Followers

Sunday, March 29, 2020

ஸாயீயைக் கண்ணால் கண்டதும் அவர்களுடைய இதயம் ஆனந்தத்தால் நிரம்பி வழிந்தது.
தாழ்வாரத்தின் வாசல் வழியாக சபாமண்டபத்தினுள் நுழைந்தனர். தூரத்தி­ருந்தே பாபாவின் உருவத்தைக் கண்டதும் இருவருக்கும் உணர்ச்சிவசத்தால் தொண்டை அடைத்தது. ஏங்கித் தவித்த தரிசனம் கிடைத்தவுடன் லக்மீசந்த் தம்மை மறந்து பாபாவின் பாதங்களில் லயித்துவிட்டார். உள்ளிருந்து ஆனந்தம் பொங்கப் பொங்க, பசியும் தாஹமும் பறந்தோடின. சுத்தமான ஜலத்தைக் கையில் எடுத்துக்கொண்டு பாபாவின் திருவடித்தாமரைகளைக் கழுவினார். அர்க்யம்1, பாத்யம்1 போன்ற சகல பூஜை விதிமுறைகளையும் செய்தார். தேங்காயையும் வாழைப்பழங்களையும் அர்ப்பணம் செய்தார். தூபம்1, தீபம்1, தாம்பூலம், தக்ஷிணை போன்ற வழிபாட்டுச் சடங்குகளையும் செய்து மானசீகமாக பாபாவை வலம் வந்தார். மாலையை அணிவித்துவிட்டு பாபாவினுடைய பாதங்களுக்கருகில் அமர்ந்தார்.
பிரேமை மிகுந்த பக்தரான லக்மீசந்த், குருவருளில் மூழ்கி ஆனந்தமடைந்து தேனீ தாமரையில் அமர்வதுபோல் ஸாயீயின் பாதகமலங்களுக்கு அருகில் அமர்ந்தார்.
பாபா அப்பொழுது கடிந்துகொண்டார், ''அயோக்கியப் பயல்கள்õ வழியில் பஜனை செய்துகொண்டே மற்றவர்களிடம் கேள்விமேல் கேள்வி கேட்கிறார்கள்õ பிறரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதற்கு என்ன இருக்கிறது?--
''தனக்குத் தானே பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டியதுதானே? மற்றவர்களிடம் எதற்காகக் கேள்வி கேட்கவேண்டும்? அவ்வளவு தூய கனவு எப்பொழுதாவது பொய்யாக இருக்கமுடியுமா? உம்முடைய சிந்தனையை நீரே தெளிவு
செய்துகொள்ளும். --
''மார்வாரியிடமிருந்து கடன் வாங்கிக்கொண்டு தரிசனத்திற்கு வரவேண்டிய அவசியமும் அவசரமும் என்ன? இப்பொழுதாவது உமது மனத்தின் ஆவல் நிறைவேறியதா?ஃஃ இந்த வார்த்தைகளைக் கேட்ட இருவரும் வியந்தனர்.
''வரும் வழியில் நாம் செய்த விசாரணைபற்றி இங்கிருந்தபடியே பாபா எப்படி அறிந்தார்?ஃஃ லக்மீசந்த் இவ்வற்புதத்தை நினைத்துப் பரம ஆச்சரியமடைந்தார்.
Please see below for English version. Tq
சாயியின் சரித்திரம் பாக்கியம் அளிப்பது. அவருடைய நித்திய நடவடிக்கைகள் பாக்கியம் அளிப்பவை. அவருடைய செய்கைகளோ அதியற்புதமானவை; புரிந்துகொள்ளமுடியாதவை; கிரமமாக விவரிக்க முடியாதவை. அவருடைய உண்மையான வாழ்க்கைச் சரித்திரம் ஆழங்காணமுடியாதது;...................................... ஸாயீயின் லீலைகள் எண்ணத்திற்கும் செயல்/ விளைவு சிந்தனைக்கும் அப்பாற்பட்டவை. அவரைத் தவிர வேறு யாரால் அவற்றை விவரிக்க முடியும்? நான் ஒரு கருவி மாத்திரமே அல்லேனோ? அவரே என்னைப் பேசவைப்பார். எல்லாருக்கும் எப்போதும் க்ஷேமம் உண்டாகட்டும்
''ஆத்மார்த்தமாகவும் இதயபூர்வமாகவும் என்னிடம் அன்பு கொண்டவன் என் கதைகளைக் கேட்டு இயல்பாகவே சந்தோஷமடைவான்.--Baba
Spreading the life and teachings of Shri Shirdi Saibaba.......
