God is great. He is the Supreme Master. இறைவனே சர்வ வல்லமை பொருந்திய பெரியவன்
Baba: God is great. He is the Supreme Master. Allah Malik! How great is God! No one can compare with him. He creates, supports, and destroys. His sport (Lila) ...
குருவே பிரத்யக்ஷமான கடவுள்; குருவே பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனும் ஆவார். உண்மையில் குருராயரே முழுமுதற்கடவுளாவார். குருவே அன்னை; குருவே தந்தை. குரு, தேவர்களின் கோபத்தி¬ருந்தும் நம்மைக் காப்பாற்றும் சக்தியுடையவராவார். குருவினுடைய கோபத்தி¬ருந்து நம்மைக் காப்பாற்ற எவராலும்முடியாது என்பதை நன்கு அறிக.
''நான் இப் பிரபஞ்சத்திற்கும் அதனுள் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் தாய்; முக்குணங்கள் சந்திக்கும் இடமும் நானே; இந்திரியங்களைத் தூண்டிவிடுபவனும் நானே; நானே இப் பிரபஞ்சத்தைப் படைப்பவனும் காப்பவனும் அழிப்பவனுமாம் என்னைச் சரண் புகுந்தவனை என்றும் காப்பேன் அச்சம் தவிர் என்னை நம்பு நன்மை பெறுவாய்..”
''நான் இப் பிரபஞ்சத்திற்கும் அதனுள் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் தாய்; முக்குணங்கள் சந்திக்கும் இடமும் நானே; இந்திரியங்களைத் தூண்டிவிடுபவனும் நானே; நானே இப் பிரபஞ்சத்தைப் படைப்பவனும் காப்பவனும் அழிப்பவனுமாம்.”
''நான் இப் பிரபஞ்சத்திற்கும் அதனுள் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் தாய்; முக்குணங்கள் சந்திக்கும் இடமும் நானே; இந்திரியங்களைத் தூண்டிவிடுபவனும் நானே; நானே இப் பிரபஞ்சத்தைப் படைப்பவனும் காப்பவனும் அழிப்பவனுமாம்.”
ஒருநாள் மத்தியான ஹாரதி முடிந்து, மக்கள் அவரவர் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது பாபா என்ன திருவாய்மொழிந்தார் என்பதை இப்பொழுது கேளுங்கள்.
143 ''நீங்கள் எங்கிருந்தாலும் சரி, என்ன செய்தாலும் சரி, இதை நன்கு ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்துகொண் டிருக்கிறீர்கள் என்பது எனக்கு நிரந்தரமாக, விவரமாகத் தெரியும்”. ஆகவே அடுத்தவர்கள் பற்றி அழுக்காக பேசவேண்டாம்.
144 ''நீங்கள் இவ்வாறென நிதர்சனமாக உணரும் நான், எல்லாருக்கும் மிக அருகில் இருப்பவன்; ஒவ்வொருவருடைய இதயத்திலும் உறைபவன்; எங்கும் செல்பவன்; நான் எல்லாருக்கும் ஸ்வாமி.”
145 ''உயிருள்ளவையும் உயிரில்லாதவையும் நிறைந்த இந்த சிருஷ்டியில் நான் எல்லாவற்றிலும் இருக்கிறேன்; தனியாகவும் இருக்கிறேன். ஈதனைத்தும் தெய்வீகப் பொம்மலாட்டம்; சூத்ரதாரி நானேõ
146 ''நான் இப் பிரபஞ்சத்திற்கும் அதனுள் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் தாய்; முக்குணங்கள் சந்திக்கும் இடமும் நானே; இந்திரியங்களைத் தூண்டிவிடுபவனும் நானே; நானே இப் பிரபஞ்சத்தைப் படைப்பவனும் காப்பவனும் அழிப்பவனுமாம்.”
147 ''எவன் தன் கவனத்தை என்மீது திருப்புகிறானோ, அவன் எந்த சங்கடமும் படமாட்டான். ஆனால், என்னை மறந்துவிடுபவன் மாயையிடம் இரக்கமின்றிச் சவுக்கடிபடுவான்.--
148 '' ஈயாயினும் எறும்பாயினும் சரி, ஆண்டியாயினும் அரசனாயினும் சரி, கண்ணுக்குத் தெரியும் இவ்வுலகமனைத்தும் என்னுடைய வெளிப்பாடே. நகரும் நகராப் பொருள்கள் நிறைந்த இந்த அளவிடமுடியாத சிருஷ்டி, என்னுடைய நிஜரூபமே.”
149 எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சுவாரஸ்யமான சூசகம் இது, இறைவனுக்கும் முனிவர்களுக்கும் பேதமே இல்லை; உலகத்தை உய்விக்கவே அவதாரம் நிகழ்கிறது.
150 குருவின் பாதங்களில் அமிழ்ந்துபோக விரும்புபவர்கள் குருவின் பெருமைகளைப் பாடவேண்டும்; அல்லது குருவின் கதைகளைக் காலட்சேபம் செய்யவேண்டும்; அல்லது குருவின் கதைகளை பக்தியுடன் கேட்கவேண்டும்.
151 ஸாதகன் குருவின் கதைகளைக் கேட்கும்போது, கேட்பவனும் கேள்வியும் ஒன்றாகி, மனம் உன்மன1 நிலையை அடையும்.
152 தினசரி நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டுக்கொண் டிருக்கும்போதே, தற்செயலாகக் காதில் விழும் குருவின் கதை, தன்னுடைய சுபாவத்தினால் கேட்டவருக்கு நன்மை பல செய்யும். இதில் கேட்டவருடைய முயற்சி ஏதுமில்லை.
153 இப்படியிருக்கும்போது, பக்திபாவத்துடன் கேட்கப்பட்டால் எவ்வளவு சிரேயஸ் (ஆன்மீக லாபம்) கிடைக்கும்? கதை கேட்பவர்கள் அவர்களுடைய நன்மை கருதி இதுபற்றிச் சிந்திக்க வேண்டும்.
154 இந்த முறையில், குருவின் திருவடிகளின்மேல் பிரேமையுண்டாகும். படிப்படியாக மிக உயர்ந்த க்ஷேமமான நிலை விளையும். வேறு எவ்வகையான நியமமும் நிஷ்டையும் தேவையில்லை. வாழ்க்கையே பரம மங்களமானதாக மலரும்.
155 மனம் இவ்வாறு கட்டுப்படும்போது, கதைகளைக் கேட்கவேண்டுமென்ற ஆவல் அதிகமாகும்; புலனின்பக் கட்டுகள் தாமே உடைந்துவிடும்; பரமானந்த அனுபவம் ஏற்படும்.
Baba’s Sweet and Nectar-like Words
One day at noon after the Arti, devotees were returning to their lodgings, when Baba gave the following beautiful advice:-
"Be wherever you like, do whatever you choose, remember this well that all what you do is known to Me. I am the Inner Ruler of all and seated in their hearts. I envelope all the creatures, the movable and immovable world. I am the Controller - the wirepuller of the show of this Universe. I am the mother - origin of all beings - the Harmony of three Gunas, the propeller of all senses, the Creator, Preserver and Destroyer. Nothing will harm him, who turns his attention towards Me, but Maya will lash or whip him who forgets Me. All the insects, ants, the visible, movable and immovable world, is My Body or Form".
No comments:
Post a Comment