் ஈடுபட முடியாத நிலை, கண்களில் நோய் உண்டாகும். சுக்கிரன் 9ல் சுபர் கிரக பார்வை மற்றும் சேர்க்கையுடன் இருந்தால் தந்தைக்கு நீண்ட ஆயுள், செல்வம், செல்வாக்கு, வசதி, வாய்ப்பு பூர்வீகத்தால் அனுகூலம் ஏற்படும். பாவிகள் சேர்க்கை பெற்றால் வெளியூர் வெளிநாடு யோகம் கிடைக்கும்.


பணம் சேரும் சுக்கிரன் 10ல் இருந்தால் கலை, இசை, பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள் மூலம் லாபம், சிலர் மனைவியுடன் கூட்டு தொழில் செய்யும் யோகம் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் சில தவறான செயல்களில் ஈடுபட நேரிடும். சுக்கிரன் 11ல் இருந்தால் நல்ல அறிவாற்றல், வசதி, வாய்ப்பு, எதிர்பாராத தன சேர்க்கை அமையும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றால் நிறைய பெண் தொடர்பு, தவறான வழியில் சம்பாதிக்கும் நிலை உண்டாகும்.


படுக்கை சுகம் சுக்கிரன் 12ல் இருந்தால் சுபர் பார்வை மற்றும் சேர்க்கை உடன் 12ல் இருந்தால் சுக வாழ்வு, துணையுடன் தாம்பத்திய உறவில் எல்லை இல்லாத மகிழ்ச்சி சுகத்திற்காக நிறைய செலவு செய்ய நேரிடும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்று பலம் இழந்தால் தவறான பெண் தொடர்பால் இழப்பு, தீய பழக்க வழக்கம், ரகசிய நோய்கள் கண்களில் பாதிப்பு ஏற்படும்.


 

 

 

 

 

English summary Venus is joyful, charming in physique, has beautiful and brilliant eyes, is a poet, is phlegmatic and windy and has curly hair.Married life pleasures and luxuries are also judged from the placement of Venus in the horoscope. If Venus is not so strongly placed in the chart of any individual, he/she suffers from lack of physical appeal, amicable behavior, and a tendency for failure in love or married life.

 

Read more at: https://tamil.oneindia.com/astrology/news/role-importance-venus-astrology/articlecontent-pf290566-309478.html

========================================

 

===========================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...