Sometimes Sai removes things from our lives for our own protection. Trust in Him.
Just because you can't see the air, doesn't mean you stop breathing. Just because you can't see Sai doesn't mean you stop believing.
Sai has perfect timing; never early, never late. It takes a little patience and it takes a lot of faith but it's worth the wait. .......... Think positive and positive things will happen.................
வேண்டத் தக்கது அறிவோய் நீ,
வேண்ட முழுவதும் தருவோய் நீ,
வேண்டும் அயன், மால்க்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்,
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்,
அதுவும் உன் தன் விருப்பு அன்றே!.....
Who so ever puts his feet on SHIRDI soil, his sufferings would come to an end, the wretched and miserable would rise into plenty of joy and happiness, as soon as they climb the steps of DWARAKAMAYEE.
ஸாயீயை சரணடைந்து அவருடைய பாதங்களை நமஸ்கரிக்கிறேன். அவர் உறையும் எல்லா ஜீவராசிகளுக்கும் வணக்கம் செலுத்துகிறேன். கதை கேட்பவர்கள் ஸாயீக்கு நிவேதனம் செய்யப்படும் இப் பிரஸங்கத்திற்குத் தங்களுடைய மேலான கவனத்தை தானமாக அளிக்குமாறு வேண்டுகிறேன்.
எல்லாருக்கும் எப்போதும் க்ஷேமம் உண்டாகட்டும்
ஸ்ரீ ஸாயீயின் பொற்கமலப் பாதங்களில் சரணமடைகின்றேன். கதை கேட்பவர்களுக்கு நமஸ்காரம் செய்கிறேன். ஸம்ஸார ஸாகரத்தை எளிதாகக் கடக்கும் திறமையைப் பெறும் வகையாக இக் கதைகளை பயபக்தியுடன் கவனமாகச் செவிமடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் எப்பொழுது சொல்லப்படுகிறதோ அப்பொழுது கேளுங்கள். அது மங்களத்தை அளிக்கும். கருணாமூர்த்தியான ஸாயீயே எல்லாச் செயல்களுக்கும் காரணகர்த்தா..
Baba comforted us saying, "Alla Accha Karega (God will do good)."
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
இனிய சுபகுருதின வணக்கம் அன்புறவுகளே!!!..
ஸ்ரீ சிர்டீ சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது……….
Please see below for English version. Tq
வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்...சாயி ஸ்த்சரித்திரம் அத்தியாயம் 28
தமிழில் தொடர்கிறது……….
*
*
*
================================================================
லாலாஜீயின் மனம் வாதித்தது, ''ஆரம்பத்தில் ஒரு கிழவனார் கனவில் தோன்றினார்ó. அவரையே சமயச் சொற்பொழிவு நடந்த இடத்திலும் கண்டேன். இந்தக் கிழவியும் அவருக்கு ஏதாவதொரு விதத்தில் உறவாக இருப்பாளோ?ஃஃ
56 இது இவ்வாறு இருக்க, குதிரைவண்டி பயணத்தைத் தொடர்ந்து சிர்டீ கிராமத்தை சீக்கிரமாக அடைந்தது. மசூதியின் உச்சியில் பறந்துகொண் டிருந்த கொடிகள் தூரத்தி­ருந்தே தென்பட்டன. இருவரும் பயபக்தியுடன் கைகூப்பி வணங்கினர்.
