Followers

Thursday, April 9, 2020

பிரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு உதவிய பிச்சைக்கார மூதாட்டி...........................மனித நேயம் என்பது பணம் உள்ளவர்களிடமிருந்துதான் வெளிவர வேண்டும் என இல்லை, பணமில்லாதவர்களுக்கும் மனித நேயம் உண்டு என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது....
பெங்களூரு : கர்நாடகாவில் பரபரப்பான சாலையில் பிரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு, 60 வயது பிச்சைக்கார பெண் உதவி செய்தது காண்போரை நெகிழச் செய்துள்ளது.
வலியில் துடித்த பெண் :
கர்நாடகாவின் ராய்சூர் மாவட்டம், மான்வி பகுதியைச் சேர்ந்தவர் எல்லம்மா(30). 3 குழந்தைகளுக்கு தாய்; பெண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் இருந்துள்ளார். மீண்டும் கர்ப்படைந்துள்ள அவர் ரத்த சோகை பாதிப்பு இருப்பதால் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக சென்றுள்ளார் . கணவர் ராமண்ணாவும், எல்லம்மாவும் பரிசோதனை முடிந்து பஸ்சில் வீடு திரும்பி உள்ளனர்.
உதவிய பிச்சைக்கார மூதாட்டி :
பஸ்சில் இருந்து இறங்கிய எல்லம்மாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. வலியில் துடித்த அவருக்கு ரத்தப்போக்கும் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட ராமண்ணா அதிர்ச்சி அடைந்துள்ளார். அப்போது அங்கு வந்த 60 வயது பிச்சைக்கார பெண் ஒருவர், எல்லம்மாவுக்கு பிரசவம் பார்க்க துவங்கி உள்ளார். இதனைக் கண்ட வேறு சில பெண்களும் அங்கு வந்து, அவருக்கு உதவி உள்ளனர்.
பிரசவத்தில் எல்லம்மாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. எதையும் எதிர்பாராமல் உதவி செய்த அந்த பிச்சைக்கார பெண், பிரசவம் பார்த்து விட்டு, மீண்டும் பிச்சை எடுக்க சென்றுள்ளார். நன்றி கூறி, உதவி செய்வதற்காக ராமண்ணா அவரைத் தேடியும் கிடைக்கவில்லை. இச்சம்பவம் பலரையும் நெகிழச் செய்துள்ளது.
இன்றும் தாயுமானவரின் அவதாரம் நடக்கிறது......ஏழையில் வாழும் இறைவன்......................
படித்ததில் பிடித்த்து............
==============================================
ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் வந்து...
மனிதன் 1 : இறைவன் எல்லாரையும் வசதியாக எல்லாம் செல்வங்களோடு வைத்திருக்கிறான். ஆனால் நான் மட்டும் பிறந்ததில் இருந்து இன்று வரை ஏழையாக இருக்கிறேன். இதுவரை எதுவும் எனக்கு தந்ததில்லை" என்று சலித்துக் கொண்டான்.
மனிதன் 2 : நான் உனக்கு 1 லட்சம் தருகிறேன் , உன்னுடைய ஒரு கையை வெட்டி எனக்கு தந்து விடு".
மனிதன் 1 : இல்லை முடியாது .
மனிதன் 2 : 10 லட்சம் தருகிறேன். உன்னுடைய ஒரு காலை வெட்டி எனக்கு தந்து விடு.
மனிதன் 1 : இல்லை முடியாது .
மனிதன் 2 : நீ எவ்வளவு பணம் கேட்கின்றாயோ அதற்கு மேலும் தருகிறேன் உனது இரு கண்களையும் எனக்கு தந்துவிடு .
மனிதன் 1 : நீங்கள் இந்த உலகத்தில் உள்ள எல்லா செல்வங்களை கொடுத்தாலும் என் கண்களை குடுக்க முடியவே முடியாது .
மனிதன் 2 : இறைவன் உனக்கு எவ்வளவு விலை உயர்ந்த செல்வங்களை தந்திருக்கிறான் , ஆனால் அதற்கு நன்றி செலுத்தாமல் , இதுவரை எனக்கு எதுவும் தந்ததில்லை என்று சலிக்கின்றாயே?
எந்த சூழ்நிலையிலும் இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டு இருங்கள்.
அவன் தான் இறைவன்
பூமியில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் உணவு வழங்குகின்றார்.
கடலில் உள்ள திமிங்கலத்திற்கு ஒரு நாளைக்கு 33 டன் அதாவது, 36,960 கிலோ மீன்களை உணவு வழங்குகிறார்.
உலகில் மனிதனாய் பிறந்திட்ட ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொருவிதமான கஷ்டங்கள்.
