நோய் எதிர்ப்புச் சக்தியும், கிருமி நாசினியும்!............
உலகம் முழுதும் கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருந்த, கடந்த பிப்ரவரியில், 'கொரோனாவுக்கு சித்த மருத்துவத் தீர்வு' என்ற தலைப்பில், 'தினமலர்' நாளிதழில், கட்டுரை எழுதி இருந்தேன். அதன்பின், டாக்டர் ஜெகஜோதி பாண்டியன் என்ற சித்த மருத்துவர், 'கபசுர குடிநீர் அருந்தலாம்' என, தினமலர் நாளிதழில் கட்டுரை எழுதினார். அதன் பின், சென்னை, கோவை, சேலம், மதுரை, திருச்சி போன்ற பல நகரங்களில், கபசுர குடிநீர் ஏக பிரபலமாகி, கடைகளில் அதை வாங்கி, கஷாயம் தயாரித்து, தமிழக மக்கள் அருந்தினர். இதனால், கபசுர குடிநீர் பாக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன; இன்னமும், தேவை அதிகமாக உள்ளது.
இத்தனை நாட்கள் கழித்து, இப்போது தான், கபசுர குடிநீர், நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் என்பதை அறிந்த தமிழக அரசு, கொரோனா நோயாளிகளுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவு வருவதற்கு, 50 நாட்களுக்கு முன்பே, கபசுர குடிநீரை, தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்த பெருமை, 'தினமலர்' நாளிதழுக்கே சேரும்.

உணவு முறை
அந்த வகையில், கொரோனா என்ற கொடிய நோயை, நம் பாரம்பரிய மூலிகைகளை பயன்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, விரட்டி விடலாம் என்பதற்கான கட்டுரை தான் இது.பதினெட்டு சித்தர்களில் ஒருவரான, திருமூலர், மருந்து எனும் சொல்லுக்கு, நான்கு வகை பொருள் கூறியுள்ளார். அதில் மூன்றாவது பொருள் தான், 'நோய் இனி வாராதிருப்ப' என்பதாகும். இது தான், இன்றைய மருத்துவ விஞ்ஞானிகள் குறிப்பிடும், 'பிரிவென்டிவ் மெடிசின்' எனப்படும், தடுப்பு மருத்துவம். நோய் தடுப்பு மருத்துவத்தில், சித்தர்கள் பெரிதும் குறிப்பிடுவது உணவும், மூலிகை மருத்துவமும் தான். சித்தர்கள், உணவை இரு வகையாகப் பிரித்தனர்.
ஒன்று, அமுதமாகும் உணவு; மற்றொன்று மருந்தாகும் உணவு. அன்றாடம் சாப்பிடும் உணவில், நஞ்சு கலக்காமல், முழுமையாக, அமுதம் எனும், நோய் எதிர்ப்பு சக்தி இருக்க வேண்டும். மற்றொன்று, மருந்தாகும் உணவு. இதை, பத்திய உணவு எனலாம். பல நுாறு ஆண்டுகளுக்கு முன், சித்தர்கள் வடிவமைத்த இந்த அமுத உணவு, நிலையான ஆரோக்கியத்தையும், நீடித்த ஆயுளையும் நல்க வேண்டும் என்ற அடிப்படையில், சித்தர்கள் வகுத்த உணவு முறை தான், நம் தமிழக உணவு முறை.
இனிமேலாவது, நம்நாட்டு விஞ்ஞானிகள், தமிழக உணவு, மருந்து, வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் போன்றவற்றை ஆராய்ந்தால், உலக மக்களின் ஆரோக்கியம் மற்றும் ஆயுள் நீட்சிக்கு வழிகாட்ட முடியும்.

