அறிவுரையுடன் அசத்திய விருந்து!
அன்புறவுகள்... எல்லோர்க்கும்....
என்றென்றும் அன்புடன்.! இனிய காலை மதிய வணக்கம்! உரித்தாகுக…
என்றென்றும் அன்புடன்.! இனிய காலை மதிய வணக்கம்! உரித்தாகுக…
அறிவுரையுடன் அசத்திய விருந்து!
என் நண்பரின் குழந்தையின் பிறந்தநாள் விழாவிற்கு சென்றிருந்தேன். நண்பருக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகளுக்கு பின், பிறந்த குழந்தையாதலால், விருந்து தடபுடலாக இருந்தது. பந்தி நடக்கும் போது, 15 வயது சிறுமி ஒருத்தி, தேவதை போல் உடையணிந்து, கும்பிட்ட கையுடன் ஒவ்வொரு வரிசையாக சென்று,
'உணவை சுவைத்து, ரசித்து விரும்பி சாப்பிடுங்கள், வீண் செய்யாதீர்கள்...' என்று, தமிழிலும், ஆங்கிலத்திலும் வேண்டுகோள் விடுத்து, சென்றார்.
அந்த சிறுமியின் வேண்டுகோளுக்கு, நல்ல பலன் கிடைத்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் சாப்பிட்ட இலையும், சுத்தமாக காலி செய்யப்பட்டிருந்ததோடு உணவுப் பொருள் வீணாவது தடுக்கப் பட்டிருந்தது. விழா நடத்துபவர்கள், இந்த உத்தியை பின்பற்றலாமே!
— ஜோ.ஜெயக்குமார், சிவகங்கை.
நன்றி சகோ.....
நன்றி சகோ.....
===================================
No comments:
Post a Comment