Followers

Saturday, August 1, 2020

யோகி- அவயோகி முக்கியத்துவம்......


பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்கள் உடையது. அவை நாள் , நட்சத்திரம், யோகம், கர்ணம, திதி.


இந்த ஐந்தில் ஒரு அங்கம்தான் யோகம். இதை நித்திய நாமயோகம் என்று கூறுவர். மொத்தம் 27 நாம யோகங்கள் உள்ளன.


மேஷம் முதல் சூரியனின் பாகை கலை மற்றும் மேஷம் முதல் சந்திரனின் பாகை கலையை கூட்டி இத்துடன் 93 பாகை 20 கலையை கூட்டும்போது வரும் நட்சத்திரமே யோகி கலையாகும். யோகி பாகை நட்சத்திர அதிபதி யோகி எனப்படும். யோகி பாகையின் ராசி அதிபதி அனுயோகி எனப்படுவார்.

 

யோகி நட்சத்திரத்தின் ஆறாவது நட்சத்திர அதிபதி அவயோகி எனப்படுவார். அதாவது யோகி பாகையிலிருந்து 186 பாகையில் இந்த அவயோகி நட்சத்திரம் வரும். இதை நீங்கள் சுலபமாக தெரிந்துக்கொள்ள கீழே ஒரு அட்டவணை வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.


முக்கியத்துவம்..............


சிலரின் ஜாதகத்தில் மூன்று நான்கு கிரகங்கள் கூட உச்சமாக இருக்கும். கேந்திர கோணாதிபதிகள் இணைந்து ராஜ யோகத்தை தரும் இடத்தில் இருக்கும். ஆனால் ஊரில் சாதாரணமான நிலையிலேயே காணப்படுவார். ராஜயோகங்கள் பலனிக்காது. தொட்ட அனைத்தும் தோல்வியிலேயே முடியும். இது ஏனெனில் அவரது உச்ச கிரகங்களும் , யோக கிரகங்களும் அவயோகியின் நட்சத்திரத்திலோ அல்லது அவயோகியுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதுதான்.

 

சில பிரபலமானவர்களின் ஜாதகம் மிக சாதாரணமாக இருந்தாலும் யோகமாக காணப்படுவார்கள் . இது ஏனெனில் திசாநாதனும் அதிகமான கிரகங்களும் யோகியின் நட்சத்திரத்திலோ யோகியின் தொடர்பிலோ அவரது ஜாதகத்தில் இருப்பதுதான் காரணம். அனுயோகி எனப்படும் சகயோகியும் யோகம் தருவார். ஆனால் சற்று குறைவாக ஒரு 60 சதவீதம் யோகம் இருக்கும்.


இந்த யோகியும் அவயோகியும் 3 செட்டுகளாக காணப்படும்.
1. சனி, சுக்கிரன், செவ்வாய்
2 .சந்திரன் , குரு, கேது
3 .சூரியன் , புதன், இராகு
இந்த குரூப்பில் ஒருவர் யோகியாக வந்தால் மற்ற இருவரும் யோகத்தன்மை பெற்று யோகம் செய்வர்.
முக்கியத்துவம்
ஜோதிட சூட்சுமத்தின் பெரும்பகுதி இந்த யோகி அவயோகிகளிடம்தான் உள்ளது.


யோகியாக வரும் கிரகம் ஆறு எட்டு பன்னிரெண்டுக்கு அதிபதியாக வந்தாலும் அவற்றில் இருந்தாலும் , ஏன் திதிசூன்ய ராசியில் இருந்தாலும் தனது திசையில் யோகம் செய்யும். யோகி வளர்ச்சியை தரும் கிரகமாகும். யோகி செழுமையை தரும் யோக கிரகமாகும். திசை, புக்தி, அந்தரத்தில் இரண்டு யோகியாக வந்தால் அப்போது ஒரு காரியத்தில் வெற்றி உண்டாகும். இதில் நிறைய சூட்சுமங்கள் உள்ளன.

 

 

அவயோகி மிகமோசமான கிரகமாகும். அவயோகி கெட்ட ஜாதகங்களே யோக ஜாதகங்கள். அவயோகி திதிசூன்ய ராசி அதிபதியாகவோ , திதிசூன்ய ராசியிலோ இருந்தால் கெடுதல் செய்யாது.

