பாவம் துரத்தப், பதி மோகம் துரத்தப்,
பல காரியமும் துரத்த, நகையும் துரத்த, ஊழ் வினையும் துரத்த, என் நாளும் துரத்த,
வெகுவாய்
நா வறண்டு ஓடிக், கால் தளர்ந்திடும் என்னை நமனும் துரத்துவானோ?....................
பிறந்தது முதல் ஓடிக்
கொண்டே இருக்கிறோம். ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏதோ ஒன்று நம்மை துரத்திக் கொண்டே
இருக்கிறது.
அபிராமி பட்டர் பட்டியல்
போடுகிறார்....
பாடல்.....................
மிகையும் துரத்த, வெம் பிணியும் துரத்த, வெகுளி ஆனதும் துரத்த,
மிடியும் துரத்த, நரை திரையும் துரத்த,
பகையும் துரத்த, வஞ்சனையும் துரத்தப்,
பசி
என்பதும் துரத்தப்,
பாவம் துரத்தப், பதி மோகம் துரத்தப்,
நகையும் துரத்த, ஊழ் வினையும் துரத்த,
என் நாளும் துரத்த, ##வெகுவாய் நா வறண்டு ஓடிக், கால் தளர்ந்திடும் என்னை நமனும் துரத்துவானோ?
அகில உலகங்கட்கும் ஆதார
தெய்வமே! ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள்
வாமி! அபிராமியே!
பொருள்'
துன்பம், கொடிய நோய், கோபம் மதம், வறுமை, மூப்பு, தளர்ச்சி, மிக்க வேதனைகள், பகை, சூழ்ச்சி, பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை, பாவம், மோகம், மலங்கள், ஊழ்வினை, வெட்கம் இவையெல்லாம்
அடியேனை துரத்துகின்றன.
இதனால் நாக்கு வறண்டு, ஓடியோடிக் காலகளும் தளர்ந்து போயின. இந்நிலையில் எமனும்
வந்து எனை துரத்துவானோ?
அவ்வாறு துரத்தினால் நீயே
கதி!
அனைத்து உலகங்களுக்கும்
ஆதாரம் என்று சொல்லப்படும் கடவூரின் வாழ்வே! அமுதீசர் இடப்பாகத்தை ஒரு போதும் அகலாதவளே! கிளியை தனது இடக்கரத்தில் ஏந்தியிருப்பவளே! அனைத்து உயிர்களுக்கும் அருள் புரிபவளே! அபிராமி அன்னையே! என்று உலக மக்கள் படும் அவஸ்தைகளை
பட்டியல் இட்டு இவற்றிலிருந்து காப்பாற்ற வேண்டுகிறார்
அபிராமி பட்டர்.
மிகையும் துரத்த =
மிகையானவை துரத்த. அது என்ன மிகையும் துரத்த ? மிகை என்றால் அதிகம். நம்மை விட வயதில் அதிகமானவர்கள்
(பெற்றோர், அண்ணன், அக்கா), அறிவில் மிகுந்தவர்
(வாத்தியார்), பதவியில் பெரியவர்கள்
(அலுவகலத்தில் உயர் அதிகாரிகள்)....இவர்கள் நம்மை துரத்திக் கொண்டே
இருக்கிறார்கள்...இதை செய், அதை செய்யாதே என்று.
வெம் பிணியும் துரத்த =
பிணி நம்மை விரட்டுகிறது. எங்க ஓடுற, நில்லு, வந்து உன்னை பிடிக்கிறேன்னு விரட்டி வருகிறது
வெகுளி ஆனதும் துரத்த =
கோபம். பிறரின் கோபம் (கணவன், மனைவி, உயர் அதிகாரி ) இவர்களின் கோபம். சில சமயம் நம் கோபமே
நம்மை துரத்தும்.
மிடியும் துரத்த = மிடி
என்றால் ஏழ்மை, தரித்திரம். பணம் இல்லை
என்றால் கடன் காரன் துரத்துவான்.
