நிரந்தர
வெளிநாட்டு வாழ் யோகம்.....
வெளிநாட்டு
பயணம் மற்றும் வெளிநாட்டு வாழ்க்கை இரண்டிற்கும் வேறுபாடு உண்டு . நிரந்தரமாக
பிறந்த இடத்தை விட்டு வெளியேறி அயல்நாட்டில் குடியேறும் ஜாதக அமைப்பை பார்க்கலாம்
லக்னத்துக்கு
நான்காம் இடம் , பிறந்த ஊர் / வீடு போன்றவற்றை குறிக்கும் . நான்காம்
இடம் / அதிபதி பாதிக்கப்பட்டவர்கள் பிறந்த இடத்தை விட்டு வெகு தூரம் சென்று
வசிப்பார்கள் . சனி / செவ்வாய் / ராகு / கேது போன்றவை நான்காம் இடத்துடன்
சம்பந்தம் பெறும்போது மேற்கொண்ட பலன் உண்டாகும்
நான்காம்
அதிபதி 9/12 ஆகிய இடங்களில் அமரும்போது அல்லது நான்காம் அதிபதி 9/12
அதிபதிகளுடன்
சம்பந்தம் பெறும்போதும் , நான்காம் அதிபதி , சனி / செவ்வாய் / ராகு
/ கேதுவுடன் சேர்க்கை பெறும்போதும் அயல்நாட்டு பிரஜை யோகம் உண்டாகிறது .
அயல்நாட்டு
வாழ்க்கைக்கு ஒன்பதாம் அதிபதியும் முக்கிய காரகம் வகிக்கிறது . ஒன்பதாம் அதிபதி 9/12
ஆகிய
இடங்களில் அமரும்போதும் அயல்நாட்டு பிரஜை யோகம் உண்டாகிறது .
12ம் அதிபதி 7/4 வீடுகளில் அமரும்போதும்
வெளிநாட்டு வாழ்க்கை உண்டாகும் .
லக்னாதிபதி
12ம் அதிபதியுடன் , 12ம் வீட்டிலோ அல்லது 7ம் வீட்டிலோ
அமரும்போதும் வெளிநாட்டு வாழ்க்கை உண்டாகும் .
சந்திரன்
அல்லது சுக்கிரன் , 12ம் வீட்டிலோ அல்லது சந்திரன் ஏழாவது வீட்டிலோ
அமரும்போதும் வெளிநாட்டு வாழ்க்கை உண்டாகும் .
பொதுவாகவே
நான்காம் வீடு பாதிப்படையும் நிலை மற்றும் 1/4/7/9/12 வீடு மற்றும் அதன்
அதிபதிகளின் தொடர்பு வெளிநாட்டு வாழ்க்கையை உறுதி செய்யும் .
courtesy;ஜோதிட ஆலோசனைக்கு
mahalakshmiastroservices@gmail.com
+91 9994084064 , +91 8056488199
+91 9994084064 , +91 8056488199
======================================
வெளிநாடு
செல்லும் யோகம் யாருக்கு ?
ஸ்ரீ
பத்ரகாளியம்மன் துணை!
"திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்பார்கள்.
மனித வாழ்வுக்கு பொருள் தேடல் என்பது அவசியமான ஒன்றாகும்.சமூகம் பொருளுடையவரையே போற்றி புகழ்கிறது.வான் புகழ் கொண்ட வள்ளுவர் கூட
"பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை அருளில்லார்க்கு
அவ்வுலக மில்லை". என்கிறார்.
பொருள் உள்ளவர்களைத்தான் மனித உலகம் மதிக்கிறது.அதே போல் புண்ணியம் செய்து நேர்மையாக வாழும் அருள் உள்ளவர்களைத்தான் தேவ உலகம் மதிக்கிறது என பகர்கிறார.
"திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்பார்கள்.
மனித வாழ்வுக்கு பொருள் தேடல் என்பது அவசியமான ஒன்றாகும்.சமூகம் பொருளுடையவரையே போற்றி புகழ்கிறது.வான் புகழ் கொண்ட வள்ளுவர் கூட
"பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை அருளில்லார்க்கு
அவ்வுலக மில்லை". என்கிறார்.
பொருள் உள்ளவர்களைத்தான் மனித உலகம் மதிக்கிறது.அதே போல் புண்ணியம் செய்து நேர்மையாக வாழும் அருள் உள்ளவர்களைத்தான் தேவ உலகம் மதிக்கிறது என பகர்கிறார.
எனவே பணம்
சம்பாதிக்கும் பொருட்டு அவர்களது ஜாதகத்தில் வெளிநாடு செல்லும் யோகம் உள்ளதா ? அவ்வாறு
செல்வதற்கு உகந்த திசை புத்திகள் உள்ளதா ? அல்லது இல்லையா?.
அவ்வாறு வெளிநாடே
சென்றாலும் அங்கு நிறைய பொருளீட்டும் யோகம் இருக்கிறதா ?
எந்த மாதிரியான
வேலையை தேடி செல்லலாம் ? அங்கு குடியுரிமை
பெறும் யோகம் உண்டா?
