Followers

Sunday, March 1, 2020

தோஷம் நீக்கும் நாள்


Astrology  மாசி மாசம் ஆளான பொண்ணு யாருக்கு?

மாசிமாசம் ஆளான பொண்ணு யாருக்கு? என்று கேட்டால் சின்னப்பையனும் கூடச் சொல்லுவான். அது மாமனுக்கு என்று.

அந்த அளவில் திரைப்படப் பாடல்கள் நம்மோடு ஒன்றாகக் கலந்திருக்கிறது.

பாடலின் முதல் இரண்டு வரிகளை மட்டும் கொடுத்திருக்கிறேன்

நாயகன்:
  “மாசிமாசம் ஆளான பொண்ணு
   மாமன் எனக்குத்தானே”
நாயகி:
  “நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
   மாமன் உனக்குத்தானே”

பாடல் பிரபலமானதற்குக் காரணம், நமது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அந்தப் பாடலுக்கு காட்சி கொடுத்திருப்பார்.

பாடலுக்கு உயிரூட்டியவர்கள் பாடலைப் பாடிய திருவாளர் KJ ஜேசுதாஸ், திருமதி ஸ்வர்ணலதா, மற்றும் இசையமைத்த  இசைஞானி இளையராஜா (படம்: தர்மதுரை)

பாடலை எழுதிய கவிஞர் மோனைக்காக மாசி மாதம், மாமன் என்ற பதங்களை எல்லாம் போட்டுவிட்டார். வேறு  மாதத்தைப் போட்டிருக்கக்கூடாதா?

சரி போகட்டும். சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன்.

தவத்துப்பிள்ளை மகத்தில் பிறக்கும் என்பார்கள். மக நட்சத்திரம் சிறந்த நட்சத்திரம். சிம்ம ராசிக்கு உரியது. அதுவும் மாசி மாதம் மக நட்சத்திரத்திரம் மிகவும் சிறப்பானது. அன்று பெளர்ணமி திதி. ராசிக்கு 7ல் சூரியன் தன்
சொந்த  ராசியைப் பார்த்தவாறு இருப்பார்.

அதனால், அன்றைய தினம் விசேடமானது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதியன்று மாசி மகம்

அன்று என்ன செய்யலாம்?

கீழே கொடுத்துள்ளேன். படித்து மகிழ்க. பயன் பெறுக!
++++++++++++++++++++++++++++++++++++++++++++

வேண்டுதல் நிறைவேறும்


மாசி மகம்

மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு  சிறப்பான நாளாகும்.
அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது.

பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய  இன்பவெள்ளத்தில்
அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு
தீர்த்தமாகும். தீர்த்தமாட இயலாதவர்கள்  விரதமிருந்து கோயிலுக்குச்
சென்று இந்நாளைக் கொண்டாடுவர்.

தமிழ் நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில்
கும்பேசுவரர் கோயிலில் மாசிமகத் திருவிழா (மகா மகம்)
சிறப்பாக நடைபெறும். அன்று யமுனை, சரஸ்வதி, கோதாவரி,
நர்மதா, சிந்து, காவேரி போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய
பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாகவும்.
குரு சிம்ம ராசிக்கு வரும் இந்நாளில் எல்லோரும் கடலில்
நீராடி நற்பேறு பெறுவர் என்பதும் ஐதீகம்.

முன்பு ஒருகாலத்தில் வருணபகவானைப் பீடித்த பிரகத்தி அவரை
கடலுக்குள் ஒழித்து வைத்திருந்தது. வருணபகவான்
சிவபெருமானை வேண்ட, அவரும் அவனைக் காப்பாற்றினார்.
அவனை விடுவித்த தினம் மாசிமகம் ஆகும். அப்போது
வருணன் சிவபெருமனை அன்றைய தினத்தில் புண்ணிய தீர்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அவர்களுக்கு வீடுபேற்றை  அருளும்படி வேண்டினான். அவரும் அவ்வாறே வரமளித்தார்.

மாசி மகம் கொடியேற்றம்

முன்பு ஒருகாலத்தில் பார்வதி சமேதராகக் கைலையில் எழுந்தருளி இருந்தார். அப்பொழுது உமாதேவியார் அரனாரை  அஞ்சலி செய்து எம்பெருமானின் தத்துவநிலையைச் சாற்றியருளும் படி கேட்டார்.
அதற்குப் பரமசிவன் "தேவி, பேரும், குணமும், உருவமும், செயலும்
இல்லாத நாம் சக்தியால் அருவுருவங்கொண்டு செயற்படுகின்றோம்"
என்றார். இதனைக் கேட்ட பார்வதி தன்னால் தான் எல்லாம்
நடைபெறுகிறது என்று பெருமைப்பட்டாள். அதனால் சிவபெருமான்
தான் இன்றி ஏதும் ஏதும் இயங்காது என்று கூறித் தனித்து நின்றார்.

