Followers

Friday, March 20, 2020

Image result for புளியோதரை





புளியோதரை புராணம் - எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதியது 

ரெஃப்ரிஜிரேட்டர் கண்டு பிடிக்கும் முன்பே தமிழன் வச்சு வச்சுசாப்பிட்டது புளி சாதத்தைத் தான்.! ஒரு வாரம் ஆனாலும் கெடாது.! அக்காலத்தில் வெளியூர் பயணங்களில் நம் கால்களே டாக்சியாக இருந்த காலத்தில் நம் பாட்டன்களின் பசியைப் போக்கிய வழிச் சோறு என்பது புளிச் சோறே! என்பது 100% உண்மை.!

எப்போதும் சுவை மிகுந்த உணவுகளின் பட்டியலில் டாப் 5 இல் இடம் பிடிக்கக் கூடிய ஒரு உணவு புளியோதரை.! உப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கசப்பு என அறு சுவைகளும் உள்ள உணவு புளியோதரை.. இதன்  நிறத்திலேயே அதன் தரத்தை அறிந்துவிடலாம்.. இதன் புராணம் மிகச் சுவையானது!

புளியோதரைக்கு மணமும் நிறமும் இரு கண்கள்.. முதலில் புளியோதரைக்கு வடிக்கும் சாதத்தின் பதம் மிக முக்கியம்.. அது புதுமணத் தம்பதியர்  போல பின்னிப் பிணைந்து குழைந்து இராமல்.. திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன தம்பதிகள் போல சற்று ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் பதமே சாலச் சிறந்தது.. அடுத்து நிறம்.!

புளியோதரை ஆழ்ந்த மஞ்சளில் இருப்பது மிகச்சிறப்பு.! சாதத்தை வடித்து ஆறவிட்டு பயன்படுத்துதல் புளியோதரைக்கு சரியான சமையல் முறையாகும்.. அடுத்து எண்ணெய்.. நீங்கள் பில்கேட்ஸ் குடும்பமாக இருந்தாலும் எண்ணெய்க்கு பதிலாக நெய் எல்லாம் சேர்க்கக்கூடாது.. நல்லெண்ணெய் என்னும் ஏக பத்தினியை மட்டும்..

ஏற்றுக் கொள்வான் இந்த புளியோதரை என்னும் ராமச்சந்திர மூர்த்தி!அதிலும் செக்கில் ஆட்டிய புனிதவதி எண்ணெய் எனில் எந்தச் சீரும் வாங்காமல் சிறப்பாக இணைவான் இவன். அடுத்து புளி.. நேற்று முளைத்த புதுப்புளி கூடாது.!  பழம் புளியே புளிக் காய்ச்சல் செய்வதற்கு மிகச் சிறந்தது..

புதுப்புளியில் புளியோதரை புளிக்கு பிறந்த பூனையாகிவிடும்.! பழம் புளியில் தான் அது புலியாகும்! அடுத்து மிளகாய்.. நல்ல தரமான வதக்கும் போதே நெடியேறும்.. காரசார காய்ந்த மிளகாய் தான் பெரும் சிறப்புஅடுத்து இதற்கு மிகுந்த சுவை சேர்ப்பது நிலக்க டலைப் பருப்புகள்.!

நிலக்கடலையும் புளியோதரையும் நல்ல நண்பர்கள்! நல்லெண்ணெய் கமகமக்க ஒரு வாய் அள்ளிச் சுவைக்கையில் வாயில் அரைபடும் புளியோதரையின் நிலக்கடலை பத்து பாதாம் பருப்புகளுக்குச் சமம்.! புளியோதரைக்கு மிகப் பொருத்தமான சாம்பார் எதுவெனில் துவரம் பருப்பு போட்ட மெல் இனிப்பில் சின்ன வெங்காயம்..

அல்லது சிவப்பு பூசணி சாம்பார் தான்! கத்திரிக் காய் சாம்பாரை விட எண்ணெய்/ புளிக் கத்திரிக்காய் வதக்கல் இன்னும் பிரமாதம்.. இஞ்சி, பருப்பு, புதினா, கடலை, நவதானியம், இப்படி தேங்காய் சேர்க்காது புளி சேர்த்து அரைக்கும் துவையல்கள் நீண்ட நாள் உபயோகத்திற்கு.. பொட்டுக் கடலை தேங்காய் வைத்து அரைக்கும் துவையல் இன்ஸ்டண்ட் சுவர்க்கம்.!

மதுரையில் சித்திரான்னங்களுக்கு பேர் போன சவுராஷ்டிரா சமூக நண்பர்களுடன் பழகிய போது அவர்கள் வீட்டில் செய்யும் புளியோதரைக்கு கருப்பு கொண்டைக் கடலை சுண்டலை தந்தார்கள்.. அசுவாரஸ்யாமாக சாப்பிட்டால் சுவை ஆஹா.. அள்ளியது..! கூடவே இஞ்சி மிளகாய் சட்னி வேறு!

