ஒரு செயலைச் செய்வதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும் & பொன்மொழிகள்.............உள்ளே...வருக அன்புறவுகளே...............................
நரி ஒன்று தாகத்தால் தவித்தது.
நரி ஒன்று தாகத்தால் தவித்தது.
எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.
என்ன செய்வது…?
தண்ணீரைத் தேடி அலைந்தது.
தூரத்தில் கிணறு ஒன்று இருப்பதைப் பார்த்தது. கிணற்றின் அருகே சென்றது, கிணற்றில், கயிற்றின் ஒரு முனையில் வாளி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட நரி, வாளியில் தாவி ஏறி அமர்ந்தது. உட்னே வாளி ‘விரி’ரெனக் கிணற்றின் உள்ளே சென்றது. நரி வயிறு நிறையத் தண்ணீரைக் குடித்தது. தாகம் தணிந்தபின் மேலே பார்த்தது. ‘எப்படி வெளியேறுவது’ என்று யோசிக்கத் தொடங்கியது.
‘மேலேயிருந்து யாராவது கயிற்றை இழுத்தால்தானே என்னால் மேலே போக முடியும். என்ன செய்வது?’
நேரம் ஆக ஆக நரிக்கு அச்சம் தோன்றியது.
அந்த நேரம் பார்த்துக் கிணற்றின் அருகே ஓநாய் ஒன்று வந்தது. கிண்ற்றின் உள்ளே எட்டிப் பார்த்தது.
அங்கு நரி இருப்பதைக் கண்டது.
“அடடா! நரி ஐயா! உள்ளே என்ன செய்கிறீர்கள்?” எனக் கேட்டது.
“நான் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறேன். என்ன அருமையான இடம் தெரியுமா? இங்கு மீன், கோழி, ஆடு எல்லாம் தருகிறார்கள்” என்றது நரி
ஓநாய் சற்றும் யோசிக்காமல் கயிற்றின் மறுமுனையில் கட்டப்பட்டிருந்த வாளிக்குள் குதித்தது. அந்த வாளி ‘சரசர’வென்று கிணற்றின் உள்ளே போயிற்று. அப்போது நரி அமர்ந்திருந்த வாளி மேலே வந்தது.
நரி மேலே வரும் போது பாதி வழியில் ஓநாயைப் பார்த்தது.
“நான் இப்போது சொர்க்கத்திற்கும் மேலான இடத்திற்குப் போகிறேன்”. என்று கூறிக் கொண்டே மேலே சென்றது. மேலே வந்ததும் கிணற்றுச் சுவரின் மேலே தாவிக் குதித்துத் தப்பியோடியது.
பாவம் ஓநாய்…………….!
ஒரு செயலைச் செய்வதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும் …………………..
நன்றி அபிஷேக்.
நன்றி அபிஷேக்.
கற்றறிந்த அறிஞர் பெருமக்களின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் கூர்மையான அம்புகள் போல.. கேட்பவர்களின் மனதை தைய்க்காமல் இருக்காது. இதோ சில அறிஞர்களின் முத்துக்கள்…
ஓருவன் எப்போதும் வீரனாக வாழ முடியாது. ஆனால் என்றென்றைக்கும் மனிதனாக வாழ முடியும்.
யாருடைய நம்பிக்கையையும் குலைக்க முயலாதே, இயலுமானால் அவனுக்கு அதைவிட மேலான ஓன்றைக் கொடு.
-விவேகானந்தர்.
யாருடைய நம்பிக்கையையும் குலைக்க முயலாதே, இயலுமானால் அவனுக்கு அதைவிட மேலான ஓன்றைக் கொடு.
-விவேகானந்தர்.
நொண்டிச்சாக்கை கற்பித்துக் கூறுவதில் கெட்டடிக்காரனாக இருப்பவன், ஓன்றிலும் கெட்டிக்காரனாக இருக்கமாட்டான்.
-ப்ராங்கின்.
-ப்ராங்கின்.
அன்பில் நம்பிக்கை வை. அது துயரில் கொண்டு போய் விட்டாலும் பரவாயில்லை. இதயக் கதவுகளை மட்டும் மூடி விடாதே.
-தாகூர்.
-தாகூர்.
சகோதரர்களாக இருங்கள். ஆனால் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.
-கண்ணதாசன்.
-கண்ணதாசன்.
மனிதனிடம் வீரமில்லாத ஓழுக்கமோ, ஓழுக்கமில்லாத வீரமோ இருந்தால் அவன் கோழையாகவோ முரடனாகவோ ஆகிவிடுவான்.
-பிளாட்டோ.
-பிளாட்டோ.
*********************************************************
"அன்பினிய உள்ளங்கள் அனைவருக்க்கும்
அன்புடன் கூடிய இனிய காலை வணக்கம்....!!!
மீண்டும் அன்புடன்...Vicknasai.
*********************************************************
"அன்பினிய உள்ளங்கள் அனைவருக்க்கும்
அன்புடன் கூடிய இனிய காலை வணக்கம்....!!!
மீண்டும் அன்புடன்...Vicknasai.
*********************************************************
No comments:
Post a Comment