"அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கும், பாவங்கள் நீங்கப் பெற்றவர்களுக்கும் சாயியை வழிபடும் பேறு
கிட்டுகிறது!''
சீரடி
சாய்பாபா......................என்றும் இனிய அன்பு வணக்கங்கள் சகோ தோழமை
களே.....................
சீரடி சாய்பாபா
கண்கண்ட தெய்வமாக வாழ்ந்தார். தான் ஒரு அவதாரம் என்பதை உறுதிபடுத்தும் வகையில்
அவர் செய்த அற்புதங்கள் ஏராளம்... ஏராளம்... இன்றும் அவர் தன்னை முழுமையாக நம்பி
வழிபடுபவர்கள் வாழ்வில் மகத்தான மாற்றங்களையும், மகிழ்ச்சி கலந்த மறுமலர்ச்சியையும் ஏற்படுத்துகிறார்.
அவரை நினைத்து
மனம் உருகி வழிபட்டால் நீங்கள் வாழ்வில் நினைத்ததை நடத்தும் ஆற்றலைப் பெறுவீர்கள்.
இதையொட்டி "மாலைமலர்'' போன்ற பல
இணையங்களில் இருந்து உங்களுக்கு சீரடி சாய்பாபா பற்றியும், அவருக்கான வியாழக்கிழமை விரதம் பற்றியும் இங்கு தொகுத்து
தருகிறேன்.
சாய்பாபாவின்
தாய், தந்தை யார்ப
சொந்த ஊர் எது? இயற்பெயர் என்னப
இவை எதுவும் யாரும் அறிந்ததில்லை. சாயிமகான் 1854-ஆம் ஆண்டு, தனது பதினாறாவது
வயதில் சீரடிக்கு வருகை புரிந்தார். ஆனால் சில தினங்களில் அவர் அங்கிருந்து
கிளம்பிச் சென்றார்.
அவர் எங்கு
சென்றார் என்பதை யாரும் அறியவில்லை. சில ஆண்டுகள் கழிந்தன. சாந்த் பட்டேல் என்பவர்
ஒருமுறை காட்டுவழியில் சென்று கொண்டிருந்தபோது, பக்கீர்போல இருந்த பாபாவைக் கண்டார். பாபா அவரிடம்
இளைப்பாறும்படி கூறினார். அவர்கள் இருவரும் புகைபிடிக்க நெருப்பு தேவையாக
இருந்தது.
பாபா தன்
கையிலிருந்த கத்தியால் நிலத்தைத் தோண்ட நெருப்பு வந்தது. பிறகு கைத்தடியால்
பூமியின் மீது அடிக்க தண்ணீர் வந்தது. மேலும் சில மாதங்களுக்கு முன் காணாமல் போன
சாந்த் பட்டேலின் குதிரை இருக்கும் இடத்தையும் பாபா கூறினார். பாபாவின் மகிமையை
சாந்த் பட்டேல் புரிந்து கொண்டார்.
பாபாவை சாந்த்
பட்டேல், தன் வீட்டிற்கு
அழைத்துச் சென்றார். சில நாட்கள் தன் வீட்டிலேயே பாபாவைத் தங்க வைத்து
உபசரித்தார். சாந்த் பட்டேல் தன் மைத்துனரின் மகனது திருமண நிகழ்ச்சிக்காக சீரடி
சாய்பாபா வந்தபோது, பாபாவையும்
தன்னுடன் சீரடிக்கு அழைத்து வந்தார்.
பாபாவின்
ஒளிபொருந்திய தோற்றத்தைக் கண்ட மஹல்சாபதி என்னும் பூசாரி, அவரை `சாயி' என்று அழைத்தார். `சாயி' என்றால் பாரசீகத்தில் `சுவாமி' என்று பொருள். `பாபா' என்பது இந்தியில்
`அப்பா' என்று பொருள். இரண்டும் இணைந்து `சாயிபாபா' என்ற திருப்பெயரே
நிலைத்து விட்டது. சாயிபாபா சீரடியிலேயே தங்கிவிட தீர்மானித்தார்.
