Followers

Wednesday, March 25, 2020

நான் எங்கிருந்து வந்தேன்? நான் யார்? நான் ஏன் மனித ஜன்மா எடுத்திருக்கிறேன்? இதன் சூக்குமத்தை அறிந்தவன் வித்துவானாவான்; இந்த ஞானம் இல்லையெனில் சகலமும் வீண். .உடலும் வீடும் மனைவியும் மக்களும் உற்றாரும் உறவினரும் நசித்துப்போகக் கூடியவர்கள் என்பதை நன்கு அறிந்தும், தாய்தந்தையரின் பாடைகளைத் தோள்மேல் சுமந்துசென்ற அனுபவம் இருந்தும், மனிதன் தன்னுடைய நிலைபற்றிய உண்மையை உணர்வதில்லை.
..இனிய காலை வணக்கம் அன்புறவுகளே!!!..பாபாவின்....
தெய்வீகமான செயலைப் பார்த்து மக்கள் வியந்துபோயினர். ஓ, இந்த ஞானிகள்தாம் எவ்வாறு மற்றவர்களின் அநேக உபாதைகளைத் தங்கள்மீது ஏற்றுக்கொள்கிறார்கள்... ....ஞானிகளுடைய மனம் மெழுகைவிட இளக்கமானது; வெண்ணெயைப்போல் உருகக்கூடியது... பக்தர்களின்மீது அவர்கள் வைக்கும் அன்பு உண்மையாகவே தன்னலமற்றது. பக்தர்கள்தாம் ஞானிகளுக்கு உற்றாரும் உறவினரும்......அவர் தம் புண்ணியக் கதைகளை கேட்போம் நாமும் புண்ணியம் சேர்ப்போம்....அன்புறவுகளே................
ஸ்ரீ சிர்டீ சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது……….
ஸ்ரீ சிர்டீ ஸாயீ அஷ்டோத்தர நாமாவளி விரிவுரை தொடர்கிறது....................................................................
Please see below for English version. Tq
வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்¬.-- அத்தியாயம் 8 தொடர்கிறது......................................................
ஸ்ரீ சிர்டீ ஸாயீ அஷ்டோத்தர நாமாவளி விரிவுரை தொடர்கிறது....................................................................
49. ஸம்€ய ஹ்ருதய தௌர்பல்ய பாப கர்ம வாஸனா க்ஷய கராய நமஹ
சந்தேகம், மனத்திட்பமின்மை, பாவச் செயல்களைச் செய்யத் தூண்டும் வாசனை ஆகிய மூன்றையும் அழித்துவிடுபவருக்கு நமஸ்காரம்.
1. எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுபவன் அழிந்துபோகிறான்.
2. மனத்திட்பமில்லாதவனால் எதையும் சாதிக்க வியலாது. ஒவ்வொரு படியிலும் தடுமாறுவான்; முன்னேற்றம் காணவியலாது தவிப்பான்.
3. முன்ஜன்ம அநுபவங்கள் மனிதனின் மூலபிரகிருதியில் புதைந்துபோய்க் கிடந்து (விதை மண்ணில் புதையுண்டு கிடப்பதுபோல), நடப்பு ஜன்மத்தில் தக்க வேளையில் எண்ணமாகவும் செயலாகவும் வடிவெடுக்கவல்ல இயல்புக்கு வாசனை எனப் பெயர். சில முன்ஜன்ம வாசனைகள் மனிதனைப் பாவம் செய்யவும் தூண்டும்.
மேற்கண்ட மூன்று பலவீனங்களையும் ஒரு மனிதனிடமிருந்து களைந்தெறிவது இமாலய அருட்கொடை அன்றோ? ஸமர்த்த ஸத்குருவைத் தவிர வேறு எவரால் இதைச் செய்யமுடியும்?
