Do not be enslaved by materialism...............................
பேராசைக்கு அடிமையாகதே; நான்ஃ 'என்னுடையது, என்னும் உணர்வுகளை அறவே ஒழித்துவிட்டுப் பற்றற்ற செய்கைகளைச் செய்துகொண்டு வாழ்வாயாக. இறைவன் அளிப்பதைத் தியாக பூர்வமான உணர்வுடன் ஏற்றுக்கொள். எவருடைய உடைமைக்கோ சொத்துக்கோ ஆசைப்படாதே. இதுவே பாபாவின் அமோகமான திருவாய்மொழி, இதை பின்பற்றுவோர் வாழ்வின் பலனை அடைவார்.
Most people seek after what they do not possess and are enslaved by the very things they want to acquire.
அளவோடு உண்டு, அளவோடு உறங்கி, அவனையே என்றும் தியானியுங்கள், விரதங்கள் வேண்டா, விரத முடிவுவிழாக்களும் வேண்டா, உபவாஸம் வேண்டா, உடலை வருத்தவும் வேண்டா. புண்ணியத் தலங்களை தரிசனம் செய்வதற்கான பிரயாணமும் தேவையில்லை; இச்சரித்திரத்தைக் கேளுங்கள்; அதுவே போதுமானது. .நம்முடைய பிரேமை கள்ளமில்லாததும் விடாப்பிடியானதுமாக இருக்கவேண்டும்; பக்தியின் ஸாரத்தை கிரஹித்துக்கொள்ள வேண்டும்; விஷமமான அஞ்ஞானத்தை நாசம் செய்யவேண்டும். அப்பொழுதுதான், நமக்கு மனிதப்பிறவியின் உச்ச இலக்காகிய மோக்ஷம் சித்திக்கும். —
உண்மையான பக்தன்🙏
இங்கு நீங்கள் பார்க்கும் மூன்று முழ சரீரம் தான் சாயி என்று நினைத்துவிடாதீர்கள்.எனது உண்மையான பக்தன் எல்லா இடங்களிலும் எனது இருப்பை உணர்வான்.எல்லா உயிர்களிலும் என்னை காண்பான்.
---ஷீரடி சாய்பாபா
எல்லோர்க்கும் என்றும் அன்பு வணக்கங்கள் சகோ தோழமை களே,,,,,
No comments:
Post a Comment