சீரடியில்
பழமையான மசூதி ஒன்று இருந்தது. அதன் அருகில் உள்ள வேப்பமரத்தின் இலைகளில் அதன்
இயல்பான கசப்புச் சுவை மாறியது. சீரடி மக்கள் பாபாவிடம் `நீங்கள் யார்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், "நானே அல்லா! நானே சங்கரன்! நானே ஸ்ரீகிருஷ்ணன்! நானே
அனுமன்!'' என்று கூறினார்.
ஆமாம்! அவர்
இப்பூமியில் இறைஅம்சம் கொண்டவராகவே அவதரித்தார்! பல ஆண்டுகள் ஒரு யோகியைப் போலவே
வாழ்ந்த பாபா பிச்சை எடுத்தே உண்டார். தனது மகிமையால் நோயுற்றவர்களின் நோயை
குணமாக்கினார். பாபாவின் புகழ் சுற்றுவட்டாரங்களில் பரவத் தொடங்கியது. பல ஞானிகள்
வந்து பாபாவைச் சந்தித்தனர்.
அவர்கள் பாபாவின்
தெய்வீகத் தன்மையை தாங்கள் அறிந்ததோடு அதை உலகிற்கும் எடுத்துக் கூறினர்.
கங்காகீர் என்னும் கர்வமிக்க ஞானி பாபாவைச் சந்தித்து, பாபாவின் மகிமையை சோதித்தார். பாபா தன் உள்ளங்கையிலிருந்து
கங்கையைப் பெருகச் செய்ய, கங்காகீர் தனது
தவறை உணர்ந்தார்.
பாபா தான்
தங்கியிருந்த துவாரகாமாயீ என்னும் மசூதியில் விளக்குகள் ஏற்றி வைப்பார். இரு
எண்ணெய் வியாபாரிகள் விளக்கிற்கான எண்ணெய் கொடுத்து வந்தனர். ஒருநாள் பாபாவின்
ஆற்றலை சோதிக்க எண்ணிய அவர்கள் எண்ணெய் தர மறுத்தனர்.
பாபா தண்ணீரை
ஊற்றி விளக்குகள் எரித்தார். இந்நிகழ்ச்சியால் பாபாவின் புகழ் அப்பகுதி முழுவதும்
பரவியது. பாபாவைத் தேடி பக்தர்கள் வரத் தொடங்கினர். ராதாகிருஷ்ணமாயி என்னும்
பெண்மணி பாபாவின் இருப்பிடத்தைக் கவனித்துக் கொண்டதோடு, உணவும் சமைத்து வந்தார்.
பாபாவைத் தேடி
எத்தனை பக்தர்கள் வந்தாலும் அவர்கள் அனைவரும் வயிறார உண்ணும்படி அந்த உணவைப்
பெருகச் செய்தார் பாபா. தெய்வீக மகிமை நிறைந்த பாபா குழந்தைகளிடம் குழந்தையாகவே
நடந்து கொண்டார். சிரிக்கச் சிரிக்கப் பேசி குழந்தைகளை மகிழச் செய்தார். பாபா
பஜனையையும், பாடல்களையும்
விரும்பினார்.
பக்தர்களிடம்
பஜனைகளையும், பாடல்களையும்
பாடும்படி உற்சாகமூட்டினார். சில வேளைகளில் பாடல்களுக்குத் தக்கபடி பாபா
நடனமாடினார். ஏழைகளின் துயரங்களைக் கண்டு மனம் பொறாதவர் பாபா. ஒரு தாயைப் போல ஏழைகளிடம்
நடந்து கொண்டார். தொழுநோயாளி கள் மீது அவர் மிகுந்த இரக்கம் கொண்டிருந்தார்.
