கொரோனா வைரஸ்: 'பாதிக்கப்பட்டவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு
COVID-19 is a new illness that can affect your lungs and airways. It's caused by a virus called coronavirus.
What's the risk of coronavirus................
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தடுப்பு மருந்து இன்னும் கண்டறியப்படாத சூழலில், இந்த காய்ச்சலில் இருந்து தப்பிக்க, கைகளை எப்போதும் தூய்மையாய் வைத்திருப்பது மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பில் இருந்து விலகி இருப்பது இரண்டும் முக்கியம் என்று தமிழக அரசின் நெஞ்சக மருத்துவ நிலைய இயக்குநர் மகிழ்மாறன் தெரிவித்துள்ளார்.
சீனாவில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணத்தைத் தழுவியுள்ள நிலையில், சீனாவில் இருந்து இந்தியா திரும்பும் பலருக்கும் விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு சீனாவில் இருந்து திரும்புபவர்கள், ஒருவேளை பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு உடனடி சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்திலும் கொரோனா வைரஸ் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்படுவதாக தமிழக அரசின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்த வைரஸ் பாதிப்புக்கு யாராவது ஆளானால் அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க மருத்துவ வசதிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![கொரோனா வைரஸ் : பாதிக்கப்பட்டவருக்கு உயிர்பிழைக்கும் வாய்ப்பு குறைவு](https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/132AC/production/_110680587_coronodoctorinterview.jpg)
கொரோனா வைரஸ் பாதிப்பு மற்ற வைரஸ் காய்ச்சலில் இருந்து வேறுபட்டதா, இந்த காய்ச்சலின் அறிகுறிகள் என்ன, சிகிச்சை முறைகள் என்ன என தமிழக அரசின் நெஞ்சக மருத்துவ நிலைய இயக்குநரிடம் பேசினோம். அந்தப் பேட்டியில் இருந்து...
கேள்வி: பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் என பல்வேறு காய்ச்சல்களைக் கடந்த சில ஆண்டுகளில் நாம் கண்டிருக்கிறோம். இந்த கொரோனா வைரஸ் காய்ச்சல் எந்த விதத்தில் வித்தியாசமானது?
காய்ச்சலுக்கு மூலக் காரணம் ஒரு நுண்கிருமி. பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் போன்ற காய்ச்சலுக்கு காரணமான நுண்கிருமி எது என்றும் எந்த விலங்கில் இருந்து நோய்த்தொற்று ஏற்படுகிறது என்றும் கண்டறியப்பட்டுவிட்டது. ஆனால்,கொரோனா வைரஸ் நுண்கிருமி எந்த விலங்கில் இருந்து பரவுகிறது என தற்போதுவரை தெரியவில்லை.
சீனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில் உள்ள அசைவ உணவு சந்தையில், பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவி இருப்பதாக சீனா அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் இன்றுவரை நுண்கிருமி தொற்று எவ்வாறு ஏற்பட்டது என தெரியவில்லை.
மற்றபடி, இந்த காய்ச்சல் பிற வைரஸ் காய்ச்சல் போன்றதுதான். பெரிய வித்தியாசங்கள் இல்லை. இதுவரை மூலம் தெரியாததால், தடுப்பு மருந்து உருவாக்கமுடியவில்லை.
இது பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கலாம். ஆனால் கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு, அந்த நோயாளியின் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்த நிலையில் இருந்தால், உயிர்பிழைக்கும் வாய்ப்பு குறைவுதான்.
கேள்வி: கொரோனா வைரஸ் காய்ச்சல் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்ன?
சாதாரண காய்ச்சல் போலதான் இந்த கொரோனா வைரஸ் காய்ச்சல் தொடங்கும். சளி, தொடர் இருமல், உடல்வலி என தொடங்கி, மூச்சுத்திணறல் அதிகரிக்கும்.
இந்த காய்ச்சலின் தாக்குதல் இந்தியாவில் இதுவரை பரவவில்லை. சீனாவில் கூட, வுஹான் மாகாணத்தில் உள்ளவர்களுக்குத்தான் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. மக்கள் பீதியடைய வேண்டாம். உடலில் எதிர்ப்புச் சக்தி இருந்தால் எந்தவிதமான கிருமியாக இருந்தாலும், அது பாதிப்பதை நம் உடலே கட்டுப்படுத்திவிடும்.