இது போன்ற பல
வினாக்களுக்கு சாதக அடிப்படையில் விடை தேடி அதற்கு பிறகு வெளிநாடு செல்லல் நலம்
பயக்கும்.இவ்வாறு எதுவும் பார்க்காமல் வட்டிக்கு பணம் வாங்கி பல லட்சங்களை கட்டி
போய் சில வாரங்களிலே "போன மச்சான் திரும்பி வந்தான்?" என்ற கதையாக
திரும்ப வந்து அந்த கடனை அடைக்க முடியாமல் அந்த குடும்பம் நொறுங்கிப்போய் ஏன் சில
நேரங்களில் தற்கொலை வரை சென்று விடுகிறார்கள்.எனவே வெளிநாடு செல்ல விரும்புவோர்
பயன்பெறும் வகையில் இப்பதிவு இங்கு பதியப்படுகிறது.
சாதகத்தில் உள்ள
பன்னிரெண்டு ராசிகளை பின்வருமாறு பிரிக்கிறோம்.
காற்று ராசி :
மிதுனம்,துலாம்,கும்பம்
அக்னி ராசி :
மேஷம்,சிம்மம்,தனுசு
நிலம் ராசி :
ரிஷபம்,கன்னி,மகரம்,
ஜல ராசி : கடகம்,விருட்சகம், மீனம்
வெளிநாடு விரும்புவோர்களுக்கு லக்கினம்,லக்கினாதிபதி,சந்திரா லக்கனம் இவைகள் ஜல அல்லது காற்று ராசிகளில்
அமைய வேண்டும்.
இரண்டாம், பதினொன்றாம்
மற்றும் பன்னிரண்டாம் பாவக சாதக கட்டங்கள் ஒருவருக்கு காற்று அல்லது ஜல ராசியாக
அமைய வேண்டும்.
11- ம் வீட்டு அதிபதி ,12 -ஆம் வீட்டு
அதிபதி காற்று அல்லது ஐல ராசியாக இருந்து இவை ஆட்சி,உச்சம்,கேந்திரம் ,
திரிகோணம்,
லாபஸ்தானம் பெற்று இருக்க வேண்டும்.இவை அம்சத்திலும் இதே போன்ற அமைப்பை அடைந்திருக்க வேண்டும்.
திரிகோணம்,
லாபஸ்தானம் பெற்று இருக்க வேண்டும்.இவை அம்சத்திலும் இதே போன்ற அமைப்பை அடைந்திருக்க வேண்டும்.
பதினொன்றாம்
மற்றும் பன்னிரண்டாம் வீட்டு அதிபதிகள் காற்று அல்லது ஜல ராசிக்குரிய நட்சத்திர
சாரம் பெற்றிருக்க வேண்டும்.
காற்று அல்லது
ஜென்ம ராசி ஜென்ம லக்கனத்திற்கு சுப ராசிகளாக இருக்கவேண்டும்.
வெளிநாடு செல்வதை
ஆதரிக்கும் கிரகங்கள்
சூரியன்,சந்திரன்,குரு,
செவ்வாய்,புதன்,சுக்கிரன்,சனி,ராகு
சுவாதி,பூராடம்,அஸ்வினி ,சித்திரை நட்சத்திர காலில் சனி நின்றால் ஜாதகர் அந்நிய தேசம் செல்லலாம்.
செவ்வாய்,புதன்,சுக்கிரன்,சனி,ராகு
சுவாதி,பூராடம்,அஸ்வினி ,சித்திரை நட்சத்திர காலில் சனி நின்றால் ஜாதகர் அந்நிய தேசம் செல்லலாம்.
வியாபாரம் மூலம்
வெளிநாடு செல்ல :-
புதன் கீழ்கண்ட
நட்சத்திர காலில் நின்றால்
மகம்,மற்றும் சனி சாரத்தில் நின்றால் ஜாதகர் கிராம வாசம் புரிவார்.மாறாக
பூரட்டாதி,ஆயில்யம் மற்றும் ராகு நட்சத்திர காலில் நிற்பின் பல தேசம் செல்வார்.
மகம்,மற்றும் சனி சாரத்தில் நின்றால் ஜாதகர் கிராம வாசம் புரிவார்.மாறாக
பூரட்டாதி,ஆயில்யம் மற்றும் ராகு நட்சத்திர காலில் நிற்பின் பல தேசம் செல்வார்.
ஆயில்யம், கேட்டை,ரேவதி நட்சத்திரகாலில் நின்றால் வியபாரம் மூலம்
வெளிநாடு செல்லலாம்.
தந்தை வெளிநாடு
செல்லும் யோகம்;-
சூரியனுடனுடைய நட்சத்திர சாரத்தில் சனி நின்றால் அவனது அந்நிய தேசம் சென்றிருப்பார்.தந்தை மகன் ஓர் இடத்தில் இருக்க முடியாத நிலை.
சூரியனுடனுடைய நட்சத்திர சாரத்தில் சனி நின்றால் அவனது அந்நிய தேசம் சென்றிருப்பார்.தந்தை மகன் ஓர் இடத்தில் இருக்க முடியாத நிலை.
பிதுர்காரனாகிய
சூரியனுடன் சந்திரன்,சுக்கிரன்,புதன் இவர்கள் கூடி நின்றால் அவனது தந்தை வெளிநாடு
செல்லும் பாக்கியம் பெற்றிருப்பார்.
ஒருவரது
சாதகத்தில் பத்தாம் மற்றும் ஆறாம் ராசியில் ராசியில் ஏழு கிரகங்கள்
கூடியிருந்தாலும், பன்னிரண்டாம்
ராசிநாதன் சர ராசியில் இருந்தாலும்,
அச்சாதகர் பொருள் ஈட்டும் விஷயமாக வெளிநாடு சென்றிருப்பார்.
அச்சாதகர் பொருள் ஈட்டும் விஷயமாக வெளிநாடு சென்றிருப்பார்.
