''இத, உங்க அப்பா எங்கிட்ட சொல்லி, 'உனக்கு, 25 வயசு தான் ஆகுது; வாழ வேண்டியவ நீ.
பேசாம குழந்தைய எங்கிட்ட விட்டுட்டு, நீ வேற கல்யாணம்
செய்துக்க'ன்னு சொன்னார். நான் தான், அவரத் திட்டி, 'கல்யாணங்கிறது
சின்னப் புள்ளைங்க சட்டி, பானை வைச்சு விளையாடுற விளையாட்டுன்னு நினைச்சியா...
என்னிக்கு பத்துப் பேர் முன்னிலையில, பந்தக்கால்ல
வச்சு உன் கையைப் பிடிச்சு, கஷ்டத்துலயும், நஷ்டத்துலயும்
உன்னை பிரியாம இருப்பேன்னு வாக்கு கொடுத்தேனோ, அன்னைக்கி இந்த
மண்ணுல விதைச்ச பந்தம்ய்யா நம்ம ரெண்டு பேருக்குள்ள உறவு.
'சந்தோஷத்துல கும்மியடிக்கிறதும், துன்பத்துல ஓடி
ஒளியுறதுக்கு பேரு, புருஷன் - பொண்டாட்டி உறவு இல்ல! இது மூச்சுக் காத்து போல, சாகுற வரை கூட
வர்ற உறவு'ன்னு சொல்லி உங்கப்பாவ சமாதானப்படுத்தினேன்.
என்றும் எல்லோர்க்கும் அன்பு வணக்கங்கள் சகோ தோழமை
களே.................................
நிறம் மாறும் கனவுகள்!....................
பள்ளி முடிந்து வரும் பிள்ளைகளை எதிர் நோக்கி, வாசல் படியில்
அமர்ந்திருந்த வசந்தா, எதிர் வீட்டு முன், பைக்கில் இருந்து
இறங்கிய இளம் தம்பதியை ஆர்வமுடன் பார்த்தாள். இருவருக்கும் ஜோடிப் பொருத்தம்
பிரமாதமாக இருந்தது. தன்னை அறியாமல் அவள் மனதில் ஏக்கப் பெருமூச்சு வந்தது.
''என்ன வசந்தா... இன்னக்கி ஸ்கூலுக்கு போகலயா... ரிலாக்ஸா
உட்கார்ந்திருக்கே...'' என்ற குரல் கேட்டு, திரும்பினாள்.
பக்கத்து வீட்டு ராஜம், தன் பெருத்த இரு கைகளிலும் காய்கறி, மசாலா பொருட்கள்
நிறைந்த பைகளை சுமந்தபடி நின்றிருந்தாள்.
''தலைவலின்னு மதியமே வந்துட்டேன் ராஜம்... பிள்ளைங்க ஸ்கூல்
முடிஞ்சு வர்ற நேரமா... அதான் அவங்கள எதிர்பார்த்து உட்காந்திருக்கேன்,'' என்றவள், ''என்ன... கழுத்துல
மாங்கா மாலை மினுமினுக்குது... புதுசா...'' என்றாள்.
''ஆமாம்; நேத்து எங்க
கல்யாண நாளுங்கிறதால, என் வீட்டுக்காரரு வாங்கிக் கொடுத்தாரு... நல்லா இருக்கா...''
இவர்களின் பேச்சு சத்தம் கேட்டு வெளியே எட்டிப்
பார்த்த ராஜத்தின் கணவர், ''அடடே... என்ன ராஜம்... இவ்வளவு பெரிய பையை கையிலயா
தூக்கிட்டு வந்தே... ஆட்டோ பிடிச்சு வர்றதுக்கென்ன...'' என்று செல்லமாக
கடிந்து, பைகளை வாங்கிக் கொண்டு முன்னே நடந்தார்.