 

அவயோகி திசை புக்திகளில் வளர்ச்சி பாதிக்கும். ஒன்பதாம் அதிபதியாக வந்தாலும் அவயோகி கெட வேண்டும்.

 

யோகி நட்சத்திரம் லக்ன நட்சத்திரமாக வந்தால் வாழ்நாள் முழுவதும் ஜெயம் , செழுமை எதிர்பார்க்கலாம்.

 

திதிசூன்ய ராசி அதிபதி எப்படி வக்ரம், பகை, ராகுகேது சாரம் ஏறினால் திதிசூன்ய தோசம் விலகுமோ அதைப்போன்று அவயோகிக்கு ஏற்பட்டால் கெடுதல் குறையும்.

 

courtesy; Skandaguru Astro Research Center.tq

======================================================================



யோகி அவயோகி:

யோகி அவயோகியை பற்றி
தமிழகத்தில் உள்ள ஜோதிடர்களில் சிலருக்கு மட்டுமே இதன் முக்கியத்துவம் பற்றி தெரியும்.

 

தற்போது நடைபைறும் தசாபுத்திநாதர்கள் யோகி அல்லது அவயோகி நட்சத்திரத்தில் இருக்கிறார்களா என்பதை கணக்கிடுவார்கள்.
யோகி, அவயோகி சூட்சுமத்தை தெரிந்த சில ஜோதிடர்களும் அதை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைத்துவிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

 

ஆனால் நமக்கு தெரிந்த ஜோதிட ரகசியங்களை மறைத்துவைக்க
வைக்க புதன் கொஞ்சம்சிரமத்தைதருகிறது  ஆச்சரியமான இல்லை இல்லை

அதிகமான சூட்சும கிரகம்தான்புதன்

ஒரு குற்றம் நடந்திருக்கும்போது புதன் வக்கிரமானால் அவ்வக்கிரகாலம் முடிந்த பிறகே துப்பு துலங்கும் என்றால் பாருங்களேன். பஞ்சபூத காற்று, பிரபஞ்ச ரகசியம் உள்ள கிரகம்.
பஞ்சாங்கம்:
நாள், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் இந்த ஐந்தும் கொண்டதுதான் பஞ்சாங்கம்.


இதில் பெரும்பலோனோருக்கு பிறந்த நட்சத்திரமும், நாளும்தான் தெரியும்.
இதில் உள்ள யோகம் தெரியாது
மொத்தம் 27 நித்திய நாமயோகங்கள் உள்ளன. அந்த 27 யோகங்கள் என்னவென்றும், அதற்கு யார் யோகி கிரகம் என்றும் ,யார் அவயோகி கிரகம் என்றும் கீழே கொடுத்துள்ளேன்.( அட்டவணை).
இது எவ்வாறு கணக்கிடுவது?


மேசம் முதல் ஒவ்வொரு ராசியும் 30 பாகைகளாக மொத்தப் 360 பாகை கொண்ட 12 ராசிகளாக ராசிமண்டலத் பிரிக்கப்பட்டுள்ள அடிப்படை கணித்த்தை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.


அதாவது
மேசம்0° to 30°
ரிசபம் 30° to 60° ,
மிதுனம் 60° to 90°,
கடகம் 90° to 120° ,
சிம்மம் 120°to 150°,
கன்னி 150° to 180°,
துலாம் 180° to 210°,
விருச்சிகம் 210° to 240°,
தனுசு 240° to 270°,
மகரம் 270° to 300°,
கும்பம் 300°to 330° ,
மீனம் 330° to 360°
என 360 பாகை கொண்ட 12 ராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதிலேயே 13 பாகை 20 கலை அளவுள்ள 27 நட்சத்திர தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ள 27 நட்சத்திரங்கள் உள்ளன.( 13.20 ×27=360).


இனி யோகி பாகையை கணக்கிட மேஷத்தில் இருந்து சூரியன் இருக்கும் பாகை+ மேசத்திலிருந்து சந்திரன் இருக்கும் பாகை + 93.20 பாகை கூட்டினால் யோகி பாகை கிடைத்துவிடும்.அதை கணக்கிட்டுதான் ரெடிமேடாக நீங்கள் என்ன யோகத்தில் பிறந்துள்ளீர்கள் என குறித்து அதற்கு ஒவ்வொரு பெயரையும் சூட்டியுள்ளனர் ஞானிகள்.
இப்போ பலன்களை பார்ப்போம்.