நான்காம் மற்றும்
பத்தாம் இடத்தை லக்கினமாகவும்,
பணிரெண்டாம் ராசியில் ராகு அல்லது சுக்கிரன்,சந்திரன் இவர்கள் இருவரும் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் ஆகிய ஏதாவது ஒரு இடத்தில் இருப்பினும் வெளிநாட்டு யோகம்.
பணிரெண்டாம் ராசியில் ராகு அல்லது சுக்கிரன்,சந்திரன் இவர்கள் இருவரும் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் ஆகிய ஏதாவது ஒரு இடத்தில் இருப்பினும் வெளிநாட்டு யோகம்.
பத்தாம் வீட்டாம்
அதிபதி ராகு,கேதுக்களின்
வர்க்கம் பெற்று அல்லது சனி,குரு இவர்களின் வர்க்கம் பெற்று இருப்பினும் அதாவது
சில நேரங்களில் நீசம், அஸ்தமனம் பெற்று
இருந்தால் அந்த சாதகர் சுய தொழிலை விட்டு அந்நிய தேசங்களில் சேவக விருத்தி
செய்வான்.
ராசிக்கு பத்தில்
சனி,குஸன்,சுக்கிரன் இவர்களிருந்தால் அந்நிய தேசம் சென்று பற்பல
வியபாரம் செய்வான்.
மகர லக்கினம் சர
ராசியாக இருந்து சனி,சந்திரன்,குரு சம்பந்தம் பெற்றோ அல்லது பார்வை பெற்றோ
இருந்தால் கடல் கடந்து அயல்நாடு செல்லாம்.
பல முறை அயல்நாடு செல்லும் யோகம்
ஒருவரது சாதகத்தில் ஜல கிரகங்களான சனி,சந்திரன்,குரு ஆகிய மூன்று கிரகங்களும் கடகம்,மகரம்,மீனம் ஆகிய ராசிகளில் ஒன்றில் இருப்பின் இவ்வகை யோகம் உண்டு.
லக்கினம் சரமாகவும்,லக்கினாதிபதி வேறு சர ராசியில் இருப்பின் வெளிநாட்டு யோகம்.
குரு,சனி,பாம்பு சரம் உபயம் அமர்ந்திருப்பின் கடல் கடக்கும் யோகம்.
12-ம் வீட்டோன், 8-ஆம் வீட்டோன் மற்றும் செவ்வாய் இம்மூவர் சேர்ந்து
எவ்விடத்திலிருந்தாலும் பர தேசம் செல்வான்.
ஒரே வீட்டில்
சூரியன்,சந்திரன்,புதன்,
சுக்கிரன் சேர்ந்து நிற்பது
.குரு 4,6,12 ம் வீட்டில் இருப்பது.
ராகு அல்லது கேது ஜீவ ராசியான கடகம்,மகரம்,மீனம் ஆகிய ஒன்றுடன் இருப்பது.
செவ்வாய்,சுக்கிரன்,
சந்திரன் அல்லது ராகு சர ராசியாக இருப்பது.
பத்தாம் அதிபதி ராகு,கேது நட்சத்திர காலிலோ அல்லது ஜல ராசியின் நட்சத்திர காலில் நிற்பது.
கடகம்,மகரம்,மீனம் போன்ற ராசிகளில் சனி,குரு,சந்திரன் அல்லது பத்தாம் வீட்டதிபதி வெளிநாடு செல்லும் யோகம்.
சுக்கிரன் சேர்ந்து நிற்பது
.குரு 4,6,12 ம் வீட்டில் இருப்பது.
ராகு அல்லது கேது ஜீவ ராசியான கடகம்,மகரம்,மீனம் ஆகிய ஒன்றுடன் இருப்பது.
செவ்வாய்,சுக்கிரன்,
சந்திரன் அல்லது ராகு சர ராசியாக இருப்பது.
பத்தாம் அதிபதி ராகு,கேது நட்சத்திர காலிலோ அல்லது ஜல ராசியின் நட்சத்திர காலில் நிற்பது.
கடகம்,மகரம்,மீனம் போன்ற ராசிகளில் சனி,குரு,சந்திரன் அல்லது பத்தாம் வீட்டதிபதி வெளிநாடு செல்லும் யோகம்.
பத்தாம்
வீட்டதிபதி ராகு,கேது நட்சத்திர
காலில் நிற்பது.
மேஷம்,கடகம்,துலாம்,
மகரம் போன்ற சர ராசிகளில் நான்கு பக்கங்களில் கிரகங்கள் அமர்ந்து ஒருவரையோருவர் பார்த்துக்கொள்ளல் யோகம்.
மகரம் போன்ற சர ராசிகளில் நான்கு பக்கங்களில் கிரகங்கள் அமர்ந்து ஒருவரையோருவர் பார்த்துக்கொள்ளல் யோகம்.
இதுவரை பொதுவான
விதிகளை பார்த்தோம் .இனி பணிரெண்டு ராசிகளுக்கு அதிக வெளிநாட்டு யோகம் தரும்
கிரகநிலைகளை பார்ப்போம்.
முதலில்
மேஷ
லக்கனத்திற்கு
பத்தாம் வீட்டு
அதிபதி சனி தன் சொந்த வீடான மகரத்தில் அமர்ந்து பணிரெண்டாம் வீட்டதிபதி குரு
கடகத்தில் உச்ச வீட்டிலிருந்து சம சப்தமாக ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும் நிலை
பிரபலமான வெளிநாட்டு யோகம்.இந்த அமைப்புடையவர்கள் அதிக பொருளீட்டும் யோகத்தை
பெற்றவர்கள்.