''பிளாஸ்க்குல காபி போட்டு வச்சுருந்தேனே குடிச்சீங்களா...'' என்று கேட்டபடி, அவரை பின்
தொடர்ந்தாள் ராஜம்.
ஐம்பது வயசுலயும், 35 வயசு இளைஞனைப்
போல், இளமையாக, மிடுக்காக
இருக்கும் ராஜத்தின் கணவரையும், அவரின் பின், குட்டி யானை
போன்று அசைந்து செல்லும் ராஜத்தையும் வைத்த விழி மாறாமல் பார்த்தாள் வசந்தா.
'வாழ்க்கை இவர்களுக்கெல்லாம் எத்தனை அழகாக, சந்தோஷமா
இருக்கு. எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு புருஷன் கிடைக்கணும்...' என்று மனதுக்குள்
பொருமியவளுக்கு, சுய இரக்கத்தில், அழுகை வந்தது.
துவக்கப் பள்ளி ஆசிரியையான வசந்தா, வீட்டிற்கு ஒரே
பெண். சிறு விவசாய குடும்பம். சிறுவயதிலிருந்தே அவளுக்குள் ஏகப்பட்ட கனவுகள்; ஆசைகள்.
கிராமத்தில், பிளஸ் 2 வரை படித்து, டவுனில் ஆசிரிய
பயிற்சி முடித்து வீட்டில் இருக்கும் போது தான், பேங்கில்
கேஷியராக வேலை பார்க்கும் தூரத்து உறவினரான குணசேகரனுக்கு பெண் கேட்டு வந்தனர்.
குணசேகரன், பெயருக்கு
ஏற்றாற் போல் நல்ல குணவான்; எந்த கெட்ட
பழக்கங்களும் இல்லாதவன்; இயல்பிலே அமைதியானவன். பார்ப்பதற்கும் லட்சணமாகவே
இருந்தான்.
ஆனால், சினிமா
பார்த்தும், காதல் கதைகளை படித்தும், தனக்குள் ஒரு
அழகிய உலகத்தை சிருஷ்டித்து வைத்திருந்தாள் வசந்தா. அதனால், தன் கனவு
நாயகனைப் போன்று இல்லாமல், நடுத்தர குடும்பத்து சராசரி ஆண்மகனாக குணசேகரன் இருந்ததால், அவனை மணக்க
விருப்பம் இல்லாமல் இருந்தாள்.
பெற்றோரின் வற்புறுத்தலால், திருமணம்
முடிந்து,
ஏகப்பட்ட கனவுகளையும், கற்பனைகளையும்
சுமந்து, அதீத எதிர்பார்ப்புடன் இல்லற வாழ்வில் நுழைந்தவளுக்கு, குணசேகரனின்
அமைதியும், நிதானமும், எளிமையும் பெரும்
ஏமாற்றத்தை தந்தது. அதுவரை சினிமாக்களிலும், கதைகளிலும்
பார்த்து, படித்து, மனதில்
விதைத்துக் கொண்ட ஆசைகள், எதார்த்த வாழ்வில் ஒன்றுமில்லாமல் கனவாக போக, அவள் நிராசைகள்
எல்லாம் கோபமாக வெளிப்பட்டன.
அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அனுசரித்து செல்பவனாகவே
இருந்தான் குணசேகரன். ஆனாலும், சின்ன
விஷயத்திற்கு கூட, 'உன்னைக் கட்டி என்ன சுகம் கண்டேன்...' என்று ஏக வசனமும், சர்வ சாதாரணமாக
வாயில் புகுந்து வெளியேறும், 'வாடா போடா'வும் அவனை, தனக்குள்ளே
நத்தையாய் சுருங்கிப் போகச் செய்தது.
அத்துடன், பிள்ளைகளிடமும், 'உங்க அப்பன் உதவாக்கரை...
ஜடம்...' என்று சொல்லிச் சொல்லியே, அவர்களுக்கும்
அப்பா என்றால், அலட்சிய மனோபாவம் வந்துவிட்டது.
