பாபா தேகத்தில்
இருந்தபோது எத்தகைய பேரானந்த அனுபவம் ஏற்பட்டதோ அதே வகை அனுபவத்தை இப்போதும்
நம்மால் உணர முடியும் என்கிறார் பாபா. சோதித்துப் பார்த்து அற்புதத்தை
அனுபவித்தால் நன்மைதான்!............................
ஷீரடி ஸ்தலத்தை
எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம்
ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான்.
2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு
உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.
3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.
4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.
5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.
6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும்
சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.
7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை
உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.
8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.
9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை
தாங்குவேன்.
10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.
11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே
இருக்காது.
ஸ்ரீ
சாயிபாபாவின் பதினொரு உபதேச மொழிகள்...................
ஸ்ரீ ஷிர்டி
சாய்பாபா.
சுந்தரமான அழகு
படைத்த சாயி, மசூதியின்
விளிம்பில் நின்றுகொண்டு உதியை ஒவ்வொரு பக்தருக்கும், அவரவர் நன்மையைக்கருத்தில் கொண்டு
விநியோகித்துக்கொண்டிருக்கிறார். (அத்10)
அவர் மசூதியின்
விளம்பில் நின்றுகொண்டு உதியை விநியோகித்தார் என கடந்த காலத்தைய நிகழ்வாகச்
சொல்லாமல், விநியோகிக்கிறார்
என்று கூறுவதால் பாபாதான் அந்த உதியை இன்னமும் தருகிறார் என்பது தெளிவாகிறது.
சீரடியில் பாபா
என்றும் மசூதியின் விளிம்பில் நின்றுகொண்டு உதி தந்ததில்லை; தரமாட்டார்.
இதற்கு என்ன
பொருள்?
தனது பக்தனுக்கு
இந்த நன்மை நடக்க வேண்டியிருப்பதால் உடனடியாக அவனுக்கு உதவி செய்துவிட வேண்டும் என
நினைத்து, யாரோ ஒருவர்
மூலமாகத் தருகிறார். இந்த யாரோ ஒருவர்தான் மசூதி. அவரது மனதில் உந்து சக்தியை
ஏற்படுத்துகிறார் அல்லவா? அதுதான்
மசூதியின் விளிம்பில் நிற்பது.
“அவரவர் நன்மையைக் கருத்தில் கொண்டு” என்று சொல்லப்படுவதால், தனித்தனியாக ஒவ்வொரு பக்தரின் நலனையும் அவர் கவனித்து
செயல்படுகிறார் என்பதையும், தன்னை நம்பி
வருகிற பக்தரின் நன்மையை தனது மனதில் நினைத்திருக்கிறார் என்பதையும் நாம் அறிந்து
கொள்ள வேண்டும்.
இந்த உதியின்
பிரபாவம் பற்றி பிறர் சொல்ல தேவையில்லை. பாபாவே அதை நேரடியாக விநியோகம்
செய்கிறார்.
ஒருமுறை தேவ்
என்கிற பக்தர் ஞானேஸ்வரி புத்தகத்தை பாராயணம் பண்ண விரும்பினார். பாபாவிடம்
கொடுத்து வாங்கினால் சுலபத்தில் படிக்க முடியும் என நினைத்து புத்தத்தின் மேல் ஒரு
ரூபாயை வைத்து பாபாவிடம் நீட்டினார். பாபா இருபது ரூபாய் கேட்டாரே தவிர, எந்த புத்தகத்தையும் வைத்துக்கொள்ள கூறவில்லை.
மறுபடி தேவ்
வந்தபோது இருபது ரூபாய் வாங்கினார். மறுபடி அவரிடம் இருபத்தைந்து ரூபாயை
வாங்கினார். இப்போதும் அவருக்கு பாராயணம் செய்ய அனுமதியில்லை.
பாபாவிடம் ஆன்மீக
அனுபவம் பெற்ற பாலக்ராம் மான்கரிடம் பாபாவின் அற்புதங்கள் பற்றி கேள்வி கேட்டுத்
தெரிந்துகொண்டிருந்தார். தேவ் இன்னொரு பன்னிரண்டு ரூபாய் தரவேண்டியதாயிற்று.
இவ்வளவும் வாங்கிக்கொண்டு, எதற்காக என் கந்தல்
துணியைத்திருடினாய் என தேவிடம் சண்டைபோட்டார் பாபா.
தேவ் எதையும்
திருடவில்லையாதலால் அப்பேச்சு அவருக்குப் புரியவில்லை. தன்னைப் பற்றியும் தனது
அற்புதத்தைப் பற்றியும் பிறரிடம் கேட்பது தவறானது. அதுதான் கந்தலைத் திருடுவது.
அனுபவத்தை நேரில் உணரவேண்டும் என்கிறார் பாபா.
உதி விஷயத்திலும்
இப்படித்தான். அதன் மகிமையை யாரும் சொல்லாமல் நாமே நமது சொந்தஅனுபவத்தின் மூலம்
அறியலாம்.
பாபா தேகத்தில்
இருந்தபோது எத்தகைய பேரானந்த அனுபவம் ஏற்பட்டதோ அதே வகை அனுபவத்தை இப்போதும்
நம்மால் உணர முடியும் என்கிறார் பாபா. சோதித்துப் பார்த்து அற்புதத்தை
அனுபவித்தால் நன்மைதான்!
உதியை
யாரிடமிருந்து பெற்றாலும் அதை பாபா தருகிறார் என்பதை
உறுதியாகத்தெரிந்துகொள்ளுங்கள், நன்மை நடக்கும்.
=============================
அட்டைப்பட
அன்பளிப்பு;-Saradha மா
==================================================
ஸமர்த்த ஸாயீ
சனாதன பிரம்மம். அவருடைய வார்த்தைகளே நமது தலையெழுத்தாகும். எவர் அவருடைய
வார்த்தைகளில் விசுவாசம் வைக்கிறாரோ அவர் பூரணமான அனுபவத்தைப் பெறுவார்.
====================================
"அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கும், பாவங்கள் நீங்கப் பெற்றவர்களுக்கும் சாயியை வழிபடும் பேறு
கிட்டுகிறது!''
சீரடி
சாய்பாபா.....................
🌹🌹ஓம் சாயி நமோ நம!
ஸ்ரீ சாயி நமோ
நம!
ஜெய ஜெய சாயி நமோ
நம!
சற்குரு சாயி நமோ
நம!🌹🌹
அனைவரும் சாய்
அருளால் எல்லாம் பெற்று இன்புற்று வாழ வாழ்த்துக்கள்
.என்றும் இனிய அன்பு வணக்கங்கள் சகோ தோழமை களே...........
=========================================
No comments:
Post a Comment