சனி
பாதகாதியாகவும் வருவதால் ஒரு சில பாதகங்களை செய்ய நினைத்தாலும் லக்கன யோகரான குரு
பார்வை பாதகத்தை குறைத்துவிட வாய்ப்புண்டு.
ரிஷப
லக்கனத்திற்கு
பணிரெண்டாம்
வீட்டிற்குரிய செவ்வாய் ஓன்பதாம் வீடான மகரத்தில் உச்சம் பெற்று லாப, அட்டமாதிபதியான
குருவால் பார்க்கப்பட்டால் வெளிநாடு செல்லும் யோகம்.
மிதுன லக்கன
காரருக்கு
ஐந்தாம் மற்றும்
பன்னிரண்டாம் இடத்துக்குரிய சுக்கிரன் பத்தில் ஜல ராசியான மீன ராசியில் உச்சம்
பெறுவது வெளிநாட்டுயோகம்.
கடக
லக்கனகாரர்களுக்கு
நான்காம் மற்றும்
பதினொன்றாம் இடத்துக்குரிய சுக்கிரன் பதினொன்றில் ஆட்சி பெறுவதும் புதன்
பணிரெண்டில் ஆட்சி பெறுவதும்,
இதேபோல் 9- ஆம் வீட்டதிபதி
குரு 12 -ல் மிதுனத்தில்
அமர்வதும்,
பணிரெண்டாம் வீட்டதிபதி ஒன்பதாம் வீடான ஜல ராசி மீனத்தில் இருப்பதும் யோகம்.
பணிரெண்டாம் வீட்டதிபதி ஒன்பதாம் வீடான ஜல ராசி மீனத்தில் இருப்பதும் யோகம்.
( குறிப்பு ; 9,12 க்குடையவர்கள் பரிவர்தனை, பார்வை மற்றும்
சேர்க்கை எல்லா லக்கன காரர்களுக்கும் வெளிநாட்டு யோகம்)
சிம்ம
லக்கனகாரர்களுக்கு
பணிரெண்டாம்
அதிபதி சந்திரன் பத்தாம் இடமான ரிஷபத்தில் உச்சம் பெற்று, ஐந்தாம் மற்றும்
பத்தாம் இடத்துக்குரிய குரு ஜல ராசி கடகத்தில் உச்சம் பெறுவதும் வெளிநாட்டு யோகம்.
கன்னி
லக்கனத்திற்கு
நான்காம் மற்றும்
ஏழாம் இடத்துக்குரிய குரு பதினொன்றாம் இடமான ஜல மற்றும் சர ராசியான கடகத்தில்
உச்சம் பெறுவது யோகம்.குரு பாதகாதிபதியாகவும் வருவதால் குருவை வழிபட்டாலோ அல்லது
வருமானத்தின் ஒரு பகுதியை தான தர்மங்களோ அவை செய்யும் பாதகங்களிலிருந்து
விடுபடலாம்.
துலாம்
லக்கனத்தாருக்கு
பணிரெண்டாம்
அதிபதி புதன் ஆட்சி உச்சம் பெற்று குருவால் பார்கப்படாமல் இருத்தல் நலம்.
விருட்சக
அன்பர்களுக்கு
ஏழாம் மற்றும் 12ஆம்
இடத்துக்குரிய சுக்கிரன் பணிரெண்டில் ஆட்சியோ அல்லது ஐந்தில் உச்சமோ பெறல் நலம் அல்லது
பணிரெண்டில் 4,5 -க்குடைய சனி
உச்சம் பெறுவதும் பிரபல யோகம்.
தனுசு
லக்கனத்திற்கு
ஐந்தாம் மற்றும்
பன்னிரண்டாம் இடத்துக்குரிய செவ்வாய் உச்சம் பெற்று லக்கன மற்றும் நான்காம்
ஆதிபத்திய குரு உச்சம் பெற்று ஜல சர ராசியான கடகத்திலிருந்து பார்த்தல் நலம்.
மகர லக்கனத்திற்கு
மூன்றாம் மற்றும்
பன்னிரண்டாம் இடத்துக்குரிய குரு ஏழில் உச்சம் பெற்று லக்கனத்தில் சனியையோ அல்லது
லக்கனத்தில் உள்ள 4,11- க்குரிய செவ்வாயை
பார்த்தால் கடல் கடந்து செல்லும் யோகம்.
கும்ப
லக்கனத்திற்கு
தன மற்றும்
லாபாதிபதியான குரு பதினொன்றில் ஆட்சிபெற்று பணிரெண்டில் சனி இருப்பின்.யோகம்.
மீன
லக்கனத்தாருக்கு
லாப மற்றும்
விரயாதிபதியான சனி ஜந்தில் அமர்ந்து ஆட்சி பெற்ற குருவால் பார்க்கப்படுவது அல்லது
லக்கன, ஜீவன குரு சர
மற்றும் ஜல ராசியான கடகத்தில் உச்சம் பெற்று மீனத்தில் சந்திரன் குரு,சந்திர பரிவர்தனை பெற்றிருந்தாலோ அல்லது சனி மகர
வீட்டில் ஆட்சி பெற்று ,கடகத்திலா உள்ள
குருவால் பார்க்கப்பட்டாலோ கடல் கடந்து செல்லும் யோகம்.
நன்றி!