இதனால், குடும்பத்தின்
மீது பிடிப்பு இல்லாமல், எதிலும் பற்றற்று இருந்தான், குணசேகரன். இது, அவளுக்கு இன்னும்
ஏமாற்றத்தை ஏற்படுத்த, தன் வாழ்க்கை குறித்த சுய இரக்கத்தில், வேதனைப்பட்டாள்
வசந்தா.
கோடைவிடுமுறைக்கு, தன் இரு
பிள்ளைகளுடன், தாய் வீட்டிற்கு வந்திருந்தாள் வசந்தா.
கொல்லைப்புறத்தில், வேப்பமரத்தடியில்
போடப்பட்டிருந்த பலகாய் கல்லில், 70 வயது அப்பா, வெற்று முதுகுடன்
உட்கார்ந்திருக்க, பக்கத்தில் இருந்த வெண்கல அண்டாவில் வெளவி வைத்திருந்த
சுடுதண்ணீரை செம்பில் எடுத்து, அப்பாவின்
முதுகில் ஊற்றி, அழுக்குத் தேய்த்து குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள், 65 வயதான அம்மா.
பின்கட்டு திண்ணையில் அமர்ந்து, கதைப் புத்தகம்
படித்துக் கொண்டிருந்த வசந்தாவிற்கு இக்காட்சியைக் கண்டதும், எரிச்சலும், கோபமும்
எழுந்தது.
இது, அவள்
சிறுவயதிலிருந்து பார்த்து பழகிய காட்சிதான் என்றாலும், இன்று ஏனோ
அம்மாவைப் பார்க்கும் போது பொறாமையாக இருந்தது. 'இந்த வயசுலயும், அம்மா, அப்பாவுடன்
எத்தனை சந்தோஷமா இருக்கா... நம்ம வாழ்க்கை, 45 வயசுலயே ஒரு
சந்தோஷமில்லாமப் போச்சே...' என்று
நினைத்தவளுக்கு, துக்கம் தொண்டையை அடைக்க, எழுந்து, தன் அறைக்குள்
சென்றாள்.
மாலையில், பிள்ளைகள்
இருவரும், 'டிவி' பார்க்க, வாசலில், புன்னை
மரத்தடியில், கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருந்த அப்பாவுக்கு வெற்றிலை
மடித்துக் கொடுத்தபடி பேசிக் கொண்டிருந்தாள் அம்மா.
குளிக்காமல், கசங்கிய
நைட்டியுடன் வந்த வசந்தாவைப் பார்த்து, ''ஏம்மா...
சாயந்திர நேரத்துல, சுமங்கலி பொண்ணு இப்படியா பீடை மாதிரி இருப்பே... போ...
போயி குளி,'' என்றாள் அம்மா.
''ஆமா... இப்ப குளிச்சு முடிச்சு, சிங்காரிக்கலன்னு
யாரு அழுதா...'' என்றாள் வெடுக்கென்று!
''இப்ப என்ன சொல்லிட்டேன்னு கோபப்படுறே... இத்தன வயசாகியும்
இதம் பதமா பேசத் தெரியலயே... உன்னைப் பாத்துத் தானே, உன்கிட்ட
படிக்கிற பிள்ளைகளும், உம்புள்ளைங்களும் பாடம் படிக்கும்...'' என்று கூறும்
போதே, ''நீ பேசாத... உன்னால தான் என் வாழ்க்கையே கெட்டுப் போச்சு.
மாப்பிள்ளைங்கிற பேர்ல, ரசனை கெட்ட ஜடத்துக்கு என்னை கல்யாணம் செய்து குடுத்தீங்க.