யோகி பாகை எந்த நட்சத்திரத்தில் விழுகிறதோ அந்த நட்சத்திர அதிபதியே யோகி. அந்த நட்சத்திராதிபதியின் மூன்று நட்சத்திரங்களுமே யோகி நட்சத்திரங்களே!


அதாவது ஒருவருக்கு யோகி பாகை 223 பாகயில் விழுந்தால் சனியின் நட்சத்திரமான அனுச நட்சத்திரத்தில் விருட்சிக ராசியாக வரும். இந்த நட்சத்திர யோகம் கண்ட யோகம் ஆகும்.இப்போது சனியே யோகியாவார். சனிதசா சனி கெடுதல் செய்யும் ராசியில் இருந்தாலும் யோகமே செய்யும். அதுமட்டுமின்றி சனியின் நட்சத்திரங்களான பூசம் ,அனுசம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் எந்த மோசமான கிரகம் நின்று தசா நடத்தினாலும் யோகம் செய்யும்.


அவயோகி:
யோகியின் நட்சத்திரபாகையிலிருந்து 186 பாகையிலுள்ள நட்சத்திரம் அவயோகி நட்சத்திரம். அவயோகியாக வரும் கிரகமும் அவயோகி நட்சத்திர பாதம் நின்ற கிரகங்களும் தனது தசா, புத்தி காலங்களில் மிக மோசமான பலன்களை தருவார்கள்.அவயோகியை மற்றொரு குறுக்கு வழியில் எளிதாக கண்டுபிடிக்கலாம். அதாவது யோகி நட்சத்திரத்திற்கு ஆறாவது நட்சத்திர அதிபதியே அவயோகி.


1.
சனி யோகியென்றால் சந்திரன் அவயோகி.
2.
சூரியன் யோகியென்றால் சனி அவயோகி.
3.
சந்திரன் யோகியென்றால் புதன் அவயோகி.
4.
புதன் யோகியென்றால் செவ்வாய் அவயோகி.
5.
குரு யோகியென்றால் சூரியன் அவயோகி.
6.
சுக்கிரன் யோகியென்றால் குரு அவயோகி.
7.
ராகு யோகியென்றால் சுக்கிரன் அவயோகி.
8.
கேது யோகியென்றால் ராகு அவயோகி.
9.
செவ்வாய் யோகியென்றால் கேது அவயோகி.

இப்போது நீங்கள் உங்களது ஜாதகத்தை கணித்து என்ன யோகம் மற்றும் திதி மற்றும் கரணத்தில் பிறந்துள்ளீர்கள் என்பதை கண்டுபிடிக்க முயல்வீர்கள். அந்த யோகத்திற்கு யார் யோகி யார் அவயோகி என்று நான் கீழே இணைத்துள்ள அட்டவணை மூலம் சுலபமாக கண்டுபிடித்துவிடுவீர்கள்.
இனி யோகி அவயோகியின் முக்கியத்துவத்தை பார்ப்போம் .


எந்த நிலையிலும் யோகியும், யோகி நட்சத்திரத்திலும் அமர்ந்த கிரகங்களும் தனது தசா புத்தி காலங்களில் யோகத்தையே வழங்குவார்கள்.
எந்த நிலையிலும் அவயோகியும் ,அவயோகி நட்சத்திர சாரங்களில் அமர்ந்த கிரகங்களும் தனது தசாபுத்தி காலங்களில் கெடுதலையும், வீழ்ச்சியையும், தீங்கையும்தான் தருவார்கள்.


உங்கள் ஜாதகங்களில் இதுவரை நடந்த தசாபுத்தி காலங்களில் இவர்களது காலங்களில் என்ன நடந்த்து என்று ஆராய்ந்து பாருங்கள். தசா வராவிட்டாலும் இவர்களது தொடர்புடைய புத்தி காலங்களை ஆராய்ந்து பாருங்கள்.

சுலபமாக
#யோகிகிரகம்Toஆறாவதுகிரகம்
அவயோகி
இதில்வேறுசூட்சுமமும்உண்டு

நன்றி; Kanitharishigha Cbe

Top of Form


=============================================

===================================================

 

 

 

=======================================================================Top of Form

Bottom of Form

 


No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...