அன்புடன்
சோதிடர்
ரவிச்சந்திரன்
(எம்.எஸ்.ஸி,எம்.ஏ,பி.எட்)
ஆசிரியர் & ஜோதிட ஆய்வாளர்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்
தமிழ்நாடு.
(எம்.எஸ்.ஸி,எம்.ஏ,பி.எட்)
ஆசிரியர் & ஜோதிட ஆய்வாளர்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்
தமிழ்நாடு.
செல் :
97 151 89 647
740 257 08 99
97 151 89 647
740 257 08 99
வாட்ஸ்அப் எண்
97 151 89 647
97 151 89 647
(தங்களது சாதகப் பலன், திருமணப்
பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன்
வழியாக பெற, தங்களது பிறந்த
தேதி பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்சப் எண்ணிற்கு
மெசேஜ் (message) செய்து கட்டணம்
செலுத்தும் வழிமுறை பெறலாம்)
======================================
‘திரைகடல் ஓடியும்
திரவியம் தேடு’ என்பது பழமைச்
சொல். வெளிநாடு சென்று பொருள் ஈட்டுவது என்பது, தொன்று தொட்டு
இருந்து வரும் வழக்கம்.
தற்கால இளைஞர்களில் பெரும்பாலானோரின் லட்சியம், கனவாக
இருப்பது, ‘வெளிநாடு
சென்று சம்பாதிக்க வேண்டும்’ என்பது தான்.
விமானம் ஏறி வெளிநாட்டு காற்றை சுவாசித்து, அங்குள்ள
பகுதிகளைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் பலருக்கு. இன்னும் சிலருக்கு
வெளிநாட்டில் வணிகம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம்.
ஆனால் வெளிநாடு செல்ல வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும்
நிறைவேறி விடுவதில்லை. ஒரு சிலருக்கு எதிர்பார்க்காமல் அந்த வாய்ப்பு வந்து கதவை
தட்டும். பலருக்கு பல முறை முயன்றும் எட்டா கனியாக இருக்கும்.
இது போன்ற ஆசைகளை நிறைவு செய்யும் யோகம் ஜாதகத்தில்
இருக்கிறதா? என்பதை
அறியும் ஆர்வம் எல்லோருக்கும் இருக்கும்.
மனித வாழ்வில் நடக்கும் எல்லா நிகழ்வு களையும் பாக்கிய
ஸ்தானம் எனும் 9-ம்
இடமே நிகழ்த்துகிறது. இதை பேச்சு வழக்கில் ‘வாங்கி வந்த வரம்’ என்பார்கள்.
அதையே ஜோதிட மொழியில் சொல்வதென்றால் ‘பிராப்தம்’ என்று
கூறுவார்கள்.
வெளிநாடு போக முடியுமா? என்ற
கேள்விக்கு ஜோதிட ரீதியான விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.
நாம் இருக்கும் வீட்டையும் நாட்டையும் குறிப்பது, நம்முடைய
ஜாதகத்தின் 4-ம்
இடம் தான். அந்த வீட்டிற்கு பன்னிரண்டாம் வீடான 3-ம்
இடம் தான் இடப்பெயர்ச்சியை குறிக்கிறது. நீண்ட தூரப் பயணத்தைப் பற்றி சொல்வது
ஒன்பதாம் இடம் ஆகும். அதன் அடிப் படையில் 3, 9, 12 ஆகிய இடத்தைக்
குறிக்கின்ற கிரகங்களின் திசாபுத்தியையும், அதன் காலத்தையும்
வைத்து தான் ஒருவர் வெளிநாடு போக முடியும்.
பயணம், இடப்பெயர்ச்சி
அல்லது இடமாற்றம் போன்றவற்றைப் பற்றி குறிப்பிடுவது நீர் கிரகமான சந்திரன் ஆகும்.
ஒரு வகைக்கு சந்திரனைப் போலவே, சுக்ரனையும் நீர் கிரகமாக
எடுத்துக் கொள்ளலாம். வெளிநாட்ட வரையும், வேறு மொழி
பேசுபவரையும், வேறு
மதத்தவர்களையும் குறிக்கும் கிரகங்கள் ராகுவும், கேதுவும்.
அதே போல் ஜீவனகாரகன் குரு, கர்மகாரகன் சனி. இவர் அனைவரும் தான் வெளிநாட்டு பயணத்தை
முடிவு செய்யும் கிரகங்களாக பார்க்கப்படு கிறார்கள்.
அதே போல் ஒருவரது ஜாதகத்தில் 9, 12 ஆகிய
இடங்களுக்கான அதிபதிகள் இணைவு பெற்றிருந்தாலோ அல்லது பரிவர்த்தனை யோகம்
பெற்றிருந்தாலோ, அந்த
நபர் வெளிநாடு செல்வார். ஒருவர் வெளிநாடு செல்வதற்கு இந்த ஜாதக அமைப்பும்
வேண்டும்.
அதே போல் ஒருவர் பிறந்த இடத்தை விட்டு, இடம்
பெயர்ந்து செல்ல வேண்டுமானால், அவரது ஜாதகத்தில்
சந்திரன், குரு
அல்லது சனியுடன் இணைந்திருக்க வேண்டும். இந்த அமைப்போடு, ராகு-
கேது இணைவு பெற்றிருக்கும் போது வெளிநாட்டு யோகம் 100 சத
வீதம் நிச்சயமானதாக அமையும்.
ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு, 9 அல்லது
12-ம்
இடத்திற்கான அதிபதிகள், நீர் தத்துவ ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம்
ஆகிய ராசிகளில் நின்றால், அந்த ஜாதகர் நிச்சயம் கடல் கடந்து வெளிநாடு செல்வார் என்பதை
தெரிவிக்கும் அமைப்பாகும்.
நீர் தத்துவ ராசிகளில் 9-ம்
இடத்தின் அதிபதியும், 10-ம் இடத்தின் அதிபதியும் இணைந்திருந்தால் அந்த நபருக்கு
வெளிநாட்டில் வேலை கிடைக்கும். குறிப்பாக நீர் தத்துவ ராசியில் 9-ம்
அதிபதி இருக்கும் போது, அவரோடு சனியும் கூடியிருந்தால் வெளிநாட்டு வேலை நிச்சயம்.
5-ம்
இடத்திற்கான அதிபதி, 12-ம்
வீட்டில் இருந்தால், அந்த
ஜாதகர் கல்லூரி படிப்பிற்காக வெளிநாடு செல்வார். 9-ம்
இடத்துக்கான அதிபதி, 12-ம்
வீட்டில் இருந்தால், அந்த
நபர் முதுநிலை ஆராய்ச்சி மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்லக்கூடும். ஒருவரது
ராசிக்கு 7-ம்
இடம் சர ராசியாக இருந்து, அதில் செவ்வாய் மற்றும் சனி இணைந்து நின்றால், அந்த
ஜாதகர் வெளிநாட்டிலேயே தங்கும் வாய்ப்பைப் பெறுவார். பிறந்த மண்ணிற்கு திரும்பி
வரமாட்டார்.
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்
ஆகியவற்றுக்கு 9-ம்
வீடு சர ராசி ஆகும். 12-ம் வீடு ஜல ராசி. 9, 12 வீட்டின்
அதிபதியுடன் சந்திரன் அல்லது குரு அல்லது சனி சம்பந்தம் பெற்றால் வெளிநாடு
வாய்ப்பு அதிகம்.
6, 8, 12 ஆகிய
வீட்டின் அதிபதிகளுடன் சந்திரன் அல்லது 10-ம் வீட்டின் அதிபதி
இணைந்திருந்தால், அந்த
ஜாதகர் 6, 8, 12 ஆகிய
ராசி அதிபதிகளின் தசாபுத்தி காலத்தில் வெளிநாட்டில் பொருள் ஈட்டி, நல்ல
நிலையில் சொந்த ஊர் திரும்புவார்கள்.
12-ம்
வீட்டின் அதிபதி 7-ம்
வீட்டில் இருந்தால், அந்த
நபருக்கு வெளிநாட்டில் திரு மணம் நடைபெறும். அவர் வெளிநாட்டவரை மணப்பார் அல்லது
வெளிநாட்டு குடியுரிமை பெற்றவரை மணப்பார்.
காலசர்ப்ப நிலையில் அனைத்து
கிரகங்கள் இருந்தாலும், வெளிநாட்டு யோகம் உண்டு. அதாவது 2-ல்
ராகு, 8-ல்
கேது நின்று, அந்த
கிரகங்களுக்கு இடையே அனைத்து கிரகங்களும் இருந்தால் இந்த யோகம் வாய்க்கும்.
6-ம்
இடத்திற்கான அதிபதி 12-ம் வீட்டில் இருந்து, 10-ம் வீட்டின்
அதிபதியுடன் இணைந்திருந்தால், அந்த நபர் ஏற்றுமதி, இறக்குமதி
தொழில் தொடர்பாக வெளிநாடு சென்று வருவார்.
வெளிநாடு செல்வதற்காக மேலே குறிப்பிட்ட அமைப்புகள்
இருந்தும், அந்த
நபரின் ஜாதகத்தில் 8-ம்
வீட்டு அதிபதி 7-ம்
இடத்திலோ அல்லது 6-ம்
வீட்டின் அதிபதி 7-ம்
வீட்டிலோ நின்றால், அவர்
வெளிநாடு சென்று சிரமங்களைச் சந்திப்பார். குறிப்பாக வெளிநாடு சென்றவுடன் வேலை
பறிபோகலாம். அங்கு நிரந்தர வேலையின்றி தவிக்கலாம். இந்த காலகட்டத்தில் 8-ம்
அதி பதியின் தசாபுத்தி நடந்தால் அவர் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்புவது
சிரமமான காரியமாகும்.
ராகு- கேது கிரகங்கள் இருப்பது போல், ஒரு
புறம் சனியும், மறுபுறம்
குருவும் இருந்தால் அந்த நபர் வெளிநாடு செல்ல வாய்ப்பு ஏற்படும்.
மேலே கூறிய அமைப்புகள் இருந்தும் ஒருவர் வெளிநாடு செல்வதில்
தடை இருந்தால், அந்த
நபரின் ஜாதகத்தில் 9, 12-ம்
இடத்தின் அதிபதிகள் இருக்கும் இடத்தில் ராகு-கேது அல்லது வக்ர கிரகம் இருக்கும்.
வக்ர கிரகங்கள் ஒருவரது பயணப் பாதையை ஏற்படுத்தும் கிரகத்தின் இயக்கத்தை தடை
செய்யும். இதற்கு பரிகாரமாக ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 6 மணி
வரையான ராகு காலத்தில், ஊரின் வடக்கு பக்கமாக உள்ள புற்றினை வழிபட வேண்டும். அல்லது
தன்னுடைய இடையில் நாகத்தை சூடியிருக்கும் விநாயகப் பெருமானை செவ்வாய்க்கிழமை காலை 8 மணி
முதல் 9 மணிக்குள்
வழிபாடு செய்தால் தடை விலகும்.