அன்னயிலிருந்து என் வாழ்க்கை மண்ணாப் போச்சு... இப்போ இந்த ரெண்டு வருஷமா
பொண்டாட்டின்னு ஒருத்தி இருக்கிறதே அந்த மனுஷனுக்கு மறந்து போச்சு. ஆபீஸ் போறது, நேரத்துக்கு காபி, சாப்பாடு; இதத் தவிர ஒரு
மண்ணும் இல்ல. இனி, நான் அந்த ஆளு வீட்டுக்கு போக மாட்டேன். பிள்ளைங்கள இங்கேயே
பக்கத்துல எங்கேயாவது சேர்த்துட்டு, நானும்
டிரான்ஸ்பர் வாங்கிட்டு வரப்போறேன். முதல்ல எனக்கு அந்த ஆளு கிட்ட இருந்து
விவாகரத்து வாங்கித் தாங்க...'' என்றாள்
ஆங்காரத்துடன்!
இதைக் கேட்டதும், அம்மாவும், அப்பாவும்
விக்கித்துப் போயினர்.
இரவு -
பவுர்ணமி நிலா வெளிச்சம் பகல் போல் ஜொலிக்க, மொட்டை மாடியில், கோரைப் பாயில்
படுத்திருந்த மகள் அருகில் வந்து அமர்ந்த அம்மா, அவள் தலையை
மென்மையாக தடவியபடி, ''வசு... என்ன தாயி ஆச்சு... மாப்பிள்ளைக்கும், உனக்கும் ஏதும்
பிரச்னையா?'' என்று கேட்டாள் மெதுவாக!
''அன்னக்கே இந்த ஆளப் பிடிக்கலன்னு சொன்னேன் கேட்டியா... அத
இதச் சொல்லி என் வாழ்க்கையையே கெடுத்துப்புட்டே, இப்ப என்ன பெரிய
கரிசனம் இருக்கிற மாதிரி நடிக்கிறே...'' என்றாள்.
''ஏம்மா இப்படி எடுத்தெறிஞ்சு பேசுறே... எந்த தாய், தகப்பனாவது
பிள்ளைங்க கெட்டுப் போகணும், கஷ்டப்படணும்ன்னு
நினைப்பாங்களா. நல்ல குணம், நிரந்தர வேலை, கவுரவமான
குடும்பம்ன்னு பார்த்து தானே உன்னைக் கட்டிக் கொடுத்தோம். மாப்பிள்ளைக்கு மட்டும்
என்ன குறை... உன்னை அடிச்சு கொடுமைப்படுத்துறாரா இல்ல வேற எதுவும் கெட்ட பழக்கங்க
வச்சுட்டு உன்ன உதாசினப்படுத்துறாரா... உன் பேச்சுக் கேட்டு, உன் மனசு
நோகாதபடி தானடி நடக்குறாரு... இத விட நல்ல மாப்பிள்ளைய நாங்க எங்கேடி போய் தேடுறது?'' என்றாள்
ஆற்றாமையுடன்!
''உனக்கென்ன பேசுவே... இளஞ்ஜோடிக மாதிரி நீயும், அப்பாவும்
ஒருத்தர் மாத்தி, ஒருத்தருக்கு ஊட்டி விடுறது என்ன, மாசத்துக்கொரு
சினிமா, வாரம் தவறாம கோவில், குளம், சொந்தக்காரங்க
வீடுன்னு ஜாலியா சுத்திக்கிட்டு இருக்கீங்க... ஆனா, நான்... இந்த
வயசுல ஒரு சந்தோஷமும் இல்லாம பள்ளிக்கூடம், வீடு, சமையல்ன்னு
எந்திரமா உழைச்சுக் கொட்டிக்கிட்டு இருக்கேன்,'' என்றவள், பொருமலுடன், கணவனைப் பற்றி
குற்றப் பத்திரிகை வாசித்து, ''நான் அங்க
இருக்கிறதும், இங்க இருக்கிறதும் ஒண்ணுதான். இதுக்கு எதுக்கு அந்த ஆளுக்கு
நான் சம்பளம் இல்லாத வேலைக்காரியா இருக்கணும்... எனக்கு விவாகரத்து வேணும்,'' என்றாள்.
