நண்பரொருவர் பாபாவின் உதீயின் பிரபாவத்தைச் சொன்னார், ''ராமபாணத்தைப் போன்று, குறி தவறாது விசித்திரமாகச் செயல்படும் வேறொரு மருந்து எங்கும் இல்லை.-- ''உடனே விலேபார்லேவிற்குச் சென்று, தீக்ஷிதரை உதீ வேண்டும் என்று கேளுங்கள். அவர் எப்பொழுதும் தம்மிடம் பாபாவின் உதீ வைத்திருப்பவர்; மிகுந்த உற்சாகத்துடன்
அதை அளிப்பார்.- இப் பெண்குழந்தைக்கு மணிக்கொருமுறை காக்காய்வலிப்பு கண்டு, உடல் வில்லைப்போல் வளைத்துக்கொள்ளும். உயிர் பிரிந்துவிட்டதுபோல் நினைவின்றிக் கிடப்பாள். இந்த வியாதிக்கு எந்த வைத்தியமும் பலனளிக்கவில்லை.
அதை அளிப்பார்.- இப் பெண்குழந்தைக்கு மணிக்கொருமுறை காக்காய்வலிப்பு கண்டு, உடல் வில்லைப்போல் வளைத்துக்கொள்ளும். உயிர் பிரிந்துவிட்டதுபோல் நினைவின்றிக் கிடப்பாள். இந்த வியாதிக்கு எந்த வைத்தியமும் பலனளிக்கவில்லை.
பின்னர், நண்பரொருவர் பாபாவின் உதீயின் பிரபாவத்தைச் சொன்னார், ''ராமபாணத்தைப் போன்று, குறி தவறாது விசித்திரமாகச் செயல்படும் வேறொரு மருந்து எங்கும் இல்லை.-- ''உடனே விலேபார்லேவிற்குச் சென்று, தீக்ஷிதரை உதீ வேண்டும் என்று கேளுங்கள். அவர் எப்பொழுதும் தம்மிடம் பாபாவின் உதீ வைத்திருப்பவர்; மிகுந்த உற்சாகத்துடன்
அதை அளிப்பார்.-- ''ஸாயீயை மனத்தில் நினைத்து, அவர்மேல் முழுநம்பிக்கை வைத்து உதீயை நீருடன் கலந்து தினமும் குழந்தைக்குக் கொடுத்தால் காக்காய் வப்பு மறைந்துவிடும். நீங்கள் எல்லாருமே சந்தோஷமடைவீர்கள்.ஃஃ இதைக் கேட்ட பார்ஸி கனவான் (இரானியர்) தீக்ஷிதரிடமிருந்து உதீ பெற்றுக்கொண்டு வந்தார். தினமும் தம் பெண்குழந்தைக்கு நீருடன் கலந்து குடிக்கக் கொடுத்தார். குழந்தை ஆரோக்கியம் அடைந்தது.
தொடர்ந்து படியுங்கள் மேலும் சாயி அற்புதம் தொடர்கிறது..............
Please see below for English version. Tq
எலோர்க்கும் அன்பு நன்றியும் வணக்கமும்....
சாயியின் சரித்திரம் பாக்கியம் அளிப்பது. அவருடைய நித்திய நடவடிக்கைகள் பாக்கியம் அளிப்பவை. அவருடைய செய்கைகளோ அதியற்புதமானவை; புரிந்துகொள்ளமுடியாதவை; கிரமமாக விவரிக்க முடியாதவை. அவருடைய உண்மையான வாழ்க்கைச் சரித்திரம் ஆழங்காணமுடியாதது;...................................... ஸாயீயின் லீலைகள் எண்ணத்திற்கும் செயல்/ விளைவு சிந்தனைக்கும் அப்பாற்பட்டவை. அவரைத் தவிர வேறு யாரால் அவற்றை விவரிக்க முடியும்? நான் ஒரு கருவி மாத்திரமே அல்லேனோ? அவரே என்னைப் பேசவைப்பார். எல்லாருக்கும் எப்போதும் க்ஷேமம் உண்டாகட்டும்
''ஆத்மார்த்தமாகவும் இதயபூர்வமாகவும் என்னிடம் அன்பு கொண்டவன் என் கதைகளைக் கேட்டு இயல்பாகவே சந்தோஷமடைவான்.--Baba.......................................................................................................
."Bend the body, mend the senses and end the mind - this is the way to Immortality." - Baba.
Spreading the life and teachings of Shri Shirdi Saibaba.......
Sometimes Sai removes things from our lives for our own protection. Trust in Him.
Just because you can't see the air, doesn't mean you stop breathing. Just because you can't see Sai doesn't mean you stop believing.
Sai has perfect timing; never early, never late. It takes a little patience and it takes a lot of faith but it's worth the wait. .......... Think positive and positive things will happen.................
வேண்டத் தக்கது அறிவோய் நீ,
வேண்ட முழுவதும் தருவோய் நீ,
வேண்டும் அயன், மால்க்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்,
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்,
அதுவும் உன் தன் விருப்பு அன்றே!.....
