Followers

Saturday, May 9, 2020


நெப்போலியனின் காதல் கடிதம்..........
அன்பே!
நேற்று போர்க்களத்தில் கடுமையான வேலை. கொஞ்சம்கூட ஓய்வில்லை.
உணவோ உறக்கமோ இன்றி ஒரு வாரமாக இருந்தும், நான் சுறுசுறுப்பாக வேலை செய்வது கண்டு எங்கள் குழுவினர் அனைவருமே ஆச்சரியப்பட்டனர். அது என்னால் எப்படிச் சாத்தியப்படுகிறது என்று எல்லோரும் திகைத்தனர்.




என்ன…? உனக்கு ஏதாவது புரிகிறதா?

நீ எழுதும் காதல் கடிதங்கள் என் சட்டைப் பையிலேயே இருப்பது வழக்கம். சோர்வு ஏற்படும்போது நான் அந்தக் கடிதங்களை எடுத்து ஒரு தடவை வாசிப்பேன். அவ்வளவுதான்! சோர்வு பறந்து விடும். புத்துணர்ச்சி உடல் எல்லாம் பரவும். அப்புறம் பசியாவது தாகமாவது…

ஒரு விஷயம் என் துயரங்களைக் கண்டு நீ மனத்தை அலட்டிக் கொள்ளக் கூடாது. துன்பம் என் நண்பன். அதை நான் வெறுக்க மாட்டேன். உலகத்தில் அபாரச் சாதனைகளைச் சாதிப்பதற்காகவே பிறந்த எனக்குத் துன்பம்தான் அரிய நண்பன். இன்பம் விரோதி. அது என்னைச் சோம்பேறி ஆக்கி விடும். கோழையாக மாற்றி விடும். அதை நான் வெறுக்கிறேன். இரவில் அதிக நேரம் கண் விழிக்காதே.
உடம்பை ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொள்…

ஆதாரம்: ஆர். ஷண்முகம் எழுதிய “உலக உண்மைகள்’
நன்றி சகோ.

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...