![கொரோனா வைரஸ் : பாதிக்கப்பட்டவருக்கு உயிர்பிழைக்கும் வாய்ப்பு குறைவு](https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/2524/production/_110680590_f64c078f-d448-48a1-a9c7-9d3e1c5be73d.jpg)
கேள்வி: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படும்?
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது முக்கியம். பாதிக்கப்பட்டவர் முகமூடி அணியவேண்டும்.
அவருக்கு ஐவி ஃப்லூய்ட்ஸ் (IV fluids) என்று சொல்லப்படும் நரம்பு மூலமாக உடலுக்கு வலுசேர்க்க மருந்து செலுத்தப்படும். ஆனால் மூச்சுத்திணறல் அதிகரித்து, காய்ச்சல் தொடர்ந்து நீடித்தால், செயற்கை சுவாசக் கருவியைப் பொருத்த வேண்டும்.
- கொரோனா வைரஸை தடுக்க முடியுமா? - நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை
- வைரஸ் என்றால் என்ன? 21ஆம் நூற்றாண்டை அதிர வைத்த சில வைரஸ் தாக்குதல்கள்
உறுப்புக்கள் செயல்படுவது குறைந்துகொண்டே வந்தால், அவர் உயிர்பிழைப்பது சிரமமாக இருக்கும். நோயாளியின் நோய் எதிர்ப்புத் திறனைப் பொறுத்துதான் அவரை காப்பாற்றமுடியுமா என தெரியும்.
கேள்வி: இந்த வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதா என எவ்வாறு கண்டறிவீர்கள்?
கொரோனா காய்ச்சல் இருப்பதாக ஒருவர் அனுமதிக்கப்பட்டால், முதலில் அவரது சளி துகளை சோதனைக்கு அனுப்புவோம். அவர் சீனாவுக்கு சமீபத்தில் பயணம் செய்தவரா என்றும் சீனாவில் வுஹான் மாகாணத்தில் வசித்தவரா என கேட்டறிவோம்.
அவர் பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பில் இருந்தாரா என்றும் தெரியவேண்டும். சளி துகளில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை அறிவியல் ரீதியாககண்டறியமுடியும்.
![கொரோனா வைரஸ் : பாதிக்கப்பட்டவருக்கு உயிர்பிழைக்கும் வாய்ப்பு குறைவு](https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/4C34/production/_110680591_489acbe0-9d11-49c4-a337-ccf934b86a61.jpg)
கேள்வி: கொரோனா வைரஸ் பரவுவதை எவ்வாறு தடுக்கமுடியும்?
பாதிக்கப்பட்டவர்களோடு மற்றவர்கள் தொடர்பில் இருக்க கூடாது. பாதிக்கப்பட்டவர் இருமல், தும்மல் ஏற்படும்போது கைகளை வைத்து மூடி சளி வெளியில் படாதவாறு செய்யலாம்.
அவரின் சளியின் துளி ஏதாவது உங்களுக்குதெரியாமல் உங்கள் மீது பட்டால், நோய் தொற்று ஏற்படவாய்ப்புண்டு. இதுவரை நோயின் மூலக் காரணம் தெரியவில்லை என்பதால், இதன் பரவலைத் தடுக்க, கூட்டமாக இருக்கும் இடங்களுக்குச் செல்வதை பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தொட்ட பொருட்களை நீங்கள் தொடக்கூடாது.
கைகளை எப்போதும் தூய்மையாக வைத்திருக்கவேண்டும் என்பதுதான் முக்கியம். பாதிக்கப்பட்டவரோடு நேரடியாக தொடுவதோ, அவருடைய எச்சில் படும்படி அருகில் இருப்பதைத் தவிர்க்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அருகில் இருந்தால் முகமூடி அணிந்துகொள்ளவேண்டும்.
courtesy;பிரமிளா கிருஷ்ணன்
கொரோனா வைரஸை தடுக்க முடியுமா? - நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை.............
சீனாவில் தொடங்கி, தற்போது உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றிய முக்கிய தகவல்களை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவ தொடங்கியது?
2019-nCoV என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் சீனாவிலிருந்து பரவ தொடங்கியுள்ளது. ஆனால், இதன் மூலம் எது என்று இதுவரை அடையாளம் காண முடியவில்லை.