Who so ever puts his feet on SHIRDI soil, his sufferings would come to an end, the wretched and miserable would rise into plenty of joy and happiness, as soon as they climb the steps of DWARAKAMAYEE.
ஸாயீயை சரணடைந்து அவருடைய பாதங்களை நமஸ்கரிக்கிறேன். அவர் உறையும் எல்லா ஜீவராசிகளுக்கும் வணக்கம் செலுத்துகிறேன். கதை கேட்பவர்கள் ஸாயீக்கு நிவேதனம் செய்யப்படும் இப் பிரஸங்கத்திற்குத் தங்களுடைய மேலான கவனத்தை தானமாக அளிக்குமாறு வேண்டுகிறேன்.
எல்லாருக்கும் எப்போதும் க்ஷேமம் உண்டாகட்டும்
எல்லாருக்கும் எப்போதும் க்ஷேமம் உண்டாகட்டும்
ஸ்ரீ ஸாயீயின் பொற்கமலப் பாதங்களில் சரணமடைகின்றேன். கதை கேட்பவர்களுக்கு நமஸ்காரம் செய்கிறேன். ஸம்ஸார ஸாகரத்தை எளிதாகக் கடக்கும் திறமையைப் பெறும் வகையாக இக் கதைகளை பயபக்தியுடன் கவனமாகச் செவிமடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் எப்பொழுது சொல்லப்படுகிறதோ அப்பொழுது கேளுங்கள். அது மங்களத்தை அளிக்கும். கருணாமூர்த்தியான ஸாயீயே எல்லாச் செயல்களுக்கும் காரணகர்த்தா..
Baba comforted us saying, "Alla Accha Karega (God will do good)."
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
இனிய சுபகுருதின வணக்கம் அன்புறவுகளே!!!..
ஸ்ரீ சிர்டீ சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது……….
Please see below for English version. Tq
வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்...சாயி ஸ்த்சரித்திரம் அத்தியாயம் 34
தமிழில் தொடர்கிறது……….
*
*
*
================================================================
தமிழில் தொடர்கிறது……….
*
*
*
================================================================
இன்னும் ஒரு அனுபவத்தைச் சொல்விட்டு, உதீயின் பிரபாவம்பற்றிய விவரணத்தை முடித்துவிடுகிறேன். இந்தத் தொடரின் சாராம்சம் என்னவென்றால், 'மனத்தின் பா(ஆஏஅ)வம் எப்படியோ, அப்படியே அனுபவம்õஃ என்பதே.
92 இரு சகோதரர்களில் மூத்தவர் மாதவராவ்; இளையவர் பாபாஜீ. ஒருசமயம் துன்பம் நேர்ந்தபோது, உதீயை உபயோகித்து பாபாஜீ எவ்வாறு விடுதலையடைந்தார் என்பது பற்றிக் கேளுங்கள்.
93 இந்த உதீயின் பிரபாவம் சொல்லுக்கடங்காதது. அதை நான் எவ்வாறு தகுந்த அளவிற்குப் புகழ்வேன்? பிளேக் நோய் வீக்கங்களுக்கும் மற்றெல்லா வியாதிகளுக்கும் உதீயைப் போன்ற ஸர்வரோக நிவாரணி வேறெதையும் நான் கண்டதில்லை.
94 பாபாஜீ ஸாவூல்1 விஹிரில் வசித்துவந்தபோது, அவர் மனைவிக்கு ஜுரம் கண்டு வயிற்றுக்குக் கீழே இரண்டு வீக்கங்கள் தோன்றின. பாபாஜீ மனக்கலக்கம் அடைந்து அரண்டு போனார்.
95 அந்த பயங்கரமான இரவு நேரத்தில் மனைவி பட்டபாட்டைப் பார்த்த பாபாஜீ பீதியடைந்து தைரியமிழந்தார்.
96 திகிலாலும் பயத்தாலும் நடுநடுங்கியவாறு இரவோடிரவாக சிர்டீக்கு ஓடிவந்தார். தம் அண்ணனிடம் விவரங்களைத் தெரிவித்தார்.
97 ''இரண்டு வீக்கங்கள் தோன்றியிருக்கின்றன; கடுமையான ஜுரம் அடிக்கிறது; அவஸ்தைப்படுகிறாள்; நீங்களே வந்து பாருங்கள்; இதொன்றும் நல்லதற்கு அறிகுறியாகத் தெரியவில்லை.ஃஃ
98 பாபாஜீயின் சோகம் ததும்பிய முகத்தையும் வருத்தம் தோய்ந்த வார்த்தைகளையும் கேட்ட மாதவராவ் திடுக்கிட்டார். அவரும் மனங்கலங்கி தைரியமிழந்தார்.
99 மாதவராவ் விவேகம் நிறைந்தவரானாலும், வீக்கங்கள் என்று கேள்வியுற்றபோது திகிலடைந்தார். பிளேக் நோய் வீக்கங்கள் கண்டால், சீக்கிரமே மரணம் சம்பவிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.
100 சுபமான நிகழ்ச்சியானாலும் அசுபமான நிகழ்ச்சியாயினும், இஷ்டமான செயலாயினும் கஷ்டமான செயலாயினும், பாபாவின் அறிவுரையைக் கேட்பதென்பது சிர்டீ மக்களின் வழக்கம்.