புகையிலை
நஞ்சான, 'நிகோடினை' முறிப்பதில், துளசி இலைகள் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன. இந்தத் துளசி இலைகளை, செம்பு பாத்திரத்தில் ஊற்றிய தண்ணீரில் ஊற வைத்து, அதில், கிராம்பு, பச்சைக் கற்பூரம், ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து, இரவு முழுதும் ஊற வைத்து, காலையில் பெருமாள் கோவிலில் பிரசாதமாக அளிக்கின்றனர். துளசி தான், கொரோனாவுக்கு தீர்வு தரக்கூடிய முதல் மூலிகை மருந்து.
துளசியை ஒரு பிடி அளவு எடுத்து, ஒன்றிரண்டாக இடித்து, செம்புப் பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர், 500 மி.லி.,யில் ஊற வைக்கவும். அத்துடன் கிராம்பு 10, ஏலக்காய் 10, பச்சைக் கற்பூரம், 1 கிராம் அளவு எடுத்து, இடித்து சேர்த்து, இரவு முழுதும் ஊற வைக்கவும்.இந்த துளசி தீர்த்தத்தை, காலை, மாலை, இரவில், தலா, 50 மி.லி., பருகி வாருங்கள்.
அன்றாடம் நம் உணவில், மூச்சில், பழக்கவழக்கங்களில் ஏற்படும் நஞ்சுகள், இறுதியில், நுரையீரல், கல்லீரல், மூளை, சிறுநீரகம் ஆகிய உறுப்புகளில் படிந்து, அவற்றை செயல்திறன் இழக்க செய்கின்றன. அவ்வாறு, அன்றாடம் சேரும் நஞ்சை, துளசி தீர்த்தம் முறித்து, இந்த உறுப்புகளைப் பாதுகாக்கும்.

மூலிகை
சில ஆண்டுகளுக்கு முன், மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு, பல குழந்தைகள் மடிந்தன. இதற்கு, ஜப்பான் நாட்டிலிருந்து மருந்து வரவழைக்கப்பட்டு, காப்பாற்றினர். ஒரு கட்டத்தில், இந்த மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு, நெருக்கடி ஏற்பட்ட போது, புனேவில் உள்ள மருந்து ஆய்வுக் கழகம், துளசியிலிருந்து மூளைக்காய்ச்சலை குணப்படுத்தும் மருந்து முறையைத் தயாரித்து காப்பாற்றியது.
இரண்டாவதாக, சித்தர்கள் சொன்ன இன்னொரு மருந்து, வேம்பு. வேப்ப மரத்தின் பட்டை, எச்.ஐ.வி., எனப்படும். அதிதீவிரமான வைரஸ் கிருமிகளை அழிக்க வல்லவை. கொரோனா வைரசை தடுக்கவும், ஒழிக்கவும், தினசரி, 10 வேப்பிலையை, 10 மிளகு, கால் ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்து, காலை உணவுக்கு முன், வெந்நீரில் அருந்தவும். இது, எல்லா வகை தொற்றுக் கிருமிகளையும் கொன்று, உடம்பை விட்டு அவற்றை வெளியேற்றும். பக்க விளைவுகள் எதுவும் இல்லாத பாதுகாப்பு கவசம் வேப்பிலை.
கொரோனா தொற்று வராமல் இருக்க, தொடர்ந்து, 15 நாட்களுக்கு, காலையில், இட்லி - கருவேப்பிலை சட்னி மட்டுமே சாப்பிடுங்கள். வேறு எவ்வகை காலை உணவும் வேண்டாம்; 100 சதவீதம் நஞ்சு கலவாத, பரிசுத்தமான உணவு இது. 'டெங்கு' காய்ச்சலுக்கு நிலவேம்பு போல, கொரோனாவுக்கு, கபசுர குடிநீர் என்று குறிப்பிடுகின்றனர். அது, சரியில்லை.
நம் உடம்பை இயக்கும் வாதம், பித்தம், கபம் எனும் மூன்று உயிர்ச்சத்துக்களில், கபம் மட்டும் அதிக அளவில் உருவாவதை, கபசுர குடிநீர் கட்டுப்படுத்தும். ஆனால், கொரோனா வைரஸ், வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று உயிர்சத்துக்களையும் தாக்க வல்லது. எனவே, வாதம், பித்தம், கபம் எனும் மூன்றையும், பாதுகாக்க உதவும் மருந்தே, தற்போதைய தேவை. அதற்கு, 'இம்ப்காப்ஸ்' எனப்படும், பாரம்பரிய இந்திய மூலிகை மருந்துகள் தயாரிப்பு அரசு நிறுவனத்தில், வாதசுர குடிநீர், பித்தசுர குடிநீர், கபசுர குடிநீர் விற்கப்படுகின்றன.
இதில், வாதசுரக் குடிநீரில், 21 மூலிகைகள், பித்தசுரக் குடிநீரில், 15 மூலிகைகள், கபசுர குடிநீரில், 15 விதமான மூலிகைகள் என, 51 மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மூன்று குடிநீர்களையும், வகைக்கு, 100 கிராம் என வாங்கி, மூன்றையும் ஒன்றாகக் கலந்து, கண்ணாடிப் புட்டியில் பாதுகாப்பாக வைத்து, தினம், இரண்டு ஸ்பூன் எடுத்து, 250 மி.லி., கொதிநீரில் கலந்து, 15 நிமிடம் கொதித்த பின் இறக்கி வடிகட்டி, ஆறிய பின், 100 மி.லி., அளவு சாப்பிடவும். அதே போல், இரவு, 7:00க்கு, 100 மி.லி., தயாரித்து பருகி வரவும். இதனால், நோய் எதிர்ப்புச் சக்தி பல மடங்கு உயர்வதுடன், கொரோனா வைரஸ் அடியோடு ஒழிந்து விடும்.
கொரோனாவுக்கு, இவற்றை விட சிறப்பான மருந்து வேறெதுவும் இருக்க முடியாது. உணவிலும் சில கட்டுப்பாடுகள் வேண்டும்.பகல், 12:00 மணிக்கு, காரட், பீட்ருட், நான்கு சின்ன வெங்காயம், வெள்ளரிக்காய் ஆகியவற்றை பச்சையாக வெட்டி, மோர் கலந்து பச்சடி செய்து, மிளகு பொடி சிறிது துாவி, ஒரு கப் சாப்பிடுங்கள். பகல், 2:00 மணிக்கு, இரண்டு சப்பாத்தி, இரண்டு கப் அரிசி சாதம், பூண்டு, வெந்தயம், மிளகு, பெருங்காயம் சேர்ந்த வத்தக்குழம்பு அல்லது குருமா வைத்து சாப்பிடலாம். அல்லது பூண்டு, மிளகு ரசம், முள்ளங்கி அல்லது வாழைத்தண்டு அவியல், அவரைக்காய் அல்லது கத்திரிக்காய் பொறியல் சேர்க்கலாம்.