இறைவன் சிலரை
வறுமையால் சோதிக்கின்றார்,
இன்னும் சிலரை
நோய் நொடிகளால் சோதிக்கின்றார்,
இன்னும் சிலர்களை
கடன் தொல்லைகளால் சோதிக்கின்றார்.
ஆக, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள்" .
நாம் நினைத்து கொண்டிருக்கிறோம், நமக்கு மட்டும்தான் இவ்வளவு சோதனைகள் என்று, கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் புரியவரும் மற்ற மனிதர்களும் நம்மை போன்றோ, நம்மை விட அதிகமாகவோ சோதனைக்குள்ளாக்கப் படுகிறார்கள் என்று.
*இறைவனுக்கு நன்றி செலுத்து.*
நீ உனது குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து இருக்கின்றாய். எத்தனையோ பேர் தமது உறவுகளை இழந்து தவிக்கின்றனர்.
*இறைவனுக்கு நன்றி செலுத்து.*
நீ உனது தொழிலை நோக்கி செல்கின்றாய். எத்தனையோ பேர் தொழில் இல்லாமல் அலைகின்றனர்" .
*இறைவனுக்கு நன்றி செலுத்து.*
நீ உடல் ஆரோக்கியத்துடன் உலா வருகின்றாய்.
எத்தனையோ நோயாளிகள் அதைப் பெறுவதற்காக வேண்டி கோடியைக் கொட்டுகின்றனர்" .
*இறைவனுக்கு நன்றி செலுத்து.*
நீ இன்னும் உயிருடன் இருக்கின்றாய். எத்தனையோ மரித்த ஆத்துமாக்கள் உலகிற்கு வந்து நல்லறம் புரிய ஏங்குகின்றனர் ".
*இறைவனுக்கு நன்றி செலுத்து.*
நீ உனது தேவைகளை முறையிட்டு வணங்குவதற்கு உனக்கொரு உயிருள்ள இறைவன் இருக்கின்றான். எத்தனையோ பேர் கல்லுக்கும் மண்ணுக்கும் சிரம் தாழ்த்திக் கொண்டிருக்கின்றனர்.
*இறைவனுக்கு நன்றி செலுத்து.*
நீ நீயாக இருக்கின்றாய். எத்தனையோ பேர் அவர்கள் உன்னைப் போல் இருக்க ஆசைப்படுகின்றனர்" .
இறைவனுக்கு நன்றி செலுத்து.
எந்நேரமும் மகிழ்ச்சியுடன் இருக்க பிறரை மகிழ்வி .
இறைவனுக்கு நன்றி செலுத்திக்கொண்டே இரு.
courtesy of Brother Selvaraj Kamatchi
அன்பு நன்றி ஐயா....................
==================================================
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
''ஓ... உன் தோசையெல்லாம் இப்ப நாய்க்குட்டி வயத்துல இருக்கா... இது, எங்க இருந்து வந்தது?'' என்றாள் சிரித்தபடியே!
''சாயங்காலம் என் ஸ்நாக்ஸ் டப்பாவுல இருந்து ரெண்டு பிஸ்கட் எடுத்து போட்டேம்மா... உடனே சாப்பிட்டுட்டு வாலை ஆட்டுச்சு. இப்ப பாத்தா கேட் கிட்டே படுத்துக் கிடக்கு. என் தோசையில ரெண்டு போட்டேனா உடனே சாப்பிட்டிடுச்சு... சாரிம்மா... உனக்கு மாவு இருக்கா,'' என்று தாயை அணைத்தபடி கேட்டாள் மயூரி.
''நிறைய இருக்குடா... அதுசரி... இதென்ன புதுசா நாய்க்குட்டி, சாப்பாடு எல்லாம்?''
''எங்க மிஸ் சொன்னாங்கம்மா... 'உன்னால நூறு பேருக்கு சாப்பாடு போட முடியலன்னாலும் பரவாயில்ல, ஒரே ஒருத்தருக்காவது சாப்பாடு போடு. அதுவே பெரிய உதவி தான்னு! என்னால நாய்க்குட்டிக்கு பிஸ்கட், இட்லி, பிரெட்ன்னு தானே போட முடியும்...'' என்றாள்.
''என் தங்கமே...'' என, குழந்தையை அணைத்துக் கொண்டவளுக்கு கண்களில் நீர் வடிந்தது;
உண்மையான பக்தன்🙏
இங்கு நீங்கள் பார்க்கும் மூன்று முழ சரீரம் தான் சாயி என்று நினைத்துவிடாதீர்கள்.எனது உண்மையான பக்தன் எல்லா இடங்களிலும் எனது இருப்பை உணர்வான்.எல்லா உயிர்களிலும் என்னை காண்பான்.
---ஷீரடி சாய்பாபா
எல்லோர்க்கும் என்றும் அன்பு வணக்கங்கள் சகோ தோழமை களே,,,,,
அன்புடன் சகோதரன்
விக்னசாயி.
=====================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...