57 சிர்டீ சென்றடைந்தவுடனே பூஜை சாமான்களை எடுத்துக்கொண்டு நேராக மசூதிக்குச் சென்றனர். ஸாயீயைக் கண்ணால் கண்டதும் அவர்களுடைய இதயம் ஆனந்தத்தால் நிரம்பி வழிந்தது.
58 தாழ்வாரத்தின் வாசல் வழியாக சபாமண்டபத்தினுள் நுழைந்தனர். தூரத்தி­ருந்தே பாபாவின் உருவத்தைக் கண்டதும் இருவருக்கும் உணர்ச்சிவசத்தால் தொண்டை அடைத்தது.
59 ஏங்கித் தவித்த தரிசனம் கிடைத்தவுடன் லக்மீசந்த் தம்மை மறந்து பாபாவின் பாதங்களில் லயித்துவிட்டார். உள்ளிருந்து ஆனந்தம் பொங்கப் பொங்க, பசியும் தாஹமும் பறந்தோடின.
60 சுத்தமான ஜலத்தைக் கையில் எடுத்துக்கொண்டு பாபாவின் திருவடித்தாமரைகளைக் கழுவினார். அர்க்யம்1, பாத்யம்1 போன்ற சகல பூஜை விதிமுறைகளையும் செய்தார். தேங்காயையும் வாழைப்பழங்களையும் அர்ப்பணம் செய்தார்.
61 தூபம்1, தீபம்1, தாம்பூலம், தக்ஷிணை போன்ற வழிபாட்டுச் சடங்குகளையும் செய்து மானசீகமாக பாபாவை வலம் வந்தார். மாலையை அணிவித்துவிட்டு பாபாவினுடைய பாதங்களுக்கருகில் அமர்ந்தார்.
62 பிரேமை மிகுந்த பக்தரான லக்மீசந்த், குருவருளில் மூழ்கி ஆனந்தமடைந்து தேனீ தாமரையில் அமர்வதுபோல் ஸாயீயின் பாதகமலங்களுக்கு அருகில் அமர்ந்தார்.
63 பாபா அப்பொழுது கடிந்துகொண்டார், ''அயோக்கியப் பயல்கள்õ வழியில் பஜனை செய்துகொண்டே மற்றவர்களிடம் கேள்விமேல் கேள்வி கேட்கிறார்கள்õ பிறரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதற்கு என்ன இருக்கிறது?--
64 ''தனக்குத் தானே பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டியதுதானே? மற்றவர்களிடம் எதற்காகக் கேள்வி கேட்கவேண்டும்? அவ்வளவு தூய கனவு எப்பொழுதாவது பொய்யாக இருக்கமுடியுமா? உம்முடைய சிந்தனையை நீரே தெளிவு
செய்துகொள்ளும். --
65 ''மார்வாரியிடமிருந்து கடன் வாங்கிக்கொண்டு தரிசனத்திற்கு வரவேண்டிய அவசியமும் அவசரமும் என்ன? இப்பொழுதாவது உமது மனத்தின் ஆவல் நிறைவேறியதா?ஃஃ இந்த வார்த்தைகளைக் கேட்ட இருவரும் வியந்தனர்.
66 ''வரும் வழியில் நாம் செய்த விசாரணைபற்றி இங்கிருந்தபடியே பாபா எப்படி அறிந்தார்?ஃஃ லக்மீசந்த் இவ்வற்புதத்தை நினைத்துப் பரம ஆச்சரியமடைந்தார்.
67 ''கனவு என்னுடைய இல்லத்தில் தோன்றியது; பஜனை செய்ததோ ரயில்வண்டியில்; பாபாவுக்கு இதெல்லாம் எப்படித் தெரிந்தது? என்ன அற்புதமான அந்தர்ஞானம் இதுõ--
68 ''நான் பாபாவை தரிசனம் செய்யப் பேராவல் கொண்டது உண்மை. என்னிடம் தேவையான பணம் இல்லை; ஆகவே கடன் வாங்கிக்கொண்டேன். அது எப்படி இவருக்குத் தெரிந்ததுõஃஃ
69 வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு லக்மீசந்த் ஆச்சரியமடைந்தார். தாமரையால் கவரப்படும் தேனீக்களைப்போல் பாபாவின் திருவடித்தாமரையை நாடி வந்திருந்த பக்தர்களும் ஆச்சரியமடைந்தனர். பாபாவின் லீலைகள் கற்பனைக்கு எட்டாதவை அல்லவோõ
70 கடன் வாங்கிப் புனிதப் பயணம் சென்றோ பண்டிகைகளைக் கொண்டாடியோ கடனாளி ஆவது பாபாவுக்கு அறவே பிடிக்காத விஷயம். இது இங்கு முக்கியமான படிப்பினை.