11 மில்லியன் (1.1 கோடி) மக்கள் தொகை கொண்ட மத்திய சீன நகரமான வுஹானில் இந்த நோய் முதலில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது.
வுஹானில் உள்ள அசைவ உணவுகளின் சந்தையில் இருக்கும் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து பரவி இருப்பதாக சீன அதிகாரிகள் கூறுகிறார்கள்.
அதனால் விலங்குகளிடம் பாதுகாப்பற்ற வகையில் நேரடி தொடர்பை வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு சமைத்த பிறகே சாப்பிட வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த வைரஸ் குறித்து இதுவரை என்ன தெரியும்?
![வுஹான் நகரம்](https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/15531/production/_110654378_a6aeaa20-76f8-4518-8a90-58a5204dca14.jpg)
கொரோனா வைரஸ் என்பவை பரவலான தொகுப்பைச் சேர்ந்தவை. இந்த வைரஸ் குடும்பத்தில் ஆறு வகைகள் மட்டுமே மக்களை பாதிக்கக் கூடியவையாக இருந்தன. தற்போது பரவி வரும் வைரஸை சேர்த்தால் இந்த எண்ணிக்கை ஏழாகிறது.
இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் என்று சீனாவின் தேசிய மருத்துவ கமிஷன் அறிவித்துள்ளது.
சீனாவில் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ளதாலும், அங்குள்ள மக்கள் வைரஸ்களை பரப்பும் விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாலும் கொரோனா வைரஸ் சீனாவில் தொடர்ந்து பரவுவதற்கான காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார் எடின்பர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் மார்க் வூல்ஹவுஸ்.
அறிகுறிகள் என்னென்ன?
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். அதன் பிறகு, வறட்டு இருமலை உண்டாகி, ஒரு வாரத்திற்குப் பிறகு, மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கிறது.
இந்த வைரஸால் தாக்கப்பட்ட நான்கில் ஒருவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடைவதாக தெரிகிறது.
இந்த வைரஸால் உறுப்பு செயலிழப்பு, நிமோனியா உள்ளிட்டவையும், அதிகபட்சமாக உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது.
பன்றிக்காய்ச்சல் மற்றும் இபோலாவை போன்று கொரோனா வைரஸ் தாக்குதலையும் சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனம் செய்வதற்கு உலக சுகாதார நிறுவனம் ஆலோசித்து வருகிறது.
கொரோனா வைரஸை தடுத்து நிறுத்த முடியுமா?
![கொரோனா வைரஸை தடுத்து நிறுத்த முடியுமா?](https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/17C41/production/_110654379_fc11f8c4-4bb3-49b7-8e6c-1a41ddd952a2.jpg)
கொரோனா வைரஸின் பரவல் தானாக கட்டுக்குள் வராது என்பது உறுதிப்படத் தெரியவந்துள்ளதால், தற்போதைக்கு அதை கடுமையான முயற்சிகளின் மூலம் சீன அதிகாரிகளால் மட்டுமே கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
கொரோனா வைரஸை தாக்குப்பிடிக்கும் அளவுக்கு மனிதர்களுக்கு வழங்க கூடிய நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் எதுவும் இப்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.
எனவே, கொரோனா வைரஸை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுவதைத் தடுப்பதே இப்போதைக்கு இருக்கும் ஒரே தெரிவு.
அதாவது,
- மனிதர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துதல்
- அடிக்கடி கை கழுவுவதை ஊக்குவித்தல்
- கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில், முழு பாதுகாப்பு உபகரணங்களுடன் கூடிய மருத்துவ பணியாளர்களை கொண்டு சிகிச்சை அளிப்பது.
- கொரோனா வைரஸ் யாரிடமிருந்து/ எங்கிருந்து தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பரவியுள்ளது என்பதை கண்டறிதல்.
சீனா எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன?
உலகில் முன்னெப்போதுமில்லாத வகையில், கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய வுஹான் நகரை சீனா முற்றிலும் தனிமைப்படுத்தியுள்ளது.