101 பிறகு, அவர் எப்படி எப்படியெல்லாம் சொல்கிறாரோ, அப்படி அப்படியெல்லாம் செயல்படவேண்டும். ஏனெனில், அவரே பக்தர்களை சங்கடங்களிருந்து விடுவித்தார். ஓ, எத்தனை அனுபவங்களை நான் வர்ணிக்க முடியும்õ
102 ஆகவே, இந்த நித்திய பாடத்தின்படியே மாதவராவும் முடிவெடுத்தார். பாபாவுக்கு ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்துவிட்டு பயபக்தியுடன் முதல் அவரிடம் விவரங்களைச் சொன்னார்.
103 மாதவராவ் வேண்டினார், ''ஜய ஜய ஸாயீநாதாõ இந்த அநாதைகளின் மீது தயை காட்டுவீராக. ஓ, இதென்ன புதிதாக ஒரு சங்கடம்õ இதென்ன வேண்டாத மனக்கலக்கம்õ--
104 ''ஆயினும் உங்களைத் தவிர நாங்கள் யாரிடம் மன்றாடுவோம்? அந்தப் பெண்ணின் யாதனையை (நரக வேதனையை) விலக்குங்கள்; அவளை ஆசீர்வாதம்
செய்யுங்கள்.--
செய்யுங்கள்.--
105 ''இந்த சங்கடத்திருந்து எங்களைக் காத்தருளுங்கள். உம்மையல்லால் எங்களை ரட்சிப்பவர் வேறு யார்? கட்டுக்கடங்காத இந்த ஜுரத்தை சமனம் செய்து உம்முடைய வாக்கைக் காப்பாற்றுங்கள்.ஃஃ
106 தம்பியுடன் ஸாவூல் விஹிர் செல்வதற்கு பாபாவை அனுமதி கேட்டார் மாதவராவ். பாபா அப்பொழுது சொன்னார், ''இந்த நேரங்கெட்ட நேரத்தில் போகவேண்டா. ஆயினும் அவளுக்குக் கொஞ்சம் உதீ கொடுத்தனுப்பு.--
107 ''வீக்கமென்ன, ஜுரமென்னõ அல்லாமாக் நம் பிதா அல்லரோ? அது தானாகவே சுகமாகிவிடும். அவள் நலமடைவாள்; இதில் சந்தேகத்திற்கு இடமேதுமில்லை.--
108 ''எப்படியும் காலை சூரிய உதயத்தின்போது நீ ஸாவூல் விஹிருக்குச் செல்வாயாக. இப்பொழுதே போகவேண்டுமென்று அவசரப்படாதேõ இங்கேயே அமைதியான மனத்துடன் இரு.--
109 ''நாளைக்கும், போனவுடனே திரும்பி வா. காரணமில்லாமல் ஏன் தொந்தரவுக்கு உள்ளாகிறாய்? உதீயைப் பூசிவிட்டு, நீருடன் கலந்து கொடுத்தபின் நாம் ஏன் பயப்படவேண்டும்?ஃஃ
110 இதைக் கேட்ட பாபாஜீ பயந்தார்; தைரியமிழந்துபோனார். மாதவராவுக்கு மூகை மருந்துகள்பற்றிய ஞானம் இருந்தது; ஆனால், அது அந்த சமயத்தில் உபயோகப்படாது.
111 எது எப்படி இருந்தாலும் மாதவராவ் பாபாவின் குறிப்பைப் பூரணமாக அடையாளம் கண்டுகொண்டார். எந்த மருந்தும் பாபாவின் அருளின்றி வேலை செய்யப் போவதில்லைõ--
112 ஆகவே அவர் பாபாவின் ஆக்ஞைக்குக் கீழ்ப்படிந்து, தம்பியிடம் உதீயைக் கொடுத்தனுப்பிவிட்டுத் தாம் அமைதியாக சிர்டீயில் இருந்தார். பாபாஜீ மனமுடைந்தவராகக் கவலையுடன் வீடு திரும்பினார்.
113 உதீயை நீருடன் கலந்து அருந்துவதற்குக் கொடுத்துவிட்டு வீக்கங்களின்மேலும் பூசினார். மனைவி சிறிது நேரத்தில் உடல் முழுவதும் வியர்த்துக்கொட்டி, நித்திரையில் ஆழ்ந்தார்.
114 சூரியோதய காலத்தில் அவருக்குத் தெம்பு வந்துவிட்டது. ஜுரமோ வீக்கங்களோ இருந்த இடம் தெரியவில்லைõ பாபாஜீ ஆச்சரியமடைந்தார்.
115 மாதவராவ் காலையில் எழுந்து இயற்கைக் கடன்களை முடித்துக்கொண்டு முகம் கழுவி ஸாவூல் விஹிருக்குக் கிளம்புவதற்குமுன், தரிசனம் செய்வதற்கு மசூதிக்கு வந்தார்.
