Get on cheerfully with your worldly activities, but do not forget God. Always remember Him.
அழியும் மாய உலகில் வாழ்ந்தாலும்,வந்த வழியை மறவாதே, உடலைப் புஷ்டியாக வளர்ப்பதற்காகவும் தொண்டுகிழமாகும்வரை மூச்சுவிட்டுக் கொண் டிருப்பதற்காகவுமா நாம் இவ்வுலகிற்கு வந்தோம்? மனித ஜன்மம் எடுத்ததன் பயன் இதுதானா? பரமாத்மாவை அடைவதே மனித ஜன்மத்தில் செய்யவேண்டிய முக்கிய கடமையாகும். அவ்வாறு இல்லையெனில் நாய்களும் பன்றிகளும் மற்ற மிருகங்களும் நடத்தும் வாழ்வில் குறை என்ன சொல்ல முடியும்? நான் எங்கிருந்து வந்தேன்? நான் யார்? நான் ஏன் மனித ஜன்மா எடுத்திருக்கிறேன்? இதன் சூக்குமத்தை அறிந்தவன் வித்துவானாவான்; இந்த ஞானம் இல்லையெனில் சகலமும் வீண்,
நாய்களும் வயிற்றை நிரப்பிக்கொள்கின்றன; யதேஷ்டமாகப் பிரஜைகளை (குட்டிகளை) உற்பத்தி செய்கின்றன. நாய்களும் மனிதர்களும் இவ்விதத்தில் ஒரே நிலையில் இருப்பின், மனித ஜன்மத்தின் சிறப்புதான் என்ன? உடலைப் பேணிப் போஷாக்காகக் காப்பதும் சிற்றின்பமுமே மனித வாழ்க்கையின் இலட்சியத்தைத் திருப்திசெய்யுமெனில், இந்த நரஜன்மத்திற்கு அர்த்தமேதும் இல்லாமல் போகிறது.
13 ஆஹாரம், நித்திரை, சிற்றின்பம், பயம் ஆகிய நான்கு செயல்பாடுகளிலேயே வாழ்க்கை கழிந்துவிட்டால், நாய்களுக்கும் மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம்? நீங்களே சிந்தித்து முடிவு செய்யுங்கள்.
14 இதுதான் நரசரீரம் எடுத்ததன் பலன் என்றால், வண்டுகளுக்கும் தாவரங்களுக்கும் வாழ்க்கையில் என்ன குறை? துருத்திகளும் உள்மூச்சு வெளிமூச்சு வாங்குகின்றன; நாய்களும் நன்கு தின்று கொழுக்கின்றன அல்லவோõ
15 ஆனால், மனிதனோ பரிணாம வளர்ச்சியடைந்தவன்; பயமற்றவன்; சுதந்திரமானவன்; சாசுவதமானவன். இந்த விழிப்புணர்வு இருந்தாலே ஜன்மம் சாபல்யம் அடைகிறது.
16 நான் எங்கிருந்து வந்தேன்? நான் யார்? நான் ஏன் மனித ஜன்மா எடுத்திருக்கிறேன்? இதன் சூக்குமத்தை அறிந்தவன் வித்துவானாவான்; இந்த ஞானம் இல்லையெனில் சகலமும் வீண்.
17 தூங்காவிளக்கின் சுடர் ஆரம்பத்தி¬ருந்து கடைசிவரை ஒரே மாதிரியாகத் தெரிந்தாலும் ஒவ்வொரு கணமும் அது மாறுபாடு அடைந்துகொண்டே இருக்கின்றது; மனித உடலும் அவ்வாறே.
18 பிள்ளைப் பருவம், இளமை, முதுமை-இந்த மூன்று நிலைகளும் எல்லாருக்கும் வெளிப்படையாக நன்கு தெரிந்ததே. ஆனால், அவை இயல்பாக வந்துபோவதை எவரும் உணர்வதில்லை.