அவர்களது உடலில்
உள்ள புண்களை தன் கையாலேயே கழுவி அவர்களுக்கு மருத்துவம் செய்தார். பாபா சாஸ்திரங்
களையும் ஐயமறக் கற்று உணர்ந்திருந்தார். பகவத் கீதை, குர்ஆன் போன்றவற்றின் சுலோகங்களுக்கு மிக அற்புதமான
விளக்கங்கள் அளித்து பண்டி தர்களைக் கூட வியப்படையச் செய்தார். பாபா மதங் களைக்
கடந்து நின்றார்.
துவாரகாமாயீ
மசூதியில் பாபா வீற்றிருந்தார். மக்கள் அவரை `சாயி மஹராஜ்' என்று போற்றிக்
கொண்டாடினர். பாபா மக்களுக்குக் கூறிய பொதுவான உபதேசம் நிஷ்டா (நம்பிக்கை)வும்
சபூரி (பொறுமை)யும் ஆகும். தன்னை நாடி வந்த நோயாளிகளுக்கெல்லாம் உதி (விபூதி)யையே
பிரசாதமாகத் தந்து, அவர்களின்
நோய்களை நீக்கியவர் பாபா.
வாழ்வில்
பொறுமையும், தன்மீது
நம்பிக்கையும் கொண்ட அன்பர்களுக்கு அவர் எப்போதும் துணை நிற்கிறார். துவாரகாமாயீயில்
அன்று பாபாவால் மூட்டப்பட்ட நெருப்பு இன்றும் அணையாமல் இருக்கிறது. அந்நெருப்புக்
குண்டத்திலிருந்து எடுக்கப்படும் உதியே இன்றும் பக்தர்களின் பிரசாதமாக
விளங்குகிறது. பாபா தன் பொன்னுடலோடு இப்பூலகில் வாழ்ந்த காலத்தில் எண்ணிலடங்காத
அற்புதங்கள் புரிந்தார்.
சாயிமகான் 1918-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் நாள் தன் ஸ்தூல உடலை உகுத்தார். உதி அளித்து, உபதேசம் செய்து, பல்லாயிரக்கணக்கான
மக்களுக்கு அருள்புரிந்த பாபா, தான் கூறியபடியே
தன் ஸ்தூலஉடல் மறைந்த பின்னும் இன்றும் அருள் புரிந்து வருகிறார்.
"அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கும், பாவங்கள் நீங்கப்
பெற்றவர்களுக்கும் சாயியை வழிபடும் பேறு கிட்டுகிறது!''
===============================================
பாபா நமக்குள்ளே
உறைகிறார் எனில் நாம் ஏன் அவரை அடையமுடிவதில்லை ?
யாவும் கடந்த
உண்மை நிலையில், கடவுள், குரு, ஆத்மா இவையாவும்
மாறுபடாத ஒன்றேயான நிலையான விழிப்புணர்வாகும். 'அந்தர் சாட்சி ' என நாம்
அழைக்கும் சூட்சும வடிவத்தில், பாபா நம்
ஆன்மாவினுள் நம்மை முழுவதும் அறிந்தவராய் உறைகிறார். நம்முள் அவர் சுயம்
பிரகாசமாய் திகழ்கிறார். நம் மனதுள் நற்சிந்தனைகளை உருவாக்குகிறார். அவரை ஒளி
வடிவமாய் பார்க்கக்கூடிய ' அந்த சக்தி
அல்லது ஞான திருஷ்டி ' நம்மிடத்தில்
இல்லை. யோகிகள், ஜென்ம
ஜென்மங்களாய் செய்யும் இடைவிடா முயற்சியின் காரணமாக ஞான திருஷ்டியைப்
பெறுகிறார்கள்.