116 பாபாவை தரிசனம் செய்து நமஸ்காரம் செய்தபின், உதீயையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டவுடன் ஸாவூல் விஹிரை நோக்கி நடந்தார்.
117 மசூதியின் படிகளில் இறங்கும்போது பாபா ஆணையிட்டது கேட்டது. ''சாமா, நீ போனவுடனே திரும்பிவிடுõ தாமதம் செய்வதற்கு அங்கு ஒரு வேலையும் இல்லை.ஃஃ
118 போகும் வழியில் மாதவராவ், ''தம்பியின் மனைவி என்ன பாடுபடுகிறாளோõ எப்படி இரண்டு வீக்கங்களின் எரிச்சலைப் பொறுத்துக்கொள்ளப் போகிறாள்õ ஓ, பெரும் துன்பத்தால் வாடிப் படுத்துக்கிடக்கிறாள் போலும்õஃஃ என்று கவலைப்பட்டுக்கொண்டே சென்றார்.
119 ''ஆயினும், பாபா எதையோ குறிப்பால் உணர்த்தினார் போருக்கிறதேõ இல்லையெனில் என்னை ஏன் போனவுடனே திரும்பிவிடு என்று சொன்னார்?ஃஃ இவ்வாறு சாமா கலவரமடைந்து காலை எட்டிப்போட்டு வழி நடந்தார்.
120 நேரம் கடப்பதுபற்றிப் பொறுமை இழந்து வேகவேகமாக ஸாவூல் விஹிரை நோக்கி நடந்தார். வீட்டு வாயிற்படியை மிதித்தபோது, அவருடைய கண்களை அவராலேயே நம்பமுடியவில்லைõ
121 முன்னாள் இரவு பிளேக் நோயால் படுத்துக்கிடந்த பெண்மணி, வழக்கம்போல் தேநீர் தயாரித்துக்கொண் டிருந்ததைப் பார்த்தார். பெண்மணியின் நிலைமையில் ஏற்பட்டிருந்த திடீர் மாற்றத்தைக் கண்டு சாமா வியப்படைந்தார்.
122 அவர் பாபாஜீயிடம் கேட்டார், ''எப்படி உன் மனைவி தினப்படி வேலைகளைச் செய்துகொண் டிருக்கிறாள்?ஃஃ பாபாஜீ பதில் சொன்னார், ''அனைத்தும் பாபாவின் உதீ செய்த அற்புதமே.--
123 ''நான் வீடு வந்து சேர்ந்தவுடனே உதீயை நீருடன் கலந்து அருந்துவதற்குக் கொடுத்தேன்; உடல் முழுவதும் பூசினேன். உடனே அவளுடைய உடல் முழுவதும் வியர்த்துக்கொட்டியது; நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்தாள்.--
124 ''பின்னர், சூரியோதய நேரத்தில் தெம்பாகவும் நலமாகவும் எழுந்து உட்கார்ந்தாள். ஜுரமும் வீக்கங்களும் மறைந்துவிட்டன. உண்மையில் இது பாபாவின் அருட்சக்தியேயன்றி வேறெதுவுமில்லை.ஃஃ
125 இந்த நிலைமையைப் பார்த்தவுடனே சாமாவுக்கு பாபா 'போனவுடனே திரும்பிவிடுஃ என்று சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. சாமாவின் மனம் ஆச்சரியத்தால் நிரம்பியது.
126 சாமா வருவதற்கு முன்பே வேலை முடிந்துவிட்டது. ஆகவே அவர் தேநீர் குடித்தவுடன் சிர்டீ திரும்பினார். நேராக மசூதிக்குச் சென்று பாபாவின் பாதங்களை வணங்கினார்.
127 சாமா கேட்டார், ''பாபா, இதென்ன விளையாட்டு? நீங்களே மனத்தில் கலவரத்தை உண்டுபண்ணுகிறீர். உம்முடைய இடத்தில் உட்கார்ந்தவாறே ஒரு சுழற்காற்றைக் கிளப்பிவிடுகிறீர். பிறகு நீங்களே அதை நிச்சலமாக்குகிறீர்.ஃஃ
128 பாபா பதிலுரைத்தார், ''இதோ பார், இதெல்லாம் மறைந்து வேலைசெய்யும் கர்மவினைகளின் வானளாவிய ஓட்டம். நான் செய்பவனுமல்லேன், செய்ய வைப்பவனுமல்லேன் என்பதை உறுதியாக அறிந்துகொள். ஆனாலும், செய்யக்கூடிய சக்தி என் வாயிற்படியில் படுத்துக்கிடக்கிறதுõ--
129 ''விதியின் வமையால் என்னென்ன நிகழ்ச்சிகள் நேர்கின்றனவோ அவற்றிற்கு நான் சாட்சி மாத்திரமே. செயல்புரிபவனும் செயல்புரியவைப்பவனும் இறைவன் ஒருவனே; அவனொருவனே கிருபை செய்யக்கூடியவன்.--
130 ''நான் தேவனுமல்லேன்; ஈசுவரனுமல்லேன். நான் 'அனல் ஹக்ஃகுமல்லேன் (கடவுளுமல்லேன்); பரமேசுவரனுமல்லேன். நான் 'யாதே ஹக்ஃ (இறைவனை எப்பொழுதும் மனத்தில் இருத்தியவன்). நான் அல்லாவின் மிகப் பணிவான அடிமை.--
131 ''எவன் அஹங்காரத்தை அழித்துவிட்டு நன்றி நிறைந்த மனத்துடன் அவர்மீது தன் பாரத்தைப் போடுகிறானோ, அவனுடைய படகு கரை சேர்ந்துவிடும்.ஃஃ
132 இப்பொழுது ஒரு இரானியரின் மஹத்தான அனுபவத்தைக் கேளுங்கள். அவருடைய பெண்குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாதிருந்தது. அவ்வப்பொழுது நினைவிழந்துவிடும்.
