Followers

Monday, March 30, 2020


My dear sister’s brothers & friends good morning,
Have a wonderful Monday!!!
இனிய காலை வணக்கம் அன்பின் தோழமைகளே!!! தொடர்ந்து வாசியுங்கள் உள்ளே  பொன்மொழிகள்.
அன்புடன்
Vicknasai.








பொன்மொழிகள்

வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கை உன்னுள்ளே பிறக்கட்டும் உன்னுடைய உடம்பின் ஒவ்வொரு அணிவிலும் இந்த நம்பிக்கைப் பரவட்டும். அப்படிச் செய்தால்தான் உன்னால் எதையும் சாதிக்க முடியம்.

நீ ஆயிரம் மருந்துகளை உன்னுடைய வியாதிகளின் பொருட்டுச்சாப்பிடலாம். ஆனாலும் நோயில் இருந்து மீண்டுவிட வேண்டும் என்ற தளராத நம்பிக்கை உனக்கு இல்லாமல் போய்விட்டால் நீ குணம் அடைவது முடியாத ஒரு விஷயம் தான்.

பொறுமை!

நீ ஒரு போதும் உணர்ச்சி வசப்படாதே! உணர்ச்சி வசப்படுவதால் பரபரப்பு ஏற்படுகிறது. அதற்கு இடம் தராதே!

உன்னுடைய பொறுமையை இழக்காதே!

எரிச்சல் அடையாதே!

உனக்கு எப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்ப்பட்டாலும் நிர்ச்சலனமாக இருக்கப் பழகிக்கொள்.

கோபம்

மற்றவர்கள் உன்னை எப்படி நடத்தினாலும் நீ கோபத்துக்கு மட்டும் இடம் தரக்கூடாது.

சோர்விலே எச்சரிக்கை

நீங்கள் மிகவும் சோர்ந்து போய் இருக்கும் போது ஒருபோதும் தூங்கச் செல்லவேண்டாம். இடையிடையே ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் உங்களால் முடிந்த மிக எளிமையான உடல் பயிற்சிகளைச செய்யுங்கள். உங்களுக்கு மீண்டும் புத்துணர்ச்சியைத் தரக்கூடிய உங்களுக்குப் பிடித்தமான எதையாவது படியுங்கள்.

உங்களுக்கு மிகவும் பிடித்த இசையைக் கேளுங்கள். சுடச்சுட ஒரு கோப்பைப் பால் அருந்துங்கள்.

உதவியும் இன்பமும்!

உன்னிடம் உள்ள கடவுள் உணர்வு ஒன்றுதான் உனக்குக் கிடைக்கும் உணைமையான ஒரே உதவி. அது ஒன்றுதான் உண்மையான மகிழ்ச்சி.

சுயநலம்

மனிதர்கள் அந்தக் கடவுளுடைய சக்தியைக் கொண்டு தான் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவற்றைத் தங்களுடைய சொந்த நோக்கங்களுக்காகவும் சுயநலமான திட்டங்களுக்காகவும் தான் பயன்படுத்துகிறார்கள்.

இறை உணர்வு

நீ தியானம் செய்வதன் பொருட்டுத தனிமையான இடத்தில் அமர்ந்தாலும் சரி, ஏதாவது ஒரு வேலையை மேற்கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தாலும் சரி. உனக்குத் தேவையான ஒரே விஷயம் இறைவனைப்பற்றிய இடைவிடாத உணர்வுதான்.

இறைவனுக்கே காணிக்கை

நீ பகுத்தறிவு சம்பந்தப்பட்ட முயற்சிகளைச் செய்தாலும் சரி

செயலாற்றக் கூடிய திட்டங்களை சம்பந்தப்பட்ட முயற்சிகளாக இருந்தாலும் சரி.

அல்லது வேறு எவ்வகைப்பட்ட முயற்சிகளாக இருந்தாலும் சரி.

அவற்றை எல்லாம் மறக்காமல் இறைவனுக்கு அர்பணிக்கவேண்டும் என்பதை உன் குறிக்கோளாக வை.