வுஹான் உள்ளிட்ட நகரங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயண கட்டுப்பாடுகளால் 36 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
![கொரோனா வைரஸை தடுக்க முடியுமா? - முக்கிய தகவல்கள்](https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/47A9/production/_110654381_bfc3eb3c-d2bc-423f-aad7-70421b92ff10.jpg)
அதிகளவில் மக்கள் கூடும் கூட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன; சீன பெருஞ்சுவரின் ஒரு பகுதி உட்பட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.
வுஹானில் 1,000 படுக்கைகளுடன் கூடிய புதிய மருத்துவமனையை ஆறே நாட்களில் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கு என்ன சிகிச்சை?
இந்த வைரஸ் தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதால், இதனை தடுப்பதற்கு தற்போதைக்கு ஊசியோ சிகிச்சையோ ஏதுமில்லை.
இந்த வைரஸ் இருக்கும் நபர்களிடம் இருந்து தள்ளி இருப்பதன் மூலம் இது பரவாமல் தடுக்க முடியும்.
மேலும், இருமல் அல்லது காய்ச்சல் அறிகுறி இருக்கும் நபர்களின் நேரடி தொடர்பை தவிர்க்க வேண்டும் என்றும் மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
==========================================
"கோவிட் - 19'
தடுப்பது எப்படி..............
![கொரோனா வைரஸ் : பாதிக்கப்பட்டவருக்கு உயிர்பிழைக்கும் வாய்ப்பு குறைவு](https://ichef.bbci.co.uk/news/660/cpsprodpb/159BC/production/_110680588_6fd96524-16ed-4639-ba4f-c41f21b5c391.jpg)
சீனாவில் தொடங்கிய "கோவிட் - 19' எனும்
"கொரோனா' வைரசின் பாதிப்பு
அதிகரித்துள்ளது. உலகளவில் 84,934 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,917 பேர்
பலியாகினர். இது பாதிக்கப்பட்டவரின் இருமல் மற்றும் தும்மல் மூலம் மற்றவர்களுக்கு
பரவுகிறது.
அறிகுறிகள்;
1.
காய்ச்சல்
2.
இருமல்
3.
தொண்டை வலி
4.
நடுக்கம்
5.
மூக்கு ஒழுகுதல்
6.
தலைவலி
7.
சோர்வு
8.
மூச்சுத்திணறல்
9.
கிட்னி பாதிப்பு
தடுப்பு முறைகள்
1.
கூட்டத்தை தவிர்த்தல்
2.
தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்
3.
மாஸ்க் அணிதல்
4.
காயம்பட்டவர்களுடன் கைகுலுக்கிய பின் கையை நன்றாக கழுவ வேண்டும்
5.
வீட்டின் உள் மற்றும் வெளிப்புறத்தை கதகதப்பான சூழலில்
வைக்க வேண்டும்.
6.
டாக்டர் அறிவுரைப்படி தினமும் இரண்டு முறை " வைட்டமின்
- சி ' மாத்திரை
எடுத்துக்கொள்ளலாம்.
7.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேன் சாப்பிடுங்கள்
8.
எப்போதும் வெந்நீர் பருகுங்கள்.
பாதிப்பு எங்கு அதிகம்
(கண்டங்கள்
வாரியாக)
ஆசியா
நாடுகள் பாதிப்பு பலி
சீனா 79,251 2,835
தென்கொரியா 2,931 17
ஜப்பான் 864 4
சிங்கப்பூர் 98 -
ஹாங்காங் 94 2
தாய்லாந்து 42 -
தைவான் 34 1
மலேசியா 25 -
வியட்நாம் 16 -
மக்காவ் 10 -
பிலிப்பைன்ஸ் 3 1
இந்தியா 3 -
பாக்., 2 -
ஆப்கன் 1 -
இலங்கை 1 -
கம்போடியா 1 -
நேபாளம் 1 -
ஐரோப்பா
இத்தாலி 888 21
பிரான்ஸ் 57 2
பிரிட்டன் 20 -
ஜெர்மனி 17 -
ஸ்பெயின் 16 -
ஸ்வீடன் 11 -
ஆஸ்திரியா 6 -
குரோஷியா 5 -
நார்வே 5 -
ரஷ்யா 5 -
சுவிட்சர்லாந்து 5 -
கிரீஸ் 4 -
பின்லாந்து 3 -
ருமேனியா 3 -
டென்மார்க் 2 -
ஜார்ஜியா 2 -
நெதர்லாந்து 2 -
அஜர்பைஜான் 1 -
பெலராஸ் 1 -
பெல்ஜியம் 1 -
ஈஸ்தோனியா தீவு1 -
லிதுவேனியா 1 -
வடக்கு மாசிடோனியா1 -
சான்மரினோ 1 -
மத்திய கிழக்கு
ஈரான் 388 34
குவைத் 43 -
பஹ்ரைன் 38 -
யு.ஏ.இ., 13 -
ஈராக் 5 -
ஓமன் 5 -
லெபனான் 4 -
இஸ்ரேல் 3 -
வட, தென் அமெரிக்கா
அமெரிக்கா 62
கனடா 15
மெக்சிகோ 3
பிரேசில் 1
ஆப்ரிக்கா
அல்ஜீரியா 2
எகிப்து 1
நைஜீரியா 1
ஓசோனியா
ஆஸ்திரேலியா 23 -
நியூசிலாந்து 1 -
courtesy;தினமலர்
=====================================
COVID-19 is a new illness that can affect
your lungs and airways. It's caused by a virus called coronavirus.