அமுத உணவு
கட்டாயம் துாதுவளை, மல்லி, புதினா சேர்ந்த துவைல் செய்து, நெய் சேர்த்து, இரண்டு பிடி சாதத்துடன் சாப்பிடுவது மிக மிக நல்லது.மாலை, 6:00 மணிக்கு, கற்பூரவல்லி இலைகள் ஐந்தை சுத்தம் செய்து, கடலை மாவு கரைசலில், பஜ்ஜி போல் செய்து, இரண்டு அல்லது மூன்று சாப்பிடலாம். அத்துடன் இஞ்சி, 1 துண்டு எடுத்து மேல் தோலை சீவி நசுக்கி, ஒரு குவளை கொதிநீரில் போட்டுக் காய்ச்சி, வடிகட்டி பருக வேண்டும்.
இரவு, 8:00 மணிக்கு பப்பாளி, ஆப்பிள், திராட்சை, கொய்யா போன்ற ப-ழங்களை துண்டுகளாக்கி, ஒரு கப் சாப்பிட வேண்டும். இரவு, 9:00 மணிக்கு, இரண்டு சப்பாத்தி, உப்புமா, சாம்பார் சாதம் அல்லது வெஜிடபிள் சாதம் ஆகியவற்றில், ஏதாவது ஒன்று சாப்பிட வேண்டும்.இரவு படுக்கும் முன், பாலில், இரண்டு சிட்டிகை மஞ்சள் பொடி, மூன்று பூண்டு பற்கள் நசுக்கிப் போட்டு, காய்ச்சி பருக வேண்டும். மஞ்சளில் உள்ள, 'குர்குமின்' எனும் வேதிப்பொருள், மிகச்சிறந்த கிருமி நாசினி மட்டுமின்றி, நுரையீரல் கவசமாகவும் விளங்குகிறது.
இந்த அமுத உணவும், மூலிகை மருந்துகளும், மூன்று வகை குடிநீரும் சேர்ந்து, கொரோனா வைரசை முற்றிலும் அழிக்கும் என்பதில் ஐயமில்லை. பக்கவிளைவு இல்லாதது. எல்லாரும் பயன்படுத்துங்கள்; கொரோனாவை நம் பாரம்பரியம்படி வெல்லுங்கள்!

No comments:
Post a Comment