நீ செய்யக்கூடியவை அத்தனையும் இது இறைவனுக்கே காணிக்கை என்ற உணர்வுடன் செய்.

இதுவே உனக்கு மிகச்சிறந்த ஒழுக்கத்துக்குறிய முறை. இதுமட்டுமல்லாமல், பலப்பல முட்டாள்தனமான வீணான செயல்களைச் செய்வதிலிருந்து அது உன்னைத் தடுத்து விடும்.

மௌனம்!

மனிதர்கள் பேசாமல் இருக்கக் கற்றுக்கொண்டால், எத்தனை எத்தனையோ தொல்லைகளைத் தவிர்த்துவிடலாம். எப்போதும் அமைதியாக இருந்து வலிமையைத் திரட்டுவாயாக!

இவ்வாறு செய்தால் அது வேலை செய்வதற்கு மட்டுமல்ல, உருமாற்றம் அடையவும் உதவும்.

தன்னம்பிக்கை

ஒரு மனிதனுக்குத் தன்னிடத்திலே அசைக்க முடியாத நம்பிக்கை மட்டும் இருந்தது என்றால் , அவனால் எல்லாவித்த் துன்பங்களையும், என்ன விதமான சூழ்நிலைத் துயரங்களையும், மிகமிக மோசமானவை என்று கருதப்படுபவன்ற்றையும் எதிர்த்து நிற்க முடியும்.

இதற்குத் அவனுக்குத் தேவை ஊக்கமும், மனம் உடையாத மனோநிலைமையும் கூடத்தான்!

யோகத்தில் அடியெடுத்து வைக்க

ஒருவன் யோக மார்க்கத்தில் அடியெடுத்து வைக்க வேண்டுமென்றால் அவனுக்கு ஒரு சில விஷயங்கள் எப்போதும் கவனத்தில் இருக்க வேண்டும்.

1. விடியற்காலையில் எழு.

2. அந்த நாளை இறைவனுக்கு அற்பணி.

3. நீ நினைப்பதையும், நீ செய்ய இருப்பதையும் அவனிடம் ஒப்படை.

4. இரவில் படுக்கைக்குப் போகும் முன், அன்றையத் தினத்தைப் பற்றி முழுமையாக எண்ணு.

5. என்னென்னவெல்லாம் செய்தாய் என்று நினைத்துப்பார்.

முதலில் உன் குறையை நீக்கு!

பிறமனிதர்கள் விஷயத்தில் நீ எதையாவது செய்ய வேண்டும் என்று விரும்பினால் அதை முதலில் உன் விஷயத்தில் கடைப்பிடிக்க வேண்டும்.

மற்றவர்களுக்கு ஒரு நல்ல புத்திமதியை வழங்குவதற்கு முன்னால் அந்தப் புத்திமதியை உனக்கே நீ சொல்லிக் கொள்ள வேண்டும்.

அந்த புத்திமதிப்படி நீயே நடந்துகொள்ளவேண்டும். நேர்ந்தால் அதை நீக்கக்கூடிய மிகச் சிறந்த வழி முதலில் அவ்விதமான சிக்கலை உன்னிடமிருந்து நீ விலக்குவதுதான்.

மற்றவர்களிடத்தில் நாம் என்ன விதமான குறையினைக் காண்கிறோமோ அதே குறை நம்மிடம் இருக்கிறது. என்பதை நம் உணரவேண்டும். அதன் பிறகு நம்மிடம் இருப்பதை நீக்குவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.

நம்மிடமிருந்து அது முற்றிலும் நீக்கப்பட்டபிறகு மற்றவருடைய குறையை மாற்றக்கூடிய வலிமையினை நாம் அடைந்துவிடுகின்றோம்!

படித்ததில் பிடித்தது.

My dear sister’s brothers & friends good morning,
Have a wonderful Monday!!!
இனிய காலை வணக்கம் அன்பின் தோழமைகளே!!!
அன்புடன்
Vicknasai.
======================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...