Followers

Monday, March 16, 2020

"Fakiri is the real Badshahi (Lordship) as it is everlasting."
எழிமையான ஏழ்மை பக்கீர் வாழ்வே என்றும் நிரந்தர நித்திய சத்திய எஜமானியம்; நூறு இடங்களில் தையல்போட்ட கப்னியை அணிந்து கொண்டும், கரடுமுரடான கோணிப்பையை ஆசனமாகவும் படுக்கையாகவும் உபயோகித்துக் கொண்டும், இதயத்தில் எந்தவிதமான ஆசையும் இல்லாமல் வாழ்பவருக்கு வெள்ளி சிம்மாசனம் எதற்கு? அவர் என்றும் பரமானந்ததில் திளைத்திருந்தார்

பக்தர்களின் நன்மைக்காகவே ஞானிகள் அவதரிக்கின்றனர். அவர்களுடைய உணர்வுகள், உணர்ச்சி வெளிப்பாடுகள், உலகியல் செயல்பாடுகள் அனைத்துமே பக்தர்களுக்காகத்தான்; இதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். ஸாயீ மஹராஜ் சாந்தியின் இருப்பிடம்; சுத்தமான பரமானந்தம் வாசம் செய்யும் இடம். களங்கமில்லாத தூய இதயத்துடன் அவரை ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன்.

106 தேஹாபிமானமே இல்லாத பாபா, மக்களுக்குள்ளே வித்தியாசம் பாராட்டுவதைக் கனவிலும் கருதவில்லை. நானாவல்லீ1 ஆசனத்தி¬ருந்து எழுந்திருக்கச் சொன்னபோது, உடனே அவருக்கு இடம் கொடுத்துவிட்டு நகர்ந்துவிட்டார்.#

107 இவ்வுலகத்தில் அவருக்கு அடைய வேண்டியது ஏதுமில்லை; பரவுலகத்தில் அடையவேண்டியதும் மீதி ஏதும் இல்லை. பக்தர்களுக்கு அருள்புரிவதற்கென்றே அவதாரம் செய்த இந்த ஞானியின் மஹிமை இவ்வாறே.

108 கருணாமூர்த்தியான ஞானிகள் மக்களுக்கு அருள்புரிவதற்காகவே இப்பூவுலகில் அவதாரம் செய்கின்றனர். பிறருக்கு நன்மை செய்வதற்காகவே பூரண கிருபையுடன் செயல்படுகின்றனர்.
109 சிலர் ஞானிகளுடைய மனம் வெண்ணெயைப்போல் இளகியது என்று கூறுகிறார்கள். வெண்ணெய் சூடுபடுத்தினால்தான் உருகுகிறது; ஞானிகளுடைய மனமோ, மற்றவர்கள் துன்பத்தினால் தாபமடைவதைக் கண்டே உருகிவிடுகிறது.
நூறு இடங்களில் தையல்போட்ட கப்னியை அணிந்து கொண்டும், கரடுமுரடான கோணிப்பையை ஆசனமாகவும் படுக்கையாகவும் உபயோகித்துக் கொண்டும், இதயத்தில் எந்தவிதமான ஆசையும் இல்லாமல் வாழ்பவருக்கு வெள்ளி சிம்மாசனம் எதற்கு?
111 அம்மாதிரியான சிம்மாசனம் அவருக்கு ஒரு தொந்தரவாகத்தான் இருக்க முடியும். இருப்பினும், அதை பக்தர்கள் பின்னா¬ருந்து அவருக்கடியில் திணிக்க முயன்றால், அவர்களுடைய அன்பையும் பக்தியையும் மதிக்கும் வகையில், அதை எதிர்த்து அவர் போராடப்போவதில்லை.
112 நிர்மலமான சிர்டீ என்னும் நீர்நிலையில் ஓர் அழகான தாமரை பாபாவின் ரூபத்தில் பூத்தது. விசுவாசமுள்ளவர்கள் அதன் மணத்தை மூக்கால் நுகர்ந்து ஆனந்தமடைந்தனர்; நம்பிக்கையும் பாக்கியமுமற்ற தவளைகள் சேற்றிலும் சகதியிலுமே உழன்றுகொண் டிருந்தன.
113 பாபா யோகாசனத்தையோ, பிராணாயாமத்தையோ, இந்திரியங்களைப் பலவந்தமாக அடக்குவதையோ, மந்திரத்தையோ, தந்திரத்தையோ, யந்திர பூஜையையோ, யாருக்கும் போதிக்கவோ விதிக்கவோ இல்லை. பக்தர்கள் காதில் மந்திரங்கூட ஓதவில்லை.
114 மேலெழுந்தவாறு பார்க்கும்போது அவர் மற்றவர்களைப் போலவே பழக்கவழக்கங்கள் கொண்டவர் போன்று தெரிந்தார்; ஆனால், அகமுகமாக அவர் முற்றிலும் வேறுபட்டிருந்தார். உலகியல் செயல்பாடுகளில் அவர் மிக்க கவனமுடையவராகவும் கறாராகவும் இருந்தார். இது விஷயத்தில் அவருடைய திறமைக்கு ஈடு எவரிடமும் கிடையாதுõ
115 பக்தர்களின் நன்மைக்காகவே ஞானிகள் அவதரிக்கின்றனர். அவர்களுடைய உணர்வுகள், உணர்ச்சி வெளிப்பாடுகள், உலகியல் செயல்பாடுகள் அனைத்துமே பக்தர்களுக்காகத்தான்; இதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
116 ஸாயீ மஹராஜ் சாந்தியின் இருப்பிடம்; சுத்தமான பரமானந்தம் வாசம் செய்யும் இடம். களங்கமில்லாத தூய இதயத்துடன் அவரை ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன்.
OM SAI NAMO NAMAH
SHREE SAI NAMO NAMAH
JAI JAI SAI NAMO NAMAH
SADGURU SAI NAMO NAMAH
Sai Samarth...........Shraddha Saburi
============================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...