- பிரசன்ன
ஜோதிடர் ஆனந்தி, சேலம்.
=============================================
கிரகங்களில் சனி மெதுவான இயக்கத்தை உடையவர் என்றால், சந்திரன் வேகமான இயக்கத்தை உடையவர். சனி, தனது சுற்றுப்பாதையை முடிக்க, ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் நிலையில், சந்திரன் பூமியை சுமார் இருபத்தியெட்டு நாள்களில் சுற்றி முடித்து விடுகிறார்.
சந்திரனின் தனிச்சிறப்பு என்று பார்த்தால் மற்ற எட்டு கிரகங்களும் சுபர் அல்லது அசுபர் என நல்ல கிரகமாகவோ அல்லது கெட்ட கிரகமாகவோ இருக்கும் நிலையில், சந்திரன் ஒருவர் மட்டுமே பாதி நாள்கள் சுப கிரகமாகவும், மீதி நாள்கள் பாப கிரகமாகவும் மாறக் கூடியவர்.
பன்னிரண்டு லக்னங்களில் சந்திரனின் கடகமே மிகச் சிறப்பான முதன்மை லக்னமாக நமது மூலநூல்களில் சொல்லப்படுகிறது. அந்த ராசி குருவின் உச்ச வீடாகவும் இருப்பது குறிப்பிடத் தக்கது.
சந்திரன் ஒருவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதியாகி பலவீனம் அடைந்திருந்தாலோ, நன்மை தரும் பாவங்களுக்கு அதிபதியாகி பலவீனம் அடைந்திருந்தாலோ, அவருக்குரிய ஸ்தலங்களுக்குச் சென்று வழிபடுவதன் மூலம் சந்திர வலுவைக் கூட்டி நற்பலன்களை அடைய முடியும்.
==============================================
வெளிநாடு செல்லும் யோகம் எப்போது கிடைக்கும்? #Astrology
சந்திரன் நீரைக் குறிக்கும் ஜலக்கிரகம். அவருடைய ராசியான கடகம் நீர் ராசி. கடகத்தில் இருக்கும் கிரகத்தின் தசை நடைபெற்றாலோ அல்லது சந்திரன், சர ராசிகள் எனப்படும் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய இடங்களில் இருந்தாலோ சந்திர தசையில் கடல் தாண்டி வெளிநாடுகளுக்குச்செல்லும் வாய்ப்பைப் பெறுவார்'' என்கிறார் ஜோதிட நிபுணர் ஆதித்ய குருஜி.
சந்திரனால் கிடைக்கும் பிற யோகங்கள் பற்றியும், சந்திரனால் தோஷம் ஏற்பட்டிருந்தால் செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றியும் கேட்டோம்.
''ஜோதிடத்தில் லக்னத்தை உயிர் என்றும், ராசியை உடல் என்றும் சொல்லுவார்கள். ராசி என்பது சந்திரன் நின்ற வீட்டைக் குறிக்கும். ஒன்பது கிரகங்களிலும் சந்திரன் ஒருவர் மட்டுமே வேகமான இயக்கம் உடையவர். சந்திரன் தாயைக் குறிக்கும் கிரகமாக கருதப்படுகிறார். 'மாதாகாரகன்' என்று ஜோதிடம் இவரை அழைக்கிறது. நம் மனதை இயக்குபவர் என்பதால் சந்திரனை 'மனோகாரகன்' என்றும் சொல்வது உண்டு.
கிரகங்களில் சனி மெதுவான இயக்கத்தை உடையவர் என்றால், சந்திரன் வேகமான இயக்கத்தை உடையவர். சனி, தனது சுற்றுப்பாதையை முடிக்க, ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் நிலையில், சந்திரன் பூமியை சுமார் இருபத்தியெட்டு நாள்களில் சுற்றி முடித்து விடுகிறார்.
பூமிக்கு அதிக ஒளி தரும் கிரகங்களில் சூரியனுக்கு அடுத்த இடம் இவருடையது.
மனம் அல்லது புத்தி, அம்மா, காய்கறிகள், பூ, இளம்பெண், கலைகளில் ஆர்வம், நீர் சம்பந்தமானவை, கடல், கப்பல், நெல், அரிசி, பால், வெள்ளி, வெண்கலம், பிரயாணம், கிணறு, குளம், ஆறு போன்ற நீர் நிலைகள் ஆகியவை சந்திரனின் காரகத்துவம் பெற்றவை.
சந்திரனின் தனிச்சிறப்பு என்று பார்த்தால் மற்ற எட்டு கிரகங்களும் சுபர் அல்லது அசுபர் என நல்ல கிரகமாகவோ அல்லது கெட்ட கிரகமாகவோ இருக்கும் நிலையில், சந்திரன் ஒருவர் மட்டுமே பாதி நாள்கள் சுப கிரகமாகவும், மீதி நாள்கள் பாப கிரகமாகவும் மாறக் கூடியவர்.
பவுர்ணமியன்று சூரியனுக்கு நேரெதிரில் இருந்து சூரியனின் முழு ஒளியையும் வாங்கி பூமிக்குப் பிரதிபலிக்கும் நிலையில் முழுச் சுபராகவும், அமாவாசையை நோக்கி ஒளி குறைந்து செல்லும்போது சிறிது சிறிதாக ஒளி குறையும் நிலையில் பாபராகத் துவங்கி ஒளியற்ற அமாவாசையன்று முழு பாபராகவும் கருதப்படுவார்.
