Followers

Thursday, May 7, 2020

எல்லாம் தெரியும் என்று பச்சைப் பொய்யை பல்லாண்டுகளாக கூறி, புளுகு மூட்டைகளாகவும், அறியாமையின் குவியல்களாகவும் வாழ்கின்றனர் பலர். அறியாமை, வெட்கப்பட வேண்டிய விஷயம் அல்ல; அதை ஒப்புக் கொள்ளாதது தான்!
ஆன்றோர்க்கும், சான்றோர்க்கும், என்னைப்போன்றோர்க்கும் இறையருளோடு கூடிய இனிய நற்காலை வணக்கம் அன்பு சகோ, இனிய நாளாக மலரட்டும்...சகோ தோழமை களே........
தெரியாது என்று சொல்வதில், ஏன் வெட்கம்?
'உங்களுக்கு சரி வரவும், முறையாகவும் பல் விளக்கத் தெரியாது...' என்று நான் கூறினால், 'என்ன விளையாடுறீங்களா... நான் என்ன பச்சக் குழந்தையா...' என்று, என்னுடன் பலரும் வாதம் செய்ய முன் வருவீர்கள்; ஆனால், நம்மில், 90 சதவீதம் பேர், பல் விளக்கும் முறை சரியில்லை என்பதை, பல் மருத்துவர்கள் பலர் சுட்டிக் காட்டுகின்றனர்.
சிலர், பல் விளக்க, ஏகப்பட்ட நேரம் எடுக்கின்றனர். சில கிராமத்துப் பண்ணையார்கள், வேப்பங்குச்சியை எடுத்து, வயல் வரப்புகளில் வலம் வந்தபடி, வீடு திரும்பும் வரை பல் தேய்க்கின்றனர்; பல் எனாமலுக்கு, இதை விட கேடு வேறு தேவையில்லை.
பல்லை மேலிருந்து கீழாக, முரணையில் ஆரம்பித்து, பல் முடிவு வரை மேல் வரிசையையும், கீழ் வரிசையை கீழ்முரணையில் ஆரம்பித்து மேல் நோக்கியும், உணவுத் துகள்களை வெளியே தள்ளும் முறையே, சரியான பல் விளக்கும் முறை!
நாமோ (நான் இல்லீங்க!) இந்த மூலையிலிருந்து அந்த மூலைக்கு தேய்க்கிறோம். இதனால், உணவுத் துகள்கள் கடைசி வரை பற்களிலேயே தங்கி, காரையாக மாறி, பாக்டீரியாக்களின் முகாம்களாக ஆகிவிடுகின்றன.
நம்மவர்களுக்கு, தெரியாததை சுட்டிக் காட்டினால், அப்படி ஒரு கோபம் வருகிறது. இது மட்டுமா... தெரியாததை தெரியாது என்று ஒப்புக் கொள்ளவும் மனம் வருவதில்லை. தெரியாது என்பது வெளியில் தெரிந்தால், வெட்கமாம், அசிங்கமாம், கேவலமாம், அவமானமாம், தர்மசங்கடமாம், மானக்கேடாம்!
ஆனால், இப்படி இல்லவே இல்லை.
எல்லாம் தெரியும் என்று பச்சைப் பொய்யை பல்லாண்டுகளாக கூறி, புளுகு மூட்டைகளாகவும், அறியாமையின் குவியல்களாகவும் வாழ்கின்றனர் பலர். அறியாமை, வெட்கப்பட வேண்டிய விஷயம் அல்ல; அதை ஒப்புக் கொள்ளாதது தான்!
மேற்குத் தொடர்ச்சி மலையில், தெற்கு, வடக்காக ஓடுகிறது கொங்கண் ரயில் பாதை. இந்த ரயிலில் பயணிப்போர், மேற்குப் பக்க ஜன்னல் ஓரம் அமர்ந்தால், கடற்கரை காட்சிகளை மட்டுமே அதிகமாக காணலாம். கிழக்கு பக்க ஜன்னல் ஓரம் அமர்ந்தால், மலைத் தொடர்ச்சிகளை மட்டுமே காண முடியும்.
மறுபுறம் பார்க்கத் தவறவிட்ட இந்த ரயில் பயணிகளை குறை சொல்ல முடியுமா... இப்படி தான், நம் அறியாமைகளும்! நாம் பயணிக்கிற வாழ்வின் பாதையில், மறுபுறம் உள்ளவை, நமக்கு தெரிய வராமலேயே போகின்றன. இது ஒரு பெரிய குறையா?