மகளை நிதானமாக ஏறிட்டு பார்த்த அம்மா, ''உன்ன மாதிரி நானும், 40 வருஷத்துக்கு
முன் இப்படி ஒரு முடிவு எடுத்திருந்தா, இன்னக்கி நீ
இப்படியெல்லாம் பேச மாட்டே...'' என்றாள்
அமைதியாக!
திடுக்கிட்ட வசந்தா, குரலில் சுருதி
இறங்க, ''என்னம்மா சொல்றே... நீ எதுக்கு அப்பாவ விவாகரத்து
செய்யணும்...'' என்றாள்.
சிறிது நேரம் அமைதியாக இருந்தவள், ஆழ்ந்த
பெருமூச்சை வெளியிட்டு, ''ஆமாம் வசு. அப்ப, உனக்கு அஞ்சு
வயசு; பொங்கலுக்கு மறுநாள், ஊர் மந்தையில
நடந்த ஜல்லிக் கட்ட வேடிக்கைப் பாக்க உங்கப்பா போயிருந்தாரு; ஓரமாத்தான்
நின்னு வேடிக்கை பாத்துருக்காரு... இளந்தாரிப் பயலுக மாடு பிடிக்கிறேன்னு செய்த
கூத்துல, மாடு மிரண்டு கூட்டத்துக்குள்ளே பாய்ஞ்சு, வேடிக்கை
பார்த்தவங்கள குத்தி கிழிச்சுருச்சு. அதுல, உங்க அப்பாவுக்கு
அடிவயித்துல பெரிய காயம். தூக்கிட்டு டவுன் ஆஸ்பத்திரிக்கு ஓடினோம். காயம் எல்லாம்
சரியான பின், பெரிய டாக்டர் கூப்பிட்டு, 'மாடு குத்தியதில், உயிர் நரம்பு
பாதிச்சுப் போச்சு; இனி, குடும்ப
வாழ்க்கையில இருக்க முடியாது'ன்னு
சொல்லிட்டாராம்.
''இத, உங்க அப்பா எங்கிட்ட சொல்லி, 'உனக்கு, 25 வயசு தான் ஆகுது; வாழ வேண்டியவ நீ.
பேசாம குழந்தைய எங்கிட்ட விட்டுட்டு, நீ வேற கல்யாணம்
செய்துக்க'ன்னு சொன்னார். நான் தான், அவரத் திட்டி, 'கல்யாணங்கிறது
சின்னப் புள்ளைங்க சட்டி, பானை வைச்சு விளையாடுற விளையாட்டுன்னு நினைச்சியா...
என்னிக்கு பத்துப் பேர் முன்னிலையில, பந்தக்கால்ல
வச்சு உன் கையைப் பிடிச்சு, கஷ்டத்துலயும், நஷ்டத்துலயும்
உன்னை பிரியாம இருப்பேன்னு வாக்கு கொடுத்தேனோ, அன்னைக்கி இந்த
மண்ணுல விதைச்ச பந்தம்ய்யா நம்ம ரெண்டு பேருக்குள்ள உறவு.
'சந்தோஷத்துல கும்மியடிக்கிறதும், துன்பத்துல ஓடி
ஒளியுறதுக்கு பேரு, புருஷன் - பொண்டாட்டி உறவு இல்ல! இது மூச்சுக் காத்து போல, சாகுற வரை கூட
வர்ற உறவு'ன்னு சொல்லி உங்கப்பாவ சமாதானப்படுத்தினேன்.
''இன்னைக்கு வரைக்கும் உங்கப்பாவுக்கு இப்படி ஒரு குறை
இருக்கிறது யாருக்குமே தெரியாது. அது, மத்தவங்களுக்கு
தெரிய வேண்டிய அவசியமும் இல்ல. உனக்கு கூட இதை ஏன் சொல்றேன்னா, மின்னுறதை
எல்லாம் பொன்னுன்னு நினைச்சு மயங்கி, அதுக்காக
ஏங்குறேயே... அந்த முட்டாள் தனம் உன்னை விட்டுப் போகணுங்கிறதுக்குத் தான்,'' என்றாள் அம்மா.