சந்திரனால் பெறப்படும் முக்கிய யோகமாக 'அதியோகம்' சொல்லப்படுகிறது. சந்திரனுக்கு ஏழாம் வீட்டில் சுபகிரகங்களான குரு, சுக்கிரன், புதன் ஆகியோர் இருக்கவேண்டும். இது ஒரு சிறப்பான யோகம் ஆகும்.
இதன் உண்மையான சூட்சுமம் என்னவென்றால், ஏற்கெனவே நன்மைகளைத் தரக் கூடிய சுப கிரகங்கள் வளர்பிறைச் சந்திரனுக்கு எதிரில் அமர்ந்து, அதாவது அவருக்கு நேர் எதிரான ஏழாம் வீட்டில் இருந்து சந்திர ஒளியைக் கூடுதலாகப் பெறுவதால் ஜாதகருக்கு பூரண நன்மையைச் செய்வார்கள். ஜாதகர் உயர் பதவி, சொகுசான வீடு, பணியாளர்கள் சூழ வாழ்வாங்கு வாழ்வார் என்பதாகும்.
பன்னிரண்டு லக்னங்களில் சந்திரனின் கடகமே மிகச் சிறப்பான முதன்மை லக்னமாக நமது மூலநூல்களில் சொல்லப்படுகிறது. அந்த ராசி குருவின் உச்ச வீடாகவும் இருப்பது குறிப்பிடத் தக்கது.
ஒருவர் பிறந்தது முதல் அவர் இறக்கும் வரையிலான, வாழ்க்கைச் சம்பவங்கள் அனைத்தும் அவர் பிறக்கும் நேரத்தில் சந்திரனுக்குப் பின் இருக்கும் நட்சத்திரத்திலும், அதனையடுத்து அவர் இருக்கப் போகும் நட்சத்திரங்களின் தொடர்ச்சியிலுமே அமைகிறது.
சந்திரன் நீரைக் குறிக்கும் ஜலக்கிரகம். அவருடைய ராசியான கடகம் நீர் ராசி. கடகத்தில் இருக்கும் கிரகத்தின் தசை நடைபெற்றாலோ அல்லது சந்திரன், சர ராசிகள் எனப்படும் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய இடங்களில் இருந்தாலோ சந்திர தசையில் கடல் தாண்டி வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெறுவார்.
கடல் சம்பந்தப்பட்ட இடங்களிலும், ஆற்றோரங்களிலும், நீர் நிலைகளிலும், கப்பல் மற்றும் துறைமுகங்களிலும் ஒருவரை வேலை செய்ய வைப்பவரும் சந்திரன்தான். ஜாதகத்தில் சந்திரன் பத்தாமிடத்துக்கு அதிபதியாகியோ அல்லது பத்தாமிடத்தோடு தொடர்புகொண்டிருந்தாலோ அவருக்கு திரவப் பொருள்கள் மூலமான தொழில் அமையும். சந்திரன் ஜாதகத்தில் வலுபெற்றதற்கு ஏற்றார் போல் ஜாதகர் கூல் ட்ரிங்ஸ், மினரல் வாட்டர், பால் வியாபாரம் போன்ற தொழில்களைச் செய்வார்'' என்றார்.
ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் தோஷம் ஏற்படுத்தும் நிலையில் இருந்தால், ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் செய்யவேண்டிய பரிகாரங்கள் குறித்தும் சில விவரங்களைக் கூறினார்.
சந்திர தோஷ நிவர்த்திக்கு உரிய பரிகாரத் திருத்தலங்கள்:
சந்திரன் ஒருவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதியாகி பலவீனம் அடைந்திருந்தாலோ, நன்மை தரும் பாவங்களுக்கு அதிபதியாகி பலவீனம் அடைந்திருந்தாலோ, அவருக்குரிய ஸ்தலங்களுக்குச் சென்று வழிபடுவதன் மூலம் சந்திர வலுவைக் கூட்டி நற்பலன்களை அடைய முடியும்.
கும்பகோணம் அருகில் உள்ள திங்களூர் என்ற ஊரில் இருக்கும் திருக்கோயில் சந்திர ஸ்தலம் எனப் புகழ் பெற்றது. இந்த ஸ்தலத்தில் சந்திரனை லக்னாதிபதியாகவோ, யோகாதிபதியாகவோ கொண்டவர் தன்னுடைய ஜன்ம நட்சத்திரம் வரும் நாளில் வழிபட்டு குறைந்தது ஒரு மணி நேரம் கோயிலுக்குள் இருப்பது சந்திர வலுவைக் கூட்டும்.
சென்னையில் இருப்பவர்கள் குன்றத்தூரில் இருந்து ஶ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் உள்ள சோமங்கலம் என்ற ஊரில் அருள்பாலிக்கும் சோமநாதீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சென்று வழிபடலாம். திங்கள்கிழமை செல்வது சிறப்பு தரும்.
திருவண்ணாமலையில் பவுர்ணமியன்று கிரிவலம் செல்வதும் சந்திரனுக்கு உரிய சிறந்த பரிகாரமாக அமையும்.
ஏழுமலைகளும் குனிந்து நிற்க தானுயர்ந்து நிற்கும் வேங்கடமுடையான் வீற்றிருக்கும் புனிதத் தலமான திருப்பதியும் சந்திரனின் வலுவைக் கூட்டும் திருத்தலம்தான்.
==============================================
No comments:
Post a Comment