அந்த ஞான
திருஷ்டியின் மூலமாக பாபாவின் உண்மை உருவை தமக்குள்ளே ஒளிவடிவமாக அவர்களால்
காணமுடிகிறது. அன்பு மற்றும் பக்தி என்ற உணர்வுகளின் மூலம் நாமும் சில சமயம்
பாபாவை ஆத்மாவினுள் உணர்கிறோம். ஆனால், பெரும்பாலான
நேரங்களில் நாம் பாபாவை மானசீகமாக அல்லது கற்பனையில் மட்டும் தரிசித்துக் கொண்டிருக்கிறோம்.
நாம் பாபாவின்
புகைப்பட உருவம், அவர்தம் சொற்கள், செயல்கள் ஆகியவற்றை நினைவு கூர்ந்த வண்ணம் உள்ளோம்.
படிப்படியாக முன்னேறி நம்மை சூழ்ந்து கவ்விக்கொண்டிருக்கும் அஹங்காரம், ஆசைகள் இவற்றினின்று விடுபட்டு காமம், கோபம், வெறுப்பு
ஆகியவனற்றை நம் கட்டுக்குள் கொண்டு வந்து முழு பற்றற்ற நிலையை அடையும்போது அவரது
உண்மை வடிவம் நம்முள் துலங்கும். நம் மனம் சலனமற்ற நிலையை அடைந்து இதயம் நிர்மலமான
பின்புதான் பாபாவின் இத்தகைய உண்மை வடிவம் நமக்குள் புலப்படும். நீர் கலங்கிய
நிலையில் இருக்கும்போது அல்லது அலைகள் நீர்நிலையை அலைக்கழித்துக்
கொண்டிருக்கும்போது அது ஆகாயத்தை பிரதிபலிப்பதில்லை.
அதேபோல மனம்
முழுவதும் அடங்கி நிலைபெற்று ஆன்மாவிற்குள் ஒன்றி அடங்கிப்போனால் அன்றி பாபாவின்
இந்த நிஜ ஸ்வரூபம் காணக்கிடைப்பதில்லை. இந்நிலையை அடைய பெருமுயற்சி அவசியம், பாபாவையே சதா தியானம்
செய்யவேண்டும்.
=======================================================
வைதீகம், பட்டினி(விரதம்) இவற்றுக்கு பாபா முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அவர்
விரும்புவது எல்லாம் தன் பக்தனிடம் உளப்பூர்வமான நம்பிக்கையை மட்டுமே.
பாபாவுக்கு
பிடித்த ஒரு சிறுவன் ஒருவன் இருந்தான். அவனது முதல் ஆண்டு பிறந்தநாள் விழா
மாதவராவ் தேஷ்பாண்டே வீட்டில் சிறப்பாக நடந்தது. இந்த விழாவுக்கு பாலா சாகேப் பாடே
என்ற பாபா பக்தரும் அழைக்கப்பட்டிருந்தார். அவர் வர இயலாமையைத் தெரிவித்துவிட்டு, பாபாவை பார்க்கச் சென்றிருந்தார்.
"பிறந்தநாள் விழா விருந்தில் சாப்பிட்டாயா? என்று கேட்டார் பாபா." இன்று வியாழக் கிழமை ஆதலால்
நான் சாப்பிடவில்லை! என்றார் பாலா சாகேப்.
"இருந்தால் என்ன?" என்றார் பாபா. "குருவுக்கு உகந்த நாட்களில் நான்
வெளியே சாப்பிடுவதில்லை. அது என் வழக்கம்!" என்றார் பாலா சாகேப்.
"யாரை திருப்திப்படுத்த இந்த விதி?" என்று பாபா கேட்ட போது, "தங்களைத் திருப்திப்படுத்தவே !" என்றார் பாலா சாகேப்.
"அப்படியானால் நான் சொல்கிறேன், மாதவராவ் அளிக்கும் விருந்தில் சாப்பிடு!" எனக் கூறி
திருப்பி அனுப்பினார். பாலா சாகேப் விருந்துக்கு வந்து சாப்பிட்டார்.