ஒப்பு நோக்குக :-
அக்ஞஸ்சாச்ரத்ததானஸ்ச ஸம்சயாத்மா வினச்யதி
நாயம் லோகோஅஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்சயாத்மன: -- 4.40
அறிவிலி, சிரத்தையில்லாதவன், ஐயமுறுபவன், அழிவடைகிறான், ஐயமுறுபவனுக்கு இவ்வுலகும் இல்லை, அவ்வுலகும் இன்பமும் இல்லை. -- தெளிவுரை.
ஆத்ம சொரூபத்தை அறியாதவன் அறிவிலி அல்லது அக்ஞானியாவான். தன் மீதும், குரு மீதும் சாஸ்திரத்திடத்தும் நம்பிக்கை வைக்காதவன் சிரத்தையில்லாதவனாகிறான். உலகத்தில் எல்லாரிடத்தும் சந்தேகம் கொள்ளும் இயல்புடையவர் சிலர் இருக்கின்றனர். அத்தகையவர் ஐயமே வடிவெடுத்தவர் ஆவர். யார் எதைச் சொன்னாலும், செய்தாலும் அதெல்லாம் தமக்குக் கேடு விளைவிக்கும் என்றே அன்னவர் கருதுகின்றனர். இம்மைக்குத் தகுதியுடையவனே மறுமைக்கும் தகுதியுடையவன் ஆகிறான். உலகத்தவரை நம்புகிறவளவு உலகத்தவர் ஒரு மனிதனுக்கு உரியவர் ஆகின்றனர். பரஸ்பர நம்பிக்கையிலும் உதவியிலுந்தான் உலக வாழ்க்கையில் சுகம் உண்டு. ஒருவரையும் நம்பாது உலகத்தவருக்கு வேற்றானாயிருப்பதே பெரிய வேதனையாகிறது. இத்தகைய பான்மையுடையவனுக்கு ஆத்ம ஞானம் கைகூடாது; சுகமான வாழ்க்கைக்கும் அவன் தகுதியற்றவனாவான். -- விரிவுரை
ஸ்ரீமத் பகவத்கீதை பாஷ்யம் -- அத்தியாயம் 4 -- சுலோகம் 40 --
பூஜ்யஸ்ரீ ஸ்வாமி சித்பவானந்தர்.
OM SAMSHAYA HRUDAYA DOURBALYA PAPA KARMA VASANA KSHYA KARAYA NAMAH
ॐ संशयहृदयदौर्बल्यपापकर्म वासनाक्षयकराय नमः
My humble salutation to Him who removes all doubt, results of sinful deeds and sensual pursuits.
வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்...சாயி ஸ்த்சரித்திரம் அத்தியாயம் 8 தொடர்கிறது……….
*
*
*
26 இரவிலும் பக­லும் எத்தனை மக்கள் பிறக்கின்றனர்; இறக்கின்றனர். இதை யார் கணக்கு வைத்துக்கொள்ள முடியும்? மார்க்கண்டேயரைப்போல்1 வாழப்போகிறேன் என்று நினைத்துக்கொண் டிருப்பவர்களும் ஒருநாள் இறந்துதான் தீரவேண்டும்.
27 நிலையில்லாத மனித உட­ல் வாழும்போது, நினைத்தாலே புண்ணியம் அளிக்கக்கூடிய ஞானிகளின் திவ்வியமான சரித்திரத்தைக் கேட்கும் நேரமே நன்கு செலவிடப்பட்டதாகும். அதைச் செய்யாத நேரமெல்லாம் வியர்த்தமே.
28 அம்மாதிரியான விழிப்புணர்வு நிச்சயமாக ஏற்படுவதே மனிதப்பிறவி எடுத்ததன் அனுகூலமாகும். ஆயினும், சுயமாக அனுபவிக்காமல் எவரும் இவ்வுண்மையை உணரமுடியாதுõ
29 இவ்வனுபவத்தைப் பெறுவதற்கு மிகுந்த அப்பியாசம் தேவை. ஆகவே, சாசுவதமான ஆனந்தத்தை அனுபவிக்க விரும்பும் ஜீவன், அந்த வைபவத்தை அடைவதற்கு சாதனைகள் பல புரிய வேண்டும்.