இதனால் உலகம் இயக்கமின்றி ஜடமாகியது. அம்பிகை அரனடியை வணங்கி எம்பெருமானே எல்லாம் நீரே என்று உணரப்பெற்றேன், கருணை புரிந்தருளுக என்று இறைஞ்சினார். அப்பொழுது சிவபெருமான் தான் தக்கனுகுக் கொடுத்த
வரத்தை நிறைவேற்ற திருவுளங்கொண்டார். தேவியைப் பார்த்து உலகம் இயக்கமற்று இருந்த பாவம் உன்னையே சேரும் அப்பாவம் நீங்க நீயே யமுனை நதியில் வலம்புரிச் சங்குவடிவில் தவஞ்செய்யும்படி கட்டளையிட்டருளினார். அரனாரின் கட்டளைப்படி பார்வதி தேவியார் யமுனை நதியில் ஓர் தாமரை மலரில் வலம்புரிச் சங்கு வடிவில் தவஞ்செய்து கொண்டிருந்தார்.

ஒரு மாசி மக நாளில் தட்ச பிரஜாபதி தனது மனைவி வேதவல்லியுடன் யமுனை நதியில் வந்து நீராடினான். அப்பொழுது  அங்கு தாமரை மலரில் இருந்த வலம்புரிச் சங்கினைக் கண்டெடுத்தான். எடுத்த மாத்திரத்திலே அது பெண்ணுருவாயிற்று.

இது சிவனாரின் வரப்படி பார்வதிதேவியாரே வந்தார் என உணர்ந்து வேதவல்லியுடன் கொடுத்து தம் அரண்மனைக்கு எடுத்துச் சென்றான். அம்பிகைக்கு தாட்சாயிணி என்று நாமகரணம் சூட்டி அன்புடன் வளர்த்தான் என்று கந்தபுராணம்  கூறுகின்றது.

அம்பிகை மாசி மக நட்சத்திரத்தில் அவதரித்தால் மாசிமகம் பெருமை பெறுகின்றது.

மாசி மாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம் செய்வார், மக நட்சத்திரத்தில் சிங்கராசிக்குரியது. அன்று சந்திரன் மக நட்சத்திரத்தில் சிங்கராசியில் சஞ்சரிப்பார். இந்நாளே மாசிமகம் எனப்படும். இத்தினத்தில் தீர்தோற்சவம் நடைபெறுவது  வழக்கம்,

இந்தியாவில் கும்பகோணத்தில் மாசிமகம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது. இதே போல வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்.

கட்டுரை உபயம்: கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியா. அதில் இதை வலையேற்றியவர்களுக்கு நன்றி!

இந்த ஆண்டு மாசி மகம் மார்ச் 8ம் தேதி - அதை நினைவில் வையுங்கள்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

அன்பின் ஐயா,

தெளிவான தெய்வீக விளக்கம்.

தங்கள் பணி தொடர இறைவனை இறைஞ்சுகிறேன் ஐயா.

என்றும் அன்பும் நன்றியும்.

அன்புடன்

விக்னசாயி.

-----------------------------
மாசி மகம் கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ள திருக்கோஷ்டியூரில் ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு மாசி மகம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது இந்த ஆலயம். பேரழகு கொண்டவர் என்பதால் இங்கிருக்கும் பெருமாளுக்கு சவுமியநாராயணர் என்பது திருநாமம்.


பொதுவாக கோயில்களில் உற்ஸவர் விக்ரகங்களை பஞ்சலோகத்தால் அமைப்பர். ஆனால், தூய்மையான வெள்ளியால் ஆன விக்ரகம் இங்குள்ளது. இதை தேவலோக இந்திரனே தந்ததாக ஐதீகம்.இப்பெருமானை திருமங்கையாழ்வார் வெள்ளியான் கரியான் மணிநிற வண்ணன் என்று போற்றுகிறார். இங்குள்ள தாயாருக்கு திருமாமகள், நிலமாமகள், குலமாமகள் ஆகிய பெயர்களுண்டு. மகாமகக்கிணறு என்னும் சிம்மக்கிணறு இங்குள்ளது. இதில் மாசிமகத்தில் நீராடுவது சிறப்பு.






வேண்டுதல் நிறைவேறும்

மாசிமகம் தினத்தன்று இங்கு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. சவுமியநாராயணரிடம் வேண்டுகோள் வைத்து அது நிறைவேறியவர்கள், தெப்பக்குளத்தில் தீபமேற்றி வழிபடுவது சிறப்பாகும். அந்த விளக்கை புத்திர பாக்கியம், திருமணம் போன்ற கோரிக்கைகளை வைப்பவர்கள் வீட்டிற்கு எடுத்துச்சென்று பூஜையறையில் வைத்துக்கொள்ளலாம். வேண்டுதல் நிறைவேறியதும், அடுத்த மாசிமகத்தன்று மீண்டும் அந்த விளக்குடன் மேலும் 3 அல்லது 5 அகல் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபடுவார்கள்.


தோஷம் நீக்கும் நாள்



சிவன், விஷ்ணு,முருகன் என முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த இந்த நன்னாள், தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம். நதி, கடல், குளம், புண்ணிய தீர்த்தங்கள், கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மை தரும்.

============================
courtesy;oneindia.com. tq.


==================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...