Followers

Saturday, July 18, 2020

உங்களுக்கு சொந்த வீடு அமையுமா?  - எந்த ராசிக்கு எந்த திசை வீடு?...................... ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் வாஸ்துப்படி வீட்டு வாசலை அமைப்பது எப்படி?



மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு மேற்கு திசையை நோக்கி தலைவாசல் வைத்து வீடு கட்டுவது சிறந்த பலனை தரும்.  அப்படி வாசல் அமைக்கும்போது தென்மேற்கு பகுதியில் அமைந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


* கும்பம், மீனம் ராசியில் பிறந்தவர்களுக்கும் மேற்கு திசை பொறுத்தமான திசையாகும். அவர்களும் வீட்டின் தலை வாசலை மேற்கு திசையில் அமைப்பது வீட்டில் வசிப்பவர்களுக்கு ஏராளமான நன்மைகளை பெற்று தரும்.



* சிம்மம் ராசியில் பிறந்தவர்கள் வீட்டின் வாசலை கிழக்கு பக்கம் வைக்கலாம். அப்படி வீட்டின் முகப்பு அமைந்தால் செல்வம்  நிலைத்திருக்கும். பண பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டிய நிலை வராமல் செல்வம் குறைபடாமல் கைவசம் இருக்கும்  வாய்ப்புகள் அதிகம். வீட்டின் வாசலை கிழக்கு திசை பார்த்து அமைக்க முடியாத சூழலில் மேற்கு திசையில் வாசல்  அமைக்கலாம்.



* இதேபோல் துலாம், கன்னி ராசியில் பிறந்தவர்களும் கிழக்கு திசை நோக்கி வாசலை நிறுவலாம். அப்படி அமைக்கும்  பட்சத்தில் வீட்டில் செல்வம் குறைவில்லாமல் இருக்கும். 



* தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு தெற்கு திசை பலன்களை தருவதாக அமையும். இந்த திசை நோக்கி வீட்டு வாசலை அமைப்பதால் நன்மைகள் கிட்டும். எனினும் வாசலை அமைக்கும்போது அது தென்மேற்கு திசையில் அதிக அளவு ஆக்கிரமித்துவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.



* மகரம், விருச்சிகம் ராசியில் பிறந்தவர்களும் தெற்கு திசை பார்த்து வீட்டு வாசலை அமைக்கலாம். அப்படி அமைப்பது  செல்வாக்கையும், மதிப்பையும் பெற்றுத்தரும்.



* மிதுனம், ரிஷபம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு வடக்கு பார்த்த திசை பலன் தருவதாக அமையும். அந்த திசையில் வீட்டு  வாசலை அமைக்கலாம்.



* கடகம் ராசிக்காரர்களும் வடக்கு திசை சாதகமான திசையாகும். வீட்டு வாசலை அந்த திசை பார்த்து வைக்கலாம்.

நன்றி ;https://tamil.webdunia.com/article/vaasthu-house-features/before-selecting-a-place-to-see-vastu-methods-117032900045_1.html

