Followers

Sunday, March 29, 2020


Image may contain: fruit and food




மருத்துவ செய்தி
பப்ளிமாஸ் பழத்தின் நன்மைகள்

சாத்துக்குடி, ஆரஞ்சு வகையைச் சேர்ந்த பப்ளிமாஸ் பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
இதில் புளிப்பு, இனிப்பு என இரண்டுவகை உண்டு. இதில் புளிப்புவகையை விட இனிப்பு வகையே சிறந்தது.

பித்த அதிகரிப்பை சரி செய்யும் தன்மை பழங்களுக்கும், கீரைகளுக்கும் உண்டு. இதில் பம்பளிமாஸ் பழம் பித்த அதிகரிப்பை வெகு விரைவில் குறைக்கும்.

கண்பார்வை கோளாறுகள் நீங்க வைட்டமின் சத்து அவசியம். இந்த வைட்டமின் சத்துக் குறைவதால் மாலைக் கண் நோய் ஏற்பட வாய்ப்புண்டு.

இக்குறைகளை களைய பம்பளிமாஸ் பழம் சிறந்த மருந்தாகும்.




No photo description available.

ஈரல் பாதிப்புகளால்தான் காமாலை நோய் உருவாகின்றது. இந்த காமாலை நோயின் தாக்கம் குறைய பம்பளிமாஸ் பழம் சாப்பிடுவது நல்லது.

கோடைக்காலத்தின் அதிக வெயிலில் அலைபவர்கள், அதிக சூடுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்களின் உடல் வெகு விரைவில் வெப்பமடையும்.

இவர்கள் பம்பளிமாஸ் பழத்தை சாறு குடித்து வந்தால் உடல் சூடு தணியும். இரத்த சோகையைப் போக்கும் குணம் பம்பளிமாஸ் பழத்திற்கு உண்டு.

இந்தப் பழத்தின் சுளைகளை மதிய உணவுக்குப்பின் தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தச் சோகை குறைபாடு நீங்கும்.

அன்புறவுகள்... எல்லோர்க்கும்.... என்றென்றும் அன்புடன்.! இனிய வணக்கம்! ..உரித்தாகுக...சகோ(ஸ்)

==========================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...