133 இப் பெண்குழந்தைக்கு மணிக்கொருமுறை காக்காய்வலிப்பு கண்டு, உடல் வில்லைப்போல் வளைத்துக்கொள்ளும். உயிர் பிரிந்துவிட்டதுபோல் நினைவின்றிக் கிடப்பாள். இந்த வியாதிக்கு எந்த வைத்தியமும் பலனளிக்கவில்லை.
134 பின்னர், நண்பரொருவர் உதீயின் பிரபாவத்தைச் சொன்னார், ''ராமபாணத்தைப் போன்று, குறி தவறாது விசித்திரமாகச் செயல்படும் வேறொரு மருந்து எங்கும் இல்லை.--
135 ''உடனே விலேபார்லேவிற்குச்1 சென்று, தீக்ஷிதரை உதீ வேண்டும் என்று கேளுங்கள். அவர் எப்பொழுதும் தம்மிடம் உதீ வைத்திருப்பவர்; மிகுந்த உற்சாகத்துடன் உதீ அளிப்பார்.--
136 ''ஸாயீயை மனத்தில் நினைத்து, அவர்மேல் முழுநம்பிக்கை வைத்து உதீயை நீருடன் கலந்து தினமும் குழந்தைக்குக் கொடுத்தால் காக்காய் வப்பு மறைந்துவிடும். நீங்கள் எல்லாருமே சந்தோஷமடைவீர்கள்.ஃஃ
137 இதைக் கேட்ட பார்ஸி கனவான் (இரானியர்) தீக்ஷிதரிடமிருந்து உதீ பெற்றுக்கொண்டு வந்தார். தினமும் தம் பெண்குழந்தைக்கு நீருடன் கலந்து குடிக்கக் கொடுத்தார். குழந்தை ஆரோக்கியம் அடைந்தது.
138 ஒவ்வொரு மணி நேரத்திற்கும் கலவரம் அடையும் குழந்தைக்கு உதீயால் உடனே நிவாரணம் கிடைத்தது. அடுத்தடுத்த வப்புகளின் இடைவெளி படிப்படியாக ஏழு மணிகளாக உயர்ந்தது.
139 இவ்வாறாக, மணிக்கொருதரம் ஏற்பட்ட வப்பு ஏழு மணி நேரத்திற்கு ஒருதரம் ஏற்பட்டது. காலக்கிரமத்தில் சுவடேயில்லாமல் வப்பு மறைந்துவிட்டதுõ
140 ஹர்தாவுக்கருகில் இருந்த கிராமமொன்றில் ஒரு முதிய இல்லறவாசி வாழ்ந்துவந்தார். 'சிறுநீரகக் கற்கள்ஃ வியாதியால் பீடிக்கப்பட்டு வயும் வேதனையும் அடைந்தார்.
141 இந்த வியாதிக்கு அறுவை மருத்துவத்தைத் தவிர வேறு வழி ஏதும் இல்லாததால், திறமை வாய்ந்த அறுவை மருத்துவ நிபுணர் யாரையாவது அணுகும்படி சிலர் அவருக்கு அறிவுரை கூறினர்.
142 நோயாளி மிகுந்த விசாரமுற்றார்; என்ன செய்வதென்று தெரியாது தவித்தார். மரணத்தின் வாயிருப்பவர்போல் மெந்து போனார். வேதனையளிக்கும் வயைப் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.
143 அறுவை மருத்துவம் செய்துகொள்வதற்கு தைரியம் தேவை. முதியவருக்கு அந்த தைரியம் இல்லை. தெய்வாதீனமாக அவருடைய துரதிருஷ்டம் ஒரு முடிவுக்கு வந்தது. அற்புதம் என்ன நடந்ததென்று கேளுங்கள்õ
144 நோயாளியின் நிலைமை இவ்வாறு இருந்தபோது, அந்த கிராமத்தின் இனாம்தார்2 கிராமத்திற்கு வரப்போகிறார் என்ற செய்தி வந்தது. இனாம்தார் ஸாயீ பாபாவின் சிறந்த பக்தர்.
145 அவர் எப்பொழுதும் தம்மிடம் பாபாவின் உதீயை வைத்திருந்தார் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். உதீயைப் பிரார்த்தித்து வாங்குவதற்கு நோயாளியின் உறவினர்களும் நண்பர்களும் இனாம்தாரிடம் வந்தனர்.