கடற்கரைப் பகுதியை பார்த்தவரும், மலைத் தொடர்ச்சிகளைப் பார்த்தவரும், தங்கள் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது எப்படி தவறில்லையோ, அதேபோல, நாம் அறியாத மறு பக்கங்களை பிறர் கூறுகிற போது, தெரிந்த மாதிரிக் காட்டிக் கொள்ளாமலும், 'எனக்குத் தெரியாதது என்ன இருக்கிறது...' என்று நடித்து, பாவ்லா காட்டாமலும், 'சொல்லுங்க... எனக்கு இதெல்லாம் புதுசு...' என்று கேள்வி கேட்கும் குழந்தையாக மாறி விடுவது நல்லது; இது, புத்திசாலித்தனமும் கூட!
நான் தமிழ் படித்து வளர்ந்தவன்; என் வழக்கறிஞர் நண்பர், திடீரென, 'புராக்காஸ்டினேஷன்' என்று ஒரு சொல்லைக் கூறி, உரையாட ஆரம்பித்து விட்டார். அவர் பேசி முடித்ததும், 'புராக்காஸ்டினேஷன்னு சொன்னீங்க; அதுக்கு என்ன அர்த்தம்?' என்று கேட்டேன்.
'அட இது தெரியாதா...' என்று இளக்காரப் புன்னகை சிந்தினார்.
'தெரியாது நண்பரே... நான் படிச்சதெல்லாம் தமிழ் இலக்கியம். அதுல எதுவும் தெரியலன்னா தான் தப்பு...' என்றேன் புன்னகை மாறாமல்!
'அதுவும் சரி தான்...' என்று இறங்கி வந்தவர், 'அப்படீன்னா, தள்ளிப்போடுவது, தாமதப்படுத்துவது...' என்றார்.
'நன்றி நண்பரே...' என்றேன்.
மேலைநாட்டவர்கள் தெரியாததை தெரியாது என்று சொல்ல வெட்கப்படுவதே இல்லை; எல்லாம் தெரிந்த மேதாவி என்று காட்டிக் கொள்வதில் அவர்களுக்கு உடன்பாடே இல்லை. அறிவு தேடலில் உள்ளவர்கள், இத்தவறை செய்வதே இல்லை.
ஹோமியோபதி மாத்திரைகள், அலோபதி மாத்திரைகளைப் போல அல்ல. எல்லா வியாதிகளுக்கும் தரப்படும் மாத்திரைகள், பார்க்க ஜவ்வரிசி போலவே இருக்கும். ஆனால், அதற்குள் இறக்கப்பட்டிருக்கும் சாராம்சம் வேறு வேறு.
நாமும் வெறும் ஜவ்வரிசியாக இல்லாமல், சரக்கு இறக்கி கொண்ட, சாரமுள்ள மாத்திரைகளாக மாறுவோம். இதற்கு, வெட்கம் மற்றும் வீண் கவுரவம் ஆகியவை, தடைகளாக இருக்கவே கூடாது!
லேனா தமிழ்வாணன்
அன்பு நன்றி ஐயா...........
=========================================
மன உறுதி ஜெயிக்கும்!..............
மன உறுதி, பொறுமை மற்றும் சேவை மனப்பான்மை இருந்தால், மரணத்தைக் கூட வென்று விடலாம் என்பதற்கு, சாவித்திரியின் வாழ்க்கையே உதாரணம்.
பறவை ஒன்று, கடற்கரையில் முட்டைகளை இட்டது. அதை, அலை, கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனால், கடல் மீது கோபம் கொண்ட பறவை, தன் அலகால், கடல்நீரை முகர்ந்து, சிறிது தொலைவில் போய் கொட்டியது. அவ்வழியே வந்த நாரதர், பறவையின் விசித்திர செயலை பார்த்து, 'பறவையே... ஏன் இப்படி செய்கிறாய்?' என்று கேட்டார்.
நடந்ததைக் கூறி, 'என் முட்டைகளை மீட்டாக வேண்டும்; கடலை, என் அலகால் முகர்ந்து கொட்டினால், எவ்வளவு காலமாகும் என்பது பற்றி எனக்கு கவலையில்லை. மனஉறுதியுடன் போராடினால் வெற்றி நிச்சயம் என நம்புகிறேன்...' என்றது!
இதைக்கேட்ட நாரதர், அப்பறவையின் மன உறுதியை பாராட்டி, அதற்கு உதவி செய்து, முட்டையை மீட்டுக் கொடுத்தார்.
இத்தகைய மன உறுதி கொண்டவள் தான் சாவித்திரி!
பார்வையற்ற ராஜா ஒருவரின் நாட்டை, எதிரிகள் பறித்துக் கொண்டதால், அவர், தன் பார்வையற்ற மனைவி மற்றும் ஒரே மகன் சத்தியவானுடன் காட்டில் குடியேறினார். மற்றொரு நாட்டின் இளவரசியான சாவித்திரி, சத்தியவானைப் பற்றி அறிந்து, அவனை மணம் புரிய விரும்புவதாக தன் பெற்றோரிடம் கூறினாள்.
