அன்புறவுகள்... எல்லோர்க்கும்.... என்றென்றும் அன்புடன்.! இனிய காலை மதிய வணக்கம்! ..உரித்தாகுக சகோஸ்..
மனிதன் ரோஜாவை பார்த்து சொன்னான் நீ தான் எல்லா மலர்களை விட அழகு... ஆனால் உன்னிடம் இருக்கும் முள் இல்லாவிட்டால் இன்னும் அழகு !!!
கடலே நீ எவ்வளவு அழகு ஆனால் உன் தண்ணீர் எல்லாம் உப்பு அவை மட்டும் குடிக்கும் மாறு இருந்தால் நீ இன்னும் அழகு !!!
குயிலே உன் குரல் எவ்வளவு அழகு ஆனால் கருப்பாக உள்ளாய் நீ வண்ணமாக இருந்தால் இன்னும் அழகு!!!!
இவை மூன்றும் மனிதனிடம் சொன்னது ..
மனிதா நீ எவ்வளவு அழகு.. உன் திறமைக்கு அளவே இல்லை.. ஆனாலும் மற்றவர்களிடம் நிறையை விட்டு குறையை மட்டுமே பார்க்கும் இந்த மனம் இல்லாவிட்டால் நீ இன்னும் அழகு !!!!
குறையை விட்டு நிறையை பார்த்தால் இந்த உலகமே அழகு !!!
இல்லையா அன்புத் தோழமைகளே........
நன்றி சகோ அன்பு மோகன்.
No comments:
Post a Comment