What's the risk of coronavirus in the UK?
The UK Chief Medical Officers have raised the
risk to the public from low to moderate.
Health professionals are working to contact
anyone who has been in close contact with people who have coronavirus.
What's the risk of coronavirus for
travellers?
There are some countries and areas where
there's a higher chance of coming into contact with someone with coronavirus.
See our coronavirus advice for travellers.
Symptoms of coronavirus
The symptoms of coronavirus are:
• a
cough
• a
high temperature
• shortness
of breath
But these symptoms do not necessarily mean
you have the illness.
The symptoms are similar to other illnesses
that are much more common, such as cold and flu.
How coronavirus is spread
Because it's a new illness, we do not know
exactly how coronavirus spreads from person to person.
Similar viruses are spread in cough droplets.
It's very unlikely it can be spread through
things like packages or food. Viruses like coronavirus cannot live outside the
body for very long.
Do I need to avoid public places?
Most people can continue to go to work,
school and other public places.
You only need to stay away from public places
(self-isolate) if advised to by the 111 online coronavirus service or a medical
professional.
How to avoid catching or spreading germs
There are things you can do to help stop
viruses like coronavirus spreading.
Do
• cover
your mouth and nose with a tissue or your sleeve (not your hands) when you
cough or sneeze
• put
used tissues in the bin immediately
• wash
your hands with soap and water often – use hand sanitiser gel if soap and water
are not available
• try
to avoid close contact with people who are unwell
Don't
• do
not touch your eyes, nose or mouth if your hands are not clean
Check if you need medical help
NHS 111 has an online coronavirus service
that can tell you if you need medical help and advise you what to do.
Use this service if:
• you
think you might have coronavirus
• you've
recently been to a country or area with a high risk of coronavirus – see our
coronavirus advice for travellers
• you've
been in close contact with someone with coronavirus
Use the 111 coronavirus service
Information:
Do not go to a GP surgery, pharmacy or
hospital. Call 111 if you need to speak to someone.
Getting help in Scotland, Wales or Northern
Ireland
• Scotland:
call your GP surgery or call 111 if your surgery is not open
• Wales:
call 111 (if available in your area) or call 0845 46 47
• Northern
Ireland: call 0300 200 7885
How to self-isolate if you're asked to
If there's a chance you could have
coronavirus, you may be asked to stay away from other people (self-isolate).
This means you should:
• stay
at home
• not
go to work, school or public places
• not
use public transport or taxis
• ask
friends, family members or delivery services to do errands for you
• try
to avoid visitors to your home – it's OK for friends, family or delivery
drivers to drop off food
You may need to do this for up to 14 days to
help reduce the possible spread of infection.
Read more coronavirus self-isolation advice.
Treatment for coronavirus
There is currently no specific treatment for
coronavirus.
Antibiotics do not help, as they do not work
against viruses.
Treatment aims to relieve the symptoms while
your body fights the illness.
You'll need to stay in isolation away from
other people until you've recovered.
More information
• NHS:
coronavirus advice for travellers
• NHS:
answers to common questions about coronavirus
• GOV.UK:
information on coronavirus and the situation in the UK
• NHS
England: coronavirus information for health professionals
Page last reviewed: 28 February 2020
=====================================
=========================================
No comments:
Post a Comment