உங்கள் வாழ்க்கையில் தாம்பத்தியம் எப்படி அமையும்?
Aravindhan K | Samayam Tamil
தாம்பத்திய
வாழ்க்கை, குழந்தைப் பேறு,
தாம்பத்திய சுகம்
உள்ளிட்டவை எப்படி இருக்கும் என்பதை திருமணத்தின் போது ஒருவரின் ஜாதகத்தில்
இருக்கும் காம திரிகோணம் இடத்தைப் பொறுத்து கணிப்பதுண்டு. அவர்களின் ஜாதகத்தைப்
பொருத்து தம்பதிகளின் திருமண தாம்பத்திய வாழ்க்கை, குழந்தைப்பேறு, அந்நியோன்னியம் எப்படி இருக்கும் என்பதை கணிக்க
முடியும். ஒவ்வொருவரின் வாழ்வில் திருமணம் மிக முக்கியமான ஒரு பகுதியாகும்.
இதையெல்லாம் கணிக்கக்கூடிய ஜோதிட அமைப்பைத் தான் காம திரிகோணம் என்கின்றனர். அது
எப்படி அமைந்திருந்தால் அவர்களின் திருமண வாழ்வு எப்படி இருக்கும் என்பதை இங்கு
விரிவாக பார்ப்போம்...
தாம்பத்திய வாழ்க்கை, குழந்தைப் பேறு, தாம்பத்திய
சுகம் உள்ளிட்டவை எப்படி இருக்கும் என்பதை திருமணத்தின் போது ஒருவரின் ஜாதகத்தில்
இருக்கும் காம திரிகோணம் இடத்தைப் பொறுத்து கணிப்பதுண்டு. அவர்களின் ஜாதகத்தைப்
பொருத்து தம்பதிகளின் திருமண தாம்பத்திய வாழ்க்கை, குழந்தைப்பேறு, அந்நியோன்னியம்
எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியும். ஒவ்வொருவரின் வாழ்வில் திருமணம் மிக
முக்கியமான ஒரு பகுதியாகும்.
காம திரிகோணம் அமைப்பு
ஒருவரின் ஜாதகத்தை வைத்து
அவனுக்கு எந்த வித பிரச்சினையோ, அதற்கான தீர்வை ஜோதிடர்கள் கிரக
நிலை, ஜாதக அமைப்பைப் பொருத்து சொல்வது உண்டு.
அந்த ஜாதக அமைப்பு அவரின்
தாம்பத்தியம் எப்படி அமையும் என்பதை விளக்கக் கூடியதாக இருக்கும். சில கிரகங்களும்
அவை அமைந்துள்ள இடமும் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.
காமத்திரிகோண பாவகங்கள்:
காமத்திரிகோணம் என்பது 3,7,11 ஆகிய பாவகங்கள் குறிப்பிடப்படுகின்றது.
இந்த 3ஆம் இடம் என்பது இளைய சகோதரர், தைரிய ஸ்தானம், குழந்தை பாக்கியம் என
குறிப்பிடப்படுகிறது.
7ம் இடம் மனைவி, தாம்பத்தியம் ஸ்தானம், 11ம் இடம் ஆசை, இச்சை ,மூத்த சகோதரர் லாப ஸ்தானமாக
குறிப்பிடப்படுகிறது
ஒருவரின் தைரிய, வீரிய ஸ்தானம் ஆகும். இந்த 3ஆம் இடம் வலுத்தால் ஆணாக இருந்தால்
தந்தையாகவோ, பெண்ணாக
இருந்தால் தாய் ஆகும் தகுதி ஏற்படும்.
இந்த வீடுகள் ஒரு முக்கோண வடிவில்
அமைந்திருக்கும். இந்த அமைப்பில் உங்கள் ஜாதகம் கிரகம் அமைப்பைப் பொறுத்து
தாம்பத்தியம் அமையும்.
எப்போது
பிரச்னை ஏற்படும்?
இந்த மூன்று அமைப்புகளும்
அதற்கான கிரகங்கள் வலுவாக இருப்பது நல்லது. 3ம் பதி சூரியனுடன் நெருக்கமாக
இருந்தால் பாதிப்பு ஏற்பௌடும். இதனால் இல்லற சுகம் இல்லாமல். குழந்தை பாக்கியம்
ஏற்பட வாய்ப்பு இல்லாமல் போகலாம்.
ஒருவருக்கு 8ல் சனி இருப்பதும் அதே போல்
அவர் மணக்கும் துணைக்கும் 8ல் சுப கிரகம் இருந்தால்
அவர்களுக்கு பல பிரச்னைகளுடனே தாம்பத்தியம் மேற்கொள்ள முடியும்.
8ல் சுப கிரகமும், அடுத்தவருக்கு எந்த 8ல் கிரக அமைப்பே இல்லையெனில்
நல்லது.
====================================================
No comments:
Post a Comment