நரை திரையும் துரத்த =
வயோதிகம் நம் பின்னே வந்து கொண்டே இருக்கிறது. நாமும் அதன் கையில் அகப்படாமல் ஓடி
கொண்டே இருக்கிறோம். ஒரு நாள் வரும். காதோரம் நரை முடி எட்டிப் பார்க்கும். பல்
விழும். கண்ணில் திரை விழும்...முன்னே இருப்பது தெரியாது - கண்ணாடி இல்லாமல்.
மிகு வேதனைகளும் துரத்தப் =
வேதனைகள் எப்படா இவனை பிடிக்கலாம் என்று துரத்தும்.
பகையும் துரத்த = பகைவர்கள், நம்மோடு போட்டி போடுபவர்கள்
வஞ்சனையும் துரத்தப் = நாம்
பிறருக்கு செய்த வஞ்சனை (பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின், தமக்கு இன்னா தாமே விளையும்), பிறர் நமக்கு செய்த வஞ்சனைகள்
பசி என்பதும் துரத்தப் =
பசி துரத்த
பாவம் துரத்தப் = பாவம்
துரத்த
பதி மோகம் துரத்தப் =
சிற்றின்பம். பதவி மோகம். பல காரியமும் துரத்த = அதை
செய்யலியே இதை செய்யலியே என்று பற்பல காரியங்களும் துரத்த. ஒவ்வொரு காரியமும்
என்னை கவனி என்னை கவனி என்று நம்மை விரட்டுகின்றன
நகையும் துரத்த = கை கொட்டி
மற்றவர்கள் சிரிப்பார்களே என்று பயந்து நாம் ஓடுகிறோம்..
ஊழ் வினையும் துரத்த =
முன்பு செய்த வினை
என் நாளும் துரத்த =
விடாமல் துரத்த
வெகுவாய் நா வறண்டு ஓடிக் =
நாக்கு வறண்டு
கால் தளர்ந்திடும் என்னை = கால் தளர்ந்திடும் என்னை
நமனும் துரத்துவானோ? = எமனும் துரத்துவானோ ?
அகில உலகங்கட்கும் ஆதார
தெய்வமே! = எல்லா உலகங்களுக்கும் ஆதாரமான தெய்வமே
ஆதி கடவூரின் வாழ்வே! =
திருக் கடையூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத
சுகபாணி! = அமுதீசர் பாகம் அகலாதவளே
அருள் வாமி! அபிராமியே! =
அபிராமியே அருள்வாயே
அபிராமி அம்மை பதிகம்
=====================================================
கடவுள் 🙏
கடவுள் அனைவரிடத்திலும்
இருக்கிறார்.அவர் நமக்கு கொடுப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்து கடவுள்
கொடுப்பதை பக்தி சிரத்தையோடும் அடக்கத்தோடும் வாங்கிக் கொள்ளவேண்டும்.
---ஷீரடி சாய்பாபா
அன்புறவுகள்...
எல்லோர்க்கும்.... என்றென்றும் அன்புடன்.! இனிய காலை மதிய மாலை இரவு வணக்கம்! Sako…ஓம் நமோ சச்சிதானந்த
சாய்நாதாய நமக.
🌹Om Sri Sairam... 🌹
பாபாவின்_அருளமுதம்
நூற்றுக்கணக்கான
பிரார்த்தனைகளும்,லட்சக்கணக்கான
கண்ணீர்த்துளிகளும் வேண்டியதில்லை...ஒரே ஓர் உண்மையான பிரார்த்தனை,சில அன்பான கண்ணீர்த்துளிகள் இருந்தாலே போதும் உன்னுடைய
எல்லா கவலைகளில் இருந்தும் விடுவிப்பான் இந்த சாயி.இந்த மசூதியில் அமர்ந்து பொய்
பேச மாட்டான் இந்த சாயி.நம்பு.நம்பிக்கையுடன் சரணடைந்தால் உனக்கு அனைத்திலும்
ஜெயமே!
OM SAI RAM.
==============================================
No comments:
Post a Comment