Ignorance is the source of Maya. Remove Maya and self-realisation will come naturally.
'ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம.ஃ (முழுமுதற்பொருள் ஸத்தியமானது; ஞானமயமானது; என்றும் நிலைத்திருப்பது.) மாயையும் அவித்யையும் மற்றவை அனைத்தும் பிரமைகள். எப்பொழுது பிரமைகள்
விலக்கப்படுகின்றனவோ, அப்பொழுதுதான் ஞானத்தைப்பற்றிய குழப்பங்கள் அகலும். ஞானம் சுயஞ்ஜோதி. அதற்கு உபதேசம் ஏதும் தேவையில்லை. அஞ்ஞானம் விலக்கப்பட்டுவிட்டால், ஞானத்தின் ஜோதி தானாகவே வெளிப்படுகிறது.
உலகவாழ்வில் ஏற்படும் நல்லதும் கெட்டதுமான நிகழ்வுகளுக்கு அஞ்ஞானத்தால் நாம் செய்த பழவினைகளே காரணம். இதனை முதலிலேயே அறியவேண்டியது அவசியம்.
'ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம.ஃ (முழுமுதற்பொருள் ஸத்தியமானது; ஞானமயமானது; என்றும் நிலைத்திருப்பது.) மாயையும் அவித்யையும் மற்றவை அனைத்தும் பிரமைகள். எப்பொழுது பிரமைகள் விலக்கப்படுகின்றனவோ,
அப்பொழுதுதான் ஞானத்தைப்பற்றிய குழப்பங்கள் அகலும். ஞானம் சுயஞ்ஜோதி. அதற்கு உபதேசம் ஏதும் தேவையில்லை. அஞ்ஞானம் விலக்கப்பட்டுவிட்டால், ஞானத்தின் ஜோதி தானாகவே வெளிப்படுகிறது.
தேகாபிமானத்தை ஜெயிக்காத மனிதரை ஞானமுள்ளவர் என்று யார் சொல்லுவார்? அபிமானத்தின் (பற்றின்) அதிஷ்டானத்திற்கு (நிலைக்களத்திற்கு), 'அஞ்ஞானமே உருவானதுஃ என்று பெயர்.
நாம் காணும் இந்த வசீகரமான உலகம் மாயையால் நிறைந்தது என்றும், மாயையில் மூழ்கியது என்றும் சொல்லப்படுகிறது. இவ்வுலகுக்கு மூலாதாரம் அஞ்ஞானமே.
உலகம் அஞ்ஞானத்தால் உற்பத்தி ஆகியது; அதன் வைபவமும் அஞ்ஞானத்தால் விளைந்ததே. இருப்பது ஒன்றே எனினும், அநேக வஸ்துகள் இருக்கின்றன என்னும் உணர்வின் விளைநிலம் அஞ்ஞானமே.
ஒளியும் இருளும் கலக்கும் அந்திநேரத்தில், போகும் வழியில் இருக்கும் கயிறு பாம்பாகத் தெரிகிறது. இருப்பது கயிறானாலும் பாம்புபோலத் தெரிந்து பெரும்பயத்தை விளைவிக்கிறது.
பாம்பென்னும் தோற்றத்தை உண்டுபண்ணுவது ஞானத்தை மறைக்கும் அஞ்ஞானமே. அந்த அஞ்ஞானத்தை அகற்றாதவரையில் மனம் பயத்திலிருந்து விடுபடாது.
பிரமையை ஓட்டிவிட்டால், உலகியல் வாழ்வு நொடிப்பொழுதில் மங்கிப்போகிறது. 'நான் இவ்வுடல்தான்ஃ 'என் வீடுஃ 'என் மனைவிஃ ஆகியன எல்லாம் ஒரு பயனற்ற பயிற்சியின் தாழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றன.
புத்திரன், ஆடுமாடுகள் போன்ற ஆசாபாசங்களால் முழுக்க முழுக்கச் சிக்கிக் கொண்டவர்கள்,
தங்களைப் பண்டிதர்களென்றும் ஞானிகளென்றும் சொல்லிக் கொண்டாலும், லவலேசமும் (சிறிதளவும்) சுகமடையமாட்டார்கள்.
அவர்கள், 'நான் சாஸ்திரங்களை அறிந்தவன், பேரறிவு படைத்தவன், எனக்கு நிகர் எவரும் இல்லைஃ என்று தமக்குள்ளே மிகச் செருக்குற்று வாழ்வதால் எப்பொழுதும் நிம்மதியின்றி வாழ்கின்றனர்.
இதற்கே, மாயை என்றும், அஞ்ஞானம் என்றும், அவித்யை என்றும், பிரதான தத்துவம் என்றும் பெயர். இதையே ஞானியர் ஆரம்பத்தில் எடுத்தெறிகின்றனர். பின்னர் ஞானத்தை மேலழும்பும்படி செய்கின்றனர்.
ஞானம் சுயஞ்ஜோதி. அதற்கு உபதேசம் ஏதும் தேவையில்லை. அஞ்ஞானம் விலக்கப்பட்டுவிட்டால், ஞானத்தின் ஜோதி தானாகவே வெளிப்படுகிறது.
==============================================
No comments:
Post a Comment