146 இனாம்தார் உதீ கொடுத்தார். மகன் அதை நீருடன் கலந்து தந்தைக்குக் (நோயாளி முதியவருக்குக்) குடிப்பதற்குக் கொடுத்தான். குடித்து ஐந்து நிமிடங்கூட ஆகவில்லை; ஓர் அற்புதம் நிகழ்ந்ததுõ
147 உதீ பிரசாதம் உள்ளே சென்றவுடன், சிறுநீரகக் கல் இடத்திருந்து நகர்ந்து சிறுநீரோடு சேர்ந்து வெளியே வந்துவிட்டது.
148 சந்திர சேனீய காயஸ்த ஜாதியைச் சேர்ந்த இல்லறத்தவர் ஒருவர் பம்பாயில் வாழ்ந்துவந்தார். அவர் மனைவி பிரசவ நேரம் வரும்போது உயிருக்குப் போராடுவாள்.
149 எத்தனையோ வைத்திய முறைகளைக் கையாண்டு பார்த்தனர். எதுவும் குணமளிக்கவில்லை. பிரசவ நேரத்தில் பெண்மணியின் ஜீவன் கலங்கும்; கணவர் கவலையில் மூழ்குவார்.
150 ஸ்ரீராம மாருதி என்ற பெயர்கொண்ட, பிரசித்திபெற்ற ஸாயீ பக்தரொருவர் அளித்த அறிவுரையின்படி கணவர் சிர்டீக்குப் போவதென்று முடிவுகட்டினார்.
151 பிரசவ சமயம் நெருங்கும்போது, இருவருமே பெரும் சங்கடத்துக்குள்ளாயினர். ஆகவே சிர்டீக்குப் போவதால் பயத்திருந்து விடுபடுவதென்று இருவரும் ஏகமனதாகத் தீர்மானித்தனர்.
152 என்ன நடக்கப் போகிறதோ அது நடக்கட்டும். ஆனால், அது பாபாவின் சன்னிதியில்தானே நடந்தாகவேண்டும்? இந்த திடமான ஸங்கல்பத்தை ஏற்றுக்கொண்டு இருவரும் வந்து சிர்டீயில் தங்கினர்.
153 சிர்டீயில் அவர்கள் ஆனந்தமாக பாபாவுக்குப் பூஜை செய்துகொண்டும் அவருடைய சகவாசத்தை அனுபவித்துக்கொண்டும் பல மாதங்கள் வசித்தனர்.
154 இவ்வாறு சிலகாலம் கழிந்தபிறகு, பிரஸவகாலம் நெருங்கியது. சங்கடத்திருந்து எவ்வாறு விடுபடுவது என்ற மனக்கலக்கத்தையும் கூடவே கொண்டுவந்தது.
155 இவ்வாறு அவர்கள் யோசித்துக்கொண் டிருந்தபோதே பிரஸவம் ஆகவேண்டிய நாள் வந்துவிட்டது. கர்ப்பப்பையின் வாய் அடைத்திருப்பது கண்டு எல்லோரும் விசாரமடைந்தனர்.
156 பெண்மணி மிகுந்த யாதனைக்கு (நரக வேதனைக்கு) உள்ளானார். யாருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. பாபாவை நோக்கி இடைவிடாத பிரார்த்தனை ஓடியது. அவரன்றி வேறு யார் கருணைகாட்டப்போகிறார்?
157 அக்கம்பக்கத்திருந்த மகளிர் ஓடிவந்தனர்; அவர்களில் ஒருவர் பாபாவைப் பிரார்த்தனை செய்துகொண்டே ஒரு லோட்டாவில் கொஞ்சம் நீர் எடுத்து அதில் உதீயைக் கரைத்து அப் பெண்மணியைக் குடிக்கவைத்தார்.
158 ஐந்து நிமிடங்களுக்குள் அப் பெண்மணி பிரஸவித்தாள். கர்ப்பத்திலேயே உயிரிழந்த சிசு, ஜீவனற்றுக் காணப்பட்டது.
159 அதுவே சிசுவின் கர்மகதி. பிற்காலத்தில் அப் பெண்மணிக்கு நல்ல குழந்தை பிறக்கலாம். தற்சமயத்திற்கு உயிர் பிழைத்துக்கொண்டாள்; பயத்திருந்தும் விடுதலை பெற்றாள்.
160 வேதனையின்றி கர்ப்பத்தை வெளிக்கொணர்ந்தாள்; உடல் அங்கங்கள் ஆரோக்கியமாக இருந்தன. மிகுந்த அபாயகரமான கட்டம் தாண்டிவிட்டது. அப் பெண்மணி பாபாவுக்கு என்றென்றும் கடமைப்பட்டவள் ஆனாள்.
161 அடுத்த அத்தியாயம் மேலும் சிறப்பானது. கேட்பவர்களின் ஆவல் செழிப்பாக நிறைவேறும். எதைப் பார்த்தாலும் சந்தேகப்படும் கெட்டகுணம் விலகும்; பக்தி வளரும்.