30 மனைவி, மக்கள், சொத்து, புகழ் இவற்றுடன் ஆழிசூழ் உலகத்தையே ஒருவன் இறைவனின் அருளால் அடையலாம். அப்பொழுதும் அவன் மனத்தில் திருப்தி இல்லாதவனாக இருப்பான்.
31 ஆனால், சாசுவதமான சுகத்தையும் சாந்தியையும் மனத்தின் லக்ஷியமாகக் கொண்டு, எவ்வுயிரிலும் இறைவனைப் பார்ப்பதையே வழிபாடாக அமைத்துக்கொண்டால், அதுவே முக்தியை அளிக்கும்.
32 தோலையும் ரத்தத்தையும் மாமிசத்தையும் எலும்புகளையும் ஒன்றாகச் சேர்த்துச் செய்யப்பட்ட இம் மனிதவுடல் ஆன்மீக வாழ்க்கைக்குப் பெருத்த தடையாகும். ஆகவே, உடல்மீது கொண்ட பற்றை விட்டுவிடவேண்டும்.
33 உடலைக் கேவலம் உன் வேலைக்காரனாக நடத்து; அளவுக்கதிகமாக அதைப் பாராட்டாதே. அதற்குச் செல்லம் கொடுத்துக் கொடுத்து உன்னை நரகத்திற்கு இழுத்துக்கொண்டுபோக விடாதே.
34 அதற்கு உணவும் உடையும் தேவையான அளவு கொடுத்து நிர்வாகம் செய். அவ்வப்போது போஷித்துப் பாலனம் செய். அவ்விதம் செய்தால்தான் உடலை ஆன்மீக முன்னேற்றத்திற்கும் ஜனனமரணச் சுழ­­ருந்து விடுபடுவதற்கும் உபயோகிக்க முடியும்.
35 ஜனனமரண அனர்த்தங்கள், எக்கணமும் மரணம் நேரலாம் என்னும் நிலை, இவ்விதமாக நிரந்தரச் சுகமற்றது மனித வாழ்க்கை. கணநேரமே ஏற்படும் மகிழ்ச்சியால் என்ன பிரயோஜனம்?
36 பளிச்சென்று ஒளி வீசி மறையும் மின்னலைப் போன்றும் கணநேரத்தில் தோன்றி மறையும் கடலலையைப் போன்றும் அநித்தியமானவை உடல் இன்பங்கள். இதைப் பற்றிச் சிறிது யோசியுங்கள்.
37 உடலும் வீடும் மனைவியும் மக்களும் உற்றாரும் உறவினரும் நசித்துப்போகக் கூடியவர்கள் என்பதை நன்கு அறிந்தும், தாய்தந்தையரின் பாடைகளைத் தோள்மேல் சுமந்துசென்ற அனுபவம் இருந்தும், மனிதன் தன்னுடைய நிலைபற்றிய உண்மையை உணர்வதில்லை.
38 அவனுக்கு முன்னால் இறந்து போனவர்கள் சென்ற பாதையிலேயே செல்கிறான்; ஜனனமரணச் சுழ­ல் மாட்டிக்கொள்கிறான். இச்சுழ­­ருந்து வெளிவருவது எப்படி என்று ஒரு கணமும் சிந்திப்பதில்லை.
