!‘கல்யாணமாம்
கல்யாணம்!'.....புத்தம்புதிய
சூப்பர் ஒரு பக்கக் கதை!!
வெட்டியாய்ப்
பொழுது கழிவதைத் தவிர்க்க நான் எழுதிய கதை இது. பொழுது போகாதவர்கள் படிக்கலாம்!
பிடித்திருந்தால் நண்பர்களுக்கும் பரிந்துரைக்கலாம்!!
அலுவலகம்
புறப்பட்ட கணவனிடம், “ஒரு
மாசம் லீவு போட்டுடுங்க” என்றாள்
மனோன்மணி.
“ஒரு
மாசம் எதுக்கு?” என்றார்
சாரதி.
“என்னங்க
கேள்வி இது? நம்ம
பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டோம். நல்ல நாள் பார்த்து மாங்கல்யத்துக்குக்
கொடுக்கணும்; பத்திரிகை
அடிக்கணும். அதைக் கொடுத்து முடிக்க ரெண்டு வாரம் போதாது. பட்டு எடுக்கக்
காஞ்சிபுரம் போனா முழுசா ரெண்டு நாள் காலி. மத்த துணிமணிகளூக்கு ஈரோடோ கோயமுத்தூரோ
போகணும். அப்புறம், நாள்
விருந்து, வரவேற்பு, கல்யாணம்
எல்லாம் இருக்கு. எல்லாம் முடிஞ்சப்புறம் தடபுடலா சம்பந்தி விருந்து நடத்தி
முடிக்கணும். தலைக்கு மேல இத்தனை வேலைகளை வெச்சிகிட்டு எதுக்கு ஒரு மாச லீவுன்னு
கேட்குறீங்களே, நல்லா
கேட்டீங்க போங்க.”
மூச்சு வாங்க மனோன்மணி சொல்லி முடித்தபோது வேலைக்காரி கமலம்
வந்து நின்றாள்.
“ரெண்டு
நாள் லீவு வேணுங்க” என்றாள்.
“எதுக்கு
கமலா?” -மனோன்மணி
கேட்டாள்.
“என்
பொண்ணுக்குக் கல்யாணம்.”
“பொண்ணுக்குக்
கல்யாணம்னு சொல்றே. ரெண்டு நாள் லீவு போதுமா?” -புரியாமல்
கேட்டாள் மனோன்மணி.
“போதும்மா.
பக்கத்தில் காந்தமலை முருகன் கோயில் இருக்கு. ஒரு இருபது பேர் போல பஸ் பிடிச்சிப்
போறோம். சூடம் கொளுத்திச் சாமி கும்பிட்டதும் பொண்ணுக்கு மாப்பிள்ளை மஞ்சள் கயிறு
கட்டினா கல்யாணம் முடிஞ்சுது. தட்டி விலாஸ் ஓட்டலில் டிஃபன். அடுத்த நாளே
குலதெய்வம் கோயிலுக்குப் போய்வந்து சாந்திமுகூர்த்தம் வெச்சிட்டா என் கடமை
முடிஞ்சுது” என்றாள்
கமலம், நீண்டதொரு
பெருமூச்சுடன்.
மனோன்மணிக்கும் சாரதிக்கும் உள்மண்டையில் ஏதோ உறைப்பதுபோல்
இருந்தது!
*****************************************************************************************************************************************************
சூப்பர் கதைதானே? நன்றி.
ஒரு ரகசியம்.....
பிரபல வார இதழ்களுக்கு அனுப்பப்பட்டுக் குப்பைத் தொட்டியைச் சரணடைந்த கதை இது!!!
சூப்பர் கதைதானே? நன்றி.
ஒரு ரகசியம்.....
பிரபல வார இதழ்களுக்கு அனுப்பப்பட்டுக் குப்பைத் தொட்டியைச் சரணடைந்த கதை இது!!!
பட்டதும்
சுட்டதும்.
அன்புடன்
விக்னசாயி
==============================
No comments:
Post a Comment