==================================================
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இன்றியமையாத விஷயங்கள்... உணவு - உடை - உறைவிடம். அதில் மிக முக்கியமானது உறைவிடம். ஒவ்வொரு மனிதனுடைய அடிப்படையான விஷயங்களில் முக்கியமானது வீடு.
அந்த ஜாதகருக்கு சொந்த வீடு அமையுமா - எந்த இடத்தில் அமையும் - அவர் பிறந்த ஊரிலா அல்லது வசிக்கும் ஊரிலா அல்லது வெளிநாட்டிலா - எந்த திசையைப் பார்த்த வீடு அமையும் - எந்த திசையைப் பார்த்து அவர் உறங்க வேண்டும் - எந்த திசையை நோக்கி அவர் தலை வைத்து படுக்க வேண்டும் - எந்தெந்த வண்ணங்கள் அவர் வசிக்கும் வீட்டில் அவர் பயன்படுத்தலாம் - எந்தெந்த வண்ணங்களில் தரைத்தளம் அமையலாம் - ஜன்னல்களின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் - கதவின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்றெல்லாம் ஒவ்வொருவருடைய ஜாதகத்தையும் கொண்டு சொல்ல முடியும்.
இப்போதைய சூழ்நிலையில், தனி வீடு என்ற கலாச்சாரம் மாறி அடுக்குமாடி குடியிருப்புகளின் கலாச்சாரம் வளர்ந்து நிற்கிறது. இந்தச் சூழ்நிலையில் எந்தந்த திசையைப் பார்த்து எது எப்படி அமைய வேண்டும் என்று சொல்வதற்கு சில விஷயங்கள் ஜாதகத்தில் ஆராய வேண்டியிருக்கிறது. எந்தவொரு சூழ்நிலையிலும் தலைவாசல்தான் பிரதானமாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர காவலுக்கு போடப்பட்டிருக்கும் இரும்புக் கதவையோ (Gate) அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுவாக அனைவரும் நுழையக்கூடிய வாசல்களையோ நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது.
ஒவ்வொருவருடைய வீட்டின் தலைவாசலைத் தான் பிரதானமாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அது எந்த ஊராக இருந்தாலும் சரி - அது எந்த நாடாக இருந்தாலும் சரி. தலைவாசலை தான் நாம் பிரதானமாக எடுத்துக் கொள்ளவேண்டும். அப்படி பார்க்கும்போது, ஒவ்வொருவருடைய ராசிக்கும் ஒவ்வொரு திசையானது கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஒருவருக்கு சொந்த வீடு அமையுமா என்பதை லக்னத்திலிருந்து நான்காவது வீட்டை ஆராய்ந்து பார்த்து அதன் பிறகு முடிவு எடுக்க வேண்டும். நான்காவது வீட்டின் அதிபதி பலமாக இருந்தால் கண்டிப்பாக அவருக்கு சொந்த வீடு அமையும். குறைந்தபட்சம் சொந்த மனையாவது அமையும். நான்காவது அதிபதி பலமாக இருந்து லக்னாதிபதி பலம் பெற்று இருந்தால் நிச்சயமாக சொந்த ஊரில் அவருக்கு சொந்த வீடு அமையும். லக்னாதிபதியின் பலம் இறங்கி நான்காம் வீட்டு அதிபதியும் பலமிழந்து காணப்படும் நிலையில் செவ்வாய் பலமாக இருந்தால் நிச்சயமாக அவருக்கு சொந்த வீடு - மனை உண்டு.

பொதுவாகச் சொல்வதென்றால் நான்காம் வீட்டு அதிபதியோ அல்லது செவ்வாயோ மிக பலம் வாய்ந்து காணப்பட்டால், கண்டிப்பாக அவருக்கு சொந்த வீடு மனை உண்டு. நான்காம் வீட்டு அதிபதியும் பலமிழந்து அல்லது செவ்வாயும் பலமிழந்து ஒருவருக்கு வீடு அமையுமானால் அவர் பெயரில் இருக்கக்கூடிய வீடு அல்லது மனையில் அவரால் வசிக்க முடியாது. அல்லது அது நீண்ட நாளைக்கு வராது.
வீடு அமைய பொதுவான பரிகாரம்:

நவகிரகங்களில் செவ்வாய் கிரகத்துக்கு பூமிகாரகன் என்று பெயர். செவ்வாயினுடைய அதிதேவதை முருகன். யாருக்கெல்லாம் சொந்த வீடு மனை வேண்டும் என்று ஆசையும் கனவும் இருக்கிறதோ... அவர்கள் முருகனை வழிபடுவதன் மூலம் சொந்த வீடு மனை பாக்கியம் அமையும்.
இனி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் எந்த எந்த திசை அமைந்தால் நல்லது என்பதை பார்க்கலாம்.

மேஷ ராசி -கிழக்கு மற்றும் வடக்கு
ரிஷப ராசி - கிழக்கு மற்றும் தெற்கு
மிதுன ராசி - மேற்கு மற்றும் தெற்கு
கடக ராசி - வடக்கு மற்றும் மேற்கு
சிம்ம ராசி - கிழக்கு மற்றும் வடக்கு
கன்னி ராசி - கிழக்கு மற்றும் தெற்கு
துலா ராசி - மேற்கு மற்றும் தெற்கு
விருச்சிக ராசி - வடக்கு மற்றும் மேற்கு
தனுசு ராசி - கிழக்கு மற்றும் வடக்கு
மகர ராசி - கிழக்கு மற்றும் தெற்கு
கும்ப ராசி - மேற்கு மற்றும் தெற்கு
மீன ராசி - வடக்கு மற்றும் மேற்கு
=========================================================
ஒரு கட்டடம் எந்தத் திசையை நோக்கியிருந்தாலும், அதன் தலைவாசலை சிறப்பாக அமைப்பது அவசியம்.

