Cats, pigs, flies, cows, etc., are one with Me.
He who sees Me in all these creatures is My beloved.
''சில சமயம் நான்
ஒரு நாய்; சில சமயம் நான்
ஒரு பன்றி; சில சமயம் நான்
ஒரு பசுமாடு; சில சமயம் ஒரு
பூனை; சில சமயம் ஓர்
எறும்பு; ஓர் ஈ, ஒரு நீர்வாழ் பிராணி -- பலவிதமான உருவங்களில்
நான் இவ்வுலகில் உலவிவருகிறேன்.—இவைகளுக்கு உணவு கொடுப்பது எனக்கு தருவதாகும்.” ஈயாயினும் எறும்பாயினும் சரி, ஆண்டியாயினும் அரசனாயினும் சரி, கண்ணுக்குத் தெரியும் இவ்வுலகமனைத்தும்
என்னுடைய வெளிப்பாடே..............................
நகரும் நகராப்
பொருள்கள் நிறைந்த இந்த அளவிடமுடியாத சிருஷ்டி, என்னுடைய நிஜரூபமே ஈதனைத்தும் தெய்வீகப்
பொம்மலாட்டம்; சூத்ரதாரி நானே.”
''உயிருள்ள ஜந்துகள்
அனைத்திலும் என்னைப் பார்ப்பவரையே நான் விரும்புகிறேன் என்று அறிந்துகொள்.
பேதபுத்தியை விட்டுவிடு; அதுவே என்னை
வழிபடும் சிறந்த முறையாகும்..”
தேஹாபிமானம்
இல்லாத சித்தருக்கு ஹிந்துவோ, முஸ்லீமோ, கீழ்ஜாதியோ,
மேல்ஜாதியோ, எந்த வித்தியாசமும் இல்லை. ஜாதிப்பாகுபாடு
என்னும் எண்ணமே அவருக்கு இல்லை. பக்கீர்களுடன் அமர்ந்து உணவுண்ணும்போது அவர்
மாமிசம் சாப்பிடுவார்; சமயம்
நேர்ந்தபோது மீனும் சாப்பிடுவார். சோற்றை நாய் தீண்ட நேர்ந்துவிட்டாலும் சரி,
வெறுப்படைந்து முகம்
கோணமாட்டார். —
=======================================
No comments:
Post a Comment