19 இந்தக் கணத்தில் நாம் பார்க்கும் (தூங்காவிளக்கின்) சுடரின் நிலை இந்தக் கணத்தோடு சரி; ஒவ்வொரு கணமும் மாறுபட்டுக்கொண்டே இருந்தாலும், அது ஒரே மாதிரியாகத்தான் தெரிகிறது. அதுபோலவே, இந்தக் கணத்தில் மனித உடல் இருக்கும் நிலை அடுத்த கணத்தில் மாறிவிடும்.
20 மலம், மூத்திரம், சளி, சீழ், எச்சில், அழுக்கு ஆகியவற்றை வெளியிடும், கணத்திற்குக் கணம் மரணம் அடைந்துகொண் டிருக்கும் மனிதவுடல் துர்லக்ஷணம் நிரம்பியது.
21 புழுக்களும் கிருமிகளும் வாழும் இடமாகிய மனிதவுடல், பல ரோகங்களின் வாஸஸ்தலம் (இருப்பிடம்); நிலையற்றது; மரணமடையக்கூடியது.
22 மாமிசம், ரத்தம், தசைகள், ஓர் எலும்புக்கூடு, தோல் இவையெல்லாம் ஏற்றப்பட்ட பாரவண்டியே மனிதவுடல். மலமும் மூத்திரமும் நிறைந்த குழிகளுடன் உயிருக்குக் கவசமாக அமைந்துள்ளது.
23 தோல், மாமிசம், ரத்தம், சதை, கொழுப்பு, எலும்புகள், மஜ்ஜை, வாயு இவற்றுடன் பிறவி உறுப்பு, குதம் போன்ற அசிங்கமான பாகங்களுடன் சேர்ந்து அமைந்த இம்மனிதவுடல் அற்பகாலமே வாழக்கூடியது.
24 இவ்வளவு அமங்கலமானதாகவும் நசித்துப்போகக்கூடியதாகவும் கணநேரத்தில் முடிந்து போகக்கூடியதாகவும் மனிதவுடல் இருப்பினும், சர்வ மங்களங்களுக்கும் இருப்பிடமான பரமேச்வரனை அடைவதற்கு உண்டான கருவி அது ஒன்றேõ
25 ஜனனமரணச் சுழ¬ல் மாட்டிக்கொண்ட மானிடன் மரணத்தைப்பற்றிய கற்பனையிலும் பயத்திலுமே வாழ்நாளைக் கழிக்கிறான். ஆயினும், உயிர் பிரியும்போது கணநேரத்தில் பறந்துவிடுகிறது.
26 இரவிலும் பக¬லும் எத்தனை மக்கள் பிறக்கின்றனர்; இறக்கின்றனர். இதை யார் கணக்கு வைத்துக்கொள்ள முடியும்? மார்க்கண்டேயரைப்போல்1 வாழப்போகிறேன் என்று நினைத்துக்கொண் டிருப்பவர்களும் ஒருநாள் இறந்துதான் தீரவேண்டும்.
27 நிலையில்லாத மனித உடலில் வாழும்போது, நினைத்தாலே புண்ணியம் அளிக்கக்கூடிய ஞானிகளின் திவ்வியமான சரித்திரத்தைக் கேட்கும் நேரமே நன்கு செலவிடப்பட்டதாகும். அதைச் செய்யாத நேரமெல்லாம் வியர்த்தமே.
Joy and sorrow are mere delusion. Mere appearance of worldly joy is not true happiness. Whenever any idea of joy or sorrow arises in your mind, resist it. Do not give room to it.
Get on Cheerfully with your worldly round of activities: but do not forget God. Remember. This samsara is not mine but God". Think thus all the time you are awake. Inquire always "Who am I"?
As long as body remains samsara remains None escapes it. The contact of any two things is samsara All mental and bodily process are samsara. By going away to forest you can not escape samsara.
This Deha Prarabdha is the result of the Karma done by you in former births This body was therefore born Without suffering the results of Prarbhdha Karma you cannot get rid of it.
All persons and all creatures differ in form; etc Why? because of previous Karma of each. —
This Deha Prarabdha is the result of the Karma done by you in former births This body was therefore born Without suffering the results of Prarbhdha Karma you cannot get rid of it.
All persons and all creatures differ in form; etc Why? because of previous Karma of each. —
No comments:
Post a Comment