வீடு பற்றிய கனவு எல்லோருக்கும் உண்டு. அந்தக் கனவு நனவாகும்போது வீட்டின் தலைவாசல் எந்தத் திசையில் இருக்க வேண்டும்? எந்த ராசிக்காரர்களுக்கு எந்த திசையில் வீட்டின் வாசல் அமைக்க வேண்டும்... என்பது பற்றி வாஸ்து நிபுணர் ஆண்டாள். பி.சொக்கலிங்கத்திடம் கேட்டோம்.

இல்லம்
இல்லம்
''பொதுவாக, புதிதாக வீடு கட்டும்போது, வீடு மனைவி பெயரில் இருக்க வேண்டுமா அல்லது கணவரின் பெயரில் இருக்க வேண்டுமா, வீட்டின்வாசல் கணவனின் ராசிக்கு ஏற்ப அமைக்க வேண்டுமா, மனைவியின் ராசிக்கேற்ப அமைக்க வேண்டுமா... எனப் பலவிதமான கேள்விகள் எழுப்பப்படுவதுண்டு.

வாஸ்து சாஸ்திரத்தைப் பொறுத்தவரை இந்த ராசிக்காரர்களுக்கு இந்தத் திசையில்தான் வாசல் இருக்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. நல்லவிதமான வாஸ்து அமைப்புள்ள வீட்டில் எந்த ராசிக்காரரும் வசிக்கலாம். தவறான வாசல் உள்ள வீட்டில் எவ்வளவு நல்ல யோகமான ஜாதகத்தில் ஒருவர் பிறந்திருந்தாலும் அவஸ்தைப்பட வேண்டியே இருக்கும் என்பதே உண்மை. உதாரணமாக 'ஒருவர் உடலின் வெப்பநிலை 98.4 டிகிரி பாரன் ஹீட் என்னும் அளவைத் தாண்டி 101 டிகிரி என்றால் காய்ச்சல்' என்பது இந்தியாவிலும் மாறாது, அமெரிக்காவிலும் மாறாது.

ஆண்டாள் பி.சொக்கலிங்கம்
ஆண்டாள் பி.சொக்கலிங்கம்
வீட்டுமனை பற்றிச் சொல்லும்போது, 'கெட்டும் தெற்கு பார்த்த வீட்டுக்குச் செல்லாதே' என்று ஒரு பழமொழி இருக்கிறது. இப்படிப் பொத்தாம்பொதுவாக எதையும் சொல்லிவிட்டுப் போகக் கூடாது. தெற்கு பார்த்த வீட்டில் இருப்பவர்களெல்லாம் கஷ்டப்படுவார்களா... என்னும் கேள்வி எழுகிறது. ஆனால், அது சூழ்நிலைகளைப் பொறுத்து மாறக்கூடியது. தெற்கு பார்த்த வீடு என்றால், வாசல் கிழக்கில் இருக்க வேண்டும், மேற்கு பார்த்த வீடென்றால் வாசல் வடக்கில் அமைக்க வேண்டும்.

வீடு கட்டும்போது மதிற் சுவருக்கும் வீடு அமையும் இடத்துக்கும் இடம் ஒதுக்கும்போது, கிழக்கில் இடம் அதிகமாகவும் மேற்கில் இடம் குறைவாகவும், தெற்கில் இடம் குறைவாகவும் வடக்கில் இடம் அதிகமாகவும் இருக்கும்விதமாக அமைக்க வேண்டும். அப்படி அமைத்தால்தான் தென்மேற்கு உயரமாகவும் வடகிழக்கு பள்ளமாகவும் இருக்கும் விதமாக அமைக்க முடியும். தென்மேற்கு என்பது 'குபேர மூலை'. வடகிழக்கு என்பது 'ஈசான்ய மூலை'. குபேர மூலை உயரமாகவும் ஈசான்ய மூலை பள்ளமாகவும் இருக்க வேண்டும். இப்படி அமைப்பதுதான் முறையான வாஸ்து.

இல்லம்
இல்லம்
தலைவாசல் அமைக்கும் முறை:

ஒரு கட்டடம் எந்தத் திசையை நோக்கியிருந்தாலும், அதன் தலைவாசலை சிறப்பாக அமைப்பது அவசியம்.