39 குடும்பத்தின் பாரத்தைச் சுமப்பதிலேயே வாழ்க்கை வேகமாகக் கழிந்துவிடுகிறது. அனால், காலதேவனோ ஆண்டுகள் கழிவதை மிக அக்கறையுடன் கவனித்துக்கொண்டு வருகிறான்; கடமையி­ருந்து ஒருபோதும் நழுவமாட்டான்õ
40 கடைசி நேரம் வரும்போது காலதேவன் ஒரு கணமும் தாமதிக்கமாட்டான். மீன்பிடிப்பவன் வலையை இழுப்பதுபோல் இறுக்கமாக இழுத்துவிடுவான். அந்நேரத்தில் மனிதன் வலையில் அகப்பட்ட மீனைப்போல ஏதும் செய்யமுடியாது துடிதுடிப்பான்.
41 கோடிப்புண்ணியம் செய்தும் மஹாபாக்கியங்களாலும் இம் மனிதப்பிறவி கிடைத்திருக்கிறது. ஆகவே, இந்த நல்வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
42 பகீரதப்1 பிரயத்தனம் செய்தாலும் மனிதப்பிறவியை அடையமுடியாது. அது விதிவசமாகக் கிடைக்கும் அதிருஷ்டமே; வீணாகக் குப்பைத்தொட்டியில் போட்டுவிடாதீர்கள்.
43 இந்த ஜன்மத்தில் கிடைத்தது கைவிட்டுப் போனாலும், அடுத்த ஜன்மமும் மனிதப் பிறவியாகவே அமையும் என்று நினைத்து, அடுத்த ஜன்மத்திற்கென்று எதையும் தள்ளிப்போடுபவன் முட்டாள்.
44 எத்தனையோ பாபிகள் அவர்களுடைய கர்மாவுக்கேற்றவாறு மனிதப்பிறவி எடுப்பதற்காக ஆண்விந்து ரூபத்தில் யோனித்துவார வாயி­ல் வந்து நிற்கிறார்கள்.
45 அதனினும் அதமர்கள் (கடையர்கள்) நகரும் உயிரினத்தி­ருந்து நகராத தாவரமாக கர்மாவுக்கேற்றவாறு பிறவியெடுக்கிறார்கள்.
46 அடைந்த ஞானத்திற்கும் செய்த கருமானுஷ்டானங்களுக்கும் ஏற்ப ஒருவன் ஒரு குறிப்பிட்ட உடலை அடைவான் என்று நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இது வேதங்களின் பிரமாணம்.
47 கருணை வடிவான வேதமாதா சொல்கிறாள், ''ஞானத்திற்கு ஏற்றவாறே பிறவி ஏற்படுகிறதுஃஃ. எவ்வளவு இறைஞானம் சேமிக்கப்பட்டிருக்கிறதோ அதற்கேற்றவாறே ஜீவனுக்குப் பிறவி கிடைக்கிறது.
48 இறைவனுடைய லீலைகள் தர்க்கசிந்தனையால் புரிந்துகொள்ளமுடியாதவை. அவற்றைப்பற்றிய பூரணமான ஞானத்தை அடையவேமுடியாது; ஒரு பகுதியையாவது அறிந்துகொள்ளமுடிந்த மனிதன், மஹாபாக்கியசா­.
49 பரமபாக்கியம் பெற்றவனே மனிதப்பிறவி பெறுகிறான்; அவனினும் புண்ணியசா­யே உயர்குலத்தில் பிறக்கின்றான். ஆனால், இறைவனின் அருளே ஒருவரை ஸாயீ பாதங்களுக்குக் கொண்டுவருகிறது. இம்மூன்றும் ஒருசேரக் கிடைப்பது அரிதினும் அரிது.
50 யோனி ஜன்மமாகப் பிறக்கும் ஜீவராசிகள் எத்தனை எத்தனையோ. இவையனைத்திலும் மனிதப்பிறவியே சிரேஷ்டமானது. ஏனெனில், மனிதர்களால்தான் 'என்னைப் படைத்தது யார்? நான் எங்கிருந்து வந்தேன்?ஃ என்றெல்லாம் சிந்தனை செய்ய முடியும்.
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது……………………………………….
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
https://www.youtube.com/watch…
சுபம் உண்டாகட்டும்.
பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
Please see below for English version. Tq
CHAPTER VII
*
*
*
Special Value of the Human Body'''
As we all know, four things are common to all the creatures, viz. food, sleep, fear and sexual union. In the case of man, he is endowed with a special faculty, viz. knowledge, with the help of which he can attain God-vision, which is impossible in any other birth. It is for this reasons that Gods envy man's fortune and aspire to be born as men on earth, so as to get their final deliverance.
Some say, that there is nothing worse than the human body, which is full of filth, mucus, phlegm and dirt, and which is subject to decay, disease and death. This is no doubt true to a certain extent; but inspite of these drawbacks and defects, the special value of the human body is - that man has got the capacity to acquire knowledge: it is only due to the human knowledge that one can think of the perishable and transitory nature of the body itself, and of the world and get a disgust for the sense-enjoyments and can discriminate between the unreal and the real, and thus attain God-vision.
So, if we reject or neglect the body because it is filthy, we lose the chance of God-vision, and if we fondle it, and run after sense - enjoyments, because it is precious, we go to hell. The proper course, therefore, for us to pursue is the following; that the body should neither be neglected nor fondled, but should be properly cared for, just as a traveler on horse-back takes care of his pony on the way till he reaches his destination and returns home. Thus the body should ever be used or engaged to attain God-vision or self-realization, which is the supreme end of life.
Bow to Shri Sai -- Peace be to all
Bow to Shri Sai -- Peace be to all
https://www.youtube.com/watch…
To be continued............
ஷீரடி போக முடியாதவர்கள் அவசியம் பாருங்கள்.
Shirdi Sai Baba Tamil Aarti Full Video Song -ஷிர்டி சாய் பாபா ஆர்த்தி
https://www.youtube.com/watch?v=LGumlrX9UgY
https://www.youtube.com/watch?v=Jn1hyQARZ68#t=19
https://www.youtube.com/watch?v=EIgaKaSYrok
வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்¬.-- அத்தியாயம் 8 தொடர்கிறது......... சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது………..............................................பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
என் மகனே! மகளே! நான் சத்திய தேவன். பொய் சொல்ல மாட்டேன். முழுமையான சரணாகதி அடைந்து நீ கரம் குவித்தால் ஓடி வரும் நாராயணன் நான். உன் விதியை அவ்வப்போது மாற்றிக் கொண்டிருக்கும் கலியுக பிரம்மாவும் நானே! உனது இன்னல்களை அழிக்கும் ஈசனும் நானே! கோபத்தின் போது வெளிப்படும் அக்கினியும், துக்கத்தின் போது வெளியாகும் கங்கையும் நானே! உன் நாசியில் வெளிவரும் வாயுவும் நானே! எங்கும் எதிலும் உனக்காக, உன் சார்பில் இருக்கும் அன்புத் தந்தை நான். நீ அமைதியாக இரு.. என் பெயரை சதா உச்சரித்துக் கொண்டிரு.. உனக்குத் தேவையானதை செய்வேன். கடைசி வரை உன் கூடவே இருந்து துணை செய்வேன். - ஸ்ரீ சாயியின் குரல்.
“ஓம் சாயி நமோ நமோ
ஸ்ரீ சாயி நமோ நமோ
ஜெய ஜெய சாயி நமோ நமோ
சற்குரு சாயி நமோ நமோ”.
"I say things here. There they happen."
OM SAI NAMO NAMAH
SHREE SAI NAMO NAMAH
JAI JAI SAI NAMO NAMAH
SADGURU SAI NAMO NAMAH
Sai Samarth...........Shardha Saburi
Bow to Shri Sai - Peace to be all
************************************************************
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
சென்ற் பாகத்தைப் படிப்பதற்கு……சொடுக்கவும்….
https://www.facebook.com/photo.php?fbid=1599979060240100&l=acfb6a1cfa

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...