71 பின்னர், மற்ற பக்தர்களுடன் லக்மீசந்த் சந்தோஷமாக ஸாடே வாடாவுக்குச் சென்றார். மதிய வேளையில் சாப்பாட்டுக்கு கோஷ்டியில் உட்கார்ந்தார்.
72 அதுசமயம், யாரோ ஒரு பக்தர் கொண்டுவந்த ஸாஞ்ஜா1 பாபாவின் பிரசாதமாக ஒவ்வொரு தட்டிலும் சிறிது பரிமாறப்பட்டது. இதை உண்ட லாலாஜீ திருப்தியும் மகிழ்ச்சியும் அடைந்தார்.
73 அடுத்த நாள் சாப்பாட்டு நேரத்தில் லாலாஜீக்கு ஸாஞ்ஜா ஞாபகம் வந்தது. ஆனால், ஸாஞ்ஜா தினமும் பரிமாறப்படும் உணவுப்பண்டம் அன்று. ஆகவே, அவருடைய ஆசை நிறைவேறாமற்போயிற்று.
74 மூன்றாவது நாளில், இந்த நிறைவேறாதுபோன ஆசையை எவ்விதமான உபாயங்களால் நஷ்டஈட்டுடன் பாபா திருப்தி செய்துவைத்தார் என்னும் அற்புதத்தைப் பாருங்கள்.
75 ஜோக்(எ) பூஜைக்குரிய சாமான்களான சந்தனம், அட்சதை, மலர்கள், விளக்குகள், மணி ஆகிய பொருள்களுடன் மசூதிக்கு வந்தார். பாபாவை வினவ ஆரம்பித்தார்.
76 ''பாபா, இன்று நைவேத்தியமாக என்ன கொண்டுவர வேண்டும்?ஃஃ மஹராஜ் ஆணையிட்டார், ''எனக்கு ஒரு தட்டு நிறைய ஸாஞ்ஜா கொண்டுவாரும். பூஜை, ஆரதியெல்லாம் பிறகு செய்துகொள்ளலாம்.ஃஃ
77 பூஜை சாமான்களை அங்கேயே வைத்துவிட்டு ஜோக் உடனே அங்கிருந்து சென்றார். திரும்பி வந்தபோது எல்லாருக்கும் விநியோகம் செய்யுமளவிற்கு சிரா (ரவா கேசரி) கொண்டுவந்தார்.
78 சிறிது நேரம் கழித்து மதிய ஆரதி நடந்தது. பக்தர்கள் கொண்டுவந்திருந்த நைவேத்தியங்களெல்லாம் தட்டுகளில் ஒவ்வொன்றாக பாபாவைச் சென்றடைந்தன. பாபா அப்பொழுது பக்தர்களிடம் சொன்னார்,--
79 ''இன்று ஒரு விசேஷமான நாள். ஆகவே இன்றைய பிரசாதம் ஸாஞ்ஜாவாக இருக்கவேண்டுமென்று விரும்புகிறேன். ஸாஞ்ஜாவுக்குச் சொல்­யனுப்புங்கள். சீக்கிரமாகக் கொண்டுவாருங்கள். எல்லாருக்கும் யதேஷ்டமாகக் (விரும்பியவரை) கிடைக்க வேண்டும்.ஃஃ
80 பக்தர்கள் சென்று இரண்டு போகணிகள் நிறைய ஸாஞ்ஜா கொண்டுவந்தனர். லக்மீசந்த் ஏற்கெனவே பசியுடன் இருந்தார். வாய்வுப் பிடிப்பால் இடுப்புவ­யும் இருந்தது.