தலைவாசல் இருக்க வேண்டிய இடங்கள்:
வடக்குப் பார்த்த கட்டடத்துக்குத் தலைவாசல் வடக்குநோக்கி கிழக்கு திசையை ஒட்டியவாறு அமைக்க வேண்டும். கிழக்கு பார்த்த கட்டடத்துக்குத் தலைவாசல் கிழக்கு திசையில் வடக்கு திசையை ஒட்டியவாறு அமைக்க வேண்டும். தெற்கு பார்த்த கட்டடத்துக்குத் தலைவாசல் தெற்கு திசையில் கிழக்கு திசையை ஒட்டியவாறு அமைக்க வேண்டும். மேற்கு பார்த்த கட்டடத்துக்குத் தலைவாசல் மேற்கு திசையில் வடக்கு திசையை ஒட்டியவாறு அமைக்க வேண்டும்.


ஒரு வீட்டுக்கோ, தொழில் நிறுவனத்துக்கோ அமைக்கப்படும் வாசல்கள் ஒன்று, இரண்டு, நான்கு, ஆறு, எட்டு... என்ற எண்ணிக்கையில் வருமாறு அமைக்க வேண்டும். மேலும் கட்டடத்துக்குள் போடப்படும் அறைகளின் வாசல்களும் மேற்கூறியபடியே அமைக்கப்பட வேண்டும்.

க‌ட்டட‌த்‌தி‌ல் தலைவாசல் வரக்கூடாத இடங்கள்:
ஒரு கட்டடத்தின் தலைவாசலை என்றும் நீச்ச‌த்தில் அமைக்கக் கூடாது. அவ்வாறு நீச்சத்தில் அமைக்கும்போது நம் வாழ்வில் பல இன்னல்கள் நேரும். வடக்கு பார்த்த கட்டடத்துக்கு வடக்கு திசையில் மேற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்கக் கூடாது. அதாவது, கிழக்கு பார்த்த கட்டடத்துக்கு கிழக்கு திசையில் தெற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்கக் கூடாது. மேற்கு பார்த்த கட்டிடத்துக்கு மேற்கு திசையில் தெற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்கக்கூடாது.


இல்லம்

தெற்கு பார்த்த கட்டிடத்துக்கு தெற்கு திசையில் மேற்கு திசைக்கு ஒட்டியவாறு தலைவாசல் அமைக்கக் கூடாது. மேலும் தலைவாசல் மூன்று, ஐந்து, ஏழு... என்ற எண்ணிக்கையில் வருமாறு அமைப்பது சிறந்ததல்ல'' என்கிறார் வாஸ்து நிபுணர் ஆண்டாள்.பி.சொக்கலிங்கம்.
=========================================================
தெற்குப் பார்த்த வாசல்... யாருக்கு நல்லது?

'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்பார்கள். மனைவி மட்டுமல்ல, மனைவியுடன் சேர்ந்து வாழப்போகும் வீடு அமைவதும்கூட இறைவன் கொடுத்த வரம் என்றுதான் சொல்லவேண்டும். தெற்கு வீடு என்றாலே பலரும் வேண்டாம்டா சாமி என்று ஒதுக்கிவிடுகிறார்கள் என்பதைக் கேள்விப்பட்ட நாம், அப்படி தெற்குப் பார்த்த வாசல் உள்ள வீட்டை ஒதுக்குவது சரிதானா என்று யோகஶ்ரீ வாஸ்து பேராசிரியர் எம்.எஸ்.ஆர்.மணிபாரதியிடம் கேட்டோம்.

''தெற்குப் பார்த்த வீடுகள், காலிமனைகள் என்றாலே பலரும் வேண்டாம்டா சாமி என்று அலறுகிறார்கள். கிழக்கும் வடக்கும்தான் ராசியான மனைகள் என்று பலரும் நினைக்கிறார்கள். காரணம் தெரியாமலேயே இப்படி சிலர் புறக்கணிப்பதால், மற்றவர்களும் அதையே பின்பற்றுகிறார்கள். சொல்லப்போனால், 'சிம்ம கர்ப்ப மனைகள்' என்றழைக்கப்படும் தெற்குப் பார்த்த மனைகள், அதில் இருப்பவர்களுக்குத் தைரியம் தரும் மனைகளாக அமைந்திருக்கின்றன.