அச்சமயம், அங்கு வந்த நாரதர், அவனது ஆயுட்காலம் விரைவில் முடிய உள்ளதாக சாவித்திரியின் தந்தையிடம் கூறினார். அதனால், அவள் விருப்பத்துக்கு மறுத்தனர் பெற்றோர். ஆனால், 'அதை நான் பார்த்துக் கொள்கிறேன்; மணந்தால் சத்தியவானைத் தான் மணப்பேன்...' என்று உறுதியாகச் கூறி விட்டாள் சாவித்திரி.
திருமணமும் முடிந்தது; பார்வையற்ற மாமியார், மாமனாருக்கு மனம் கோணாமல் சேவை செய்தாள் சாவித்திரி. கணவன் மீதும் உயிரையே வைத்திருந்தாள்.
எமன், சத்தியவானின் உயிரை கவர்ந்த போது, சாவித்திரியின் பதிபக்தி, மாமனார் மாமியார்க்கு செய்த சேவை, காத்யாயினி தேவிக்கு காரடை படைத்து வணங்கியது போன்றவற்றின் பலாபலன்களால், அவளது கண்களுக்கு எமன் தெரிந்தான். மனஉறுதி மற்றும் சமயோசித புத்தியுடன் எமனுடன் போராடி, கணவனின் உயிரை மீட்டது மட்டுமல்லாமல், தன் குடும்பத்திற்கு தேவையான மற்ற வசதிகளையும் கேட்டுப் பெற்றாள்.
மாசி மற்றும் பங்குனி மாதம் இணையும் வேளையில் காரடையான் நோன்பு அனுஷ்டிக்கப்படும். கார்பருவம் எனப்படும் முதல்போகத்தில் விளைந்த நெல்லில் இருந்து குத்தியெடுத்த அரிசியை மாவாக்கி, அதனுடன் வெல்லம், காராமணி சேர்த்து அடை தயாரிப்பர். இதனால் இது, 'காரடை' என்று பெயர் பெற்றது. இதை திருவிளக்கின் முன் வைத்து, நைவேத்யம் செய்து சாவித்திரியை வணங்குவர்.
பெண்களே... உங்கள் மாங்கல்ய பாக்கியத்திற்காக மட்டுமல்ல, மனஉறுதியுடன் செயல்படுவதற்கும், மறைந்து போன கூட்டுக்குடும்ப வாழ்க்கையை மீட்டு வருவதற்கும் உரிய நன்னாளாக, காரடையான் நோன்பை மேற்கொள்ளுங்கள்.
தி.செல்லப்பா
அன்பு நன்றி ஐயா..
===========================================
இந்த நோன்பு இவ்வருடம் முடிந்து விட்டது அடுத்த வருடம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இருந்தும் ஏன் பகிர்கிறேனென்றால், இதில் சில அறிவுத் தகவல்கள் இருப்பதால் பகிர்கிறேன் சகோ ஸ்.
================================================
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
Gurur Brahma, Gurur Vishnu, Gurur Devoh Maheshwara
Guru Sakshat Parabrahmah Tasmai Shree Guru Veh Namah !
I am Love, I shower Love. I share Love. I am pleased with Love. - Baba
When your heart is filled with good thoughts and feelings, all that comes out of the senses - your speech, your vision, your action - will naturally be pure. - Baba
உனது ஹ்ருதயம் நல்ல சிந்தனைகளாலும் நல்ல உணர்வுகளாலும் நிரப்பப்பட்டுள்ள போது, உனது பேச்சு, பார்வை, செயல்கள் யாவும் இயல்பாகவே சுத்தமாக இருக்கும். – பாபா
Embodiments of divine Love!............ Have A Great And Wonderful Day Ahead.
God Bless You All............ love-all-serve-all-help-ever-hurt-never............. Sairam
அன்புறவுகள்... எல்லோர்க்கும்... அனைவருக்கும் சகோ என்றென்றும் அன்பு நன்றியுடன்.! இனிய காலை மதிய மாலை இரவு வணக்கம்! ..உரித்தாகுக தோழமை / சகோ(களே)................!!!
ஆன்றோர்க்கும், சான்றோர்க்கும், என்னைப்போன்றோர்க்கும் இறையருளோடு கூடிய இனிய நற்காலை வணக்கம் அன்பு சகோ, இனிய நாளாக மலரட்டும்...சகோ தோழமை களே............... " விடியும் என்று விண்ணை நம்பும் நீ ....! முடியும் என்று உன்னை நம்பு...!!"
ஓம் சாயி நமோ நம! ஸ்ரீ சாயி நமோ நம!
ஜெய ஜெய சாயி நமோ நம! சத்குரு சாயி நமோ நம!
அன்புடன் சகோதரன்
விக்னசாயி............
====================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...