Followers

Friday, March 27, 2020

Donate only with love and devotion......
கொடுப்பதை அன்புடனும், பக்தியுடனும் கொடுங்கள்;-
அடுத்த நாள் தரிசனத்திற்காக தேவ் மசூதிக்குச் சென்றபோது பாபா அவரிடம் மேலும் இருபது ரூபாய் கேட்டார். தேவும் மிகுந்த சந்தோஷத்துடன் கொடுத்தார்.
மசூதியில் கூட்டம் அதிகமாக இருந்ததால், தேவ் ஒதுங்கி நின்றுகொண் டிருந்தார். பாபாகேட்டார், ''எங்கே? இந்தக் கூட்டத்தின் ஒரு மூலையில் தேவ் எங்கே மறைந்துகொண் டிருக்கிறார்?ஃஃ
தேவ் பதில் கூறினார், ''இங்கே, நான் இங்கேதான் இருக்கின்றேன் பாபா.ஃஃ பாபா அவரை வினவினார், ''ஏன் எனக்கு ஏழு ரூபாய்தான் கொடுத்தீர்?ஃஃ
தேவ் சொன்னார், ''நான் இருபது ரூபாய் கொடுத்தேன் பாபா.ஃஃ பாபா கேட்டார், ''இது யாருடைய பணம்?ஃஃ தேவ் சொன்னார், ''பாபா, இது தங்களுடைய பணம்.ஃஃ
பாபா கேட்டார், ''அப்படியானால் நீர் ஏன் நழுவப்பார்க்கிறீர்?-- ''வாரும், இங்கு வந்து என்னருகில் அமைதியான மனத்துடன் உட்காரும்.ஃஃ தேவ் பாபாவின் ஆணைக்கு அடிபணிந்தார்.
கர்ணகடூரமானதும் ஆபாசமானதுமான வசைமொழியைக் கேட்டபோதிலும் தேவ் மனம் கலங்கவில்லை. அவருடைய அந்தரங்கம் பிரேமையால் பொங்கியது. பூக்களால் பாபா தம்மை அடித்ததுபோல் உணர்ந்தார்.
பசுவின், பால் நிறைந்த முலைக்காம்புகளிலிருந்து பாக்கியவானுக்குத்தான் பால் கிடைக்கும். மடியிலேயே ஒட்டிக்கொண் டிருப்பினும், உண்ணிக்கு அசுத்தமான ரத்தந்தான் கிடைக்கும்.
தவளைக்குத் தாமரைக்கொடி அண்டைவீட்டுக்காரன். ஆயினும், மஹா பாக்கியசாலியான வண்டு எங்கிருந்தோ வந்து தாமரைமலரிலுள்ள மகரந்தத்தைச் சுவைக்கிறது. அதிருஷ்டக்கட்டையான தவளைக்குக் கிடைப்பதோ சேறும் சகதியுந்தான்.
அவ்வாறே பாக்கியவான்களாகிய நீங்களும்õ ''நானும் நீங்களும் சந்தித்துவிட்டோம். மனத்தில் என்ன தோன்றுகிறதோ அதைக் கேளுங்கள்; சந்தேகங்களை நிவிர்த்தி செய்துகொள்ளுங்கள்.ஃஃ இது ஸாயீயின் திருவாய்மொழி.
157 ''பாபா 'வாசிஃ என்று சொல்லாமல் நான் ஞானேச்வரியைத் திறக்கப்போவதில்லை என்ற என் முரட்டுப் பிடிவாதமும் எப்படி பாபாவால் நிறைவேற்றப்பட்டது என்பதைக் கவனியுங்கள்.--
158 ''ஒரு தாயார் தம் குழந்தையின் ஆசைகளை நிறைவேற்றிச் செல்லங்கொடுப்பதைப் போன்ற இனிமையான அனுபவத்தைப் பெற்ற கதை இது. பக்தியை நிலைபெறச் செய்யும் கதை இது.ஃஃ (தேவ்) —
=====================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...