81 வயிற்றி­ருந்த பசியும் இடுப்பி­ருந்த வ­யும் லக்மீசந்தை நிலைகொள்ளாமல் செய்து கொண்டிருந்தன. இந்நேரத்தில் பாபா என்ன திருவாய்மொழிந்தார் என்பதைக் கவனத்துடன் கேளுங்கள்.
82 பாபா கூறினார், ''இப்பொழுது பசியுடன் இருப்பது நன்று. இடுப்பில் வலி ­ இருக்கிறது; அதற்கு மருந்து தேவை. ஆனால் இது ஸாஞ்ஜா உண்ணும் நேரம். ஆரதிக்குத் தயாராகும்.ஃஃ
83 லக்மீசந்தின் மனத்தில் இருந்த எண்ணம் பாபாவின் வார்த்தைகளாகத் தெளிவாகவும் பிரகடனம் போன்றும் வெளிவந்தது. ஒ­யே எழுப்பாமல் ஏற்பட்ட எதிரொ­õ மஹராஜ் அந்தர்ஞானத்தால் அனைத்தையும் அறிந்திருந்தார்.
84 ஆரதி முடிவடைந்தது. மதிய உணவில் ஒரு பண்டமாக ஸாஞ்ஜா பரிமாறப்பட்டது. லக்மீசந்தின் ஆசை நிறைவேறியது. அவர் ஆனந்தமடைந்தார்.
85 இந்தக் கட்டத்தி­ருந்து அவருக்கு பாபாவின் மீதிருந்த அன்பு பெருகியது. தேங்காய், ஊதுவத்தி, மாலைகள் ஆகியவற்றை ஸமர்ப்பணம் செய்வது ஒரு நியமம் ஆகிவிட்டது. பூஜையும் அதையொட்டிய செயல்களும் தொடர்ந்து நடந்தன. லக்மீசந்துக்கு க்ஷேமத்தைக் கொண்டுவந்தன.
86 சிர்டீக்கு யாராவது செல்வது தெரிந்தால், அவரிடம் மாலை, தக்ஷிணை, ஊதுவத்தி, கற்பூரம் ஆகிய பொருள்களைத் தவறாது கொடுத்தனுப்பும் அளவிற்கு லக்மீசந்தின் பக்தி ஆழமாகியது.
87 சிர்டீக்கு எவர் போனாலும் சரி, அது லக்மீசந்துக்குத் தெரிந்தவுடனே அவரிடம் இம்மூன்று பொருள்களையும் தக்ஷிணையையும் பாபாவிடம் ஸமர்ப்பிக்கவேண்டும் என்ற வேண்டுகோளுடன் கட்டாயம் கொடுத்தனுப்புவார்.
88 இதுவரை விவரிக்கப்பட்ட விஜயத்தில்தான், பாபா சாவடிக்குச் செல்லும் இரவு ஒன்றில், அந்தக் கோலாகலத்தைப் பார்க்க லக்மீசந்த் சென்றார். திடீரென்று பாபா குக்கிக் குக்கி இருமினார். இருமல் துன்பத்தையளித்து அவரை நிலைதடுமாறச் செய்தது.
89 லக்மீசந்த் தமக்குள் சொல்­க்கொண்டார், ''ஓ, என்ன வேதனை இந்த இருமல்õ ஜனங்களுடைய கண்ணேறுதான் இதற்குக் காரணம் என்று தோன்றுகிறதுõஃஃ
90 இது லக்மீசந்தின் மனத்தில் எழுந்த ஓர் எண்ண அலையே. ஆயினும், அவர் காலையில் மசூதிக்கு வந்தபோது பாபா என்ன சொன்னார் என்னும் அற்புதத்தைப் பாருங்கள்.