முருங்கை, முள்ளங்கி போன்ற காய்கறிகளின் தன்மையால் அக்காய்களைக் கொண்டு வைக்கும் சாம்பார்கள் நல்ல புளியோதரை சாப்பிடும் உன்னத உணர்வை கெடுத்துவிடும்.. என் அம்மா இதற்கு மாங்காய் போட்டு சாம்பார் வைப்பார்.. இது புள்ளத்தாச்சி பெண்களுக்கு பிடிக்கும்டா தம்பி என்பார்!

அம்மாவுடன் வீட்டில் அடிக்கடி வந்து  பேசும் சில கர்ப்பிணி அக்காக்களின் ரகசியம் அப்போது தான் தெரிந்தது.! ஆயிரம் தான் புளியோதரை வீட்டில் செய்தாலும் பெருமாள் கோவில் புளியோதரையின் தரமே வேறு.. ஒரு பெண் புகுந்த வீட்டில் இருந்து தன் தாய்வீட்டிற்கு 1 மாதம் விடுமுறையில் வந்தது போல..

புளியோதரையின் தாய்வீடு பெருமாள் கோவில்.! அங்கு வந்து விட்டாலே அதற்கு ஒரு தனிக் கு (ரு)சி வந்துவிடும்.! திருப்பதிமயிலை, திருவட்டார் முதலிய பெருமாள் கோவில் புளியோதரைகளுக்கு நான் ஹேமநாத பாகவதர் பாண்டிய நாட்டிற்கு அடிமை என எழுதித் தந்தது போல எழுதித் தரச் சொன்னால்..

கொஞ்சமும் தயங்காமல் மனதார எழுதித் தருவேன். என் பாட்டியின் ஸ்டைல் சிறிது சுண்டை வத்தல் நன்கு வதக்கி அதை இடித்துத் தூவுவது.! பெருமாளே வந்து கையேந்தும் பக்குவத்தில் மிகப் பிரமாதமாகச் செய்வார் புளியோதரையை புண்ணியச் சோறு என்பார்! கல்யாண சமையல் சாதம் என்ற மாயாபஜார் படப் பாடல் வரிகளில்..

 “
புளியோதரையில் சோறு மிகப் பொருத்தமாய் சாம்பாருபோல அருமையான புளியோதரை கிடைத்துவிட்டால் நாம் எல்லாருமே கடோத்கஜன்கள் தானே!!!

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதியது
---------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
courtesy;வாத்தியார் ayya tq.
==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
===================================================
ஆஹா.............ஆஹா.............வாய் ஊற வைத்த வள்ளல் மேன்மைதங்கிய சுஜாதா ஐயா என்றால் மிகையாகா...........
இதை தேடிப் பகிர்ந்த செட்டியார் ஐயா தாங்கள் பெருமைக்குரியவர்.
என்ன தமிழ் நடை அழகு வசன அழகு உவமான உவமேயே அழகு சொல்லப் போனால் இன்றும் முடியாத அழகோ அழகு அள்ளி அள்ளிச் சாப்பிட்டு ரசித்து ருசித்தேன் ஐயா.
என்றும் அன்பும் நன்றியும் ஐயா.
அன்புடன்
விக்னசாயி.

=================================
Image result for புளியோதரை



















==================================

ஐயங்கார் புளியோதரை....... செய்முறை:............

அனைவருக்கும் நிச்சயம் பெருமாள் கோவில் புளியோதரை என்றால் மிகவும் பிடிக்கும். சொல்லப்போனால் பலர் பெருமாள் கோவிலுக்கு அந்த புளியோதரையை சாப்பிடவே செல்வார்கள். அந்த அளவில் பெருமாள் கோவில் புளியோதரை ருசியாக இருக்கும். உங்களுக்கு அந்த புளியோதரையை வீட்டில் செய்து சாப்பிட ஆசையா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். இங்கு பெருமாள் கோவில் புளியோதரை/ஐயங்கார் புளியோதரையை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:
சாதம் - 2 கப் புளிக்காய்ச்சல்...
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
நாட்டுச்சர்க்கரை - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
புளி - 1 எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு

பொடி செய்வதற்கு...
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி - 1/2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 2
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
எள் - 1 டேபிள் ஸ்பூன்


செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பிறகு புளியில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 15 நிமிடம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். 

பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெயை ஊற்றி காய்ந்ததும், வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பின் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய், மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

 அடுத்து அதில் உப்பு சேர்த்து, பின் புளிச்சாற்றினை ஊற்றி, 10-15 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் போது இறக்கி, அதில் சாதத்தை போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, பின் பொடி செய்து வைத்துள்ளதை சேர்த்து பிரட்டி, மூடி வைத்து, 30 நிமிடம் கழித்து பரிமாறினால், ஐயங்கார் புளியோதரை ரெடி!!!


puliyodharai recipe | temple style puliyodharai rice or tamarind rice click here.

Add caption

Image Courtesy: sharmispassions Boldsky.

=================================




=================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...