பல பெரிய தொழிலதிபர்களின் தொழிற்சாலைகள், தெற்குப் பார்த்த மனைகளாக அமைந்துள்ளன என்பது பலரும் அறியாத தகவல்களாகும். இத்தனைக்கும் பலராலும் கைவிடப்பட்ட நிறுவனங்களாகக் கூட அவை இருக்கும். இவர்கள்தான் தொழில் புரட்சியாளர்களாகவும் திகழ்வார்கள்.

அதேவேளையில், வடக்கு, கிழக்கு மனைகளில் வசித்தாலும் காரணமில்லாமல் பல பிரச்னைகளோடு வாழ்பவர்களும் உண்டு. இதற்குக் காரணம் முறையான வாஸ்து சாஸ்திரப்படி அந்த மனைகள் அமையாததுதான்.

இதே போல் வாஸ்துப்படி அமைந்த தெற்குப் பார்த்த மனைகளில் வசிப்பவர்களுக்குப் பணம் மிதம் மிஞ்சி கொட்டுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது.  காரணம் தெற்கு மனையை 'ஐஸ்வர்ய மனை' என்று சொல்வார்கள். வாஸ்துப்படி ஐஸ்வர்யம் என்பது, வற்றாத செல்வ வளத்தையும், மக்கட் பேற்றையும் குறிக்கும்.

தெற்குமனை, என்பது எல்லா ராசிக்காரர்களுக்கும் பொருந்துமா? என்று கேட்டால், நிச்சயம் பொருந்தாது. தெற்குப் பார்த்த மனையானது, ரிஷபம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், தனுசு மற்றும் சிம்மராசி அன்பர்களுக்கு யோகமுள்ள மனையாகின்றது.

இந்த ராசிக்காரர்கள் தெற்குமனைகளைத் தாராளமாக விலைக்கு வாங்கிக் கட்டடம் கட்டலாம். இதே போல் ரிஷபம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், தனுசு மற்றும் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களும் இத்தகைய மனைகளில் வீடு கட்டி குடியேறலாம்.
தாய்க்குப் பின் தாரம் என் பது நமது கிராமப்புறங்களில் உள்ள பழமொழியாகும். அதனால், தாயாரின் ராசி, லக்னப்படியோ, மனைவியின் லக்னப்படியோ வீடுகளை அமைப்பது நல்லது. ஏனென்றால், நாம் எங்குக் குடியிருந்தாலும் அவரவரது வாழ்க்கைத்துணையின் லக்னப்படியே வீடுகளைத்தேர்வு செய்யவேண்டும்.

 தெற்குப் பார்த்த மனைகளில் வீடு கட்டும்போது வீட்டை எந்த வகையில் கட்டமைக்கலாம் என்பது பற்றிப் பார்ப்போம்.
 சமையலறை -  தென்கிழக்கு (அக்னி பாகம்), வடமேற்கு (வாயுவியம்)
பூஜை அறை - வட கிழக்கு, கிழக்கு, மேற்கு,
படுக்கையறை - தென் மேற்கு  (நைருதி ), மேற்கு, தெற்கு
ஹால் (விருந்தினர் அறை) - நைருதி நீங்கலாக எங்கு வேண்டுமானாலும், அமைக்கலாம்
கழிப்பறை - தென்கிழக்கு, வட மேற்கு இதில் கழிவுக்கோப்பை வடக்கு, தெற்கு பார்த்து அமைக்க வேண்டும்.

தண்ணீர்த் தொட்டி (ஸம்ப்) - வடகிழக்கு பாகத்தில் அமைக்கலாம்.
தெற்கு வாசல் அமைந்த மனைகள், வீடுகளுக்கு வாஸ்து விதிகளைக் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும். தெற்குப் பார்த்த வீடுகளில் வசிப்பவர்கள் மேற்குப் பார்த்த வீட்டைச் சேர்ந்தவர்களிடம் சம்பந்தம் செய்யக்கூடாது. மேற்குக்கும் தெற்குக்கும் ஆகாது. தேவையற்ற வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். ஜாதகம் இல்லாதவர்களுக்குத் தெற்குப் பார்த்த வாசலும் தெற்குப் பார்த்த மனைகளும் யோகம் தரும்.
courtesy; vikatan.
==========================================================

==========================================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...