Followers

Wednesday, March 25, 2020



அன்புள்ள கணவனே,
உங்கள் மனைவியின் ஆரம்ப கால இளைமையை நினைவில் கொள்ளுங்கள், அவள் உங்களுக்காக பிரகாசமாகவும், அழகாகவும் உருவாக்கி பாதுகாத்த உடம்பை கொண்டிருந்தாள்.
அவள் தன் உடம்பின் ஒவ்வொரு அங்கத்தையும் அதிக கவனத்துடன் பாதுகாத்து அழகாக வைத்திருந்தாள்.
தனக்காக பல கற்பனைகளை உருவாக்கி வைத்திருந்தாள்...
அவள் உங்கள் வீட்டை தன் வீடாக நினைத்து கட்டியெழுப்பி உங்களையும் அழகாக அவள் கட்டியெழுப்பினாள் என்பதை மறவாதீர்கள்...
அவள் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் உங்களுக்காகவும் கர்ப்பம் தரித்தாள்.. அதனால் கற்பனை செய்து பார்க்க முடியாத வேதனைகளைப் பெற்றாள். ஆனாலும் அது அவளது விருப்பமும் கனவும் வலிமையும் அதுவே. அதை அவள் கண்ணீர் மற்றும் சிரிப்புடன் எதிர்கொண்டாள். இல்லை என்றாள் நீங்களும் சமூகமும் அவளைப்பார்த்து சிரிப்பாய் சிரிப்பீர்கள்....
அவள் உங்கள் குழந்தையைச் சுமந்துகொண்டு இருக்கும்போது, அவள் உடம்பு மாற்றிக்கொண்டிருந்து. மிகவும் சங்கடமானாள், அவளது முகம் வீங்கியது, கால் வீங்கியது ,முடி கொட்டியது, உணவு அவள் தொண்டை வரை செல்ல வாந்தியாக வெளியே வந்தது... ஆனாலும் உங்கள் குழந்தையை 9 மாதங்கள், எண்ணற்ற கனவுகளுடன் தூக்கமில்லாத இரவுகளுடன் சுமந்து பாதுகாப்பாக வைத்திருந்தாள்,
பிரசவ நேரம் நெருங்க கண்ணீர் மற்றும் இரத்தம் சதை அழகு ஆரோக்கியம் என அனைத்தையும் தியாகம் செய்ய தயாரானள்...
 முதல் முறையாக பிரசவ அறைக்குள் சென்றாள். சுறுசுறுப்பான வேகத்துடன் செயற்கையான புன்னகையுடன் வைத்தியர் தாதியர் என வரவேற்றனர் . வேதனையுடன் அவள் ஒரு புதிய வாழ்க்கையை நோக்கி மகிழ்வுடன் சென்று கொண்டிருந்தாள்...
வெட்டி கிழிக்கப்பட்ட உடலில் அருகே அவளின் புதிய அவதாரமாக குழந்தை...
மறுபுறம்
சுருக்கங்கள் மற்றும் தையல்களால் அவதியுற்றாள்,
இப்போது அவளின் கட்டழகு உடல் இல்லை அது மறுபடி ஒருபோதும் வரப்போவதில்லை.
ஆனாலும அவள் மறுபடி இதே வலியை ஏற்கத் தயாராக இருந்தாள். ஏனெனில் மாறியது அவளின் உடல் தான்... மனம் அல்ல.
இனி அவளுடைய உடல் ஒருபோதும் முன்னர் போல இருக்காது, கோடுகள் மற்றும் தழும்புகள் அவளுடைய உடல் எல்லாவற்றையும் கடந்து சென்றுவிட்டது, அவளுடைய துடுக்கான மார்புகள் இப்போது உங்கள் குழந்தைக்காக சாய்ந்து தொங்கி விட்டது. மெல்லிய வயிறு வெளியே தொங்க ஆரம்பிக்கிறது... உடல் பருமனாகிறது...
இப்போது அவள் உங்களுக்கு கொடுத்த புதிய குழந்தையை வளர்க்கத் தயாராக இருக்கின்றாள் தன் உடலை அல்ல., அவள் எப்போதும் இதைச் செய்வாள் . இந்த வலியை மீண்டும் மீண்டும் தாங்க தயாராக உள்ளாள் ஏனெனில் அவளின் மனது என்றும் மாறாதது...
அவளை அனைத்து மரியாதையுடனும் அன்புடனும் காதலியுங்கள்... முன்னரை விட அதிகமாக அவளை காதலியுங்கள். அவளின் தியாகத்தை மனதார புரிந்து கொண்டு அவளை ஆசையாக ஆதரியுங்கள்... அன்புகூருங்கள்... 
Image may contain: one or more people



அதிகம் பகிருங்கள்....
courtesy;priya durai.
==================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...