Followers

Sunday, April 19, 2020

இனிய இரவு வணக்கம் தோழமை(களே)!!!
கடலை! கடலை! கடலை!..................
கடலை ரசித்தபடி
கடலைப் பார்த்தவாறு காற்றுவாங்கி
கடற்கரையில் தோழியுடன் இருக்கையில்
கடலை கடலை என்றான் சிறுவன்!
கடலை பொட்டலம் வாங்கி
கடலை சாப்பிட்டவாறே பேசிக்கொண்டிருந்தோம்!
கடலைக் காணவந்தவன் ஒருவன்
கடலைப் பார்த்தபடி அருகில் வந்து
கடலையா.................? என்றான்!
கடலை தான் கேட்கிறான் என்று
கடலைப் பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு
கடலைப் பார்த்தது போதுமென்று
கடலை விட்டு நீங்கி செல்கையில்
கடற்கரையில் கடலையா? எனக்கேட்டவன் கேட்ட
கடலை என்னவென்று தோழி எனக்கொரு
கடலை வகுப்பெடுத்தாள்!
கடலை போடுவது பற்றி!
கடலையில் இப்படியும் ஒரு வகையா? என
கடற்கரையை நினைத்து நகைத்தேன்!
கடலலைபோல் அவளும் சிரித்தாள்! நிலம் பார்த்தவாறு!
p-p...tq
கடலைபோல் அவள் சிரித்தாள் கல கல வெனவே..........

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...