91 மாதவராவும் அப்பொழுது அங்கு வந்திருந்தார். பாபா அவரிடம் தம்மிச்சையாகவே சொன்னார், ''நேற்று நான் குக்கிக் குக்கி இருமி அவஸ்தைப்பட்டேன். இது கண்ணேறு காரணமாக ஏற்பட்டிருக்குமோ?--
92 ''யாரோ ஒருவன் என்மீது கெட்ட திருஷ்டியைப் போட்டுவிட்டான் போ­ருக்கிறது. அதனால்தான் இந்த இருமல் என் உயிரை வாங்குகிறது.ஃஃ
93 லக்மீசந்தின் மனத்தில் மின்னலடித்தது. ''இது என்னுடைய எண்ணத்தின் எதிரொ­யேõ ஆயினும் பாபாவுக்கு இதெல்லாம் எப்படித் தெரிந்தது? எல்லாருடைய உடல்களிலும் வாசம் செய்கிறார் அல்லரோõஃஃ
94 கைகளைக் கூப்பிக்கொண்டு பாபாவை வேண்டினார், ''மஹராஜ், உங்களுடைய தரிசனத்தால் ஆனந்தமடைந்தேன். இதுபோலவே கருணை கூர்ந்து எப்பொழுதும் என்னைக் காப்பாற்றுங்கள்.--
95 ''தங்களுடைய பாதகமலங்களைத் தவிர இவ்வுலகில் இப்பொழுது வேறெந்தக் கடவுளையும் யான் அறியேன். என்னுடைய மனம் உங்களுடைய பாதங்களிலும் வழிபாட்டிலும் எப்பொழுதும் லயிக்கட்டும்.--
96 ''ஓ ஸமர்த்த ஸாயீ, உங்களுடைய பாதங்களில் வணங்கி வீடு திரும்ப அனுமதி வேண்டுகிறேன். எங்களுக்கு அனுமதி தந்து அநாதைகளாகிய எங்களை ரட்சிப்பீராக.--
97 ''இவ்வுலக வாழ்வில் நாங்கள் மாட்டிக்கொண்டு கஷ்டப்படாதவாறு எப்பொழுதும் உங்கள் கடைக்கண்பார்வையைச் செலுத்துங்கள். உங்கள் நாமத்தைக் கீர்த்தனம் செய்யும் வழக்கம் புஷ்டியடைந்து எங்களைச் சுற்றி சுகமும் திருப்தியும் நிலவட்டும்.ஃஃ
98 ஸாயீயின் ஆசீர்வாதங்களையும் உதியையும் வாங்கிக்கொண்டு, வழிநெடுக ஸாயீயின் புகழைப் பாடிக்கொண்டு லக்மீசந்த் ஆனந்தமாக வீட்டிற்கு வந்துசேர்ந்தார்.
99 இன்னுமொரு சிட்டுக்குருவியும் பாபாவால் நூல் கட்டி இழுக்கப்பட்டு சிர்டீக்குக் கொண்டுவரப்பட்டது. பக்தைக்கு நேருக்குநேராக தரிசனம் செய்யும் நல்லநேரம் வந்தபோது இது நடந்தது. அவ்வம்மையாருடைய அற்புதமான கதையைக் கேளுங்கள்õ
'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது………………………
=================================================================
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது……………………………………….
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
Please see below for English version. Tq
CHAPTER 28
*
*
*
============================================
Then they drove on and came near Shirdi and seeing the flags on the Masjid they saluted them. With Puja materials in hand, they then went to the Masjid and worshipped Baba with due formality. Lakhmichand was much moved and was extremely happy to see Baba. He was enrapt with Baba's Feet as a bee with a sweet smelling lotus. Then Baba spoke as follows :-
"Cunning fellow, he does bhajan on the way and enquires from others. Why ask others? Everything we should see with our own eyes; where is the necessity to question others? Just think for yourself whether your dream is true or not? Where was the necessity of the darshan by taking a loan from a Marwari? Is the heart's desire now satisfied?"
Hearing these words Lakhamichand was wonderstruck at Baba's omniscience. He was at a loss to know how Baba came to know about all the things that had happened enroute from his house to Shirdi. The chief thing to note in this respect is that Baba never liked people to run into debt for taking His darshan, or celebrating any holiday or making any pilgrimage.