ஆதர்ச தம்பதி போல் எப்போதும் சந்தோஷமாக வளைய வரும்
தன் பெற்றோரின் பின் இப்படி ஒரு கதை இருப்பதை அறிந்து அதிர்ச்சியுடன் பார்த்தாள்
வசந்தா.
''இந்த உலகத்திலே, லட்சத்துல
பத்துப் பேருக்கு கூட அவங்க நினைச்ச மாதிரியான வாழ்க்கை அமையறது இல்லை. சிலர், தனக்கு அமைஞ்ச
வாழ்க்கையை அவங்களே தங்களோட சுய புத்தியால அழகாக்கிக்கிறாங்க. பலர், உன்னை மாதிரி, இல்லாததை எல்லாம்
கனவு கண்டு, யதார்த்தத்தைப் புரிஞ்சுக்காம, தானும் வேதனைப்
பட்டு, தன்னைச் சார்ந்தோர் வாழ்க்கையையும் நரகமாக்கிக்கிறாங்க,'' என்றதும், ''அப்ப நமக்குன்னு
எந்த ஆசையும் இருக்க கூடாதாம்மா...'' என்றாள்
பரிதாபமாக வசந்தா.
''உன் ஆசை, எதிர்பார்ப்பு
தப்புன்னு சொல்லல; அதே நேரம் எதார்த்தத்தை புரிஞ்சு, அதுக்கேத்த
மாதிரி நடந்துக்கணும்ன்னு தான் சொல்றேன். ரெண்டு வருஷமா உன் புருஷன் உன்கிட்ட
சரியா பேசுறது கூட இல்லன்னு புலம்புறே...
''நூறு புள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் குடுக்குற டீச்சரு நீ...
உனக்கே இது தெரிஞ்சுருக்கணும்... நல்லா படிக்கிற புள்ளையக் கூட, 'நீ மக்கு, சடம், உருப்பட மாட்டே, ஒண்ணுக்கும்
லாயக்கில்ல'ன்னு சதா கடுகடுத்துக் கிட்டே இருந்தா அந்தக் குழந்தைக்கு, 'உண்மையிலேயே நாம
ஒரு மக்கோ'ங்கிற எண்ணம் வந்து, தாழ்வுணர்ச்சியால
ஒதுங்கித் தானே போகும்...
''வளர்ந்த, சிந்திக்கிற
ஆற்றல் உள்ள, மனுஷன சதா, தேள் மாதிரி
கொட்டிக்கிட்டே இருந்தா, அவனுக்கு பொண்டாட்டிய பார்த்தா சந்தோஷமாவா இருக்கும்...
''சந்தோஷங்கிறது உடம்புல இல்ல வசு... மனசுல இருக்கு. மனசுக்கு
அமைதியும், ஆசுவாசமும் கிடைக்கிற இடத்துல, உடம்பு மூணாம்
பட்சமா போயிரும். 25 வயசுலேயே குடும்ப வாழ்க்கை இல்லன்னு ஆகிப் போன பின்னரும், எனக்கு உங்க
அப்பா மேல துளி கூட அன்பு குறையல. சொல்லப்போனா, அதுக்கு பின்தான்
நாங்க ரெண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கிட்டோம். இன்னைக்கி, நானும், உங்க அப்பாவும், ஒருத்தர் மேல
ஒருத்தர் பிரியமாக இருக்கோம்ன்னா, அதுக்கு காரணம், இந்த மனநெருக்கம்
தான்!''
படிக்காத தன் அம்மா ஒரு யோகியைப் போல் தீர்க்கமாக
பேசுவதை ஆச்சரியமாக பார்த்த வசந்தா, ''எப்படிம்மா
உன்னால முடியுது,'' என்றாள்.