162 ''நாங்கள் உருவமற்ற கடவுளையே வணங்குவோம்; தக்ஷிணை கொடுக்கமாட்டோம்; நாங்கள் யாருக்கும் தலைவணங்கமாட்டோம். இந்த நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொண்டால்தான் தரிசனத்திற்கு வருவோம்.ஃஃ
163 இவ்வாறு நிச்சயம் செய்துகொண்டு வந்தவர்கள் ஸாயீயின் பாதங்களைப் பார்த்தவுடன் ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்ததுமட்டுமல்லாமல் பாபா கேட்காமலேயே தக்ஷிணையும் கொடுத்தனர். ஓ, என்ன அற்புதம்õ
164 மேலும், உதீயின் அபூர்வ மஹீமையையும் நெவாஸ்கர் இல்லற தர்மத்தை ரட்சிக்கும் வகையில் ஒரு நல்லபாம்பிற்குப் பால் வார்த்ததையும் சொல்கிறேன், கேளுங்கள்.
165 இதுபோன்ற உத்தமமான கதைகளை பக்தியுடனும் பிரேமையுடனும் செவிமடுத்தால், சம்சார இன்னல்கள் சாந்தமடையும். அதைவிடப் பரம சுகம் வேறெதுவும் உண்டோ?
166 ஆகவே, ஹேமாட் ஸாயீபாதங்களில் வணங்கி, கதை கேட்பவர்களுக்குப் பிரேமையை அருளுமாறு வேண்டுகிறேன். அவர்களுடைய மனம் ஸத் சரித்திரம் கேட்பதில் ரமிக்கட்டும் (மகிழட்டும்).
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'உதீயின் பிரபாவம்ஃ என்னும் முப்பத்துநான்காவது அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
=============================================================
'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது………………………
=================================================================
'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது………………………
=================================================================
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது……………………………………….
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
Please see below for English version. Tq
CHAPTER 34
*
*
*
*
*
*
============================================
Sharma's Sister-in-law
Shama's younger brother Bapaji was staying near Sawool well. Once his wife was attacked with Bubonic plague. She had high fever and two bubos in her groins. Bapaji rushed to Shama at Shirdi and asked him to come and help. Shama was frightened, but according to his wont, he went to Baba, prostrated himself before Him, invoked His aid, and requested Him to cure the case. He also asked His permission to go to his brother's house. Then Baba said, "Don't go there at this late hour (night), send her Udi. Why care for the fever and bubos? God is our father and master; she will be alright easily. Do not go now, but go there in the morning and return immediately."
Shama had full faith in Baba's Udi. It was sent with Bapaji. It was applied on the bubos and some of it was mixed with water and was given to the patient for drinking. No sooner was it taken in, than perspiration set in profusely, the fever abated and the patient had a good sleep. Next morning Bapaji was surprised to see his wife alright and refreshed with no fever and bubos. When Shama went there next morning with Baba's permission he was also surprised to see her at the hearth and preparing tea. On questioning his brother, he learnt that Baba's Udi cured her completely in one night. Then Shama realized the significance of Baba's words. "Go there in the morning and return
immediately.
immediately.
After taking tea, Sharma returned and after saluting Baba said,"Deva, what is this play of Yours? You first raise a storm and make us restless and then calm it down and ease us". Baba replied "You see mysterious is the path of action. Though I do nothing, they hold Me resonsible for the actions which take place on account of Adrista (destiny). I am only their witness. The Lord is the sole Doer and Inspirer. He is also most merciful. Neither I am God nor Lord. I am His obedient servant and remember Him often. He, who casts aside his egoism, thanks Him and he, who trusts Him entirely, will have his shackles removed and will obtain liberation".
Irani's Daughter
Now read the experience of an Irani gentleman. His young daughter got fits every hour. When the convulsion came she lost her power of speech, her limbs got shrunk and contracted and she fell down senseless. No remedy gave her any relief. Some friend recommended Baba's Udi to her father and asked him to get it from Kakasaheb Dixit at Vile Parle (suburb of Bombay). Then the Irani gentleman got the Udi and gave it mixed with water to his daughter daily for drinking. In the beginning the convulsions, which were coming on hourly, came every seven hours and after a few days the daughter
recovered completely.
recovered completely.
Harda Gentleman
An old gentleman of Harda (C.P) was suffering from a stone in his bladder. Such stones are generally removed by surgical operations and people recomended him to undergo one. He was old and weak, lacked strength of mind and could not think of submitting himself to surgical treatment. His suffering was soon to end in another way. The Inamdar (City Officer) of that town happened to come there at this time. He was a devotee of Baba and had always a stock of Udi with him. On the recommendation of friends, his son got some Udi from and mixing it with water, gave it to his old father to drink. Within five minutes the Udi was assimilated, the stone was dissolved and came out through his urine and old man was soon relieved.