Sanza
At noon when Lakhamichand was sitting for meals he got some sanza (wheat-pudding) from a devotee as Prasad. He was pleased to have it. Next day also he expected it, but got nothing. So, he was anxious to get it again. Then on the third day at the noon Arati time, Bapusaheb Jog asked Baba, what naivedya he should bring. Baba told him to bring sanza. Then the Bhaktas brought two big potfuls of sanza. Lakshamichand was very hungry and there was some pain in his back. Then Baba said to him - "It is good that you are hungry, take sanza and some medicine for the pain in the back." He was again wonderstruck to see that Baba again read his mind and spoke out what was passing therein. How omniscient was He!
Evil eye
On this occasion, he once witnessed one night the procession to the chavadi. Baba then suffered much from cough. He thought that this suffering of Baba might be due to somebody's evil eye. Next morning when he went to the Masjid Baba spoke to Shama as follows - "I suffered last night from cough; is it due to some evil eye? I think that somebody's evil eye has worked on me and so I am suffering". In this case Baba spoke out what was passing in Lakshamichand's mind.
On seeing these proofs of Baba's omniscience and kindness to His Bhaktas, he fell prostrate at Baba's Feet and said - "I am much pleased with your darshan. Ever be kind and merciful to me and protect me always. There is no other God to me in this world except Your Feet. Let my mind be ever rapt in Your Bhajan and Feet. Let Your grace protect me from the miseries of the world and let me ever chant Your name and be
happy".
After getting Baba' Udi and blessing he returned home with his friend, much pleased and contented and singing Baba's glory on the way. He remained a staunch devotee of baba afterwards and always sent garlands of flowers, camphor and Dakshina with any person of his acquaintance bound for Shirdi.
To be continued............
===============================================
Bow to Shri Sai -- Peace be to all
To be continued............
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது.....................................
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது………..............................................பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
/
/
/
/
/
/
“ஓம் சாயி நமோ நமோ
ஸ்ரீ சாயி நமோ நமோ
ஜெய ஜெய சாயி நமோ நமோ
சற்குரு சாயி நமோ நமோ”.
"I say things here. There they happen."
=
=
OM SAI NAMO NAMAH
SHREE SAI NAMO NAMAH
JAI JAI SAI NAMO NAMAH
SADGURU SAI NAMO NAMAH
Sai Samarth...........Shardha Saburi
Bow to Shri Sai - Peace to be all
************************************************************
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
=
=
=
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
ஓம் நமோ பகவதே சாயிநாதாய
அமிர்த வாக்ய வர்ஷாய
சகல லோக பூஜிதாய
சர்வ தோஷ நிவாரணாய
ஷிரிடி வாசாய
சாயிநாதாயதே நமஹ
சற்குரு நாதா சரணம்! சரணம்!
சச்சிதா னந்தா சரணம்! சரணம்!
அற்புத ஒளியே சரணம்! சரணம்!
அன்பே அருளே சரணம்! சரணம்!
நித்திய சாயி சரணம்! சரணம்!
நிர்மல வடிவே சரணம்! சரணம்!
பொற்பதம் பணிந்தோம் சரணம்! சரணம்!
புண்ணிய ரூபா சரணம்! சரணம்!
Twameva mata cha pita twameva
Twameva bandhushcha sakha twameva
Twameva vidya dravinam twameva
Twameva sarvam mama deva deva
Twameva sarvam Sai deva deva....
You alone are my mother and my father,
You alone are my friend and my beloved companion,
You alone are my knowledge and my wealth,
O Supreme Lord, you alone are everything for me.
Sometimes Sai removes things from our lives for our own protection. Trust in Him.
Just because you can't see the air, doesn't mean you stop breathing. Just because you can't see Sai doesn't mean you stop believing.
Sai has perfect timing; never early, never late. It takes a little patience and it takes a lot of faith but it's worth the wait.
Think positive and positive things will happen.................
Saying sorry doesn't solve the problem. It's what you do after that truly counts.
======================================================================================================================================அன்புடன் சகோதரன் விக்னசாயி.
===================================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...