சன்னல் நோயாளி
அது பல படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை. .
அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர* நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை.
இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை சன்னல் அருகில்.
இன்னொருவருக்கு சன்னல் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத்
தவிர… தனிமை.. தனிமை..
தனிமை..!
சன்னல் படுக்கை நோயாளிக்கு புற்றுநோய்.
இன்னொருவர் கடும் எலும்பு முறிவு நோயாளி. நாளடைவில் நட்பாகிவிட்டனர். ஒருமுறை
எலும்பு நோயாளி சன்னல் நோயாளியிடம் சொன்னார்..
“உனக்காவது பொழுது
போக்க, ஒரு சன்னல்
இருக்கிறது.. எனக்கு அதுகூட இல்லை..!”
கவலைப்படாதே நண்பா.. நான் சன்னலூடே என்னென்ன
காண்கிறேனோ, அவ்வளவையும்
உன்னிடம் விவரிக்கிறேன். இதை ஒரு ஒப்பந்தமாகவே கடைப்பிடிப்பேன்..!
அன்று முதல் சன்னல் நோயாளி, தான் கண்ட
காட்சிகளை சுவைபட தன் நண்பனுக்குக் கூறலானார்..
”
நண்பா.. சன்னலுக்கு வெளியே ஒரு பெரிய ஏரி.. நடுவில் சிறு
தீவு.. ஏரியில் படகுகள் மிதக்கின்றன.. ஏரிக்கரையில் அழகான பூங்கா..! காதலர்கள்
தன்னை மறந்து கதைகள் பேசுகின்றனர்..!”
எலும்பு நோயாளிக்கு அப்படியே காட்சிகள்
மனக்கண்ணில் விரியும்..
சன்னல் நோயாளி இன்னொரு நாள் சொல்வார்..
“ஏரிக்கரை ஓரமாக
ஒரு சாலை.. அதில் மணப்பெண் அழைப்பு ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது.. குழந்தைகள்
மகிழ்ச்சியுடன் ஓடித் திரிகின்றன. மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள்.. மணப்பெண்
முகத்தில் அப்படி ஒரு வெட்கம்..!”
ஊர்வல அரவங்கள் எதுவும் எலும்பு நோயாளிக்கு
கேட்கவில்லையாயினும் நாதசுரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை நன்கு
அனுபவிப்பார்..
ஒருநாள் சன்னல் நோயாளி செத்துப்போனார்..
மீண்டும் எலும்பு நோயாளிக்கு வெறுமை… ஒருநாள் செவிலி
வந்தபோது, தன் படுக்கையை
சன்னல் ஓரமாக மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள, அவ்வாறே
செய்யப்பட்டது.
இனி எனக்கு நன்கு பொழுது போகும் என்று
எண்ணியவாறே.. தன் எலும்பு முறிவு வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல தன் உடலை
உயர்த்தி சன்னல் வழியே நோக்க…. அங்கே பெரிய சுவர்..! வேறு எதுவுமே இல்லை..!
அப்படியானால் சன்னல் நோயாளி சொன்ன கதைகள்…?
மறுநாள் செவிலி வந்தவுடன், நடந்தவற்றை
எலும்பு நோயாளி கூறினார்..
செவிலி, எலும்பு நோயாளிக்கு ஊசி மூலம் மருந்தை
ஏற்றியபடியே சொன்னாள்..
“நீங்கள்
பார்க்கும் சுவர் கூட அவருக்கு தெரிந்திருக்காது.. புற்றுநோயின் தாக்கத்தால் அவர்
பார்வையை எப்போதோ இழந்துவிட்டிருந்தார்..!”
நீதி : தன் துன்பங்களை மறைத்துக்கொண்டுமற்றவர்களைஉற்சாகப்படுத்தும்மிக
ச்சில மனிதர்கள்இன்னும் இருக்கத்தான்செய்கிறார்கள்..
அவர்களைப்போற்றாவிட்டாலும்பரவாயில்லை.. குறைகூறாதீர்கள்..!
ஜோக்ஸ்
கணவர்:
காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?
மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.......
------------------------------------------------------------------------
அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க்
வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார்
நான் நல்லா படிச்சதுக்காக "O" போட்டாங்க...
------------------------------------------------------------------------
கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை
குடிக்காதுடி.
மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு
ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.
கணவன் : ????!!!!
------------------------------------------------------------------------------
என்ன உங்க வீட்டு காப்பி ஒரே ஃப்னாயில் வாசனை
அடிக்குது..
நான் தான் சொன்னேனே...என் மனைவி
வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சுடுவான்னு .
------------------------------------------------------------------------------
நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு
நினைக்கிறீங்க?
கணவன்: 6 மாசமா அவன் என்கிட்டே பேசுறதே இல்லை
நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க!
இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க..
------------------------------------------------------------------------------
காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில்
சொல்லிட்டேன்.
காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?
காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு
கேட்கலை...
காதலி : !!!!
------------------------------------------------------------------------------
நோயாளி : டாக்டர், வயித்து வலி
என்னால பொறுக்க முடியல...
டாக்டர் : வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன்
பொறுக்கப் போறீங்க?
ஆன்மீகம்.
குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளுங்கள்.
*
இறைவனை மனக்கண்ணில் காணும் போது என்னிடமுள்ள தீமைகள் யாவும்
நெஞ்சத்திலிருந்து விலகி விடுகின்றன.
*
எப்போதும் மனதை எளிமையாகவும், தூய்மையாகவும், அமைதியாகவும்
வைத்திருக்க விரும்புங்கள். நாம் மகிழ்ச்சியாக வாழவேண்டுமானால், நம் மனப்போக்கினை
ஆளக்கற்றுக் கொள்ள வேண்டும்.
*
மனிதனுக்கு நேயஉணர்வு அவசியம். எப்படி தன்னிடம் உள்ள பழுத்த
பழங்களை மரம் பிறருக்காக கொடுக்கிறதோ, அதுபோல ஒவ்வொருவரும் தன்னிடம் உள்ளதை பிறருக்கு
கொடுக்கும் குணமுடையவர்களாக இருக்க வேண்டும்.
*
குழந்தைகளைப் போன்று இருக்க கற்றுக் கொள் ளுங்கள்.
குழந்தைகள் பயன் இல்லாத விளையாட்டுப் பொருள்களை வைத்துக் கொண்டு உள்ளம் மகிழ்ச்சி
கொள்கின்றனர். மகிழ்ச்சி என்பது பொருள் சார்ந்தது அல்ல. மனம் சார்ந்ததே.
*
சிரத்தை இல்லாமல் வழிபாடு செய்வதால் பயன் ஏதும் இருக்காது.
தெய்வம் நம்முன்னே உறைந்து இருக்கிறது என்ற எண்ணமுடன் வழிபட வேண்டும்.
-
ரவீந்திரநாத் தாகூர்
My
dearest friend / friends
Have
a fabulous morning.
அன்பின்
உறவுக்கும், உறவுகளுக்கும்
என்
இனிய
காலை வணக்கம் வாழ்க வளமுடன் / நலமுடன்.
அன்புடன் vicknasai.
===================================
No comments:
Post a Comment