Bombay Lady
A woman of the Kayastha Prabhu caste in Bombay always suffered terrible pain at her delivery. She was very much frightened each time she became pregnant and did not know what to do. Shri Rama-Maruti of Kalyan, who was a devotee of Baba advised her husband to take her to Shirdi for a painless delivery. When she next became pregnant, both husband and wife came to Shirdi, stayed there for some months and worshipped Baba and got all the benefit of His company. After some time the hour of delivery came and as usual there was obstruction in the passage from the womb. She began to suffer labour pains, did not know what to do, but began to pray to Baba for relief. In the meantime, some neighbouring women turned up and after invoking Baba's aid, gave her Udi-mixture to drink. In five minutes, the woman delivered safely and painlessly. The issue was still-born according to its fate; but the mother who got rid of the anxiety and pain, thanked Baba for the safe delivery and ever remained grateful to Him.
Bow to Shri Sai --
Bow to Shri Sai --
Peace be to all
===============================================
To be continued............
==============================================================
To be continued............
==============================================================
Bow to Shri Sai -- Peace be to all
To be continued............
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது.....................................
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது………..............................................பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
/
/
/
/
/
/
/
/
/
/
/
“ஓம் சாயி நமோ நமோ
ஸ்ரீ சாயி நமோ நமோ
ஜெய ஜெய சாயி நமோ நமோ
சற்குரு சாயி நமோ நமோ”.
ஸ்ரீ சாயி நமோ நமோ
ஜெய ஜெய சாயி நமோ நமோ
சற்குரு சாயி நமோ நமோ”.
"I say things here. There they happen."
=
=
OM SAI NAMO NAMAH
SHREE SAI NAMO NAMAH
JAI JAI SAI NAMO NAMAH
SADGURU SAI NAMO NAMAH
=
OM SAI NAMO NAMAH
SHREE SAI NAMO NAMAH
JAI JAI SAI NAMO NAMAH
SADGURU SAI NAMO NAMAH
Sai Samarth...........Shardha Saburi
Bow to Shri Sai - Peace to be all
************************************************************
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
=
=
=
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
=
=
=
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
ஓம் நமோ பகவதே சாயிநாதாய
அமிர்த வாக்ய வர்ஷாய
சகல லோக பூஜிதாய
சர்வ தோஷ நிவாரணாய
ஷிரிடி வாசாய
சாயிநாதாயதே நமஹ
அமிர்த வாக்ய வர்ஷாய
சகல லோக பூஜிதாய
சர்வ தோஷ நிவாரணாய
ஷிரிடி வாசாய
சாயிநாதாயதே நமஹ
சற்குரு நாதா சரணம்! சரணம்!
சச்சிதா னந்தா சரணம்! சரணம்!
அற்புத ஒளியே சரணம்! சரணம்!
அன்பே அருளே சரணம்! சரணம்!
நித்திய சாயி சரணம்! சரணம்!
நிர்மல வடிவே சரணம்! சரணம்!
பொற்பதம் பணிந்தோம் சரணம்! சரணம்!
புண்ணிய ரூபா சரணம்! சரணம்!
சச்சிதா னந்தா சரணம்! சரணம்!
அற்புத ஒளியே சரணம்! சரணம்!
அன்பே அருளே சரணம்! சரணம்!
நித்திய சாயி சரணம்! சரணம்!
நிர்மல வடிவே சரணம்! சரணம்!
பொற்பதம் பணிந்தோம் சரணம்! சரணம்!
புண்ணிய ரூபா சரணம்! சரணம்!
Twameva mata cha pita twameva
Twameva bandhushcha sakha twameva
Twameva vidya dravinam twameva
Twameva sarvam mama deva deva
Twameva sarvam Sai deva deva....
Twameva bandhushcha sakha twameva
Twameva vidya dravinam twameva
Twameva sarvam mama deva deva
Twameva sarvam Sai deva deva....
You alone are my mother and my father,
You alone are my friend and my beloved companion,
You alone are my knowledge and my wealth,
O Supreme Lord, you alone are everything for me.
You alone are my friend and my beloved companion,
You alone are my knowledge and my wealth,
O Supreme Lord, you alone are everything for me.
Sometimes Sai removes things from our lives for our own protection. Trust in Him.
Just because you can't see the air, doesn't mean you stop breathing. Just because you can't see Sai doesn't mean you stop believing.
Sai has perfect timing; never early, never late. It takes a little patience and it takes a lot of faith but it's worth the wait.
Think positive and positive things will happen.................
Saying sorry doesn't solve the problem. It's what you do after that truly counts.
=============================================================
மூலப்பதிவாளர்களுக்கு / சாயி சமஸ்தானத்திற்க்கு என்றென்றும் சாயின் அருள் மழை பொழியட்டும்.
மூலப்பதிவாளர்களுக்கு / சாயி சமஸ்தானத்திற்க்கு என்றென்றும் சாயின் அருள் மழை பொழியட்டும்.
பல கோடி நன்றிகள் ஐயா / அம்மணி.
=========================================================================
மீண்டும் பிறப்பு உண்டேல்
உனை என்றும் மறவாமை வேண்டும்
மீண்டும் பிறப்பு உண்டேல்
உனை என்றும் மறவாமை வேண்டும்
என்றும் சாயியின் அடிமை.........
அன்புடன் சகோதரன் விக்னசாயி.
அன்புடன் சகோதரன் விக்னசாயி.
==================================
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
==================================
No comments:
Post a Comment