
அன்புறவுகள்... எல்லோர்க்கும்.... என்றென்றும் அன்புடன்.! இனிய காலை மதிய வணக்கம்! ..உரித்தாகுக......
என்னப் பாடல் பாட….............................................
நீ எந்த கடையில அரிசி வாங்குற என்று ஒருவரைப் பார்த்து யாரவாது பாடல் பாடினால் அவர்கள் நிச்சயமாக சந்தோஷப்பட மாட்டார்கள். அதே ஆட்கள் இந்த 50 கேஜி தாஜ்மகால் எனக்கே எனக்கா என்று பாடினால் மகிழ்ச்சி அடைய வாய்ப்பிருக்கிறது.
அது எப்படிங்க.. 80 கிலோ இருக்கிறேன். என்னைப் பார்த்து 50 கேஜி தாஜ்மகால் என்று எப்படி பாடுவார்கள் என்று கேட்பவர் நீங்களாக இருந்தால் இதனை தொடர்ந்து படியுங்கள்.
உடல் இளைக்கஉடல் பருமன்................
இதெல்லாம் குடிச்சா…
தண்ணீரை அதிகம் குடிப்பவர்களுக்கு உடல் பருமன் பிரச்னை அவ்வளவு எளிதாக வருவதே இல்லை. உடல் பருமன் கொண்டவர்கள் அதிகமாக தண்ணீர் குடிப்பதன் மூலம், அவர்களது உடலில் உள்ள கொழுப்பு கரைய வாய்ப்பு ஏற்படுகிறது.
மேலும், இளநீர், க்ரீன் டீ, கொழுப்பு நீக்கப்பட்ட பால், கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளில் போடப்பட்ட காய்கறிச் சாறு, வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, கருப்புக் காபி எனப்படும் பால் சேர்க்காத காபி போன்றவற்றை தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் உள்ள கொழும்பு கரைந்து ஸ்லிம்மான உடல் வாகைப் பெறலாம்.
இன்னமும் இருக்கு விஷயங்கள்
நம் சமையலறையில் இருக்கும் அஞ்சலறைப் பெட்டி ஒரு மருத்துவரின் மருந்து பெட்டி. இந்த மசாலாக்கள் உணவுகளுக்கு மணம் தருவதோடு மருந்தாகவும் ஆகின்றன. உடல் இளைக்கவும் உதவுகின்றன.
பூண்டு: இருதய நோயைத் தடுப்பதற்கு உதவுவது. சிறுநீரை உடலிலிருந்து வெளியேற்றவும் உடல் இளைக்கவும் வழிச் செய்கிறது.
மிளகாய்ப் பொடி: மிளகு, மிளகாய் வகைகளில் உள்ள காப்ஸுஸின் என்னும் பொருள் இதிலும் இருப்பதால் உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தி வியர்வை அதிகமாக வரக் காரணமாகி நமது உடல் சீக்கிரம் கலோரிகளை எரிக்க உதவுகிறது. உடல் எடையும் குறையும்.
பார்ஸ்லி: இது கொத்துமல்லியைப் போல் தோற்றமுள்ள ஒரு கீரை வகை. ரத்த ஓட்டத்தை அதிகரித்து உடலுக்குச் சக்தியைக் கொடுத்து உடலில் அதிகப்படி நீர் தங்காமல் வெளியேற்றி எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
பெருஞ்சீரகம்: உணவை ஜீரணிக்க உதவும். பலர் இதைத் தேயிலையோடு சேர்த்தோ தனியாகவோ டீ செய்து பருகி, பசியைக் குறைத்து உடல் இளைக்க உபயோகிக்கலாம்.
இஞ்சி: மிளகாய்போல் உடல் சூட்டை அதிகமாக்கி, உடலில் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.
சீலரிவிதை: இது கடுகு போல இருக்கும். சிறுநீரை அதிகமாக வெளியேற்றும். உடல் எடையைச் சீராக வைக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைப்பதால் நீரிழிவு பாதித்தவர்களுக்கு அடிக்கடி வரும் பசி, வராமல் தடுக்கிறது.
வெந்தயம்: இதைப் பொடி செய்து சமையலில் சேர்க்கலாம். அல்லது காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் வாயில் போட்டு வெந்நீர் குடித்தால் உடல் எடை குறையும். ரத்தக் கொதிப்பு சீராகும்.
Author
வாணிஸ்ரீ சிவகுமார் -
நன்றி சகோ.
==================================
No comments:
Post a Comment