நான் உன்னோடு
தானே இருக்கிறேன். நடப்பவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன். விரதம் என்ற பெயரில்
பட்டினியை விட்டுவிடு.
பாபாவின் மிக நெருங்கிய பக்தர்களில் ஒருவரான தத்யா என்பவர், மிகவும் வைதீகமானவர். முறையாகத் தவறாமல் ஏகாதசி விரதம்
அனுஷ்டிப்பவர். ஆனால், பாபாவிடம் வந்த
பிறகு, பாபா, விரத நாட்களில் தின்பதற்கு எதையாவது தந்து
கொண்டேயிருந்ததால், அவர் பட்டினி
இருப்பதை நிறுத்த வேண்டியதாயிற்று. மனுதர்ம சாஸ்திரம் போன்ற சட்ட நூல்கள் கூட, சாஸ்த்திரங்களுக்கும் பரிபூரணமடைந்த ஞானி ஒருவரின்
சொற்களுக்கும் முரணிருக்குமாகில், ஞானியின் சொற்களே
ஏற்கப்பட வேண்டுமென்றுதான் கூறுகின்றன.
பொதுவாக
சாய்பக்தர்கள் தங்கள் விருப்பம் நிறைவேற 9 வியாழக்கிழமைகளில்
விரதம் இருந்து அவரை பூஜித்து வழிபடுவார்கள். இந்த விரதத்தை ஏதாவது ஒரு
வியாழக்கிழமை தான் தொடங்குவார்கள்.
எனவே உங்களது
மேலான லட்சியம் நிறைவேற இன்று நீங்கள் 9 வார சாய்பாபா
விரதத்தைத் தொடங்கலாம். இது நல்ல வாய்ப்பு. அதிர்ஷ்டமான வாய்ப்பு. சாய்பாபா ஒரு
போதும் பட்டினியாக இருந்ததில்லை. மற்றவர்களையும் பட்டினியாக இருக்க விட்டது
இல்லை. எனவே பட்டினி கிடந்து 9 வியாழக்கிழமை
விரதம் இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்.
அதற்கு மாறாக 9 வியாழக்கிழமைகளிலும் சாய்பாபா கதை படித்தும், அற்புதங்களை வாசித்தும் விரதம் இருக்கலாம். "சாயி
சாயி" என்று அவரது நாமத்தை தொடர்ந்து உச்சரிக்கலாம். அது ஆறு கடலுடன் இரண்டற
கலந்து விடுவது போல உங்களை சாய்பாபாவுடன் இரண்டற கலந்து விடசெய்யும். ஜெய்
சாய்ராம்.
![Image may contain: 1 person](https://scontent-lhr8-1.xx.fbcdn.net/v/t1.0-9/12809770_1711545542416784_8562130715694772741_n.jpg?_nc_cat=102&_nc_sid=8024bb&_nc_eui2=AeFl0VcOaljR0nVtD6udL66veamqcBTufB4RTCRrAqUP6GKvQRX5iNEvp6JrHz14iZWl_FDB180oEUG5U0swYBVZ22OMzHOEAsDvgQxXXaAQ4g&_nc_ohc=9XQATLX6EuMAX8N9uA4&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=ef0a1d4d41a08f5610a233aa3a76a7d2&oe=5EED6AE2)
===========================================================
ஸ்ரீ
சாயிபாபாவின் பதினொரு உபதேச மொழிகள்.....................
1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான்.
2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு
உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.
3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.
4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.
5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.
6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும்
சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.
7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை
உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.
8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.
9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை
தாங்குவேன்.
10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.
11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே
இருக்காது.
ஓம் சாயி நமோ நம!
ஸ்ரீ சாயி நமோ நம!
ஜெய ஜெய சாயி நமோ
நம! சத்குரு சாயி நமோ நம!
அன்புடன் சகோதரன்
விக்னசாயி............
======================================
No comments:
Post a Comment