''எனக்கு என்ன கிடைச்சிருக்கோ அதை வச்சு சந்தோஷப்பட
கத்துக்கிட்டேன். அதனால தான், வாழ்க்கை எனக்கு
சுமையா தெரியல. நீயும் உன் மனசை, அன்பால நிரப்பி
வச்சா, உனக்கு எல்லாமே சந்தோஷம் தான். ஆனா, அதுல, வெறுப்பும், கோபமும்
நிரம்பியிருந்தா வாழ்க்கை இப்படித் விரக்தியா தான் தெரியும்.
''இன்னொரு விஷயத்தை நீ யோசிச்சுப் பாத்தீயா... உனக்கு எப்படி, மாப்பிள்ளை
குறித்த கனவுகள், ஆசைகள் இருந்ததோ, அதேமாதிரி தானே
அவருக்கும் தனக்கு மனைவியா வர்றவள பற்றிய கனவுகள் இருந்திருக்கும்... அப்படிப்
பாத்தா, நீ, உன் புருஷனுக்கு மன அமைதியையும், நம்பிக்கையையும்
தர்ற பொண்டாட்டியாவா இருந்திருக்கே... எத்தனையோ முறை எங்க முன்னாடியே மாப்பிள்ளைய
மரியாதை இல்லாம பேசியிருக்கே... உன்னை கல்யாணம் செய்ததை நினைச்சு, அவரும் தானே
வேதனைப்படுவார்... கனவு காணலாம் வசு... ஆனா, அந்த கனவும், ஆசைகளும்
நிதர்சனத்தை அழகாக்கணும்; நிறம்மாறி வாழ்க்கையை அலங்கோலமாக்கிடக் கூடாது,'' என்றாள் அம்மா
அமைதியாக!
தன் தவறு உணர்ந்து மவுனமாக தலை கவிழ்ந்தாள், வசந்தா.
ப.அங்கயற்கண்ணி
அன்பு நன்றி சகோ,
===================================
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய்
வாழ்க, குருவே துணை...
Gurur Brahma,
Gurur Vishnu, Gurur Devoh Maheshwara
Guru Sakshat
Parabrahmah Tasmai Shree Guru Veh Namah !
I am Love, I
shower Love. I share Love. I am pleased with Love. - Baba
When your heart
is filled with good thoughts and feelings, all that comes out of the senses -
your speech, your vision, your action - will naturally be pure. - Baba
உனது ஹ்ருதயம் நல்ல சிந்தனைகளாலும் நல்ல
உணர்வுகளாலும் நிரப்பப்பட்டுள்ள போது, உனது பேச்சு, பார்வை, செயல்கள் யாவும்
இயல்பாகவே சுத்தமாக இருக்கும். – பாபா
Embodiments of
divine Love!............ Have A Great And Wonderful Day Ahead.
God Bless You
All............ love-all-serve-all-help-ever-hurt-never............. Sairam
அன்புறவுகள்... எல்லோர்க்கும்... அனைவருக்கும் சகோ என்றென்றும்
அன்பு நன்றியுடன்.! இனிய காலை மதிய மாலை இரவு வணக்கம்! ..உரித்தாகுக தோழமை /
சகோ(களே)................!!!
ஆன்றோர்க்கும், சான்றோர்க்கும், என்னைப்போன்றோர்க்கும்
இறையருளோடு கூடிய இனிய நற்காலை வணக்கம் அன்பு சகோ, இனிய நாளாக
மலரட்டும்...சகோ தோழமை களே............... " விடியும் என்று விண்ணை நம்பும்
நீ ....! முடியும் என்று உன்னை நம்பு...!!"
ஓம் சாயி நமோ நம! ஸ்ரீ சாயி நமோ நம!
ஜெய ஜெய சாயி நமோ நம! சத்குரு சாயி நமோ நம!
அன்புடன் சகோதரன்
விக்னசாயி............
===================================
No comments:
Post a Comment